Saturday, March 20, 2010

பெண்களுக்கு கால் வலி ஏன் வருகிறது?

பழங்காலத்தில் பெண்கள் அடுக்களையில் கீழே உட்கார்ந்து சமைப்பார்கள்.ஆகையால் பழங்காலத்து பெண்களுக்கு இப்ப உள்ள பெண்கள் போல் இடுப்பு வலியோ கால் வலியோ கிடையாது.
அந்த காலத்தில் அண்டா அண்டாவா கூட்டு குடும்பத்தில் பெண்கள் சமைப்பார்கள், எல்லோரும் திடகாத்திரமாக தான் இருந்தார்கள். இந்த காலத்து பெண்கள் கொஞ்சம் நாளிலேயே முடியல மூட்டு வலி , கால் வலி இடுப்பு வலி என்கிறார்களே என்னவா இருக்கும் என்று சமைக்கும் போது தான் நிறைய யோசனை வரும், யோசிச்சேன் என் கருத்து இது.


பழங்காலத்தில் பெண்கள் அடுக்களையில் கீழே உட்கார்ந்து சமைப்பார்கள்.
ஆகையால் பழங்காலத்து பெண்களுக்கு இப்ப உள்ள பெண்கள் போல் இடுப்பு வலியோ கால் வலியோ கிடையாது.
ஆனால் இப்போது இருகிற மார்டன் உலகில் நின்று கொண்டு தான் சமைக்கிறோம்
அந்த காலத்தில் ஆட்டுரல், அம்மி, கினற்றில் நீர் இறைப்பது போன்ற வேலைகளை செய்வதால் உடற்பயிற்சி என்பது அதிலேயே எல்லாம் கிடைத்து விடுகிறது
இந்த காலத்தில் துவைக்க அரைக்க சாமான் கழுவ என்று எல்லாத்துக்கும் மிஷின் வந்து விட்டது. இப்படி மிஷின் இருந்தும் சிலருக்கு அதில் இருந்து எடுத்து காய போட சோம்பேறி தனமாக இருக்கிறது.


சமையலறையிலேயே இரண்டு மணி நேரமானலும் நின்று கொண்டு சமைக்கிறோம்.
சில‌ பேர் தான் கிச்ச‌னில் சேர் போட்டு கொண்டு கொஞ்ச‌ம் நேர‌த்திற்கொருமுறை உட்கார்ந்து கொள்வார்க‌ள்.
ஆனால் வேலைக்கு போகும் பெண்க‌ள், அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மா ச‌மைப்ப‌தால் அவ‌ர்க‌ளுக்கு நேர‌ம் இருக்காது.


ரெஸ்ட் எடுத்து வேலை செய்ய‌. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்க‌ளை விட‌ வீட்டில் உள்ள‌ பெண்க‌ளுக்கு தான் வேலை அதிக‌ம். அப்ப‌டியே கிச்ச‌ன் மேடை கிட்ட‌ நின்று கொண்டே காய‌ ந‌ருக்காம‌ல் உட்கார்ந்து எல்லாம் ரெடியாக‌ க‌ட் செய்து வைத்து விட்டு பிற‌கு செய்ய‌லாம்.இஞ்சி பூண்டு நருக்கும் போது அதிக நேரம் எடுக்கும் அதற்கு உட்கார்ந்து பார்க்கலாம்.

இப‌ப்டி நின்று கொண்டு ச‌மைக்கும் போது சில‌ பேர் தாளிக்கும் போது ர‌ச‌ம் கொதிக்கும் போது, காய் வேகும் போது அப்ப‌டியே ச‌ட்டிய‌ உற்று பார்த்து கொண்டு இருக்காம‌ல் அந்த‌ நேர‌த்தில் சின்ன‌ சின்ன‌ உட‌ற்ப‌யிற்சி செய்து ந‌ம்மை ரிலாக்ஸ் செய்து கொள்ள‌லாம்.

ஓவ்வொரு உட‌ற்ப‌யிற்சியையும் 5 க‌வுண்ட் அள‌விற்கு செய்ய‌லாம்.

1. கைக‌ளுக்கு உட‌ற் ப‌யிற்சி இர‌ண்டு கைக‌ளையும் ப‌க்க‌ வாட்டில் நீட்டி முன்னும் பின்னுமாக‌ சுழ‌ற்ற‌லாம்.இத‌னால் கை தோள்ப‌ட்டை வ‌லி கையில் உள்ள‌ ச‌தை குறைய‌ ந‌ல்ல‌து.

2. தோப்பு க‌ர‌ண‌ம் போடுவ‌து போல் இடுப்பில் கை வைத்து கொண்டு பாதி அள‌விற்கு உட்கார்ந்து எழுந்திரிக்க‌லாம். எல்லாம் ஒரு 5 க‌வுண்ட் அள‌விற்கு செய்ய‌லாம். இது மூட்டு வ‌லிக்கு ந‌ல்ல‌ உட‌ற்ப‌யிற்சி.

3. இடுப்பில் கை வைத்து கொண்டு நேராக‌ நின்று கொண்டு இட‌து வ‌ல‌து புற‌ங‌க‌ளில் சுழ‌ற்ற‌லாம். இது இடுப்பு வ‌லிக்கு ந‌ல்ல‌ உட‌ற்ப‌யிற்சி.


4. த‌லையை ம‌ட்டும் மேலும் கீழும், இட‌து வ‌ல‌து புற‌ங்க‌ளில் சுழ‌ற்ற‌லாம், இது க‌ழுத்து நல்ல‌ உட‌ற்ப‌யிற்சி.



5. உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்காதவர்கள் அப்ப‌டியே ஒரே மூச்சா வேலை செய்யாம‌ல் இப்ப‌டி சின்ன‌ சின்ன‌ உட‌ற்ப‌யிசிக‌ளை செய்து கொண்டே வீட்டு வேலையை செய்ய‌லாம்.

6. துணி துவைக்க கூட அடித்து துவைக்க எதிரில் கல் இருக்கும்.
துணி துவைக்க‌ வாஷிங் மிஷின் தான் ஆனால் சில‌ டோர் மேட்க‌ளை கையில் தான் துவைக்க‌ வேண்டி வ‌ரும் , அதை ந‌ல்ல‌ சோப்பு த‌ண்ணீரில் ஊற‌வைத்து விட்டு கீழே போட்டு நாலு மிதி மிதிச்சா அழுக்கும் போகும் கால் வ‌லிக்கும் ஒரு ந‌ல்ல‌ உட‌ற்ப‌யிற்சியாகுது.


7. குழந்தைகளை குளிக்க வைக்க கூட குருக்கு வலிகக் குனிந்து குளிக்க வைக்காமல் கீழே ஒரு சின்ன ஸ்டூல் போட்டு குளிக்கவைக்கலாம்.


8.கம்பியுட்டர் முன் அரைமணி நேரத்துக்கு மேல் உட்காராதீர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்கள். சேரில் உட்கார்ந்து கொண்டே செய்யும் உடற்பயிற்சிகளை செய்யலாம்.
9. வாகணங்களில் செல்லும் போது கூட (ஓட்டுபவர்களை சொல்லல)ஐந்து நிமிடம் கண்களை மூடி கண்ணுக்கும் ரெஸ்ட் கொடுக்கலாம்.

10. இரவு தூங்க போகும் போது, காலை எழுந்திரிக்கும் போது கூட எழுந்ததும் உட்கார்ந்து கொண்டு நேராக இரண்டு காலின் பெருவிரலை தொடவேண்டும் இப்படி செய்வதாலும் முதுகு வலி சரியாகும், (பிறகு முதுகுவலிக்கு ஈசியான உடற்பயிற்சிகளை போடுகிறேன்.)

அதற்கு தகுந்த நலல் உணவும் சாப்பிட்டு கொள்வது நல்லது.
வேலை பிஸியில் பெண்கள் காலையில் சாப்பிடும் டீ, டிபன் கூட மறந்து விடுகிறார்கள்.
இப்போது நிறைய பெண்களுக்கு சின்ன வயதிலேயே முதுகுவலி கால் வலி இடுப்புவலி, என்று வந்து விடுகிறது.
தகுந்த உடற்பயிற்சியின் மூலம் இது போன்ற வலிகளை தவிர்த்து கொள்ளலாம்.
முடிந்தவர்கள், நான்கு முறை மாடிப்படி ஏறி இரங்கலாம்.
ஸ்கிப்பிங் ஆடலாம். நீந்துதல் உடற்பயிற்சி செய்யலாம்.

நீந்துதல் உடற்பயிற்சி மூலம் அதிகப்படியான முதுகுவலி, இடுப்புவலி ,கால் வலி கூட சரியாகும்.
மன அழுத்தத்தையும் குறைக்கலாம்.


முடிந்த அளவு நடைபயிற்சி செய்யுங்கள். தினம் ஒருமணி நேரம் நடப்பதன் மூலம் சர்க்கரை வியாதி பிரஷரை கூட கட்டு படுத்தலாம்.



டிஸ்கி: இதில் வெளிநாட்டில் சமைக்கும் ஆண்களுக்கும் இந்த டிப்ஸை பின்பற்றலாம்.




48 கருத்துகள்:

ஜெய்லானி said...

முக்கியமான ஐட்டத்தை விட்டுடீங்களே !! அம்மி அரைப்பது, இட்டிக்கு மாவாட்டுவது , தோட்டத்தை குனிந்து நிமிர்ந்து பெருக்குவது ,கிணற்றில் தண்ணீர் இறைப்பது இந்த எக்ஸர்சைசை வாழகையில் பெண்கள் மறந்ததால்தான் இத்தனை வியாதியும் வருது.

Jaleela Kamal said...

சபாஷ் ஜெய்லானி, இன்னும் போட நிறைய இருக்கு, யோசித்து வைத்திருந்த சில பாயிண்டுகள் மறந்தே போச்சு. நலல் எடுத்து கொடுத்தீங்க.
பிறகு மீதியை சேர்ப்பேன்.

ஜெய்லானி said...

நீங்க சொன்ன எக்ஸர்சைசை (சின்ன கற்பனை)கிச்சனில் செய்தா பாக்க நல்லாவா இருக்கும்.ஹி...ஹி...

நட்புடன் ஜமால் said...

நல்ல டிப்ஸ்தான்

செய்யனுமே!!!

athira said...

ஜலீலாக்கா.. யோசிச்சுப்பார்த்தேன் நீங்கள் சொன்னது கரீட்டுத்தேன்... நீங்கள் சொல்லியுள்ளதுபோலவே கிச்சினில் நின்று நானும் கை கால் அசைத்து உடற்பயிற்சி செய்வதுண்டு கிக்..கிக் ..கிக்... இடைக்கிடை ஜன்னலூடாக வெளியே பார்த்துக்கொள்வேன்:) அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் யாராவது கவனிக்கிரார்களோ என...:):).

Menaga Sathia said...

நல்ல பதிவு!! முயற்சி செய்கிறேன் அக்கா...

ஸாதிகா said...

///முக்கியமான ஐட்டத்தை விட்டுடீங்களே !! அம்மி அரைப்பது, இட்டிக்கு மாவாட்டுவது , தோட்டத்தை குனிந்து நிமிர்ந்து பெருக்குவது ,கிணற்றில் தண்ணீர் இறைப்பது///ஐயா ஜெய்லானி இன்னுமும் எங்களை இந்த வேலை எல்லாம் பார்க்கசொல்லுகின்றீர்களா?இந்த வேலை எல்லாம் பண்ணமலே இந்த காலத்துப்பெண்கள் வலிகளை போக்கிக்கொள்வார்கள்.இல்லையா ஜலி?

Thenammai Lakshmanan said...

நல்ல குறிப்பு கொடுத்து இருக்கீங்க ஜலீலா... கணனி முன்னாலும் கூட செய்யலாமுன்னு நினைக்கிறேன்

Chitra said...

அக்கா, டிப்ஸ் - சமையலுக்கு மட்டும் அல்லாமல் சமையல் செய்த வலியும் போகவா? நல்ல ஐடியா!

சைவகொத்துப்பரோட்டா said...

உண்மைதான், சமைப்பவர்கள் பின்பற்ற பட வேண்டிய விஷயம்.

இப்னு அப்துல் ரஜாக் said...

நல்ல டிப்ஸ் அக்கா.

உங்கள் பிளாக் மிக சிறந்ததாக தேர்வு பெற்று,வெளியாகிவிட்டது ,வாழ்த்துக்கள்.

மங்குனி அமைச்சர் said...

ஹலோ டெய்லி அரை மணி நேரம் சைக்கிள்ங் பண்ணுங்க , எல்லாம் சரியா போகும் ( சைக்கிள்ங் மெசின் இருக்கு )

Jaleela Kamal said...

ஆண்களுக்கு டீவி முன்னாலும், கம்பியுட்டர் முன்னாலும், இப்ப பிளாக் வந்ததிலிருந்து எல்லாம் பிளாக்கே கெதி ,ஜெய்லானி கிச்சனில் (ராஜா, மந்திரி, அரசி ) எல்லாமே அவர்கள் சமைக்கும் இடத்தில் யார் போய் எட்டி பார்க்க போறாங்க,
அதான் தீடீருன்னு ஒரு ஐடியா உடனே சொல்லியாச்சு.. முடிந்தவர்கள் செய்யட்டுமே..

Jaleela Kamal said...

அதிரா எப்போதும் போல உங்கள் நகைச்சுவையான பின்னூட்டம் என்னை சிரிக்க வைக்கிறது. நாம் நம் உடம்பை பேணிக்கொள்ளனும்..

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா ஜெய்லாணி அந்தகாலத்து பெண்களை சொல்கிறார்,
(அம்மி அரைப்பது, இட்டிக்கு மாவாட்டுவது , தோட்டத்தை குனிந்து நிமிர்ந்து பெருக்குவது ,கிணற்றில் தண்ணீர் இறைப்பது) இப்படி செய்வதால் பிரசவத்தை தவிர ,அவர்களுக்கு நோய் என்பது அவ்வளவா கிடையாது இல்லையா?

Jaleela Kamal said...

சகோ.ஜமால், சொல்லுங்க செய்வாங்க

Jaleela Kamal said...

ஆமாம் தேனக்கா கணணி முன்னும் இப்படி நிறைய உட்கார்ந்து செய்யும் உடற்பயிற்சி களை செய்யலாம்.

Jaleela Kamal said...

மேனகா முயற்சி செய்து பாருங்கள், உடல் ஸ்டிஃப்னெஸ் இல்லாமல் இருக்கும்.

Jaleela Kamal said...

ஆமாம் சித்ரா, இது மனதில் தோன்றியது. இப்படியும் பெண்கள் செய்தால் கொஞ்சம் வலி குறையுமே.

Jaleela Kamal said...

சைவ கொத்து பரோட்டா கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

அமைச்சர் சைக்கிள் ஓட்ட சொல்றாரு , அமைச்சரே, வீட்டில் ஒரு வேலையும் பார்க்கமா உட்கார்ந்து இருக்கும் பெண்களை சொல்லல, தினம் ஓயாது உழைத்து கொண்டு இருக்கும் பெண்களுக்கு உடற்பயிற்சி செய்ய நேரமில்லாத பெண்களுக்கு சொல்லி இருக்கேன்..

Jaleela Kamal said...

// 'ஒருவனின்' அடிமை said...
நல்ல டிப்ஸ் அக்கா.

உங்கள் பிளாக் மிக சிறந்ததாக தேர்வு பெற்று,வெளியாகிவிட்டது ,வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி + சந்தோஷம் (ஒருவனின் அடிமை, போனா முனை)

ஹுஸைனம்மா said...

ம்.. இப்பவும் கிச்சன்ல ஒரு சின்னப் பலகை போட்டு வச்சு அப்பப்ப உக்காந்துக்குறதுதான்; ஆனாலும் இடுப்பு வலிங்கிறது ஒரு ரொட்டீன் விஷயமாகிடுச்சு.

ஆண்களுக்கும் இப்ப இல்லாத வலியா? எல்லாருக்கும் வாழ்க்கைமுறை மாறிப்போச்சு.

ஜெய்லானி said...

ஸாதிகா said...//ஐயா ஜெய்லானி இன்னுமும் எங்களை இந்த வேலை எல்லாம் பார்க்கசொல்லுகின்றீர்களா?இந்த வேலை எல்லாம் பண்ணமலே இந்த காலத்துப்பெண்கள் வலிகளை போக்கிக்கொள்வார்கள்.இல்லையா ஜலி?//

இதெல்லாம் கரெக்டா செஞ்ஜதாலதான் அநதகால பெண்கள் ஒன்பது குட்டி பத்து குட்டி அநாயாசமா போட்டது எல்லாம் சுக பிரசவம்.(ஐயயோ குட்டின்னு சொல்லி திரும்பவும் உங்ககிட்ட மாட்டிகிட்டேனே) இப்ப அதிகம் சிசேரியந்தானே அதிகம்.தவிர இப்போது இரண்டு பிள்ளை பெறுவதற்குள் அவர்களுக்கும் கஷ்டம் ,நம்ம தலையும் இல்ல உருளுது. எது பெஸ்ட் என்று நாட்டாண்மை தீர்ப்பு சொல்லலாம். ஆல்வேய்ஸ் வெல்கம்..

ஹுஸைனம்மா said...

//ஜெய்லானி said...

இதெல்லாம் கரெக்டா செஞ்ஜதாலதான் அநதகால பெண்கள் ஒன்பது குட்டி பத்து குட்டி அநாயாசமா போட்டது எல்லாம் சுக பிரசவம்.(ஐயயோ குட்டின்னு சொல்லி திரும்பவும் உங்ககிட்ட மாட்டிகிட்டேனே) இப்ப அதிகம் சிசேரியந்தானே அதிகம்.//

ஜெய்லானி, நீங்களா இப்படி அநாகரீகமா குட்டி போடுவது என்றெல்லாம் எழுதுவது?

என் இரண்டு பிரசவத்திலும், நான் நடக்காத நடை இல்லை, ஏறாத படி இல்லை என்றளவு நடக்கவும், ஏறி இறங்கவும் செய்தேன்; இருந்தாலும் எனக்கு இரண்டும் சிஸேரியன்தான். அதிலும், இரண்டாவது எப்படியாவது சுகப் பிரசவமாக்கிவிட வேண்டும் என்று நான் என்னையே கஷ்டப்படுத்திக்கொண்டு படி ஏறி இறங்கியதுண்டு. மூன்று நாட்கள் வலியையும் பொறுத்துக்கொண்டிருந்தேன்; ஆனாலும் சுகப்பிரசமில்லை; இதற்கு என்ன சொல்வது?

அந்தக்காலங்களிலும், பிரசவத்தில் சிக்கல்கள் ஏற்பட்டதுண்டு; அதற்குச் சரியான சிகிச்சைமுறைகள் மேற்கொள்ளாததால் எத்தனை பேறுகால மரணங்கள் நடந்தன? அதனால்தானே அரசாங்கம் வீடுகளில் பிரசவம் பார்ப்பதைத் தடை செய்தது? இப்ப பிரசவ மரணங்கள் மிகமிக அரிதானது அதனால்தான்.

மற்றபடி வாழ்க்கைமுறை மாறியுள்ளது உண்மைதான்; ஆனால் பெண்கள் அதை உணர்ந்து சரியான உடற்பயிற்சிகள் மேற்கொள்வதில் ஆர்வம் காட்டிவருகிறார்கள் என்பதும் உண்மை.

ஜெய்லானி said...

//ஹுஸைனம்மா-ஜெய்லானி, நீங்களா இப்படி அநாகரீகமா குட்டி போடுவது என்றெல்லாம் எழுதுவது? //

உலக இனம் அனைத்தையுமே ஒன்றாக பார்பதால் இருக்கலாம். தவறாக இருந்தால் சாரி!!.

அன்புடன் மலிக்கா said...

அக்கவோவ் நல்ல டிப்ஸ்.

எங்களப்போல வெட்டியா இருக்குரவங்களுக்கும் வலி வலியா வருது அப்படியிருக்கிறச்சே உங்களப்போல ஆபீஸ்ர்சுக்கும். ஆலினாருக்கும் வருவது ஜாஸ்திதான்.

இத செய்தா கொஞ்சமாவது குறையுமுன்னு நெனக்கிறேன் இல்லக்கா.. செய்கிறேன்..

Kanchana Radhakrishnan said...

நல்ல பதிவு

Prathap Kumar S. said...

ஜலீலாக்கா அது ஏன் இந்த டிப்சை பெண்களுக்கு மட்டும்னு போட்டீங்க??? எத்தனை ஆண்கள் சமைக்கிறாங்கன்னு தெரியுமா? ஏன் இந்த ஓர வஞ்சனை உங்களுக்கு--???
நான் வெளிநடப்பு செய்கிறேன்...

R.Gopi said...

மீண்டுமொருமுறை உங்களிடமிருந்து ஒரு அட்டகாசமான பதிவு...

இவ்ளோ உடற்பயிற்சி கிச்சன்ல செய்து கொண்டிருந்தால், அடுப்பில் உள்ளது என்னவாகும்??

ஹல்லோ... உண்மைய சொல்லுங்க... நீங்க இதெல்லாம் செய்றீங்களா??

R.Gopi said...

அப்படியே இன்னொரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன்...

எடை அதிகமாக இருக்கும் பெண்களின் உடல் எடை முழுவதையும் கால்கள் தாங்கும் போது, கால் மற்றும் மூட்டு வலி வர வாய்ப்புள்ளது...

ஆகவே, உடல் எடை கூடாமல் பார்த்து கொள்ளல் சால சிறந்தது...

சசிகுமார் said...

அனைத்து பெண்களுக்கு தேவையான பதிவு அக்கா. ஆனால் இன்றைய உலகில் அம்மியில் அரைத்து சமைத்து வேலைகேல்லாம் போகமுடியுமா என்பது சந்தேகமே. உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

geetha said...

good post
useful!thanks

Geetha6 said...

good
usegul

சாருஸ்ரீராஜ் said...

உபயோகமான குறிப்பு

Jaleela Kamal said...

நாஞ்சிலாரே உங்களுக்க்காக டிஸ்கி போட்டு விடுகிறேன்.

Jaleela Kamal said...

அந்தக்காலங்களிலும், பிரசவத்தில் சிக்கல்கள் ஏற்பட்டதுண்டு; அதற்குச் சரியான சிகிச்சைமுறைகள் மேற்கொள்ளாததால் எத்தனை பேறுகால மரணங்கள் நடந்தன? அதனால்தானே அரசாங்கம் வீடுகளில் பிரசவம் பார்ப்பதைத் தடை செய்தது? இப்ப பிரசவ மரணங்கள் மிகமிக அரிதானது அதனால்தான்.

ஹூஸைனாம்மா நிங்கள் சொல்வது மிகச்சரி, சரியான சிகிச்சை முறை இல்லாமல்,ஜன்னி கண்டுடுச்சி, குழந்தைக்கு பாயிசன் ஆயிட்டுச்சி என்று பல மரணங்கள்,

Jaleela Kamal said...

ஹுஸைனாம்மாவுகும், ஜெய்லானிக்கும் வாக்கு வாதம் ஓவரா? அதான் சாரி சொல்லிட்டாரே

Jaleela Kamal said...

மலிக்கா இது ஒரு யோசனை தான் முயற்சி செய்து பாருங்கள்.

Jaleela Kamal said...

நன்றி காஞ்சனா,

நன்றி கீதா
நன்றி கீதா6
நன்றி சாருஸ்ரீ

Jaleela Kamal said...

நாஞ்சிலாரே வரே வரேன் உங்களுக்கும் டிப்ஸ்போட வரேன்//

Jaleela Kamal said...

நன்றி சசிகுமார்,தொடர்வருகைக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

கோபி இந்த எடக்கு மடக்கு கேள்வி தானே வேண்டாம் என்பது. சும்மா என் யோசனை அவ்வளவுதான், சில உடற்பயிற்சி நானும் செய்கிறேன்.

SUFFIX said...

தாங்கள் கூறியுள்ள காரணங்கள் உண்மையாகவே தோண்றுகிறது, அருமையான டிப்ஸ், நடைப்பயிற்சி சரியாக செய்வது நல்ல பலனை தரும்.

Jaleela Kamal said...

தவறாமல் வந்து கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி shafi

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள அருமையான் அப்கிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள்.

ADHI VENKAT said...

பயனுள்ள குறிப்புகள். உங்க பதிவுகள் ஏனோ என் டாஷ்போர்டில் வருவதேயில்லை.

Anonymous said...

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா