Wednesday, January 16, 2013

பீட்ரூட் பிரியாணி ( குக்கர் முறை)

 -- 
  


பீட்ரூட் பிரியாணி  ( குக்கர் முறை)



பீட்ரூட் ரத்தசோகைக்கு நல்லது, ஹிமோகுளோபின் அளவை அதிகரிக்கும். குழந்தைகளுக்கும் , கர்பிணி பெண்களுக்கும் லன்ச் பாக்ஸ்க்கும் ஏற்ற சத்தான உணவு.




பரிமாறும் அளவு - 3 நபருக்கு
ஆயத்த நேரம் - 15 நிமிடம்
சமைக்கும் நேரம் - 15 நிமிடம்

 பாசுமதி அரிசி - 300 கிராம்
பீட்ரூட் - 2 மீடியம் சைஸ்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்ச மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1/2 தேகக்ரண்டி
தயிர் - 1 தேக்கரண்டி
கொத்துமல்லி, புதினா - சிறிது
பிரிஞ்சி இலை - 2
பட்டை, ஏலம் லவங்கம் தலா - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 11/2 தேக்கரண்டி
உப்பு  - தேவைக்கு  (ஒரு தேக்கரண்டி)
எண்ணை - 5 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
லெமன் ஜூஸ் - 1/2 தேக்கரண்டி
அலங்கரிக்க - அவித்த முட்டை
 செய்முறை

1.அரிசியை பத்து நிமிடம் ஊறவைக்கவும். பீட்ரூட்டை தோல் சிவி மிடியமாக சின்ன சதுர வடிவமாக வெட்டி கொள்ளவும்.

2.வெங்காயம் தக்காளியை நீளவாக்கில் அரிந்து வைத்து கொள்ளவும்.

3.குக்கரை காயவைத்து எண்ணை சேர்த்து அதில்பிரிஞ்சி இலை, பட்டை ஏலம் லவங்க சேர்த்து வெடிய விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4.வெங்காயம் கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்ந்து இரண்டு நிமிடம் வதங்க விடவும்.
5.கொத்துமல்லி புதினா சேர்த்து வதக்கி தக்காளி மற்றும் பச்சமிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்க்கவும்.
6.அடுத்து வெட்டி வைத்துள்ள பீட்ரூட், மிளகாய் தூள், உப்பு, தயிர் சேர்த்து நன்கு வதக்கி இரண்டு நிமிடம் வேக விடவும்.
7.வெந்ததும் 1: 11/2 அளவுக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஊறவைத்துள்ள அரிசியை சேர்த்து கொதிக்க விட்டு பாதி கொதித்து வரும் போது நெய் + லெமன் ஜூஸ் சேர்த்து குக்கரை மூடி வெயிட் போட்டு இரண்டு விசில் வந்ததும் இரக்கவும்.
8. பிரஷர் ரீலிஸ் ஆனதும் நன்கு பிரட்டி வேறு பாத்திரத்தில் மாற்றி விடவும்.



சுவையான சத்தான பீட்ரூட் பிரியாணி ரெடி ,ரெய்தா, பாயில்ட் எக், சிக்கன் பிரை , கட்லட் என பிடித்த பக்க உணவுடன் சாப்பிடலாம்.
லன்ச் பாக்ஸ் க்கு ஏற்ற ஈசியான ரெசிபி.

ஹாக்கின்ஸ் ப்ரசர் குக்கர் என்பதால் 3 நிமிடத்தில் ப்ரஷர் ரீலிசாகிடும்.எனக்கு என் ஹஸுக்கு, என்பையனுக்கு எல்லாருக்குமே லன்ச் பாக்ஸ் ரெடி பண்ணுவதால் [பெரும்பாலும் வெஜ் தான் எடுத்து செல்வோம் .இப்படி வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு காய் அல்லது கீரையில் பிரியாணி செய்வதுண்டு.வேலையும் சுலபமாக முடிந்து விடும்.



நொய் உருண்டை வெல்லஞ்சோறு

பூண்டு முட்டை சாதம்(கர்பிணி பெண்களுக்கு)





linking to saras 30 minutes dish rice recipe & Priya's Valentine's day Recipe Contest


7 கருத்துகள்:

Asiya Omar said...

உங்க பீட்ரூட் பிரியாணி அருமை.நானும் ஒரு தோழி செய்திருந்தாங்க,அவங்க முறைப்படி செய்து பார்த்தேன்,நல்லா வந்தது.இந்த முறையும் ஈசியாக இருக்கு.

கோமதி அரசு said...

அருமையான எளிதாக செய்யும் பிரியாணி செய்து பார்த்து விடுகிறேன் ஜலீலா. நன்றி.

enrenrum16 said...

ரொம்ப ஈஸியா இருக்கு... நான் இது போல் மற்ற காய்களைப் போட்டு செய்ததுண்டு.... பீட்ரூட் போட்டு விரைவில் செய்து பார்க்கிறேன் அக்கா.

'பரிவை' சே.குமார் said...

அருமையான பிரியாணி.... சுலபமான செய்முறை...
அருமை அக்கா....

Unknown said...

wow.. super biriyani... naan neethu kooda beetroot rice seithenn. ithai neethey parthu irunthaal udaney seithu irupeneyy.. ok next time try pannuren..

Priya Suresh said...

Super healthy briyani,love it.

Bharathy said...

Samayal attahasangal :D mikavum attahasamana title than :D

Ore cooker le onna samkkura meal /biriyani enakku rombave pidikkum. Thakkali biriyani panniyirukken. Beetroot pidikkum. So kandippake try seyren . nice recipe. sure it will be full of flavours :)


Contribute your entry to my giveaway event, My Spicy Recipe and win e-gift vouchers worth Rs 1500, 1000 and 500!

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா