Monday, April 12, 2010

ட்ரூட்டி ஃபுரூட்டி வித் பனானா கஸ்டட்/truity fruity with banana custurd




வெயில் காலம் ஆரம்பித்து விட்டது இனி கூல் கூலாகா இருப்போம்


இந்த கோடைக்கு ஏற்ற குளு குளு கஸ்டட், பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிச்சது நமக்கும் தான்.ஈசியா செய்துவிடலாம்.




தேவையான‌வை



பால் = ஒரு கப்
க‌ஸ்ட‌ட் ப‌வுட‌ர் = ஒரு மேசை கரண்டி
பாத‌ம் ஃபிளேக்ஸ் = ஒரு மேசை க‌ர‌ண்டி
ச‌ர்க்க‌ரை = இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி (பெரிய‌வ‌ர்க‌ளுக்கு கொஞ்ச‌ம் குறைத்து கொள்ள‌லாம்)
ப‌னானா = ஒன்று பெரிய‌து
ட்ரூட்டி ஃபுரூட்டி = ஒரு மேசை க‌ர‌ண்டி

செய்முறை
பாலில் கஸ்டர் பவுடரை கரைத்து பிறகு பாலை காய்ச்சவும்.
சூடான பாலில் க‌ரைத்தால் க‌ட்டி த‌ட்டும்.
ச‌ர்க்க‌ரை , பாத‌ம் பிளேக்ஸ் சேர்த்து காய்ச்ச‌வும், கைவிடாம‌ல் கிள‌ற‌வும், க‌ட்டியாகி வ‌ரும், அப்ப‌டியே ஆற‌விட்டு குளிற‌விட‌வும்.
கூலாக‌ உள்ள‌ க‌ஸ்ட‌டை எடுத்து அதில் வ‌ட்ட‌வ‌டிவமாக‌ பனானாவை க‌ட் செய்து போட்டு மேலே ட்ரூட்டி ஃபுரூட்டியை தூவி குழ‌ந்தைக‌ளுக்கு கொடுக்க‌வும்.

குறிப்பு:


இத‌ பார்ர்டியில் வைத்தாலும் க‌ல‌ர்ஃபுல்லாக‌ இருக்கும்.
ப‌னானா அரிந்த‌தும் க‌ருத்துவிடும், க‌ருத்து போகாம‌ல் இருக்க‌ அரிந்த‌து சிறிது எலுமிச்சை சாறு ஊற்றி கொள்ளலாம்.
உட‌னே சாப்பிடுவ‌தாக‌ இருந்தால் எலுமிச்சை சாறு தேவையில்லை
இதில் ச‌ர்க்க‌ரைக்கு ப‌தில் ஸ்வீட்ட‌ன் க‌ண்டென்ஸ்ட் மில்க்கும் சேர்க்க‌லாம்.




வாவ் யெம்மி யெம்மி ஒன்ஸ் மோர்.....தான் போங்க‌
மேலும் குளு குளுன்னு ஜில்லுன்னு ஐஸ் ரெசிபி வேண்மா கீழே உள்ள லிங்கை பார்க்கவும்.

33 கருத்துகள்:

Anonymous said...

kalakkal.

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு அக்கா ஈசியாவும் இருக்கு டிரை பண்ணி பார்க்கிறேன்

ஜெய்லானி said...

படிக்கும்போதே சும்மா குளு குளுன்னு இருக்குது.

சீமான்கனி said...

ஐ... நானா??? பஸ்ட்டு...
//பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிச்சது//
அப்போ எனக்கு பிடிச்சதுன்னு சொல்லலாம்...கூல்...அக்கா..

Menaga Sathia said...

அருமையாக இருக்குக்கா...

நாஸியா said...

wow tuti fruti again...

enga vangininga?

இமா க்றிஸ் said...

Very tempting Jalee. ;)

Chitra said...

cool custard! Thank you, akka

Vikis Kitchen said...

Superb ice cream. yummy!

பித்தனின் வாக்கு said...

// உட‌னே அப்ப‌வே நோட்டு புக்குக்கு அட்டையும் போட்டு முடித்து //
ஏங்க உப்புமாவிலதானே ஒட்டினிங்க?

// இந்த வலை உலகில் நிறைய தோழிகள் முகம் தெரியாத பல தோழிகள் என்னை அக்கா அக்கா என்று உரிமையோடு கூப்பிடும் போது , ரொம்ப சந்தோஷமாய் இருக்கு அதோடு அக்கா அக்கான்னு சொல்லி நிறைய கிரீடம் வேறு கொடுத்து விடுகிறார்கள், அதுவும் வைர கிரீடம். //
இப்ப புரியுதுங்களா நான் ஏன் ஜலிலாக்கான்னு கூப்பிடுகின்றேன்னு.

ஜலில்லா, நீங்க இன்னமும் சஸ்பென்ஸ் எழுத்தாளராக வளர வேண்டும். மூன்று லிங்குகளைக் கெடுத்து சஸ்பென்ஸ் என்று சொல்லும் நீங்கள் மலிக்காவிற்க்கு பிடித்த கொலுக்கட்டை செய்து எடுத்துக் கொண்டு என்று வரி போட்டால், அது நீங்கள் பார்க்கப் போவது மலிக்கான்னு குழந்தை கூட சொல்லிவிடும்.
டியூட்டி புருட்டி நல்லா இருக்கு. என்னை சந்திக்கும் போது மறக்காம கொண்டு வாங்க. நானும் ஆரஞ்சுப் பழத்தோல் வத்தக்குழம்பு தருகின்றேன்.
என்னது வத்தக்குழம்புன்னதும் எஸ் ஆகிட்டீங்க. ஹா ஹா

GEETHA ACHAL said...

மிகவும் அருமையான கஸ்டர்ட்...

Jaleela Kamal said...

1. அம்மு ம‌து ந‌ன்றி

2.ஜெய்லானி ரொம்ப‌ ஈசியா த‌யாரித்துட‌லாம், @ மிக்க‌ ந‌ன்றி, ஜெய்லானி

3.சாருஸ்ரீ ஆமாம் ரொமப் ஈசி உங்கள் குட்டீஸுக்கு செய்து கொடுங்கள்.

4. சீமான் கனி எல்லா பெரிய பிள்ளைகள், சிறிய பிள்ளைகள் அனைவருக்கும் பிடித்தது தான், நன்றி

5. மிகக் நன்றி மேனகா

6. நன்றி நாஸியா, ஆதில் சூப்பர் மார்கெட்டில் இருக்கு பாருங்கள்.

7.வாங்க இமா டீச்சர் , கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

8. நன்றி சித்ரா, குட்டீஸூக்கு செய்து கொடுங்கள்.

9.ஆமாம் விக்கி ரொம்ப் சூப்பரா இருக்கும். நன்றி விக்கி.

10.கீதா ஆச்சல் ரொம்ப அருமையாக இருக்கும் அக்ஷதாவிற்கு செய்து கொடுங்கள்.

Jaleela Kamal said...

11. சுதாகர் சார் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

ஆரஞ்சு பழத்தோல் வத்த குழம்பா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ ஆஹா கேட்கும் போதே நா ஊறுகிறது.
நீங்க போன பதிவையும் இந்த பதிவையும் போட்டு குழப்பி கொண்டீர்கள் என்று நினைக்கி றென், கொஞ்சம் தெளிவாகிட்டு வாங்க.. ஹிஹி

நானானி said...

நல்லாருக்கு...ஈசியாவுமிருக்கு. இன்றே, இப்போதே செய்து விடுகிறேன். சேரியா?

Jaleela Kamal said...

நானானி வாங்க வருகைக்கு மிக்க நன்றி, செய்வது சுலபம், ஆறவைத்து குளிறவைக்கும் நேரம் தவிற 3 நிமிடத்துகுள் ரெடி பண்ணிடலாம்.

ஸாதிகா said...

கோடை ஆரம்பித்தாயிற்று.காலத்துக்கெற்ற உணவு வழங்க ஆரம்பித்து விட்டீர்கல்.வெரிகுட் ஜலி

மங்குனி அமைச்சர் said...

ஏங்க மேடம் , இந்த ட்ரூட்டி ஃபுரூட்டி விளம்பரத்துக்கு ஒரு பொண்ணு வருமே , அந்த பொண்ணு கையாள சர்வ பண்ண கூடாதா ?

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா நிறையவே குளு குளு ரெசிபி ரெடி ஆனால் போஸ்ட் பணண தான் கொஞ்சம் சோம்பேறிதனம்.

Jaleela Kamal said...

அமைச்சருக்கு லொள்ள பாரு.


வாங்க உங்க வீட்டம்மா கிட்ட போட்டு கொடுக்கிறேன். அப்ப்பர அவங்க நல்ல சர்வ் பண்ணுவாங்க

தெய்வசுகந்தி said...

easy & tasty recipe!!!!!

Vijiskitchencreations said...

ஜலீ சூப்பர் குட்டிஸுக்கு ஏற்ற கஸ்டர்ட் ஸ்விட்.

vanathy said...

ஜலீலா அக்கா, பார்க்கவே ஆசையாக, சாப்பிட வேண்டும் போல இருக்கு.

Kanchana Radhakrishnan said...

நல்லா இருக்கு.

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள ஜலீலா!

உங்களுக்கு எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Asiya Omar said...

கஸ்டட் பார்க்க சூப்பராக இருக்கு.

பித்தனின் வாக்கு said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், ஜலில்லா நம்ம கடைப்பக்கம் வந்து திட்டிட்டுப் போங்க.

பாத்திமா ஜொஹ்ரா said...

பேஷ் பேஷ்

சசிகுமார் said...

அக்கா சூப்பர் பதிவு.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

நன்றி திவ்ய சுகந்தி, வருகைக்கு மிக்க நன்றி.

ஆமாம் விஜி குட்டீஸுக்கு பிடித்த கஸ்டட் , தொடர் வருகைக்கு மிக்க நன்றி விஜி


வானதி இதில் வாழைப்பழத்தோடு சாப்பிடும் போது ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யம்மி தான்

நன்றி காஞ்சனா

நன்றி மனோ அக்கா உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்க்ள்.


போகி இன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


தொட‌ர் வ‌ருகைக்கு மிக்க‌ ந‌ன்றி ஆசியா.


சுதாக‌ர் சார் மிக்க‌ ந‌ன்றி, உங்க‌ள் க‌டைப‌க்க‌ம் என்ன‌ வ‌டையா? இதோ வ‌ருகிறென்.

பாத்திமா ரொம்ப வருகைக்கு நன்றி


தம்பி சசி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

நட்புடன் ஜமால் said...

கஸ்டர்ட்டு நல்லாத்தானிருக்கு

செய்யனுமே! ...

Jaleela Kamal said...

நட்புடன் ஜமால் என்ன ரொம்ப நாளா ஆளையே காணும். கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி/

Srivalli said...

Thanks for the entry!

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா