Wednesday, November 18, 2009

மினி பஞ்சாபி பூரியும் ஆலு சென்னா ரெட் மசாலாவும்


பூரி என்றாலே எல்லோராலும் விரும்பி சாப்பிடுவ‌து. ஒரே அத‌ற்கு தொட்டு கொள்ள‌ வெரும் பாஜி, வெரும் சென்னா த‌யாரிப்ப‌த‌ற்கு ப‌தில் இது போ சுல‌பமாக‌ செய்தால் காலை டிப‌னுக்கு ந‌ல்ல‌ ப‌சி தாங்கும். மிக‌வும் ஹெல்தியும் கூட‌.




இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.இது செய்வது ரொம்ப சுலபம்.

மினி பஞ்சாபி பூரி

மைதா = ஒரு டம்ளர்
த‌யிர் = ஒரு மேசை க‌ர‌ண்டி
ச‌ர்க்க‌ரை = ஒரு தேக்க‌ர‌ண்டி
உப்பு = தேவைக்கு (அரை தேக்க‌ரண்டி)
எண்ணை = முன்று தேக்க‌ர‌ண்டி
ப‌ட்ட‌ர் = ஒரு தேக்க‌ர‌ண்டி
த‌ண்ணீர் = கால் க‌ப்

ஆலு சென்னா

சென்னா = கால் க‌ப்
ஆலு = ஒன்று
வெங்காய‌ம் = ஒன்று
பூண்டு = 5 பல்
சோம்பு = சிறிது
உப்பு தேவைக்கு
ரெடி மேட் டொமேட்டோ டின் = சிறியது ஒன்று
காஷ்மீரி சில்லி பொடி = அரை தேக்க‌ர‌ண்டி
க‌ருவேப்பிலை = இர‌ண்டு ஆர்க்


1. அதற்குள் பூரி மாவிற்கு கொடுக்க பட்டுள்ள அனைத்து பொருட்க‌ளையும் சேர்த்து ந‌ன்கு பிசைய‌வும்.த‌ண்ணீர் கால் க‌ப் போதும் தேவைப‌ட்டால் சிறிது தெளித்து கொள்ள‌வும். அரை ம‌ணி நேர‌மாவ‌து ஊறினால் ந‌ல்ல‌ இருக்கும்.

2. சென்னாவை முத‌ல் நாள் இர‌வே ஊற‌வைத்து காலையில் செய்யும் போது காலையில் வேக‌வைக்கும் போது அத்துட‌ன் ஆலுவையும் சேர்த்த்து மீடிய‌மாக‌ க‌ட் செய்து இர‌ண்டையும் குக்க‌ரில் பூண்டு சேர்த்து வேக‌வைக்க‌வும். வெந்த‌ சென்னாவில் சிறிது க‌ர‌ண்டியால் ம‌சித்து விட‌வும்.

3. எண்ணையை காய‌வைத்து க‌ருவேப்பிலை, சோம்பு, வெங்காய‌ம் போட்டு வ‌த‌க்கி, டொமேட்டோ பேஸ்டையும் சேர்த்து ந‌ன்கு கிள‌றி உப்பு, மிள‌காய் தூள் சேர்த்து வெந்த‌ ஆலு சென்னாவை சேர்த்து கிளறி ந‌ன்கு கொதிக்க‌ விட்டு கிரேவி கிரிப் ஆன‌தும் இர‌க்க‌வும்.

4. இப்போது ஊறிய‌ மாவை சிறிய‌ நெல்லிக்காய் அள‌வு எடுத்து ச‌ம‌மாக‌ தேய்த்து பூரிக‌ளாக‌ சுட்டெடுக்க‌வும்.

சுவையான‌ மினி ப‌ஞ்சாபி பூரி ஆலு சென்னா சுவைத்து ம‌கிழுங்க‌ள்.

இது பார்க்க‌ செக்கச்சிவேலுன்னு இருக்கும் ஆனால் கொஞ்ச‌ம் கூட‌ கார‌ம் கிடையாது டொமேட்டோ பேஸ்ட்,காஷ்மீரி சில்லி இர‌ண்டும் சேர்ந்தால் க‌ல‌ர்புல்லா இருக்கும். காஷ்மீரி சில்லி கிடைக்காத‌வ‌ர்க‌ள், சாதா மிளகாய் தூளே போட்டு கொள்ள‌லாம்.டொமேட்டோ பேஸ்ட் இல்லை என்றால் ப‌ழுத்த‌ த‌க்காளி + தேவைப்ப‌ட்டால் சிறிது கேச‌ரி க‌ல‌ர் சேர்த்து செய்ய‌லாம்.

18 கருத்துகள்:

Suvaiyaana Suvai said...

akka supera irukku!!

ஹர்ஷினி அம்மா said...

பூரி சாப்பிட்டு ரொம்பநாள் ஆச்சு ஜலீலா அக்கா...கலர்புல்லா ஆசையா இருக்கு :-)

பித்தனின் வாக்கு said...

இது இதைத்தான் எதிர்பார்த்தேன். நல்லா இருக்குங்க, இன்னும் ஒரு மாதத்திற்க்கு மசலா மற்றும் மற்ற உணவுகளைக்குத் தடை. ஆதலால் மலைக்கு போய்விட்டு வந்து செய்து பார்க்கின்றேன். நன்றி.

Jaleela said...

சுவையான சுவை நன்றி

ஹர்ஷினி எங்க வீட்டில் பிள்ளைகளுக்கு, என் ஹஸுக்கு ரொம்ப பிடித்தது ஆகையால் வாரம் ஒரு முறை கோதுமை பூரி (அ) பஞ்சாபி பூரி 20 வருடமா இப்படி தான் பூரி, எல்லோருக்கும் பிடிக்கும், இதே போல் சின்னதிலிருந்து எங்க அம்மாவும் வாரம் ஒரு முறை பூரிதான் போடுவார்கள்.

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி


சுதாகர் சார் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி எப்ப முடியுதோ அப்ப செய்து பார்த்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

asiya omar said...

ஜலீலா சிம்பிள் & சூப்பர்.பார்க்கவே ஆசையை தூண்டுது.

sbsbanu said...

ஜலீலா அக்கா ரொம்ப நல்லா இருக்கு பூரி உங்கள் மாதிரி ஒரு அக்கா எனக்கு இருந்தால் தின்மும் சாப்பிடுவேன் ஜாலியா இருக்கும் நிறைய க்ற்றுப்பேன் எங்க வீட்டுல் நான் தான் முதல் பொண்ணு என் பாட்டி ரொம்ப செல்லம் அதனால் என்னை ஒரு வேளை செய்ய விட் மாட்ட்ங்க அதனால் எனக்கு ச்மைய்ல ரொம்ப அனுப்வ்ம் கிடையாது இப்பதான் உங்க ச்மைய்ல் பார்த்து க்த்துகிட்டு இருக்க்கேன் என் ஹஸ்க்கு இப்ப கொஞ்ச்ம் செய்து கொடுக்கிறேன் உங்க மாதிரி எல்லாம் க்த்துக்னும்னு ஆசையா இருக்கு முய்ற்சி செய்றேன் நீங்க்ளும் எனக்கு சொல்லி கொடுங்க

Jaleela said...

ஆசியா ரொம்ப சந்தோஷம் கருத்து தெரிவித்தது. ஆமாம் இது ரொம்ப‌ சிம்பிள் மெத்த‌ட்


sbsbanu உங்க‌ள் ஆர்வ‌ம் உங்க‌ளை ஒரு கிரேட் குக்காக்கிவிடும், ஒரு க‌ழ்ட‌மான‌ ச‌மைய‌ல் கூட‌ ஆர்வ‌த்தோடு செய்தால் ரொம்ப‌ ஈசி தான். சொல்லுங்க‌ள் என்ன‌ வேண்டுமானாலும் கேட்க‌லாம் முடிந்த‌ போது த‌ருவேன்.
சென்னாவிற்கு என்று தனி மெத்தட் இருக்கு ஆனால் இது சும்மா ஈசியா செய்வது.

S.A. நவாஸுதீன் said...

ஆகா!

வெள்ளிக்கிழமை பசியார இதுதான்.

R.Gopi said...

பசி தாங்கும்னா போட்டு சாத்திட வேண்டியதுதான்...

ரொம்ப நன்றிங்க... ஏவ்வ்வ்வ்வ்வ்வ்

Mrs.Menagasathia said...

படங்களை பார்க்கும் போதே சாப்பிட ஆசை வந்துடுச்சு..சூப்பர் ஜலிலாக்கா!!

seemangani said...

அக்கா...பூரி சுப்பர்...
எனக்கு பாணி பூரி எப்படி பண்ணறதுன்னு போடுங்க ஓகே வா?????

seemangani said...

iam free now..:)))...

கருவாச்சி said...

ஜலீக்கா வெரைட்டியா போட்டு தாக்குறீங்களே

குறை ஒன்றும் இல்லை !!! said...

நீண்ட நாள் கழித்து ஒரு பதிவு வலுக்கட்டாயமாக எழுதி இருக்கிரேன்.. படித்து கருத்து சொல்லவும்!!

ஸாதிகா said...

இன்னிக்கு இதுதான் எங்கள் வீட்டில் காலை டிபன்.பூரி பட்டர்,தயிர் சுவையுடன் சுவையாக இருந்தது

sarusriraj said...

பூரி பார்க்கவே சூப்பர்

சிங்கக்குட்டி said...

சூப்பர் ஜலீலா இப்பவே சாப்பிட ஆசையை தூண்டுது :-)

Jaleela said...

நவாஸ் ரொம்ப சந்தோஷம் உங்கள் வீட்டிலும் , ஸாதிகா அக்கா வீட்டிலும் இந்த டிபன் தானா வெள்ளிக்கிழமை.

கோபி ரொம்ப நன்றி.

மேனகா ஆமாம் பூரி என்றாலா எப்ப பார்த்தாலும் உடனே சாப்பிடனும்னு தோணும்.

சீமான் கனி பானி பூரி இது வரை செய்ததில்லை , எப்பவாவது டிரை பண்ணினால் கண்டிப்பாக போடுகீறேன்.


கருவாச்சி உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

ராஜ் குமார் சார் ரொம்ப‌ நாள் க‌ழித்து வ‌ந்த‌த‌ற்கு மிக்க‌ ந‌ன்றி.

ஸாதிகா அக்கா ஆமாம் த‌யிர் ப‌ட்ட‌ர் சுவை சூப்ப‌ரா இருக்கும்.

சாருஸ்ரீ மிக்க‌ ந‌ன்றி,


சிங்க‌க்குட்டி பார்த்த‌தும் சாப்பிட‌ தூண்டு கிற‌தா?

வ‌ருகைக்கும், க‌ருத்து தெரிவிப்ப‌த‌ற்கும் மிக்க‌ ந‌ன்றி.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா