Saturday, April 17, 2010

கிரிஸ்பி பிஷ் பிரை(கட்லட்)


//பேச்சுல‌ர்க‌ளும் ஈசியாக‌ செய்யும் கிரிஸ்பி மீன் வ‌றுவ‌ல்//

தேவையான‌வை
கிங் பிஷ் பெரியது = முன்று துண்டு
காஷ்மீரி மிளகாய் தூள் = முக்கால் தேக்கரண்டி (சாதா மிளகாய் தூளா இருந்தால் அரை தேக்கரண்டி போதும்.
உப்பு = தேவைக்கு
இஞ்சி பூண்டு பேஸ்ட் = அரை தேக்கரண்டி
லெமன் சாறு = கால் தேக்கரண்டி
பிரட்டி கொள்ள‌
முட்டை = பாதி
கிர‌ம்ஸ் ப‌வுட‌ர் = தேவைக்கு
கார்ன் பிளார் (சோள‌மாவு) = சிறிதுசெய்முறை

மீனை சைடில் உள்ள‌ முள்ளெடுத்து ந‌ன்கு க‌ழுவி க‌டைசியாக‌ சிறிது வினிக‌ரில் ஊற‌வைத்து மீண்டும் ஒரு முறை க‌ழுவி த‌ண்ணீரை வ‌டிக்க‌வும்.
மிள‌காய் தூள்,உப்பு தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,லெம‌ன் சாறு சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து மீனில் த‌ட‌வி 10 நிமிட‌ம் ஊற‌வைக்க‌வும்.
பிற‌கு முட்டையை ந‌ன்கு நுரை பொங்க‌ அடுத்து பாதி அள‌வு எடுத்து முட்டையில் ம‌சாலா ஊறிய‌ மீனை பிற‌ட்டி, கிர‌ம்ஸ், கார்ன் மாவில் ந‌ன்கு கோட் செய்து சிறிது நேர‌ம் ஊற‌வைத்து டீப் பிரை அல்ல‌து ஷாலோ பிரை செய்து சாப்பிட‌லாம்.

ந‌ல்ல‌ கிரிஸ்பியான‌ ஈசியான‌ வ‌றுவ‌ல்.
பேச்சுல‌ர்க‌ளும் ஈசியாக‌ செய்யும் கிரிஸ்பி மீன் வ‌றுவ‌ல்.
டிஸ்கி:வெள்ளை காக்காவ‌ க‌ழ்ட‌ப‌ட்டு ல‌வுட்டி கொண்டு வ‌ந்தால் ஆகையால், இது என் பெரிய‌ பைய‌ன் அப்துல் ஹ‌கீம் ஏழாம் வ‌குப்பு ப‌டிக்கும் போது வ‌ரைந்த‌து இது ஜெய்லானிக்கு இந்த‌ ஓவிய‌த்தை கொடுக்கிறேன்.பார்த்து மீன‌ க‌வ்வி கொண்டு போக‌மா பார்த்துக்கொள்ளுங்க‌ள். அதுக்குன்னு ராப்ப‌க‌லா க‌ண்முழிக்க‌ வேண்டாம்.

26 கருத்துகள்:

ஸாதிகா said...

பிஷ் கட்லட் அழகா இருக்கு.உடனே செய்துடுறேன் ஜலி

ஜெய்லானி said...

பாதி கருப்பு பாதி வெள்ளை , ஓ இது பிளாக் அண்ட் ஒயிட் காக்காவா(படமா ) ?!!!!

Priya said...

உங்க வீட்டு ஓவியருக்கு என் வாழ்த்துக்கள்!!!!
நல்லதொரு ரெசிபி தந்த உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் + நன்றிகள்!!!

ஜெய்லானி said...

மீன் வ‌றுவ‌ல் சூடாக இருக்கும் போதே சாப்பிட்டால் ச்.ச்.ச்.ச். ஒன்னுமில்லை ஜொள்ள்ள்.

Mrs.Menagasathia said...

ஒவியமும்,குறிப்பும் சூப்பர்ர்!!

அன்புத்தோழன் said...

Sooo Simple... But yummy... foto clickugal super....

Drawing romba nallaaruku....

"yendaambi ni pinnaadi periya dangy mastara varuviya? nu enna sinna pullaila enga periyamma ketta niyaabagam varudhu...... he he...

Thirumaiyai melum ookkappaduthunga....

All the best for him....

நட்புடன் ஜமால் said...

I too like fish ...

asiya omar said...

பார்க்க கட்லெட் மாதிரி அழகாக அருமையாக இருக்கு.

Priya said...

Meen cutlet pakkura pothey yeduthu saapdinam pola irruku...Azhagana oviyam..

ஜெய்லானி said...

இந்த வாரம் (கொழுக்கட்டை) சந்திப்பு எதுவும் இல்லையா ?

Geetha Achal said...

சூப்பராக இருக்கின்றது...அருமையான பிஷ் ப்ரை....

Chitra said...

"picture perfect" fry. :-)

seemangani said...

ஓவியருக்கும் வாழ்த்துக்கள்...

seemangani said...

சுபெர்ர்ர்ர்...பிஷ் பிரை நன்றி ஜலி அக்கா...

vanathy said...

looking yummy. white crow for Jailani mmm... very nice.

வேலன். said...

கட்லட் அருமையாக இருக்கு...செய்ய சொல்லவேண்டியதுதான்.வாழ்க வளமுடன்,வேலன்.

தாஜீதீன் said...

ம் கிரிஸ்பி மீன் வருவல் நல்ல ருசியாதான் இருக்கு.சரியாதான் சொல்லி இருக்கீங்க பேச்சுலர்கள் ஈசியாக செய்யும் கிரிஸ்பி மீன் வருவல். சமைத்து ருசித்து பார்த்தாச்சு. சூப்ப்ப்ப்பர்ர்ர்ர்ர்ர்....

SUFFIX said...

Very Yummy.....

Jaleela said...

1. நன்றி ஸாதிகா அக்கா செய்து பார்த்து சொல்லுங்கள்.

2. ஆமாம் ஜெய்லாணி இது பிளாக் அன்ட் வொயிட் படமே தான்.

3.என் பையனை வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி பிரியா , கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.

4. ஆமாம் ஜெய்லானி சுட் சுட சாப்பிட்டால் ம்ம்ம் ருசி அபாரம் தான்.

5. நன்றி மேனகா

6.அன்பு தோழன் உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

7.சகோ. ஜமால் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.


8. உங்கல் பாராட்குக்கு மிக்க நன்றி ஆசியா.

9. பிரியா சுரேஷ் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.

10/ ஜெய்லானி இந்த‌ வார‌ம் கொழுக்க‌ட்டை ச‌ந்திப்பு ஏதும் ந‌ட‌க்க‌ல் அதுக்கு ப‌தில் மீன் குழ‌ம்பு ச‌ந்திப்பு தான்.

11. ந‌ன்றி கீதா ஆச்ச‌ல்
12.மிக்க‌ ந‌ன்றி சித்ரா

13. சீமான் க‌னி உங்க‌ள் பாராட்டுக்கும், என் பைய‌னை வாழ்த்திய‌மைக்கும் மிக்க‌ ந‌ன்றி/

14.வானதி ஆமாம் பிளாக் அன்ட் வொயிட் காக்கா.
வ‌ருகைக்கு மிக‌க் ந‌ன்றி.

15/ வேல‌ன் சார் உங்க‌ள் தொட‌ர் வ‌ருகைக்கு மிக்க‌ ந‌ன்றி.

16 தாஜுதீன சமைத்தே ருசி பார்த்தாச்சா ரொமப் சந்தோஷம்.

17. ஷபிகஸ் மிக்க நன்றி

ஹுஸைனம்மா said...

போன வாரம்தான் இறால் இதேபோல செய்தேன் ஜலீலாக்கா.

Jaleela said...

இறாலிலும் நல்ல இருக்குமே.

வருகைக்கு மிக்க நன்றி. ஹுஸைனாம்மா.

Anonymous said...

Hi.....Hi...Hi.................Hi.....romba kazhtam.

ராஜ நடராஜன் said...

மேடம்!கிரிஷ்பின்னு சொல்லிட்டதாலே நம்ம பதிவு fish n chips ம் டக்கீலா வேதாளமும் படத்துல இருக்கிற மாதிரி சிப்ஸ், மெயோனைஸ் சாஸ் மற்றும் தக்காளி சாஸ்தான் ருசியான அல்லக்கைகள்.

உங்க வீட்டு மீன் வறுவலுக்கு நன்றி.

மின்னுது மின்னல் said...

பிற‌கு முட்டையை ந‌ன்கு நுரை பொங்க‌ அடுத்து பாதி அள‌வு எடுத்து முட்டையில் ம‌சாலா ஊறிய‌ மீனை பிற‌ட்டி
//

மீதி பாதி முட்டை எங்க.. :)


கட்லெட் மாதிரியே இருக்கு :)

Jaleela said...

ராஜ நட்ராஜன் உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி

கருத்துக்கும் மிக்க நன்றி

Jaleela said...

//மீதி பாதி முட்டை எங்க.. :)


கட்லெட் மாதிரியே இருக்கு//

வாஙக் மின்னுது மின்னல் இந்த மூன்று துண்டுக்கு பாதி முட்டை போதும் அடித்து பாதியை முதலே எடுத்து உப்பு, மிளகு பொடி சேர்த்து தோசை போல் சுட்டு சாப்பிடவேண்டியது தான் , ஆமாம் கட்லெட் மாதிரியும் இருக்கும்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா