Tuesday, October 26, 2010

பாகற்காய் ஜூஸ் - bitter gourd juice






ஹசனாஸ் (மாமியார் பெயர்) பாகற்காய் ஜூஸ்

தேவையானவை

பாகற்காய் – ஒரு விரல் நீள துண்டு
மிளகு – 4
சீரகம் – கால் தேக்கரண்டி
உப்பு – சிறிது
லெமன் ஜூஸ் – அரை ஸ்பூன்

செய்முறை

பாகற்காயை துண்டுகளாக நறுக்கி அத்துடன் மிளகு,சீரகம்,உப்பு சேர்த்து மிக்சியில் தேவைக்கு தண்ணீர் ஊற்றி (அரை டம்ளர்) அடிக்கவும்.
நல்ல நுரை பொங்க அடித்து அதை வடிக்கட்டவும்.
லெமென் பிழிந்து குடிக்கவும்.
அந்த அளவிற்கு கசப்பு தெரியாது.


குறிப்பு:

இன்று என் மாமனார், மாமியாரின் கல்யாண நாள்,




என்ன கசப்பா ஒரு ஜூஸ் போட்டு இருக்கேன்னு பார்க்க வேண்டாம்.
மாமனாருக்கு சுகர் அதிகமாகமல், அப்படியே அதிக மானாலும், முன்றே நாளில் சரியான டயட் சமையல் செய்து கரெக்ட் லெவலுக்கு கொண்டு வந்துடுவாங்க எங்க மாமியார். ஆகையால் இப்ப கர்பிணி பெண்கள் முதல் கொண்டு , சிறியவர்கள் பெரியவர்கள் எல்லோருக்கும் ஜுரம் தலை வலிப்போல் சர்க்க்ரை வியாதியும் ஒன்றாகிவிட்ட்து, கண்டிப்பா எல்லோருக்கும் இது பயன் படும்.

ஏற்கனவே குறிப்புகளில் சாதரணமான பாகற்காய் ஜூஸ் நான் கொடுத்து இருந்தாலும், இதில் மிளகு சீரகம் சேர்த்து என் மாமியார் செய்வாங்க.
சரி செய்தாச்சு எப்படி குடிப்பது, இப்போதைக்கு இங்கு யாருக்கும் சர்க்கரை வியாதி இல்லை , எனக்கு நாக்கு கொஞ்சம் நீளம் என்ன செய்யலாம் சரி கால் ஸ்பூன் லெமன் பிழியலாம் என்று பிழிந்தேன் சூப்பர்.
எனக்கு தெரிந்து எல்லோருமே இதை பொதுவாக குடிக்கலாம். பிள்ளைகளுக்கு வாரம் ஒரு நாள் கொடுத்து பழக்கலாம். அவர்களுக்கு கொஞ்சம் தேனும், லெமன் சாறும் கொஞ்சம் கூட் சேர்த்து கொள்ளலாம். வயிற்றில் உள்ள பூச்சியும் அழி்ும், குழநைைை்்ு்்கும் சின்ன் வயதிலேயே பாவக்்ாய பழக்க படுத்்ினா ்ாதிரியும் இருக்்ும்.
பார்க்கவே பச்சை பசேல்லுன்னு நல்ல இருந்த்து, உடனே குடிச்சிட்டு இன்னொரு கிளாசும் தயாரிச்சாச்சு, இது நீத்து கிச்சனுக்காக செய்த ஜூஸ் , அப்ப்டியே எல்லோருக்கும் சர்க்கரை வியாதிக்கு அருமையான ஒரு ஜூஸும் கிடைத்து விட்ட்து.

டிஸ்கி: நான் சொல்வது கேட்டு யாரும் சிரிக்க கூடாது, முதலில் செய்த்து இந்த சுவை எப்படி இருக்கும் என்று மடக் மடக்குன்னு போட்டோ எடுக்காமலே காலையில் குடிச்சிட்டேன். பிறகு ஆஹா போட்டோ எடுக்கலையே என்று மறுபடி செய்து ( அதான் நல்ல இருக்கே) எடுத்தேன்.
இந்த பாவக்கான்னே நினைப்பு வருவது, எங்க அப்பா சின்ன வயதில் எல்லோரும் மாதம் ஒரு நாள் பாவக்காய் சாப்பிட்டே ஆகனும். கிட்ட உட்கார்ந்து ஊட்டி விடுவார், கண்ணில் ஆறெடுத்து கஷ்டப்பட்டு முழுங்குவேன்.









27 கருத்துகள்:

சாருஸ்ரீராஜ் said...

மாமியார் பெயரில் ஒரு ஜூஸ் , ரொம்ப நல்லா இருக்கு. மாமியார் மெச்சிய மருமகள் .

சாருஸ்ரீராஜ் said...

மாமனார் மாமியார்க்கு திருமண நாள் வாழ்த்துக்கள்

எல் கே said...

உங்கள் மாமனார் மாமியாருக்கு என் திருமண நாள் வாழ்த்துக்கள் ..

பாகற்காய் எனக்கு பிடிக்காது

நட்புடன் ஜமால் said...

இரண்டாம் பெற்றோருக்கு வாழ்த்துகள்

இதுலையும் ஜூஸா - ம்ம்ம் :)

ஜெய்லானி said...

மாமனார் மாமியார்க்கு திருமண நாள் நல் வாழ்த்துக்கள்...!!

என்னது பாவக்கா ஜுஸா படிக்கும் போதே கண்ணுல தண்ணீரா வருது....!!என்ன சொன்னாலும் நே சான்ஸ்..!! :-))

எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

Kanchana Radhakrishnan said...

உங்கள் மாமனார் மாமியாருக்கு என் திருமண நாள் வாழ்த்துக்கள் .

Unknown said...

Juice looks so healthy and colorful!!

Nithu Bala said...

Hearty wishes to your inlaws...thanks for sending this healthy juice to my event..

Vijiskitchencreations said...

super helathy drink jalee.
My hearty wishes to your in laws.

Krishnaveni said...

happy wedding anniversary to your inlaws, healthy juice, beautiful colour, great

Menaga Sathia said...

உங்கள் மாமனார் மாமியாருக்கு என் திருமண நாள் வாழ்த்துக்கள்!!

Prema said...

Healthy juice,Luks very colourful...Convey my wishes to ur in-laws.

Asiya Omar said...

மாமா,மாமிக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

மாமா,மாமிக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்.

இமா க்றிஸ் said...

மாமனார் மாமியாருக்கு என் வாழ்த்துக்கள் ஜலீ.
ஜூஸ்.... நல்ல கலரா இருக்கு. ;)

Chitra said...

Convey our regards and wishes to Uncle and Aunty!

Anonymous said...

I thought with some vengence only u named the bitterguord juice as such.After reading,realised I was the one mistaken.Hee.....heee...
Anyway nice recipe.

erodethangadurai said...

சூப் சூப்பர் ...!

ஒரு தமிழரை - உலக நாயகன் ஆக்குங்கள் - Please vote ...!

http://erodethangadurai.blogspot.com/2010/10/please-vote.html

Anisha Yunus said...

ஜலீலாக்கா இன்னிக்குதான் இந்த ஜூஸ் செஞ்சேன். ஒரியாக்காரருக்கு சுகர் இருப்பதால் தினம் காலைல குடிக்கறதுதான். அதுல இப்படி செஞ்சது அவருக்கு பிடிச்சிருந்தது. நன்றிங்க்கா.

Unknown said...

உங்கள் மாமனார் மாமியாருக்கு என் திருமண நாள் வாழ்த்துக்கள் .

R.Gopi said...

// இன்று என் மாமனார், மாமியாரின் கல்யாண நாள், //

******

ஜலீலா.... முதலில் பெரியவர்களுக்கு என் இனிய மனம் கனிந்த திருமண நாள் வாழ்த்துக்களை சொல்லி வணங்குகிறேன்..

அப்புறம், இந்த பாகற்காய் ஜூஸ், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாமே!!?

//எங்க அப்பா சின்ன வயதில் எல்லோரும் மாதம் ஒரு நாள் பாவக்காய் சாப்பிட்டே ஆகனும். கிட்ட உட்கார்ந்து ஊட்டி விடுவார், கண்ணில் ஆறெடுத்து கஷ்டப்பட்டு முழுங்குவேன்.//

ரசித்தேன்....

அந்நியன் 2 said...

ஆஹா ..மாமனார் மாமியார் கல்யாண நாளா அதான் பாவர்க்கை ஜூஸா...வாழ்த்துக்கள் !??

enrenrum16 said...

ஆ...பாவக்காய் ஜூஸா...உடம்புக்கு இவ்ளோ நல்லதுன்னு சொல்லியிருக்கீங்க...இவருக்கு பாவக்காய் பிடிக்கும்(எனக்கு பிடிக்காது) உங்க குறிப்புன்னு சொன்னா எதைன்னாலும் சாப்பிடுவாரு..அவருக்காக ட்ரை பண்றேன்...தேங்க்ஸ்க்கா

Many more happy returns of the day to your in-laws.

ஸாதிகா said...

ஹை..உங்கள் மாமியாருக்கு என்னுடைய பெயரில் பாதி..அவர்களுக்கு என் வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள் ஜலி.மாமனார் மாமியார் திருமண நாளில் இனிப்பில்லாமல் ஸ்வீட் செய்வது பற்றி ஒரு குறிப்பு போட்டு இருக்கலாம்.அவர்கள் பார்த்து விட்டு செய்து சாப்பிடுவார்கள்.

Jaleela Kamal said...

நன்றி சாரு

நன்றி எல் கே

நன்றி நட்புடன் ஜமால்

நன்றி ஜெய்லாணி

நன்றி காஞ்சனா

நன்றி நீத்து

நன்றி விஜி


நன்றி மேனகா


நன்றி கிரு ஷ்னவெனி

நன்றி திவ்யா


நன்றி பிரேமலதா

நன்றி ஆசியா

நன்றி இமா

நன்றி அனானி


நன்றி ஈரோடு தஙக்துரை


நன்றி அன்னு நீங்க தான் கரெக்டாகா செய்து பார்த்து வந்து கருத்த்தை தெரிவிப்பது.

மிக்க நன்றி அன்னு

நன்றி சினேகிதி

மிகக் நன்றி கோபி

நாட்டமா உங்கள் தீர்ப்ப இங்கே சொல்லிட்டீங்க போல

நன்றி

Jaleela Kamal said...

என்றென்றும் பதினாறு , பாவகற்காயே பிடிக்கலன்னாலும் என் குறிப்புன்னா ஒகே என்று சொல்வார் என்றீர்கள், மிக்க சந்தோஷ்ம்.

நன்றி

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா அப்ப்டி தான் நினைத்தேன், என் மாமியாரிடம் சொல்லிட்டு தான் போட்டேன் ரொம்ப சந்தோஷம் பட்டார்கள்,

அவஙக் பாகறகாய் ஜூஸ் எல்லோருக்கும் உதவுது என்று, மிகுந்த சந்தோஷம்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா