Monday, November 30, 2009

சிகப்பரிசி மாவு வெல்லம் உருண்டை




சிகப்பரிசி மாவு வெல்லம் உருண்டை (ஆட்டே பார்ம்)
பெயரை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். இதுக்கு பேர் சும்மா கிண்டலுக்கு ஆட்டே பார்ம் என்பார்கள். இது வெல்லம் தேங்காய் உருண்டை என்று சொல்லலாம். வெல்லம் பூரணம் என்றும் சொல்லலாம்.





ரொட்டி, தக்குடி, புட்டு, கொழுக்கட்டைக்காக நாங்க சிகப்பரிசி மாவு மொத்தமா திரித்து வருத்து வைத்து கொள்வோம்.





சிகப்பரிசி மாவு = ஒன்னறை டம்ளர்
தூளாக்கிய வெல்லம் = ஒரு டம்ளர்
தேங்காய் துருவல் = ஒரு டம்ளர்
நெய் = சிறிது
வெண்ணீர் = மாவு கிளற தேவையான அளவு
உப்பு = சிறிது














ஓன்ன‌றை ட‌ம்ள‌ர் மாவு எடுத்து வெண்ணீரை கொதிக்க‌ விட்டு சிறிது உப்பு ஒரு சிட்டிக்கை அளவு,ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து மாவில் கிள‌ற‌வும்.



அப்ப‌டியே கொஞ்ச‌ம் நேர‌ம் ஊற‌வைக்க‌வும். கை பொருக்கும் ப‌க்குவ‌த்தில் மாவை குழைத்து உருண்டைக‌ளாக‌ பிடிக்க‌வும்.







ஒவ்வொரு உருண்டைகளையும் நடுவில் குழியாக்கி (உருண்டும் போது கையில்சிறிது நெய் தடவி கொள்ளவும்). அதில் முதலில் வெல்லம் அடுத்து தேங்காயை வைத்து மூடி உருண்டைகளை மூடவும்












இட்லி பானையில் தண்ணீர் வைத்து மூடியின் மேல் ஈர துணியை விரித்து எல்லா உருண்டைகளையும் வைத்து அவிக்கவேண்டும்.





சுவையான வெல்லம் உருண்டை (ஆட்டே பார்ம்) ரெடி.










குறிப்பு



உருட்டும் போது கையில் சிறிது நெய் தடவி கொள்ளவும்.


இந்த‌ மாவு வெண்ணீரில் ஊறிய‌வுட‌ன் நிறைய‌ மாவு ஊறி வ‌ரும்.


இது நான்கு ந‌ப‌ர்க‌ள் சாப்பிட‌லாம். கூட‌ கார‌த்திற்கு சுண்ட‌ல் (அ) வ‌டை ஏதாவ‌து த‌யாரித்து கொள்ள‌லாம்.







Saturday, November 28, 2009

தயிர் சாதம் - (Curd Rice)


தயிர் சாதம் தான் ரொம்ப லைட், வயிறு உபாதை, வாய் புண் இருந்தால் எல்லாவற்றிற்குமே ரொம்ப நல்லது.

தயிர் சாதம் ஈசி தான் எல்லோருக்கும் தெரிந்தது தான் இந்த முறையையும் டிரை பண்ணி பாருங்கள். இது புளிப்பில்லாதது எட்டு மாத குழந்தை முதல் வயதானவர்கள் வரை சாப்பிடலாம்.



அரிசி = ஒன்னறை கப்
புளிப்பில்லா தயிர் = அரை கப்
பால் = இரண்டு கப்
தாளிக்க‌
எண்ணை = இரண்டு தேக்கரண்டி
கடுகு = அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு = அரை தேக்கரண்டி
கடலை பருப்பு = ஒரு தேக்கரண்டி
முந்திரி = பொடியாக அரிந்தது ஒரு தேக்கரண்டி
பூண்டு = இரண்டு பல்
பெருங்காயப்பொடி = ஒரு சிட்டிக்கை
க‌ருவேப்பிலை = இர‌ண்டு ஆர்க்
உப்பு = தேவைக்கு
க‌டைசியாக‌ சேர்த்து கிள‌ற‌
ப‌ச்ச‌ மிள‌காய் = ஒன்று
இஞ்சி துருவ‌ல் = அரை தேக்க‌ர‌ண்டி
கொத்தும‌ல்லி த‌ழை = ஒரு தேக்க‌ர‌ண்டி
அல‌ங்க‌ரிக்க‌
காராபூந்தி (அ) கேர‌ட், வெள்ள‌ரி







சாதத்தை வடித்தோ (அ) குக்கரில் வைத்தோ வேகவைத்து கொள்ளவும். இது குழைவாக வடிக்க வில்லை என்றாலும் பரவாயில்லை. சூட்டோடு மசித்து விட்டால் குழைந்த சாதம் போல் ஆகிவிடும்.

பாலை காய்ச்சி ஆறவைக்கவும்.

தாளிக்க‌ கொடுத்துள்ளவைகளை கருகாமல் தாளித்து உடனே தயிர் போட்டு கலக்கி, பாலையும் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடமால் அடுப்பை விட்டு இரக்கவும்.




மசித்த சாதத்தில் போட்டு நன்கு கிளறவும்.

கடைசியாக போட்டு கிளற கொடுத்த பொருட்களை போட்டு கிளறி காராபூந்தி தூவி குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கவும்.

இல்லை துருவிய கேரட், பொடியாக அரிந்த வெள்ளரி சேர்த்தும் சாப்பிடலாம்.


Wednesday, November 25, 2009

காஜ‌ர் கி ஹ‌ல்வா - Carrot Halva







கேர‌ட் = முன்று கிலோ
ச‌ர்க்க‌ரை = ஒன்ன‌றை கிலோ
ஸ்வீட்ட‌ன் க‌ண்டென்ஸ்ட் மில்க் = 400 மில்லி டின்
பால் ப‌வுட‌ர் = 16 தேக்க‌ர‌ண்டி ( 5 ட‌ம்ள‌ர் )
பாத‌ம் = 100 கிராம்
ப‌ட்ட‌ர் = 125 கிராம்
நெய் = 100 கிராம்
உப்பு = ஒரு சிட்டிக்கை
ஏல‌ப்பொடி = இர‌ண்டு தேக்க‌ர‌ண்டி
பாத‌ம்,பிஸ்தா,முந்திரி, கிஸ்மிஸ் = 200 கிராம் (பொடியாக‌ அரிந்த‌து)




கேர‌ட்டை துருவி ப‌ட்ட‌ரில் ப‌ச்சை வாடை போகும் வ‌ரை வ‌த‌க்க‌வும்.


பால் ப‌வுட‌ரில் 6 ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் சேர்த்து 5 ட‌ம்ள‌ராக‌ வ‌ற்றும் வ‌ரை காய்ச்சி அதையும், ஏல‌ப்பொடி, சிறிது நெய்யையும், ப‌ட்ட‌ரில் வ‌த‌க்கிய‌ கேர‌ட்டில் ஊற்றி வேக‌ விட‌வும்.





வெந்து பால் வ‌ற்றும் போது பாத‌த்தை வெண்ணீரில் போட்டு தோலை எடுத்து முற்றிலும் அரைக்காம‌ல் துருவிய‌து போல் மிக்சியில் போட்டு அதையும் சேர்த்து வேக‌ விட‌வும்.





பிற‌கு ச‌ர்க்க‌ரை சேர்த்து கிள‌ற‌வும். ச‌ர்க்க‌ரை சேர்த்த‌தும் த‌ண்ணீர் விடும், வ‌ற்ற‌ நேர‌ம் எடுக்கும்.








ச‌ர்க்க‌ரை வ‌ற்றும் போது க‌ண்டெண்ஸ்ட் மில்க் மெயிட், ந‌ட்ஸ் வ‌கைக‌ளை நெய்யில் வ‌ருத்து அதையும் சேர்த்து கிள‌றி இர‌க்க‌வும்.














சுவையான‌ காஜ‌ர் கி ஹ‌ல்வா ரெடி.
இது நாங்கள் இஸ்லாமிய இல்ல‌ விசேஷ‌ங்க‌ள் ம‌ற்றும் ஈத் நாட்க‌ளில் செய்வ‌து. இதே போல் பீட்ரூட்டிலும் செய்வோம்.

நான் ஊருக்கு போகிறேன், மறக்காமல் குறிப்புகளுக்கு பின்னூட்டம் கொடுங்கள்.



ஓட்டு போட மறக்கக்கூடாது

எல்லோருக்கும் ஈத் முபாரக்

எல்லோருக்கும் தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்



அர‌ஃபா நோன்பு வையுங்கள்,நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரமாகும்.
சுபுஹனல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
லாயிலாஹ இல்லல்லாஹ்
அதிகமாக திக்ரு செய்து கொள்ளுங்கள்.

لَبَّيْكَ اَللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّبيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَشَرِيْكَ لَكَ
1. லைப்பைக் அல்லாஹும்ம லைப்பைக் லப்பைக்க லா ஷரீக்க லக்க
லப்பைக் இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க் லா ஷரீக்க லக்.

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
2. ‘ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி
ஹஸனத்தன் வகினா அதாபன்னார்’

இந்த இரண்டு தூவாவும் ஹஜ்ஜில் ஓதுவது நாமும் ஓதிக்கொள்ளலாம்.

இன்ஷா அல்லா இந்த வருடம் ஹஜ் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கு லேசாக்கி வைத்து அல்லா கிருபை புரிவானாக.
ஹஜ் செல்ல நாடி உள்ளவர்களுக்கும் ஹஜ் பாக்கியம் கிடைக்க தூஆ செய்து கொள்வோம்.

அர‌ஃபா அன்று நோன்பு வைப்பது நாம் செய்த பாவங்களை தீர்க்க கூடியதாகும்.

இதன் விளக்கங்களை இதில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்


ஈத் முபாரக்

Tuesday, November 24, 2009

முப்பழ ஹல்வா



பேரித்தம் பழம் = 200 கிராம்
கருப்பு கிஸ்மிஸ் பழம் = 25 கிராம்
அத்தி பழம் = 25 கிராம்
கட்டியான பால் = அரை டம்ளர்
சர்க்கரை = இரண்டு மேசை கரண்டி
(தேவைப்பட்டால் கொஞ்சம் கூட சேர்த்துக்கொள்ளலாம்)
நட்ஸ் வகைகள் = 50 கிராம் (பாதம்,பிஸ்தா,முந்திரி,அக்ரூட்)
சாஃப்ரான் (குங்குமப்பூ) = கால் தேக்கரண்டி





பேரித்தம் பழத்தை கொட்டை நீக்கி, டேட்ஸ்,அத்திபழம்,கிஸ்மிஸ் பழம் மூன்றையும் சிறிது வெண்ணீரில் ஊறவைத்து ஆறிய பால் சேர்த்து அரைக்கவும். வெண்ணீரில் ஊறவைத்தால் ரொம்ப ஹாடாக இல்லாமல் ஷாஃப்டாக இருக்கும்.





சிறிது பட்டரை காயவைத்து அதில் அரைத்த கலவை + சிறிது பட்டர் (அ) நெய்யை ஊற்றி நன்கு கிளறவும். பாதி கிளறியதும் சர்க்கரை சேர்த்து சாப்ரானும் சேர்த்து மீண்டும் நன்கு கிளறவும்.





இதில் முன்றிலும் இனிப்பு இருப்பதால் சர்க்கரை கொஞ்சமாக சேர்த்தால் போதும்.
கலவை கெட்டியானதும் நெயில் நட்ஸ் வகைகளை வருத்து சேர்க்கவும்.


ரொம்ப சத்தானது அத்திபழம், பேரிட்சை இரண்டிலும் இரும்பு சத்து அதிகம் உள்ளது. கிஸ்மிஸ் பழம் + சாப்ரான் சளியை கட்டு படுத்தும். சாப்ரான் சேருவதால் நல்லதொரு மனமும் வரும்.


கவனிக்க:


இது போல் செய்து வைத்து குழந்தைகளுக்கு பிரெட்டில் தினம் தடவி கொடுக்கலாம். நட்ஸ் வகைகளை மொத்தமாக அரைத்தும் ஊற்றி கிளறலாம்.


குழந்தைகளுக்கு, கர்பிணி பெண்களுக்கு, ஹிமோகுலோபின் கம்மியாக இருப்பவர்கள் மற்றும் அனைவரும் இதை செய்து சாப்பிடலாம்

ஸ்பெஷல் மட்டன் பிரியாணி



ஈத் பெருநாள் என்றாலே பிரியாணி தான் இது ஏற்கனவே கொடுத்துள்ளேன், இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.



அனைவருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்



Monday, November 23, 2009

சர்தார்ஜி ஜோக்ஸ் படித்து சிரிக்க வாங்க

வாங்க பழைய புதிய சர்தார்ஜி ஜோக்குகளை படித்து சிரிக்கலாம்.


ஏன் தான் சர்தார்ஜிகளுக்கு மட்டும் இந்த அளவிற்கு மூளை வேலை செய்யுதோ தெரியலப்பா

Sardar declares:....... . .
I will never marry in my life &. . ...... . .


I'll give same advice to my children also







donkey kicked a Sardar & ran awaySardar ran to catch the donkey.


He saw a zebra & started beating it & said 'SALA Tracksuit pahan ke dhokade raha hai'.









Sardar: Darling, years ago u had a figure like Coke bottle.





Jeeto: Yes darling I still do, only differnece is earlier it was 300ml now it's 2 ltr









Santa went to Mysore palace. Tourist guide - Santaji plz dont sit there, its Tipu sultan's chairSanta - Oye dont worry yaar i'll get up when he comes..!!..





Sardar wanted to make a STD call to punjab,
He wanted to save money so what did he do?
Simple, he went to punjab and made a local call..






One tourist from U.S.A.asked to Sardar: Any great man born in this village?
Sardar: No sir, only small babies!!!





Teacher: A for?
Sardar: Apple
Teacher: Jor se bolo?
Sardar: Jay mata di.









2 sardars were fighting after exam.
Sir: Y r u fighting?
1st Sardar: This fool left the answer sheet blank,
Sir: So what?
1st Sardar: Even i did the same thing, now teacher will think that we bothcopied.






Sardar 1: I'm very kanjoos, I went 2 honeymoon alone & saved 1/2 money.
Sardar 2: You R nothing I saved all my money, my friend was going & I sentmy wife with him






Sardar is in a dissection class of cockroach. He cuts its 1 leg, and
says, "chal", it walks.
He cuts 2nd and 3rd legs and said, "chal" , it walks.
He cuts all the legs and said, "chal......" Finally he wrote the
conclusion
................ "after all the legs of a cockroach are cut - it becomes deaf......"






A Tamilian call up sardar and asks " tamil therima??
"Sardar got mad, angrily replied.... "Hindi tera baap!!!"
2 sardarjis looking at Egyptian mu mmy.
Sar 1 : Look so many bandages, pakka lorry accident case.
Sar 2 : Aaho, lorry number is also written...BC 1760






sardar on an interview 4 da post detective.
Interviewer : who killed Gandhi?
Sardar : Thank u sir 4 giving me d job, I will start investigating........







A scene from Kohn Benega Crorepati....
Amitabh : In which state Cauvery flows?
Sardar : Liquid state.....
Audience clapped... Amitabh stunned, looks behind, ALL WERE SARDARS......

Sunday, November 22, 2009

நட்ஸ் தேங்காய் பர்பி - Nuts Coconut Barfi


தேங்காய் துருவல் = ஒரு கப்
சர்க்கரை = ஒரு கப்
தண்ணீர் ‍= கால் கப்
கிஸ்மிஸ் பழம் = ஒரு ஸ்பூன்







பிஸ்தா = ஒரு ஸ்பூன் (பொடியாக‌ அரிந்த‌து)
பாதம் = ஒரு ஸ்பூன் (பொடியாக‌ அரிந்த‌து)
முந்திரி = ஒரு ஸ்பூன் (பொடியாக‌ அரிந்த‌து)
ஏலப்பொடி = கால் தேக்கரண்டி
நெய் = ஒரு மேசை கரண்டி





ஒரு நான் ஸ்டிக் பாத்திர‌த்தில் நெய் ஊற்றி ந‌ட்ஸ் வ‌கைக‌ள் ம‌ற்றும் கிஸ்மிஸ் ப‌ழ‌த்தை வ‌ருத்து அதே பாத்திர‌த்தில் தேங்காயையும் போட்டு வ‌ருத்து ச‌ர்க்க‌ரை சேர்த்து கால் க‌ப் த‌ண்ணீர் விட்டு அப்ப‌டியே கிள‌றி சுருண்டு வ‌ரும் வரை கிளறவும்.


நெய் த‌ட‌விய‌ த‌ட்டில் ஊற்றி சமமாக பரப்பி விட்டு சிறிது நேர‌த்தில் துண்டு போட்டு விட‌வேண்டும்.
சிறிது நேரம் கழித்து துண்டு போட்டால் சரியாக துண்டு போட வராது.இது அவரவர் விருப்பமான வடிவத்தில் கட் பண்ணலாம்.





ஆறிய‌தும் பிரித்து எடுத்து ஒரு க‌ண்டெயின‌ரில் போட்டு வைக்க‌வும்.
15 நாள் வ‌ரை கெடாது.

சுவையான ந‌ட்ஸ் தேங்காய் ப‌ர்பி ரெடி

இது ஸ்வீட்டே செய்ய தெரியாதவர்கள் கூட எளிதாக செய்து விடலாம்.
டைமன் ஷேப்பில் கட் பண்ணால் பார்க்க நல்ல இருக்கும். நான் எப்போதும் அவசரடி, ஆகையால் என் இஷ்டத்துக்கு துண்டு போட்டேன்.
தேங்காய் நல்ல வரு படனும் அப்பதான் கெட்டு போகாது









Saturday, November 21, 2009

சூடா பாப் கார்ன் சாப்பிடலாம் வாங்க‌



குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது.
இதை ஒரு கைபிடி போட்டு செய்தால் தட்டு நிறைய கிடைக்கும்.
வெளியில் போகும் போது கூட நிறைய செய்து குழந்தைகளுக்கு தனித்தனி கவரில் போட்டு அவரவர் கையில் மாட்டி விட்டால் வாய் அசை போடுவதில் கொஞ்சம் வெளியில் காசும் மிச்சம்.இது நம் ருசிக்கு ஏற்றவாறு மசாலாக்களை சேர்த்து கொள்ளலாம்.



காய்ந்த சோளமணிகள் = கைக்கு ஒரு கைபிடி
உப்பு = சிறிது
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
மிளகு தூள் = அரை தேக்கரண்டி
பட்டர் = ஒரு மேசை கரண்டி





செய்முறை


ஒரு வாயகன்ற வானலியில் பட்டரை உருக்கி அதில் சோளமணி,பட்டர், மிளகு தூள் , உப்பு தூள் போட்டு சிறிது நேரம் சூடுபடுத்தவும்.


பிறகு மூடி போட்டு தீயின் தனலை சிம்மில் வைக்கவும்.


கொஞ்சம் கொஞ்சம பட் பட்ன்னு வெடிக்கும் திறக்க வேண்டாம்.

வெளியில் தெரித்து விடும்.




பிற‌கு பூ போல் வ‌ந்து பொங்கி நிற்கும்.


5 லிருந்து 7 நிமிட‌த்திற்குள் அடுப்பை அனைத்து விட‌லாம்.


ரொம்ப‌ நேர‌ம் விட்டாலோ, தீயின் த‌ன‌லை அதிக‌மாக‌ வைத்தாலோ க‌ரிந்துவிடும்.

சுட‌ சுட‌ பாப் கார்ன் குடும்ப‌த்துட‌ன் சுவைத்து ம‌கிழுங்க‌ள்.






Wednesday, November 18, 2009

மினி பஞ்சாபி பூரியும் ஆலு சென்னா ரெட் மசாலாவும்


பூரி என்றாலே எல்லோராலும் விரும்பி சாப்பிடுவ‌து. ஒரே அத‌ற்கு தொட்டு கொள்ள‌ வெரும் பாஜி, வெரும் சென்னா த‌யாரிப்ப‌த‌ற்கு ப‌தில் இது போ சுல‌பமாக‌ செய்தால் காலை டிப‌னுக்கு ந‌ல்ல‌ ப‌சி தாங்கும். மிக‌வும் ஹெல்தியும் கூட‌.




இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.இது செய்வது ரொம்ப சுலபம்.

மினி பஞ்சாபி பூரி

மைதா = ஒரு டம்ளர்
த‌யிர் = ஒரு மேசை க‌ர‌ண்டி
ச‌ர்க்க‌ரை = ஒரு தேக்க‌ர‌ண்டி
உப்பு = தேவைக்கு (அரை தேக்க‌ரண்டி)
எண்ணை = முன்று தேக்க‌ர‌ண்டி
ப‌ட்ட‌ர் = ஒரு தேக்க‌ர‌ண்டி
த‌ண்ணீர் = கால் க‌ப்

ஆலு சென்னா

சென்னா = கால் க‌ப்
ஆலு = ஒன்று
வெங்காய‌ம் = ஒன்று
பூண்டு = 5 பல்
சோம்பு = சிறிது
உப்பு தேவைக்கு
ரெடி மேட் டொமேட்டோ டின் = சிறியது ஒன்று
காஷ்மீரி சில்லி பொடி = அரை தேக்க‌ர‌ண்டி
க‌ருவேப்பிலை = இர‌ண்டு ஆர்க்


1. அதற்குள் பூரி மாவிற்கு கொடுக்க பட்டுள்ள அனைத்து பொருட்க‌ளையும் சேர்த்து ந‌ன்கு பிசைய‌வும்.த‌ண்ணீர் கால் க‌ப் போதும் தேவைப‌ட்டால் சிறிது தெளித்து கொள்ள‌வும். அரை ம‌ணி நேர‌மாவ‌து ஊறினால் ந‌ல்ல‌ இருக்கும்.

2. சென்னாவை முத‌ல் நாள் இர‌வே ஊற‌வைத்து காலையில் செய்யும் போது காலையில் வேக‌வைக்கும் போது அத்துட‌ன் ஆலுவையும் சேர்த்த்து மீடிய‌மாக‌ க‌ட் செய்து இர‌ண்டையும் குக்க‌ரில் பூண்டு சேர்த்து வேக‌வைக்க‌வும். வெந்த‌ சென்னாவில் சிறிது க‌ர‌ண்டியால் ம‌சித்து விட‌வும்.

3. எண்ணையை காய‌வைத்து க‌ருவேப்பிலை, சோம்பு, வெங்காய‌ம் போட்டு வ‌த‌க்கி, டொமேட்டோ பேஸ்டையும் சேர்த்து ந‌ன்கு கிள‌றி உப்பு, மிள‌காய் தூள் சேர்த்து வெந்த‌ ஆலு சென்னாவை சேர்த்து கிளறி ந‌ன்கு கொதிக்க‌ விட்டு கிரேவி கிரிப் ஆன‌தும் இர‌க்க‌வும்.

4. இப்போது ஊறிய‌ மாவை சிறிய‌ நெல்லிக்காய் அள‌வு எடுத்து ச‌ம‌மாக‌ தேய்த்து பூரிக‌ளாக‌ சுட்டெடுக்க‌வும்.

சுவையான‌ மினி ப‌ஞ்சாபி பூரி ஆலு சென்னா சுவைத்து ம‌கிழுங்க‌ள்.

இது பார்க்க‌ செக்கச்சிவேலுன்னு இருக்கும் ஆனால் கொஞ்ச‌ம் கூட‌ கார‌ம் கிடையாது டொமேட்டோ பேஸ்ட்,காஷ்மீரி சில்லி இர‌ண்டும் சேர்ந்தால் க‌ல‌ர்புல்லா இருக்கும். காஷ்மீரி சில்லி கிடைக்காத‌வ‌ர்க‌ள், சாதா மிளகாய் தூளே போட்டு கொள்ள‌லாம்.டொமேட்டோ பேஸ்ட் இல்லை என்றால் ப‌ழுத்த‌ த‌க்காளி + தேவைப்ப‌ட்டால் சிறிது கேச‌ரி க‌ல‌ர் சேர்த்து செய்ய‌லாம்.

Monday, November 16, 2009

இஸ்லாமிய இல்ல விசேஷ‌ சமையலுடன் தக்காளி ஹல்வா





இது என் 300 வ‌து ப‌திவு இந்த‌ பிலாக்கில். இது இஸ்லாமிய‌‌ இல்ல‌ விசேஷ‌த்தில் செய்யும் பல சமையல் வகைகளில் இதுவும் ஒன்று .இதே போல் தேங்காய்பால் சாதம் , மருந்து சோறுக்கும் இது ரொம்ப நல்ல பொருந்தும். இது போல் ப‌க‌றா கானா, மீன் குழ‌ம்பு, மீன் பிரை, த‌க்காளி ஹ‌ல்வா, பிளெயின் தால் வைப்போம், இத்துட‌ன் ச‌ப்பாத்தி (அ) தோசை (அ) இடியாப்ப‌மும் சேர்த்து வைத்தால் இன்னும் ரிச்சாக‌ இருக்கும்



தேவையான பொருட்கள்

தக்காளி ‍ ஒரு கிலோ
சர்க்கரை ‍ 400 கிராம்
நெஸ்லே க‌ண்டென்டஸ்ட் மில்க் = 200 கிராம்
நெய் - 150 கிராம்
ஏலக்காய் - 6
பாதம் ‍ 100 கிராம் (ஒன்றும் பாதியுமா பொடித்தது)
உப்பு - ஒரு சிட்டிக்கை
முந்திரி - 75 கிராம்
பிஸ்தா, அக்ரூட் = 25 கிராம்
கிஸ்மிஸ் பழம் - 25 கிராம்
கோதுமைமாவு - இரண்டு தேக்கரண்டி



செய்முறை

முதலில் தக்காளியை மூழ்கும் அளவு த‌ண்ணீர் விட்டு மூன்று விசில் விடவும்.

வெந்த த‌க்காளி ஆறியதும் தோலை எடுத்து விட்டு பழத்தை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

அரைத்த தக்காளியில் ஏலக்காய்,உப்பு, 50 கிராம் நெய், அனைத்தையும் போட்டு வேகவிடவும்.
ஒரு பத்து நிமிடம் வெந்தால் போதும் பிறகு பொடித்து வைத்துள்ள பாதாமை போட்டு சர்க்கரையை சேர்த்து கிள‌ற‌வும்.

சர்க்கரையை போட்டதும் தண்ணீ போல் ஆகிவிடும்.

நல்ல கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.

கடைசியாக கனண்டென்ஸ்ட் மில்க்கை ஊற்றவும், கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்ததும் அடி பிடிக்கும் ஆகையால் இடை இடையில் கிள‌றி விட‌வும்.

முந்திரி வ‌றுக்க‌ தேவையான‌ நெய் த‌விர‌ மீதி நெய்யை ஊற்றி ந‌ன்கு கொதிக்க‌ விட‌வும்.

தண்ணீர் வற்றவிலை என்றால் கோதுமையை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து ஊற்றவேண்டும். கட்டியாகிவிடும்.(தேவைப்ப‌ட்டால் தான் ஊற்ற‌னும்) நாங்க‌ முன்று கிலோ செய்யும் போது த‌ண்ணி விடும் ஆகையால் கோதுமை மாவு கரைத்து சேர்ப்போம்.

கடைசியில் மீதி உள்ள நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் பழம் வறுத்து தூவி இரக்கவும்.


மீன் குழ‌ம்பு





பிளெயின் தால்




குறிப்பு:


இது பேரித்தம் பழம் சேர்த்து இந்த ஹல்வா செய்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.


இடை இடையில் நெய் ஊற்றிகிளறவும்.இல்லை என்றால் அடிபிடித்து விடும்.நான் ஸ்டிக் பேனில் செய்தால் நல்லது.


இது என் மாமியார் வீட்டில் பெரிய‌ விஷேஷ‌ங்க‌ளுக்கு அடிக்க‌டி செய்வ‌து, என் அம்மா வீட்டில் பீட்ரூட் கேர‌ட் ஹ‌ல்வா, இந்த தக்காளி ஹல்வா என் கிரான்மா விற்கு ரொம்ப‌ பிடித்தது.

நானும் என் கிரான்மாவும் அப்போ இனைபிரியாத தோழிகள் எல்லா பேத்திமாரும் பார்த்து பொறாமைபடும் அளவிற்கு, ஒரு நாள் கூட என்னை பார்க்காமல் அவர்களால் இருக்க முடியாது. (1985 லிருந்து 1993 வரை)நான் படிக்கட்டிலிருந்து ம்ம்ம்மா ம்மாஅ என்று கூப்பிடும் போது மேலே கதவை திறக்க வரும் போது என் செல்ல மவளே வந்துட்ட்டீயாமா என்று சொல்லி கொண்டே வந்து கதவை திறப்பார்கள். இத பற்றி பேசனும் என்றால் நிறைய இருக்கு மலரும் நினைவுகள்

300 வது பதிவு,
பிரியாணிக்கு ஏற்ற ஸ்வீட் இஸ்லாமிய இல்லங்களில் விஷேஷ‌ங்களில் அடிக்கடி செய்யக்கூடிய ஸ்வீட்.

Saturday, November 14, 2009

புளிசாதம் - க‌ட்டு சாத‌ம் - 5 types of Tamarind Rice


இதில் இரண்டு வகையாக செய்து இருக்கேன்
ஒன்று பொடி தயாரித்து , மற்றொன்று பொடி இல்லாமல் ஈசியாக.
ஒரு முறையில் வேர்கடலையும் மற்றொரு முறையில் கருப்பு கொண்டைக்கடலையும் போட்டு செய்துள்ளேன்.








செய்முறை


அரிசி = கால் கிலோ



தாளிக்க



நல்லெண்ணை (அ) ஆலிவ் ஆயில் = இரண்டு மேசைகரண்டி
கடுகு = அரை தேக்கரண்டி
கடலை பருப்பு = ஒரு தேக்கரண்டி
வேர்கடலை = இரண்டு மேசை கரண்டி
உளுத்தம் பருப்பு = அரை தேக்கரண்டி
பொருங்காயப்பொடி = கால் தேக்கரண்டி
கருவேப்பிலை = இரண்டு முன்று ஆர்க்
காஞ்ச மிளகாய் = இரண்டு
ம‌ஞ்ச‌ள் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
புளி = ஒன்ன‌றை எலுமிச்சை சைஸ்
வெந்த‌ய‌ம் = ஐந்து
எண்ணையில் வறுத்து பொடிக்க
எண்ணை = ஒரு தேக்கரண்டி
காஞ்ச‌ மிள‌காய் = 5
வெந்த‌ய‌ம் = கால் தேக்க‌ர‌ன்டி
த‌னியா = ஒரு தேக்க‌ர‌ண்டி




தேவையான‌ பொருட்க‌ள்




சாத‌த‌தை உதிரியாக‌ வ‌டித்து ஆற‌வைக்கவும்.



எண்ணையில் வ‌றுக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை வ‌றுத்து ஆறிய‌தும் பொடித்து வைக்க‌வும்.



புளியை லேசான‌ சுடு வெண்ணீரில் ஊற‌வைத்து க‌ட்டியாக‌ ஒரு ட‌ம்ள‌ர் வ‌ருவ‌து போல் க‌ரைத்து கொள்ள‌வும்.




தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை தாளித்து க‌ரைத்த‌ புளி த‌ண்ணீரை சேர்த்து உப்பு போட்டு கொதிக்க‌ விட‌வும்.



தீயின் அள‌வை சிறிது மீடிய‌மாக‌ வைத்து கொள்ள‌வும்.



பாதி கொதிக்கும் போது வ‌றுத்து பொடித்த‌ பொடியை சேர்த்து கொதிக்க‌ விட‌வும்.



ந‌ன்கு கொதித்து எண்ணை மேலே திரியும் அப்போது அடுப்பை விட்டு இர‌க்கி ஆற‌வைத்து , சாத‌த்தை சேர்த்து கிள‌ற‌வும். கிள‌றும் முன் சிறிது கூட்டை எடுத்து வைத்து விட்டு கிள‌ற‌வும்.




தேவைப்ப‌ட்டால் எடுத்து வைத்த‌தையும் சேர்க்க‌லாம் இல்லை என்றால் பிரிட்ஜில் வைத்து அடுத்த‌ முறை ப‌ய‌ன் ப‌டுத்த‌லாம்.



இந்த‌ புளி கூட்டை மொத்த‌மாக‌ நிறைய‌ கூட‌ செய்து வைத்து கொள்ள‌லாம். தேவைக்கு அப்ப‌ அப்ப‌ எடுத்து ப‌ய‌ன் ப‌டுத்தி கொள்ள‌லாம்






.இதற்கு தொட்டுகொள்ள வெரும் அப்பளம், மசால் வடை, முட்டை பிரை (கள்ளுகடை முட்டை)வருத்த கறி, சாப்பஸ் ம‌ட்ட‌ன் பிரை,சிக்கன் பிரை எல்லாம் பொருந்தும்.




குறிப்பு








இந்த‌ புளியோதுரையை ஐந்து வ‌கையாக‌ த‌யாரிக்க‌லாம்.









1. மேலே கூற‌ப‌ட்டுள்ள‌ முறை/
type - 1




2. காஞ்ச‌மிள‌காயிக்கு ப‌தில் மிள‌கு சேர்த்து செய்தால் அது மிள‌கோத‌ரை.type 2








3. காஞ்ச‌ மிள‌காய் + எள் சேர்ர்த்து செய்வ‌து எள்ளோத‌ரை type 3








4. மீதியான‌ சாத‌த்தில் அந்த‌ கால‌த்தில் இர‌வே அந்த‌ சாத‌ம் கெட்டு போக‌மால் இருக்க‌ புளியை உப்பு சேர்த்து க‌ரைத்து சாத‌த்தில் ஊற‌வைத்து விடுவார்க‌ள். அதை காலையில் எண்ணை + காஞ்ச‌மிளகாய்+ கடலை பருப்பு+ உளுத்த‌ம் ப‌ருப்பு+க‌ருவேப்பலை+ பெருங்காய‌ப்பொடி போட்டு தாளித்து சாத‌த்தில் க‌ல‌ந்து விடுவார்க‌ள்.
type - 4





அந்த‌ சுவையும் பிர‌மாத‌மாக‌ இருக்கும். ஆனால் ரொம்ப‌ சிர‌ம‌ம் இல்லாத ஈசியான புளிசாத‌ம்.













5. வ‌றுத்து பொடிக்க‌ முடியாத‌வ‌ர்க‌ள். type - 5.




தாளிக்கும் போது எண்ணை + காஞ்ச‌மிளகாய்+ கடலை பருப்பு+ உளுத்த‌ம் ப‌ருப்பு+க‌ருவேப்பலை+ பெருங்காய‌ப்பொடி தாளித்து விட்டு அதில் மிள‌காய் தூள், சிறிது வெந்த‌ய‌ தூள், கால் தேக்க‌ர‌ண்டி த‌னியாதூள் (கொத்தும்ம‌ல்லி தூள்) சேர்த்து ந‌ன்கு எண்ணை தெளிய‌ விட்டும் சாத‌ம் சேர்த்து கிள‌றலாம்.





இந்த‌ க‌ட்டுசாத்தின் ருசி ரொம்ப‌ அபார‌மாக‌ இருக்கும்.


எல்லோருக்கும் ரொம்ப‌ப்பிடித்த‌து. ரூர்,ப‌ள்ளி, ஆபிஸ் போகிற‌வ‌ர்க‌ளுக்கு ரொம்ப‌ ஈசியா த‌யாரித்து கொண்டு போக‌லாம், இது இர‌ண்டு நாள் ஆனாலும் கெட்டு போகாது.





உம்ரா , ஹ‌ஜ் போகிற‌வ‌ர்க‌ள் , இர‌ண்டு நாட்க‌ள் ர‌யில் ப‌ய‌ண‌ம் செல்கிற‌வ‌ர்க‌ளுக்கு ஏற்ற‌ சூப்ப‌ரான‌ புளியாதுரை.





இதில் க‌ட‌லைப‌ருப்பிற்கு ப‌தில் கொண்ட‌க்க‌ட‌லை போட்டு செய்வ‌து ஒரு ஹெல்தியும் கூட‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ளுக்கு ப‌ல்லில் போய் மாட்டி கொள்ள‌லாம‌ல் க‌டித்து சாப்பிட‌ தோதுவாக‌ இருக்கும்.










Thursday, November 12, 2009

லெமன் வித் இட்லி உப்புமா - lemen with idly uppuma


//சூப்பரான இட்லி உப்புமா, எனக்கு எந்த சமையலுமே தெரிய காலத்தில் ஒரு வாத்தியார் (நட்ராஜன் சார்) சொல்லி கொடுத்த இட்லி உப்புமா இது.
நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது அம்மாவை பற்றியும், சிக்கனம் பற்றியும் கூறும் போது இந்த உப்புமாவை சொன்னார்.
அப்ப சொன்னது எனக்கு அப்படியே மனதில் பதிந்து விட்டது.
இது கூட நம் இஷ்டத்துக்கு சில பொருட்களை சேர்த்தும் செய்யலாம். காய்கறிகள் சேர்த்து வெஜ் இட்லி உப்புமாவும் செய்யலாம்
இதில் கடைசியாக லெமன் சேர்த்துள்ளேன்//
./தேவையானவை

சுமாரான மீடியம் சைஸ் இட்லி = 10
தாளிக்க‌
பெரிய வெங்காயம் = ஒன்று
எண்ணை = இரண்டு மேசை கரண்டி
கடுகு = ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு = ஒரு தேக்கரண்டி
கடலை பருப்பு = முன்று தேக்கரண்டி
கருவேப்பிலை = உருவி இரண்டாக கிள்ளியது கால் கை பிடி
பெருங்காயப் பொடி = இரண்டு சிட்டிக்கை
உப்பு = ஒரு தேக்கரண்டி (தேவைக்கு)
ச‌ர்க்க‌ரை = இர‌ண்டு தேக்க‌ர‌ண்டி
நெய் = உருக்கியது ஒரு தேக்கரண்டி
கடைசியில் மேலே தூவி கிளறி விட‌

பச்ச மிளகாய் = ஒன்று
கொத்து மல்லி தழை = சிறிது
துருவிய இஞ்சி = ஒரு தேக்கரண்டி






செய்முறை




இட்லியை பிரிட்ஜில் வைத்தால் கொஞ்சம் கல்லு மாதிரி இருக்கும்.
அதை வெங்காயம் செதுக்குவதில் நீளவாக்கில் செதுக்கி கொள்ளவும்.(அப்படியே கையாலும் உதிர்த்து கொள்ளலாம்).
பிறகு சூடு படித்தி கொள்ளவும்.

தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து (சர்க்கரை, நெய் தவிர) செதுக்கிய இட்லியை போட்டு நன்கு கிளறவும்.
க‌டைசியாக‌ நெய், ச‌ர்க்க‌ரை சேர்த்து கிள‌றி, இஞ்சி , ப‌ச்ச‌மிள‌காய்,கொத்து ம‌ல்லி த‌ழை தூவி ந‌ன்கு கிள‌றி விட்டு தேவைப‌ட்டால் அரை எலுமிச்சை பழ‌ம் பிழிந்து இர‌க்க‌வும்.

நெய் மணம் சும்மா கும்முன்னு, கார‌சார‌மாகவும், லேசான இனிப்பு சுவை,இருக்கும், எலுமிச்சை சேர்ந்தால் கார‌சார‌ம் புளிப்பு சுவையுட‌ன் இருக்கும்.

குழ‌ந்தைக‌ளுக்கு கொடுப்ப‌தா இருந்தால் ப‌ச்ச‌மிளகாய் சேர்க்க‌ தேவையில்லை.