Thursday, December 2, 2010

39 ஆம் வருட கொண்டாட்டம் - 39 U.A.E.NATIONAL DAY














இன்று யு ஏ யி நேஷனல் டே, துபாய்,அபுதாபி,ஷார்ஜா,அல் அயின்,ராசல் கைமா ஃபுஜெரா எல்லா இடங்களிலும் பயங்கர அலங்கராமாக இருக்கும்,

அரபி பசங்க காரில் ஹோலி போல் வண்ணங்கள் தூவி ஆடுர ஆட்டம் இருக்கே, எப்பா/
டம்.



எல்லா பில்டிங்குக்கும், மரஙகளுக்கும் கலர் கலரா லைட் மாலைகள் மாலையா மாலையாக தொங்க விட்டு இருக்கு, போனவருடம் ரொம்ப டவுன், தீடீர் சரிவு , போன வருடத்த விட இந்த வருடம் பரவாயில்லை கொண்டாட்டம் அதிகாமாக இருக்கு. அதிக ஜோடிப்பா இருக்கு.
பார்கக்வும் அழகாக இருக்கு.











கார்னிஷ் , டேரா அப்ரா சைடில் தண்ணீரில் போட் வைத்து ஃப்வர் வொர்க்ஸ், மிக பிரமாண்டமாக டிசைன் டிசைனா வெடிப்பார்கள் இந்த வான வேடிக்கையை பார்க்க ஒட்டு மொத்த திரல்களையும் அங்கு காணலாம்.இதை பார்க்க குழந்தைகலுக்கு ரொம்ப கொண்டாட்டம்.

39 ஆம் வருட கொண்டாட்டாம்





இங்கு அடிக்கடி நடப்பது அவார்டு விஷாதான்.

தும்மினா இருமினா கூட அவார்டு கொடுத்துடுவாங்க போல
நிறைய அவார்டுகள் பரிசுகள்



அரபி பெண்களும் யு ஏ ஈ கொடி வண்ணத்தில் தலைக்கு ஸ்கார்ஃப்,குடை, வாட்ச்,வளையல், ரிங்க் ஆகியவைபோட்டு கொள்ளவார்கள்









பள்ளிகளில் சிறுமிகள் அனைவரும் ஒரே வண்ணத்தில் ஹேர் கிளிப்,தலைக்கு கேப்,கழுத்துக்கு மணி , எல்லோரும் கொடியும் குத்தி கொண்டு பரைட் பன்ணி அனைவரும் பார்க் சென்று பிள்ளைகளுக்கு ஆப்பிள்,பிட்சா, சாக்லேட் எல்லாம் கொடுத்து மறுபடி பள்ளிக்கு கூப்பிட்டு வருவார்கள்.

பள்ளிசிறுமிகளின் கொண்டாட்டாம்.






இங்கு வாரத்தில் வெள்ளி சனி

விடுமுறை. இது போல் ஈத், நேஷனல் டே என்றால் கவர்மெண்ட் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ஒரு நாள் லீவு சேர்ந்து வரும் வெள்ளி சனி கணக்கு கிடையாது அத கழிச்சிட்டு கூடுதல் விடுமுறைவேறு, பிரைவேட் கம்பேனிகளுக்கு வெள்ளி சனி லீவில் இது போல் பெஸ்டிவல் லிவு வந்தால் அந்த லீவிலேயே முடிந்து விடும்.




பொதுவா காருக்கு பயங்க ர அலகாரம்மாக இருக்கும், அரபிகள் காரில் மேல் புறம் நின்று கொண்டும் கதவு வழியாக எட்டி பார்த்து கொண்டும் காரை ஓட்டி செல்வார்கள் , இந்த வருடம் அபுதாபியில் எந்த கார் நல்ல அலங்காரமாக இருக்கோ அதில் 10 காருக்கு பரிசி கொடுக்க போகிறார்களாம்




வானவேடிக்கை. அருமையாக இருக்கும்

























அமீரக ஷேக்குகள்






ஷேக் வருகை




அடுத்த வாரம் வருகிற முஹர்ம் நியு இயர் லீவையும் இதில் சேர்த்து வைத்து கொண்டார்கள், இந்த ஷேக்குகளை கேட்க யாரும் இல்லை. அவஙக் வசதிக்கு அவர்கள் வைப்பது தானே சட்டம்/ இப்படி லீவ மாற்றி வைத்து கொள்கிறார்கள்.


21 கருத்துகள்:

மனோ சாமிநாதன் said...

புகைப்படங்களும் தகவல்களும் அருமை! நீங்களும் ஆசியாவும் ஏதாவது சொல்லி வைத்துக்கொன்டு பதிவு போட்டீர்களா?

Asiya Omar said...

வாழ்த்துக்கள் ஜலீலா,உங்கள் பதிவும் அருமை.

Menaga Sathia said...

photos super!!

பித்தனின் வாக்கு said...

இம்ம் நாங்க எல்லாம் படத்தையாது பார்த்துக்குறேம்.

ஆமா அந்த விவேகானந்தர் குறுக்கு சந்துக்கு எப்படி போகனும்?.

Chitra said...

Nice pics, hope u njoyed :)

Vijiskitchencreations said...

super picture with stories. I don't know til now. Now I read and wow so many things good.

jalee nice picture with presenation.

R.Gopi said...

//இங்கு அடிக்கடி நடப்பது அவார்டு விஷாதான்.

தும்மினா இருமினா கூட அவார்டு கொடுத்துடுவாங்க போல
நிறைய அவார்டுகள் பரிசுகள்//

*******

ஜலீலா...

நீங்க ஊருக்கு போயிட்டு வந்து அவார்ட் ஸ்பெஷலிஸ்ட் “தல” பத்தி யார்கிட்டயாவது சொன்னீங்களா??

இவங்களும் அதையே ஃபாலோ பண்ண ஆரம்பிச்சுட்டாங்க....

ஹுஸைனம்மா said...

//இந்த ஷேக்குகளை கேட்க யாரும் இல்லை. அவஙக் வசதிக்கு அவர்கள் வைப்பது தானே சட்டம்//

குடியரசு நாடான இந்தியாவிலேயே அரசாளுபவர்களை நம்மால் எதுவும் கேட்க முடிவதில்லை.

இது முடியரசு. அதாவது அரசாட்சி நடக்கும் அமீரகம். இங்கே அரசர்கள் வைப்பதுதான் சட்டம். ஆனாலும், இம்மண்ணின் மைந்தர்கள் மிக்க வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள். பாக்கியவான்கள்.

Vikis Kitchen said...

Seems a great festival. Nice photos. Happy celebrations dear!

Jaleela Kamal said...

வாங்க மனோ அக்கா

ஆசியா பதிவு போடு,முன்னே நான் பதிந்து வைத்திருந்தேன்.

இப்ப நிறை ய பதிவுகள்

இரண்டு பேருடையதும் ஒன்றாக தான் இருக்கு
வலை பெயரும் கிட்டதட்ட ஒன்றாக இருப்பதால் எல்லோருக்கும் குழப்பம் வேறு

உங்கள் வருகை எனக்கு மிக்க மகிழ்சி
உஙக்ள் அன்பான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி மனோ அக்கா

Jaleela Kamal said...

ஆசியா தொடர்வருகை அளித்து ஊக்கப்படுத்துவதற்கு மிக்க நன்றி

உஙக்ள் பதிவும் ரொம்ப அருமை

Jaleela Kamal said...

நன்றி மேனகா

Jaleela Kamal said...

//இம்ம் நாங்க எல்லாம் படத்தையாது பார்த்துக்குறேம். ..

வாஙக் சுதாகர் சார்
இப்படி பார்ர்க முடியாதவர்களுக்காக வே தான் சிரமம் பார்க்காமல் இப்படி போடுகிறேன்

அமீரகத்தில் என்ன நடக்குதுன்னாவது தெரிந்து கொள்ளலாம் இல்லையா?


//ஆமா அந்த விவேகானந்தர் குறுக்கு சந்துக்கு எப்படி போகனும்?//
அது மெரினா பீச்சாண்ட இருந்து அப்படியே பார்த்தீஙக் எதிரில் இருக்கும் சரியா?


வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி, பழையபடி பதிவு போட ஆரம்பித்து விட்டீங்க ,நான் முடிந்த போது கண்டிப்பா வருவேன்

Jaleela Kamal said...

நன்றி சித்ரா

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா உஙக்ள் பதிவை பார்த்தேன் ரெடி செய்து வைத்துள்ளேன் போட்டு விடுகிறேன்,

இந்த பதிவை பற்றி ஒன்றூம் சொல்லாமல் போய் விட்டீர்களே/

Jaleela Kamal said...

வாங்க தோழி விஜி
ஏதோ என்னால் முடிந்த படஙக்ள் உஙக்ள் அனைவருக்காக .அவ்வள்வுதான்
எல்லோரும் பார்த்து மகிழ்ந்தது ரொம்ப சந்தோஷம்

Jaleela Kamal said...

ஆமாம் கோபி பேப்பர எடுத்த பாருங்கள். எங்கு பார்த்தாலும் ஒரு அவார்டு விஷேஷம் இருக்கும்

கருத்திட்டமைக்கு மிக்க நன்றீ

Jaleela Kamal said...

ஆமாம் கோபி பேப்பர எடுத்த பாருங்கள். எங்கு பார்த்தாலும் ஒரு அவார்டு விஷேஷம் இருக்கும்

கருத்திட்டமைக்கு மிக்க நன்றீ

Jaleela Kamal said...

//இது முடியரசு. அதாவது அரசாட்சி நடக்கும் அமீரகம். இங்கே அரசர்கள் வைப்பதுதான் சட்டம். ஆனாலும், இம்மண்ணின் மைந்தர்கள் மிக்க வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள். பாக்கியவான்கள்//

ஆமாம் ஹுஸைனாம்மா அரபிகள் மாட மாளிகைகள். மணி மண்டபம் போல் வசந்த மாளிகை யில் இல்லையா வாழ்கிறார்கள்.
மிக கொடுத்து வைத்தவர்கள் தான்

Jaleela Kamal said...

விக்கி வாங்க ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கிஙக் , வருகைக்கும் கருத்துக்கும் ம்,மிக்க நன்றி

மாதேவி said...

படங்களும் தகவல்களும் நன்று.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா