Thursday, October 20, 2011

சகோதரிகளின் கவனத்துக்கு

இப்ப ஈமெயில் சாட்டிங்கை விட இப்ப பிள்ளைகளுக்கு பேஸ் புக் தான் எல்லான்னு ஆயிடுச்சி, இந்த மெசேஜில் +12 படிக்கும் மாணவிய பற்றி சொல்லி இருக்கு ஆனால்  6 ஆம் வகுப்பில் இருந்தே எல்லா பிள்ளைகளும் இப்ப பேஸ் புக் மெசேஜ் என வேகமாக இருக்கிறார்கள், இதை பற்றி விழிப்புணர்வு பதிவு போடனும் என்று அதற்குள் நான் நினைத்ததில் பாதி மெசேஜ் இதில் இருக்கு,

இவை அனைத்தும் எனக்கு  மெயில் வந்தது.ஆனால் இந்த  பதிவு பல பேருக்கு எரிச்சலா இருந்தாலும் உங்கள் நேரத்தை வீனடித்து பின்னாடி கூடி பேசினாலும் எனக்கு கவலை இல்லை.


ஆனால் சிலருக்காவது விழிப்புணர்வு ஏற்பட்டுமே. பிடிச்சவங்க படித்து கொள்ளுங்கள்.
As Received From Mr. Mohamed ismail


"ஃபேஸ்புக்ல எனக்கு அக்கவுன்ட் இருக்கறது உண்மைதான். ஆனா, நீங்க என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இல்ல


தமிழகத்தின் முக்கியமான நகரம் ஒன்றில் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்த அந்த மாணவியின் வீட்டுக்கு, ''ரக்ஷனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருக்காங்களா..?'' என்று கேட்டு வந்தான் ஓர் இளைஞன். மகளை அழைத்து, ''யாரது உன்னைத் தேடி வந்திருக்கிறது..?'' என்று அப்பா கேட்க, அவனை யாரென்றே அவளுக்குத் தெரியாததால்... ''யாருனே தெரியலயேப்பா...'' என்றாள் ரக்ஷனா. கோபமான அப்ப, அவனைக் கடுமையாகக் கண்டித்தார். உடனே பதிலுக்கு, ''ஹலோ... உங்க பொண்ணோட ஃபேஸ்புக் ஃப்ரெண்ட் நான். ஈவ்னிங் என்கூட ஒரு காபி சாப்பிடலாம் வாங்கனு அவங்கதான் கூப்பிட்டாங்க'' என்று சீறினான்.

...

''ஃபேஸ்புக்ல எனக்கு அக்கவுன்ட் இருக்கறது உண்மைதான். ஆனா, நீங்க என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இல்ல; உங்கள நான் வீட்டுக்கு வரச் சொல்லவும் இல்ல'' என்று ரக்ஷனா படபடக்க, அவனை வீட்டை விட்டுத் துரத்தினார் ரக்ஷனாவின் அப்பா.பிரச்னை முடியவில்லை. வாரம் ஒருவர், ''ரக்ஷனா வீடுதானே... வரச் சொன்னீங்களே...'' என்று படையெடுக்க, ஆத்திரமும் ஆற்றாமையுமாக எங்களிடம் வந்தார் ரக்ஷனாவின் அப்பா. ரக்ஷனாவிடமிருந்தே தொடங்கினோம் விசாரணையை.''வந்தவங்க யாரும் என்னோட ஃபேஸ்புக் 'ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்’ல இல்ல. அவங்கள நான் வீட்டுக்கும் வர சொல்லல. கூடவே, முதல் ஆள் வந்தப்போவே பதறிப்போய், எதுக்கு வம்புனு என் அக்கவுன்ட்டையே டெலிட் பண்ணிட்டேன். இருந்தும் என்னைச் சுத்தி என்ன நடக்குதுனே புரியல'' என்றார் குழப்பமும், அழுகையுமாக.அந்த வீக் எண்ட்... ''ரக்ஷனா இருக்காங்களா...'' என்று வந்தவனைப் பிடித்து நாங்கள் 'விசாரிக்க’, ''சார்... வேணும்னா பாருங்க...'' என்று அவன் தன் ஃபேஸ்புக் புரொஃபைலைத் திறந்து காட்டினான். அவனுடைய நண்பர்கள் லிஸ்ட்டில்... ரக்ஷனா! மேலும், அவனுக்கு அவள் அனுப்பியிருந்த மெஸேஜ்கள், தகவல் பரிமாற்றங்களில் எல்லாம்... காதல் சொட்டியது. 'இந்த சனிக்கிழமை எங்க வீட்டுக்கு வா. காபி குடிச்சுட்டே உங்கிட்ட என் காதலை சொல்லணும்’ என்ற மெஸேஜுடன் அவள் அனுப்பியிருந்த வீட்டு முகவரியையும் காட்டி, ''பாருங்க சார்!'' என்றான் அந்த இளைஞன் ஆதாரத்துடன்.''சார்... இது நான் கிரியேட் பண்ணின அக்கவுன்ட்டே இல்ல. என் போட்டோ, இ-மெயில் ஐ.டி. கொடுத்து வேற யாரோ என் பெயர்ல கிரியேட் பண்ணி, இப்படி என் வாழ்க்கையில விளையாடறாங்க'' என்று அழுதாள் ரக்ஷனா. ஒரே வாரத்தில், அப்படி கேடித்தனம் செய்த கேரள இளைஞனை, அவனுடைய கணினியின் அடையாள எண்ணை வைத்து கண்டுபிடித்தோம்.அவனுக்கு ரக்ஷனா மீது அப்படியென்ன வெறுப்பு?''ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்கலாம்னு ஃபேஸ்புக் மூலமா அவளுக்கு தகவல் அனுப்பிட்டே இருந்தேன். 'முன்ன பின்ன தெரியாதவங்கள நான் ஃப்ரெண்டா ஏத்துக்கிறதில்ல’னு ரிஜக்ட் செய்துட்டே இருந்தா. ஒரு கட்டத்துல ஆத்திரமாகி, அவளை பழிவாங்க நினைச்சேன். அவ படிக்கிற ஸ்கூல் பெயரை ஃபேஸ்புக்ல குறிப்பிட்டிருந்தா. சென்னையில இருக்கற என் ஃப்ரெண்ட்ஸ் மூலமா அந்த ஸ்கூல் ரெஜிஸ்டர்ல இருந்து அவ அட்ரஸை எடுத்தேன். ஏற்கெனவே தன்னோட புரொஃபைல்ல அவ அப்டேட் பண்ணியிருந்த போட்டோவை எடுத்து, அவ பேர்லயே புதுசா ஒரு அக்கவுன்ட் கிரியேட் பண்ணினேன். அதன் மூலமா பல பசங்ககிட்டயும் அவ பேர்லயே 'சாட்’ பண்ணி, அவ வீட்டுக்குப் போக வெச்சேன்'' என்று கக்கினான் அந்த இளைஞன். அவனைக் கண்டித்து, அந்த அக்கவுன்ட்டை டெலிட் செய்ய வைத்தோம்.'' 'ஃபேஸ்புக்ல போட்டோ எல்லாம் போடாதே... பிரச்னைகள் வரலாம்’னு என் ஃப்ரெண்ட்ஸ் சொன்னதை கேட்காம விட்ட தப்புக்கு நான் கொடுத்திருக்கிற விலை அதிகம்’ என்று தவறை உணர்ந்து வருந்தினாள் ரக்ஷனாஆம்... புகைப்படம், மெயில் ஐ.டி, மொபைல் நம்பர், பள்ளி, கல்லூரி, அலுவலகம் என நம் பர்சனல் விவரங்களை சமூக வலைதளங்களில் பந்தி வைத்தால் பிரச்னைதான்... குறிப்பாக பெண்களுக்கு! ....

Best regards,


ASHRAF

hp -Service Center
Nahil Computer Co.,
Riyadh
K.S.A


முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!! எச்சரிக்கை – கவனம் – உஷார்.மார்க்கம் அறியாத பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் மார்க்கத்தை கற்றுக்கொடுக்காமல். வீட்டிலும் மார்க்கத்தை பேணாமல். தங்களின் பொறுப்பை மறந்து..,.தங்களது பிள்ளைகளுக்கு ””செல்லம்” ”பாசம்” ஃபேஷன்” என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாகிறார்கள்.

ஏற்கனவே ஈமான் என்றால்? என்ன இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும். என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல். ஹிஜாப் முறையை சரிவர பேணாமல்,, அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம். காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங்கிளாஸ் , ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், என்று போகும் இடங்களில், மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும். பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள். இதன் காரணமாக சில மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் தீன் குலப்பெண்களுக்கு அண்ணன்களாகவும். நண்பர்களாகவும், ஆகிவிடுகிறார்கள்.


இன்றைய இளம்பெண்கள் காம உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக “சினிமா’ முதல் காரணமாக இருக்கிறது.


“சினிமா’ என்றவுடன் தியேட்டர்தான் ஞாபகம் வரும். ஆனால் இன்று ஒவ்வொரு முஸ்லிம் வீடும் தியேட்டராகவே இருக்கிறது.

அதுதான் ( T.V ) தொலைக்காட்சி. (எல்.சி.டி – 20 இன்ச் முதல் 60 இன்ச் வரை திரைகள் வசதிக்கு ஏற்றவாறு)கேபில் கனெக்சன் போதாது என்று டிஷ்கள். மற்றும் DVD பிளேயர்கள் with USB-PORT.

 DESK-TOP கம்ப்யூட்டர்@இண்டெர்நெட். வசதி இருப்பின் >>>லேப்டாப் கம்ப்யூட்டர் @USB இண்டெர்நெட்மோடம். என்று இந்த “சினிமா’” அனாச்சாரங்களும் ஆபாசங்களும் நமது வீட்டிலிருந்து – பாக்கெட்டு வரை கிடைக்க >> பெண்களின் பெற்றோர்களும், பெண்ணின் கணவனும். உழைக்கிறார்கள்.


கேட்டதை வாங்கி கொடுப்பவர்களே!!

· மேற்கண்ட சாதனங்களை பிள்ளைகள் எப்படி பயன்படுத்துகிறார்கள்.

· யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள். எத்தனை சிம் கார்டுகள் உபயோகிக்கிறார்கள்.

 மாற்று மத தோழிகள் வீட்டுக்கு சென்று என்ன செய்கிறார்கள். அவர்களது வீட்டில் ஆண்களோடு பழகுகிறார்களா?

· தனி அறையில் இருந்து T.V யில் எந்தெந்த சேனல்கள் பார்க்கிறார்கள். என்ன சி.டி.பார்க்கிறார்கள்.

 கம்ப்யூட்டரில் (இண்டெர்நெட்டில்) தனிமையில் இருந்து என்ன பார்க்கிறார்கள் என்ன செய்கிறார்கள்.· இ-மெயிலில், சாடிங்கில் யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள்...

என்பதை கேட்டு தெறிந்து கொள்கிறீர்களா? அல்லது எச்சரிக்கை உணர்வோடு கண்காணிக்கிறீர்களா?என்னோட பிள்ளையை நானே கண்காணிப்பதா? சந்தேகப்படுவதாக ஆகாதா? என்று கருதாமல். என்னுடைய பிள்ளையின் வாழ்க்கை, குடும்ப மானம், இஸ்லாத்தின் கண்ணியம். இவற்றை முன்னிறுத்தி. கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.. இது விசயத்தில் சிந்தித்து செயல் பட வேண்டியது. ஒவ்வொரு தீன்குலப்பெண்ணின் பெற்றோருக்கும். ஒவ்வொரு தீன்குலப்பெண்ணின் கணவனுக்கும். மிக மிக அவசியம். என்பதை மேற்காணும் செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.


24 கருத்துகள்:

ஆமினா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

இதையெல்லாம் பயன்படுத்த தெரியாததுனாலேயே பேஸ்புக் அக்கவுண்ட்டை க்ளோஸ் பண்ணிட்டேன். பல கூகுள் + அழைப்பு வந்தும் பயந்துக்கொண்டு நெடுநாள் விலகியே இருந்தேன். இவையெல்லாம் பாக்கும் போது இன்னும் பயமாக தான் இருக்கு

நல்லதொரு விழிப்புணர்வு அக்கா

ஜஸாக்கல்லாஹ் ஹைர்

ஆமினா said...

இப்படி சீரழிவுக்கு உள்ளாகும் இளைய சமுதாயம் பற்றி பதிவு போட நினைத்தேன். சில காரணங்களால் விட்டுவிட்டேன்.

இந்த கட்டுரை ரொம்பவே அருமை.

பகிர்வுக்கு நன்றி அக்கா

Vetri said...

அன்பு சகோதரி,

உங்களுடைய நீண்ட நாள் வாசகன் நான். இந்த பதிவு பெண் மக்களுடைய பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை!

நன்றி

Jaleela Kamal said...

வா அலைக்கும் சலாம் ஆமினா
எனக்கும் அப்படி தான் , இது கண்டிப்பாக ஓவ்வொரு பெற்றோரும் தெரிந்து கொள்ள் வேண்டிய்து

ஏதோ நம்மால் முடிந்தது இந்த பிலாக் மூலம் சில பேருக்காவது விழுப்புணர்வு செய்தியை போட முடியுது, எல்லோருக்கும் தெரியும் என்றாலும் நிறைய பேருக்கு மீண்டும் படிக்கும் போது சிறிது உஷராகுவார்கள். இல்லையா?

Jaleela Kamal said...

வெற்றி வாங்க ரொம்ப சந்தோஷம் இன்றாவது பதில் போட்டீங்களே//

முடிந்த போது கண்டிப்பாக கருத்து தெரிவியுங்கள்.

Angel said...

//கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.//
மிகவும் அவசியமானவிழிப்புணர்வு பதிவு ஜலீலா .

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

விழிப்புணர்வூட்டும் பதிவு .

ஜஸாக்கல்லாஹ் ஹைர்

அருள் said...

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

ஆச்சி ஸ்ரீதர் said...

avasiyamaana pakirvu

Ahamed irshad said...

இதைப் ப‌ற்றிய‌ ப‌திவு ரொம்ப‌வும் முக்கிய‌ம் ஜ‌லீலாக்கா...சில‌ விழிப்புண‌ர்வுக‌ளை அப்ப‌ப்ப‌ ஞாப‌க‌ப்ப‌டுத்திக்கிட்டே இருக்க‌னும்.. அவ‌சிய‌மான‌ ப‌திவுக்கு ந‌ன்றிக‌ள்...

அருந்ததி:) அதிரா:) said...

உண்மைதான் ஜலீலாக்கா.

ஃபேஸ்புக் இந்த வருட இறுதியோடு மூடப்போகிறார்கள் என ஒரு தகவல் வந்துது... என்னவோ தெரியாது... எல்ல வீட்டிலும் குஞ்சு குருமான் எல்லாம் ஃபேஸ் புக் வைத்திருக்கிறார்கள்.

அதுக்கு இன்னொரு காரணம்... நல்ல நல்ல கேம்ஸ்கள் அதில் இருக்கு.

மாய உலகம் said...

மிகவும் கவனிக்க படவேண்டிய பதிவு... சமீபத்தில் இதைப்பற்றிய செய்தி பரபரப்பாக பேசப்பட்டிருக்கு... ஏகப்பட்ட குருப் இதற்காகவே இணைய தளத்தில் வலை விரித்து தேடிக்கொண்டிருக்கிறது.. அன்பு சகோதர , சகோதரிகளே அறிவை பயன்படுத்தி உசாராக இருங்கள்.... இல்லை என்றால் இன்னல் தான்... விழிப்புணர்வுடன் இருப்பது நலம்... பகிருவுக்கு நன்றிகள் பல

ஸாதிகா said...

உபயோகமான பகிர்வு.

Anonymous said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

தூயவனின் அடிமை said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நல்ல இடுக்கை ,இன்று பெற்றோர்கள் பிள்ளைகளை தன் முழு கட்டுபாட்டில் வைக்கும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளோம்.

R.Gopi said...

// +12 படிக்கும் மாணவிய பற்றி சொல்லி இருக்கு//

இது புது படிப்பால்ல இருக்கு ஜலீலா...

வளர்ந்து வரும் விஞ்ஞான மாற்றங்களை ஆக்கபூர்வமாக உபயோகப்படுத்துதல் மிக்க நன்று...

வலையில் கொட்டிக் கிடக்கும் நல்ல விஷயங்களை சேகரிப்பதில் நேரம் செலவழித்தல் மாணவ / மாணவியர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் நல்லது...

இதை கூட இருந்து பெற்றோர்களும் அவர்களுக்கு பக்குவமாக எடுத்து சொல்ல வேண்டும்... தன் பிள்ளைகளை நல்வழிப்படுத்துதலில் பெற்றோர்கள் தான் முதன்மை அக்கறை எடுக்க வேண்டும்...

தானே நல்வழிகாட்டியாக இருந்து அவர்களை ஊக்குவித்தால், அவர்கள் வாழ்வில் மிகப்பெரிய ஒரு நிலையை எட்ட ஏதுவாக இருக்கும்...

வழக்கம் போலவே மற்றுமொரு அருமையான பதிவு ஜலீலா....

வாழ்த்துகள்....

(நீண்ட நாட்களுக்கு பின் என் பின்னூட்டம், உங்கள் வலையில்... அதில் எனக்கு மகிழ்ச்சி...)

மனோ சாமிநாதன் said...

அருமையான பதிவு ஜலீலா! எத்தனை பேருக்கு உபயோகமாக இருக்கும்! இந்த மாதிரி விழிப்புணர்வு பதிவுகள் தற்போதைய உலகில் அனைவருக்கும் அவசியம் தேவையான ஒன்று!

Bala Murugan said...

Hello Brother,

Thanks, keep it up, but there is small error,,, why you have mentioned only for Muslim brothers and sisters. lot of peoples are reading your blog. Please do not divide we all are together.

Bala

Jaleela Kamal said...

பாலா நீங்கள் சொல்வது சரிதான்.
இது மெயில் மெசேஜ், இது வரை நான் பொதுவாக தான் எல்லோருக்கும் எழுதி வந்தேன்.

இதற்கு முன் இதே போல் என் பதிவு மற்றவர்கள் ஏற்று கொள்ளவில்லை , கேலி கிண்டலுமாய் இருக்கு அவர்களுக்கு அதான்.
இந்த பதிவை படிப்பவர்கள் பலர் விழித்துகொண்டால் சந்தோஷம் தான்.

Jaleela Kamal said...

வாங்க கோபி ரொம்ப நாள் கழித்து வந்தாலும் மகிழ்சியே
அவரவருக்கும் பல வேலைகள் இருக்கும், அது போல் தான் நினைத்து கொண்டேன்.

'பரிவை' சே.குமார் said...

நல்லதொரு விழிப்புணர்வு அக்கா.

Anonymous said...

good post jallella. we must aware evrything when we handle it.and your blog is nice to visit.this is my first visit.have a good day.wishes to you.

Anonymous said...

good post jaleela ijust came here to know about your cooking tips. facebook is a twoside sharp edged weapon. if we handle carefully we will enjoy otherwise we got hurted. your blog is nice to visit. all tha best.

Anonymous said...

good post jaleela ijust came here to know about your cooking tips. facebook is a twoside sharp edged weapon. if we handle carefully we will enjoy otherwise we got hurted. your blog is nice to visit. all tha best.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா