Saturday, October 30, 2010

விகடனில் என் குறிப்பு



விகடன் தீபாவளி மலர் ஸ்வீட் சிக்ஸ் சில் என் ஸ்வீட் முழு பாசிபயிறு போளி ரெசிபியும்,
ஹே ஹே இப்ப என் குறிப்பு விகடனிலும்


கீழே உள்ள அனைத்து தளங்களிலும் என் குறிப்புகள்
 அறுசுவைடாட்காம் , 



தமிழ் குடும்பம்டாட்காம்,


சமையலறைடாட்காம் இங்கும்

பிறகு கீழை அஞ்சல் மாத இதழ்

இப்ப விகடனில் என் ஸ்விட் ரெசிபி முழு பாசி பயறு போளி.

விகடனுக்கு நன்றி ரொம்ப சந்தோஷம்.



இது முன்பு 2005 தென்றல் புக்கில் என் பீட்ரூட் ஹல்வாவும், பூண்டு கோழியும் வந்தது,



பாதம் ஹல்வா




பாதம் ஹல்வா உங்களுக்கு தான் எடுத்து கொள்ளுங்கள்/


முழுபாசி பயிறு போளியை விகடனில் பார்க்கலாம்.


என்னை விட என் பையனுக்கு தான் ஒரே குஷி. விகடனிலிருந்து ரெசிபி கேட்டு மெயில் வந்துருக்கு என்று சொன்னதும்.என்னோடு சேர்த்து தான் போட்டோ வோடு போடனும் போடனும் என்றுbசின்ன பையன் .ஒகே பையன் ஆசை படுகிறானே என்று அவனையும் போட்டாச்சு.

விகடன் புக் நான் பார்ப்பதில்லை,எப்பவாவது கிடைக்கும் போது பார்ப்பேன். இதை எனக்கு அனுப்பிய நீத்துவிற்கு மிக்க நன்றி











Thursday, October 28, 2010

சிம்பிள் உருளை சிப்ஸ் - simple potato chips


தேவையான பொருட்கள்

உருளை ‍ ‍= 2
மிளகாய் தூள் = கால் தேக்கரண்டி
உப்பு = கால் தேக்கரண்டி
எண்ணை பொரிக்க = தேவையான அளவு
பெருங்காயப்பொடி = ஒரு சிட்டிக்கை

செய்முறை

உருளை கிழங்கை மெல்லிய தாக வட்ட வடிவில் ஸ்க்ராப்பரில் சீவி கொள்ளவும்.

எண்ணையை காயவைத்து ஒன்றோடு ஒன்று ஓட்டாமல் போட்டு வறுத்து எடுக்கவும்.

சிறிது சூடு ஆறியதும் மிளகாய் பொடி, உப்பு, பெருங்காயப்பொடி தூவி இரக்க‌வும்.

குறிப்பு

பெருங்காயப்பொடி தேவையில்லை என்றால் சேர்க்க தேவையில்லை.
மிளகாய் தூளுக்கு பதில் பெப்பர் தூளும் சேர்க்கலாம். மோர் குழம்பு, தயிர் சாதம் க்கு சிம்பிளா செய்தாலும் குழந்தைகள் சிப்ஸ் என்பதால் கூட இரண்டு புடி உள்ளே போகும்.




டிஸ்கி: முன்பு அடிகக்டி செய்வேன், பெரியவன் ஊருக்கு போனதிலிருந்து எப்பவாவது தான் செய்வது, ஏன்னா செய்து வைத்தால் இரண்டு பேரும் எனக்கு கொஞ்சம் இருக்கு, அவனுக்கு மட்டும் முனு சிப்ஸ் அதிகமா போச்சு என்று செல்ல சண்டைகள் நிறைய வரும்.
இப்ப சின்னவ்ன் மட்டும் தான் கூட சண்டை போட ஆளில்லை, என்ன சொல்வது என்று தெரியல நீங்க இத‌ டைம் கிடைக்கும் போதெல்லாம் செய்து 400 பாக்கெட் போட்டு வைய்யுங்க் நாம ஊருக்கு போகும் போது கொண்டு போய் வித்துடலாம். வெரும் சிம்பிள் சிப்ஸ் தான் ஆனால் மொரு மொருன்னு பாக்கெட்டில் இருப்பது போலவே.. சுவையாக இருக்கும்.



Tuesday, October 26, 2010

பாகற்காய் ஜூஸ் - bitter gourd juice






ஹசனாஸ் (மாமியார் பெயர்) பாகற்காய் ஜூஸ்

தேவையானவை

பாகற்காய் – ஒரு விரல் நீள துண்டு
மிளகு – 4
சீரகம் – கால் தேக்கரண்டி
உப்பு – சிறிது
லெமன் ஜூஸ் – அரை ஸ்பூன்

செய்முறை

பாகற்காயை துண்டுகளாக நறுக்கி அத்துடன் மிளகு,சீரகம்,உப்பு சேர்த்து மிக்சியில் தேவைக்கு தண்ணீர் ஊற்றி (அரை டம்ளர்) அடிக்கவும்.
நல்ல நுரை பொங்க அடித்து அதை வடிக்கட்டவும்.
லெமென் பிழிந்து குடிக்கவும்.
அந்த அளவிற்கு கசப்பு தெரியாது.


குறிப்பு:

இன்று என் மாமனார், மாமியாரின் கல்யாண நாள்,




என்ன கசப்பா ஒரு ஜூஸ் போட்டு இருக்கேன்னு பார்க்க வேண்டாம்.
மாமனாருக்கு சுகர் அதிகமாகமல், அப்படியே அதிக மானாலும், முன்றே நாளில் சரியான டயட் சமையல் செய்து கரெக்ட் லெவலுக்கு கொண்டு வந்துடுவாங்க எங்க மாமியார். ஆகையால் இப்ப கர்பிணி பெண்கள் முதல் கொண்டு , சிறியவர்கள் பெரியவர்கள் எல்லோருக்கும் ஜுரம் தலை வலிப்போல் சர்க்க்ரை வியாதியும் ஒன்றாகிவிட்ட்து, கண்டிப்பா எல்லோருக்கும் இது பயன் படும்.

ஏற்கனவே குறிப்புகளில் சாதரணமான பாகற்காய் ஜூஸ் நான் கொடுத்து இருந்தாலும், இதில் மிளகு சீரகம் சேர்த்து என் மாமியார் செய்வாங்க.
சரி செய்தாச்சு எப்படி குடிப்பது, இப்போதைக்கு இங்கு யாருக்கும் சர்க்கரை வியாதி இல்லை , எனக்கு நாக்கு கொஞ்சம் நீளம் என்ன செய்யலாம் சரி கால் ஸ்பூன் லெமன் பிழியலாம் என்று பிழிந்தேன் சூப்பர்.
எனக்கு தெரிந்து எல்லோருமே இதை பொதுவாக குடிக்கலாம். பிள்ளைகளுக்கு வாரம் ஒரு நாள் கொடுத்து பழக்கலாம். அவர்களுக்கு கொஞ்சம் தேனும், லெமன் சாறும் கொஞ்சம் கூட் சேர்த்து கொள்ளலாம். வயிற்றில் உள்ள பூச்சியும் அழி்ும், குழநைைை்்ு்்கும் சின்ன் வயதிலேயே பாவக்்ாய பழக்க படுத்்ினா ்ாதிரியும் இருக்்ும்.
பார்க்கவே பச்சை பசேல்லுன்னு நல்ல இருந்த்து, உடனே குடிச்சிட்டு இன்னொரு கிளாசும் தயாரிச்சாச்சு, இது நீத்து கிச்சனுக்காக செய்த ஜூஸ் , அப்ப்டியே எல்லோருக்கும் சர்க்கரை வியாதிக்கு அருமையான ஒரு ஜூஸும் கிடைத்து விட்ட்து.

டிஸ்கி: நான் சொல்வது கேட்டு யாரும் சிரிக்க கூடாது, முதலில் செய்த்து இந்த சுவை எப்படி இருக்கும் என்று மடக் மடக்குன்னு போட்டோ எடுக்காமலே காலையில் குடிச்சிட்டேன். பிறகு ஆஹா போட்டோ எடுக்கலையே என்று மறுபடி செய்து ( அதான் நல்ல இருக்கே) எடுத்தேன்.
இந்த பாவக்கான்னே நினைப்பு வருவது, எங்க அப்பா சின்ன வயதில் எல்லோரும் மாதம் ஒரு நாள் பாவக்காய் சாப்பிட்டே ஆகனும். கிட்ட உட்கார்ந்து ஊட்டி விடுவார், கண்ணில் ஆறெடுத்து கஷ்டப்பட்டு முழுங்குவேன்.









Monday, October 25, 2010

சிக்கன் பிரியாணி - chicken biriyani



தேவையானவை

பாசுமதி அரிசி – அரை கிலோ

Ø சிக்கன் - அரை கிலோ
Ø வெங்காயம் – கால் கிலோ
Ø தக்காளி – கால் கிலோ
Ø தயிர் - கால் டம்ளர்
Ø இஞ்சி பூண்டு பேஸ்ட் – இரண்டரை மேசைக்கரண்டி
Ø கொத்தமல்லி - கால் கட்டு
Ø புதினா - எட்டு இதழ்
Ø பச்சை மிளகாய் - நான்கு
Ø மிளகாய் தூள் - 1 1/4 தேக்கரண்டி
Ø எலுமிச்சை - பாதி பழம்
Ø பட்டை - ஒரு இன்ச் அளவு ஒன்று
Ø கிராம்பு - இரண்டு
Ø ஏலம் - ஒன்று
Ø எண்ணெய் - கால் டம்ளர்
Ø நெய் - ஒரு தேக்கரண்டி
Ø உப்பு - தேவைக்கு










செய்முறை

Ø முதலில் அரிசியை களைந்து இருபது நிமிடம் ஊற வைக்கவும்.

Ø எலும்புடன் சேர்ந்த சிக்கனை (அரை கிலோ) கழுவி தண்ணீரை வடிகட்டவும்.

Ø எண்ணெயை காய வைத்து பட்டை, ஏலம், கிராம்பு போட்டு வெடித்ததும், வெங்காயத்தை போட்டு நல்ல கிளறி கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி சிம்மில் ஐந்து நிமிடம் விட்டு மீண்டும் ஒரு முறை கிளறி கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி போடவும் பச்சை மிளகாயை இரண்டாக ஒடித்து போடவும்.

Ø இரண்டு நிமிடம் கழித்து தக்காளியை போட்டு கிளறி, மிளகாய் தூள், உப்பு தூள் சேர்த்து கிளறி மூடி போட்டு சிம்மில் வைக்கவும்.

Ø தக்காளி நல்ல வெந்து கூட்டாகட்டும். சிக்கன் சீக்கிரம் வெந்து விடும் ஆகையால் கடைசியில் சேர்க்கனும். இல்லை என்றால் பீஸ் எதுவும் கிடைக்காது. தூளாகி எலும்பு மட்டும் இருக்கும்.

Ø தக்காளி வதங்கியதும் சிக்கனை போட்டு கிளறி தயிரையும் சேர்த்து நல்ல வேக விடவும்.

Ø மூடி போட்டே இருந்தால் பிரியாணி நல்ல மணமாக இருக்கும்.Ø நல்ல வெந்து எண்ணெய் முழுவதும் மேலே மிதக்கும். அப்போது அடுப்பை அனைத்து விட்டு அரிசி உலை கொதிக்க விட்டு அரிசியை களைந்து போட்டு முக்கால் வேக்காடு வெந்ததும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் கொஞ்சமாக லெமென் ஜூஸ் பிழியவும், சிறிது உப்பும் சேர்க்கவும்.

(அப்ப தான் சாதம் உதிரியாக வரும் ஒன்றோடு ஒன்று ஒட்டாது.)Ø ஒரு கண் வடிகட்டியில் வடித்து(கஞ்சியை கீழே கொட்ட வேண்டாம்)20 நிமிடம் தம்மில் விட்டு உடையாமல் கிளறி இரக்கவும்.




I sending this recipe to akila's event dish name Start with C



Saturday, October 23, 2010

கருவேப்பிலை பொடி,முடி வளர கொசுறு கருவேப்பிலை


கருவேப்பிலை காய்கறி கடைகளில் கொசுறு கொடுப்பார்கள்.அது ஒன்றும் அவ்வளவு விலையும் கிடையாது.




முடி கரு கருவென வளற கருவேப்பிலை ஒரு கப்பும், வெந்தயம் இரண்டு ஸ்பூனும் காயவைத்து பொடித்து வைத்து கொள்ளுங்கள். அதை தேங்காய் எண்ணை (அ) நல்லெண்ணையில் ஊறவைத்து தலையில் தேய்க்கவும்.

கருவேப்பிலை கொத்துமல்லி ரசம்




கருவேப்பிலையை நன்கு அரைத்து வடைகளாக தட்டி தேங்காய் எண்ணையிலும் போட்டு நன்கு ஊறவைத்து தலைக்கு தேய்க்கலாம்










கருவேப்பிலை பொடி


கருவேப்பிலை - ஒரு கப்
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு மேசை கரண்டி
மிளகு - ஒரு ஸ்பூன்
பூண்டு = தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளுங்கள்


மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் லேசாக வருத்து பொடித்து வைத்து கொள்ளுங்கள்.




ஒல்லியாக உள்ளவர்கள் ஒரு மேசை கரண்டி கருவேப்பிலை பொடி, நெய் ஒரு ஸ்பூன், சாதம் கலந்து சாப்பிடுங்கள்.



டயட்டில் இருப்பவர்கள் ஆலிவ் ஆயில் (அ) நல்லெண்ணை கலந்து சாப்பிடவும்.


கருவேப்பிலை பொடி திரிப்பவர்கள் அத்துடன் சிறிது மிளகு, கடலை பருப்பு கூட வருத்து சேர்த்து பொடித்து கொள்ளலாம்.


இட்லி பொடி, ரசப்பொடி, சாம்பார் பொடி,பிஸிபேளா பாத் பொடி ,பாகற்காய் போன்ற பொடி வகைக தயாரிக்கும் போது ஒரு கைப்பிடி அளவிற்கு காயவைத்து அதையும் சேர்த்து திரித்து கொள்ளுங்கள்.


கீரீன் வெஜ் குருமாவில் கருவேப்பிலை, கொத்து மல்லி தழை, புதினா அரைத்தும் சேர்த்துக்கொள்ளலாம்.


வறுத்து பொடித்து செய்யும் எல்லா விதமான சமையலுக்கும் ஒரு கை பிடி கருவேப்பிலையை சேர்த்து கொள்ளுங்கள்.

தலை முடி கருகருவெனவளற கருவேப்பிலையை காயவைத்து தூளாக்கி நல்லெண்ணையுடன் காய்ச்சி நன்கு ஊறவைத்து வடிக்கட்டி அந்த எண்ணையை தினம் தேய்த்து வரலாம்.


வாரம் ஒரு முறை கருவேப்பிலை குழம்பு , கருவேப்பிலை சாதம், செய்து சாப்பிடுவதும் நல்லது.

கருவேப்பிலை, கொத்துமல்லி அரைத்து விட்டும் ரசம் செய்து சாப்பிடலாம்.


தாளிப்பில் போடும் கொசுறு கருவேப்பிலை, ரசம் குழம்பு சாப்பிடும் போது தூக்கி எறியாமல் அதை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் அது முடி வளற உதவும்.


பகோடா செய்யும் போது நிறைய கருவேப்பிலையை பைனா சாப் செய்து போட்டு கொள்ளுங்கள்.









Friday, October 22, 2010

சிகப்பரிசி மாவு புட்டு -



தேவையானவை
சிகப்பரிசி புட்டு மாவு – 400 கிராம்
தேங்காய் துருவல் – அரை முறி (முழு தேங்காயில் பாதி)
சர்க்கரை – 150 கிராம்
நெய் – 25 கிராம்
செய்முறை
ஒரு டம்ளர் தண்ணீரில் சிட்டிக்கை உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தெளித்து உதிரியாக மாவை விறவி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு இட்லி பானையில் ஈர துணியை விரித்து மாவை கட்டி யில்லாமல் உதிரியாக வைத்து 15 நிமிட அவித்து எடுக்கவும்.
அவிந்து புட்டு மணம் வந்த்தும் அதை ஒரு வாயக்ன்ற பாத்திரத்தில் கொட்டி தேங்காய் துருவல்,சர்க்கரை சேர்த்து கிளறி நெய்யை உருக்கி ஊற்றவும்.

பால் பழம் சேர்த்து பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும் கூடவே ஆஃப் பாயில் (அ)வெங்காய முட்டை சேர்த்து சாப்பிட நல்ல் இருக்கும்.
இதுக்கு சர்க்க்ரை சேர்க்காமல், சென்னா மசாலா, முழுபாசி பயறு மசாலா தொட்டும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு வாழைபழம் சேர்த்து உருண்டையாக உருட்டி வைத்தால் சத்தமில்லாமல் காலி ஆகும்.




Thursday, October 21, 2010

பெண்கள் வீட்டில் தையல் துணிகளை கட்டிங் செய்யும் போது



துணிகளை ( சோளி மற்றும் சல்வார்) வெட்டும் போது கவனமாக உடனே அதை ஒரு துண்டு விடாமல் எடுத்து சுருட்டி அதன் செட்டுகளை ஒரு கவரில் போட்டு பத்திரமாக வையுங்கள். அங்கு இங்கு சிதர விட்டால் கை, பட்டி, கழுத்து துணி இதில் ஏதாவது ஒன்று காணாமல் போய் விடும்.


யாருடனும் சண்டை போட்டு விட்டு, பிள்ளைகளை திட்டி விட்டு துணிகளை வெட்டினால் உஷார் உடனே வெட்டிய துணியை பத்திரப்படுத்தவும்.இல்லை என்றால் எப்படியும் ஒரு கையோ, பட்டி துணியோ காணாமல் போகும், இல்லை உங்கள் மேல் கோபமாக இருப்பவர்கள் அதை கண்டமட்டுக்கும் எங்காவது வெட்டி விடுவார்கள்.





என‌க்கு என் த‌ங்கைக்கும் ஒன்றாக‌ க‌ல்யாண‌ம் ஆச்சு, எல்லா க‌ல்யாண‌ ச‌ட்டையும் ஆளுக்கு ஒரு ட‌ஜ‌ன் அவ‌ள் தான் தைத்தாள். நான் அத‌ற்கு கொக்கி தைப்ப‌து, ஹெம்மிங் செய்வ‌து அப்போது.நான் தையல் கிளாஸ் போகல, ந‌ல்ல‌ அழ‌கான‌ பொன் ம‌ஞ்ச‌ள் நிற‌ ச‌ட்டை ஹெம்மிங் ப‌ண்ணி முடித்த‌தை யாரோ கத்த்ரியால் க‌ட் ப‌ண்ணி விட்டார்க‌ள்.




ஆகையால் வீட்டில் தைப்ப‌வ‌ர்க‌ள், எல்லாவ‌ற்றிலும் க‌வ‌ன‌மாக‌வும் உஷாராக‌வும் தைக்க‌னும்.

அடுத்து முன்று வயதுக்குற்பட்ட குழந்தைகளை வைத்து கொண்டு தைக்காதீர்கள்.

நீங்கள் தைக்கும் போது ரொம்ப ஸ்வாரஸியமாக இருக்கும் அந்த நேரம் குழந்தை என்ன ஜோராக ஓடுகிறதே என்று கையை வைப்பார்கள்.

( இது போல் நான் தைக்கும் போது சின்ன‌ பைய‌ன் மிஷினில் உள்ள‌ ஊசியில் கையை விட்டு விட்டான். அப்படியே பகீர் என்றாகி விட்டது. அப்ப‌டியே க‌ட்டை விர‌லில் உள்ளே போய் விட்ட‌து. ந‌ல்ல‌ வேலை ச‌ட்டுன்னு அவ‌ன் கைய‌ எடுக்க‌ல‌ அப்ப‌டியே ச‌க்க‌ர‌த்தை பின்புற‌மாக‌ திருப்பி விரலை எடுக்க‌ வைத்தேன்).பகீர் என்று ஆகிவிட்து. அதிலிருந்து தைக்குக்கும் போது ரொம்ப‌ க‌வ‌ன‌மாக‌ யாரும் இல்லாத‌ நேர‌ம் அல்ல‌து எல்லோரும் துங்கிய‌ பிற‌கு தைப்ப‌து.






க‌த்திரி கோலையும் உட‌னே ப‌த்திர‌ ப‌டுத்த‌னும் இல்லை என்றால் அதை எடுத்து விளையாடு கிறேன் என்று முடியை க‌ட் ப‌ண்ணி கொள்வார்க‌ள். உடனே ஊசியால் குழந்தைகளின் கையை தைக்க வாய்பப்புகள் இருக்கிறது





நீங்களும் தைக்கும் போது திரும்பி பார்க்காதீர்கள், பேசி கொண்டே தைக்காதீர்கள். உங்கள் கையே போய் மாட்டிக்கொள்ளும்.
அது போல் இரண்டு பேர் தைக்கும் போது பேச்சு ஸ்வாரசியத்தில் பெருவிரலுல் மிஷினி ஊசி போய் மாட்டி கையுக்கு தையல் போட்டார்கள்.

அதே போல் கணவன் மனைவி இருவரும் டைலர். மனைவி வெட்டி கொடுப்பார் கணவன் கடையில் கொண்டுவந்து தைப்பார்.
ஒரு நாள் அப்பளம் பொரித்து விட்டு அந்த எண்ணைய கீழே வைத்து விட்டு , துணி வெட்ட ஆரம்பித்து இருக்கிறார், வீட்டில் இருந்த சின்ன குழந்தை கொதிக்கிற எண்னையில் கையை விட்டு விட்டது. சின்ன குழந்தைகள் உள்ள வீட்டில் தையலை வைத்து தான் பிழைப்பே என்றால் மிக கவனமாக தைக்க வேண்டும்.



Tuesday, October 19, 2010

கொத்துமல்லி குழிபணியாரம் - coriander kuzipaniyaram



இது இட்லி, தோசைக்கு அரைத்து மீந்து போன மாவில் நான் கொத்துமல்லி தோசை செய்வேன்,(இன்னும் இந்த கலவையில் மஞ்சள் தூள், சிறிது மிளகாய் தூள் சேர்த்தும் சில சமையம் செய்வேன் ரொம்ப நல்ல இருக்கும். மிளகாய் பொடியுடன் சூப்பராக இருக்கும்.) இப்ப அது குழிபணியாரமாகிவிட்ட்து.











மீந்து போன இட்லிதோசை மாவு – ஒரு டம்ளர்
மைதா – அரை டம்ளர்
ரவை – கால் டம்ளர்
கொத்துமல்லி தழை – ஒரு பஞ்ச்
பச்ச மிளகாய் – இரண்டு
வெங்காயம் – இரண்டு
கருவேப்பிலை – சிறிது
உப்பு – தேவைக்கு
ஆப்ப சோடா – அரை பின்ச்
முந்திரி – 4 (பொடியாக அரிந்த்து




செய்முறை:





1.மாவில் மைதா ரவை,ஆப்ப சோடா, உப்பு யை தேவைக்கு தண்ணீர் சேர்த்து கலக்கவும் .
2.வெங்காயம் ,பச்சமிளகாயை பொடியாக அரிந்து சேர்க்கவும்.
3.கொத்துமல்லியை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி பொடியாக நருக்கி சேர்க்கவும்.








4. குழிபணியார சட்டியை காயவைத்து பணியாரங்களாக சுட்டு எடுக்கவும்.





5.தொட்டு கொள்ள வெங்காய உளுந்து துவையல் பொருத்தமாக இருக்கும்.








Sunday, October 17, 2010

கோதுமை மாவு குழி பணியாரம் - atta kuzipaniyaram



தேவையானவை

கோதுமை மாவு = முக்கால் டம்ளர்
இட்லி மாவு - ஒரு குழி கரண்டி
ரவை - ஒரு மேசை கரண்டி
முட்டை = ஒன்று
தேங்காய் துருவ‌ல் = கால் ட‌ம்ளர்
முந்திரி - இரண்டு மேசை கரண்டி பொடியாக அரிந்தது
உப்பு = ஒரு சிட்டிக்கை
வெல்ல‌ம் = முக்கால் டம்ளர் (பொடித்தது)
ஏலப்பொடி = அரை தேக்க‌ர‌ண்டி
எண்ணை = பொரிக்க‌ தேவையான‌ அள‌வு


செய்முறை

வெல்லத்தை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டவும்.
கோதுமை மாவில் இட்லி மாவு,ரவை,முட்டை,முந்திரி,உப்பு,ஏலப்பொடி,வடித்த வெல்லம் அனைத்தையும் போட்டு நன்கு கலக்கவும்.
கலவை கட்டியாக இருந்தால் தேவைக்கு தண்ணீர் ஊற்றி கலக்கி சிறிது நேரம் ஊறவக்கவும்.
குழிபணியார சட்டிய காயவைத்து கொஞ்சமாக எண்ணை விருப்பபட்டால் நெய் விட்டு சுட்டெடுக்கவும்.
குட்டி குட்டியா பார்க்க வே அழகா இருக்கு சுட்டு வைத்தா லபக் லபக் க்குன்னு வாயில் போய் விடும்.


இது ஏற்கனவே நான் செய்த கோதுமை மாவு அப்பம் தான், இப்ப சிலபொருட்கள் சேர்த்து குழிபணியாரமா சுட்டாச்சு.


குழிபணியாரம் எனக்கு ரொம்ப பிடிச்சது ஆனால் ஓவ்வொரு முறை ஊரிலிருந்து சட்டி வாங்கி வரனும் என்று நினைத்து அதிக லக்கேஜ் காரணமா வாங்க முடியாம போய் விடும். இங்கு அதிக காசு கொடுத்து வாங்கனும்.ரொம்ப ஆசையா இருந்தா இதை தயாரித்து விட்டு என்னையில் அப்பம் போல் சுட்டு சாப்பிடுவது. இல்லை ஆச்சி செட்டி நாடில் வாங்கி சாப்பிடுவது
இந்த தடவை எப்படியோ வாங்கி வந்துவிட்டேன். நான் ஸ்டிக் என்பதால் அதிக எண்ணையும் தேவைபடல.


அறுசுவையின் சைலண்ட் ரீடர் ஜெயஸ்ரீ சவுதியில் இருக்கிறாங்க என் ரெசிபிகளை மட்டுமே பார்த்து செய்வார்கள். ரசப்பொடி, சாம்பார் பொடி , குழந்தைகளுக்கு சத்துமாவு பொடி எல்லாம் என் முறை படி தான் திரித்து வைத்து கொள்வார்கள். அவங்க முதல் பையனுக்கு இருமலுக்கு, மாமனார் ஹாட் பிராப்ளம் க்கு டயட் ரெசிபி ( எல்லாமே அறுசுவையில் கொடுத்துள்ளேன்), இரண்டாவது குழந்தை உண்டான போது ரெசிபிகள், குழந்தை பிறந்த பிறகு டிப்ஸ்கள் எல்லாம் மெயிலிலேயே கேட்டு கொள்வார்கள். இரண்டு வருடமாக பேசி கொண்டு இருக்கோம், எப்படியும் 15 நாட்களுக்கு ஒரு முறை போன் செய்வார்கள்,அவர்களிடம் தான் குழிபணியாரத்துக்கு சரியான அளவு எப்பட்டி என்று கேட்டேன். அவர்கள் சொன்ன அளவு படி இனிப்பு மற்றும் காரம் செய்து பார்த்து ரொம்ப அருமையாக வந்த்து.


மிக்க நன்றி ஜெயஸ்ரீ, போட்டோ எடுக்கல எடுத்தால் போடுகிறேன். அதற்கு பிறகு வெரைடியா என் ஐடியாவில் 7 வகை செய்து பார்த்தாச்சு எல்லாம் சூப்பர்.


இன்னும் நிறைய ஐடியா இருக்கு குழிபணியாரத்துக்கு, பள்ளிக்கும், ஆபிஸுக்கும் எடுத்து போக ரொம்ப வசதியா இருக்கு. வரும் நேரம் கிடைக்கும் போது ஒன்று ஒன்றா..

குழி பணியார மாவுக்கு


புழுங்கல் அரிசி – ஒரு ஆழாக்கு
பச்ச அரிசி – ஒரு ஆழாக்கு
உளுந்து - அரை ஆழாக்கு
வெந்தயம் – அரை தேக்கரண்டி


மாவை 4 மணி நேரம் ஊறவைத்து அரைத்து புளிக்க வைத்து இனிப்பு மற்றும் காரவகைகளை விரும்பம் போல் சுட்டு சாப்பிடலாம்.

Friday, October 15, 2010

ஸ்வீட் & சோர் பாகற்காய் -


//பாகற்காய் என்றாலே கசப்பு தான் அந்த கசப்பு தன்மை இல்லாமல் சமைக்க இந்த முறையில் செய்யலாம். இது குழந்தைகளுக்கு வயிற்றில்
உள்ள பூச்சியை அழிக்கும். சர்க்கரை வியாதிகாரர்களுக்கும் நல்ல டிஷ். மிளகாய் தூளுக்கு பதிலாக ரெட் சில்லி சாஸ் சேர்த்தும் செய்யலாம்.//

தேவையானவை


பாகற்காய் - 200 கிராம்
வெங்காயம் - 50 கிராம்எண்ணெய் - மூன்று மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - முக்கால் தேக்கரண்டி
வினிகர் - ஒரு தேக்கரண்டி
டொமேட்டோ கெட்சப் - இரண்டு மேசைக்கரண்டி
சர்க்கரை - அரை தேக்கரண்டி
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி



செய்முறை
பாகற்காயை வில்லைகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில் நறுக்கின பாகற்காய் துண்டுகளை போட்டு ஒரு தேக்கரண்டி உப்பு, சிறிது தண்ணீர் தெளித்து இரண்டு மணி நேரம் ஊற
வைக்கவும்வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்திருக்கும்.


பாகற்காய் வில்லைகளை தண்ணீர் இல்லாமல் வடித்து இரண்டாக பிரித்து
வைத்துக் கொண்டு ஒவ்வொரு பகுதியாக போட்டு பொரிக்கவும்பொரித்த பாகற்காயை எண்ணெயை சுத்தமாக வடித்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.



அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் பொரித்து வைத்திருக்கும்.
பாகற்காய், அரை தேக்கரண்டி உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

பாகற்காயுடன் மசாலா சேர்ந்தவுடன் வினிகரை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு பிரட்டி விடவும்.
கடைசியில் டொமெட்டோ கெட்சப் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும்



ஏழுகறி சாம்பார்


I am sending these recipes to nithubala's vegetable marthon- bitter gourd event


Thursday, October 14, 2010

மசாலா மிக்ஸ் -2

ஜனவரி பையன் லீவுக்கு வந்த பையன் ஊருக்கு போய் விட்டான் கொஞ்சம் நாள் சந்தோஷம் ,பிறகு ரொம்ப சோகமாகிவிட்ட்து.




மார்ச் அடுத்து மாமனார் மாமியார் வருகை, பிஸியாகிவிட்டேன்.முடிந்த வரை வெளியில் கூப்பிட்டு போனோம். நல்ல சமைத்து கொடுத்து பாராட்டும் கிடைத்த்து




ஹனீஃப் குர் ஆன் ஓத ஆரம்பித்து சரியாக ஆலிம்சா கிடைக்கத்தால் பாதியில் பாதியில் விட்டு போய்விடும். இல்லை எக்ஸ்ட்ரா கிளாஸ் என்று மாலை ஓத முடியாமல் போய் விடும், இப்படியே பிடிச்ச பிடியா தொடர்ந்து ஓதி உம்மா வாப்பா( மாமனார் மாமியார் வந்திருந்த போது அவர்கள் ஊருக்கு செல்லும் முன் முடித்தே தீருவேன் என்று ஆலிம்ஷாவை மாலை இருமுறை அழைத்து மறுநாள் மேக்ஸ் எக்சாமையும் வைத்து கொண்டு முடித்தான்,.
மாமனார் மாமியாருக்கு ரொம்ப சந்தோஷம்.நினைத்த காரியத்தை முடிப்பதில் என்னை போலவே, குர் ஆன் அவன் ஓத கேட்பது ரொம்ப நல்ல இருக்கு என்றார்கள்





ஏப்ரல் மாதம்: தோழிகளின் சந்திப்பு ஏற்கனவே இங்கு போட்டு இருக்கேன்.


அதோடு மே மாதம் தேர்வு முடிந்து ஊரிலிருந்து பையனும் வந்தாச்சு ரொம்ப சந்தோஷம். நல்ல விரும்பியதை செய்து கொடுத்து எல்லோரும் ஊருக்கு ஒன்றாக போனோம்,
ஜுலை ஆகஸ்ட் நிறைய கல்யாணங்கள் .எல்லா சொந்தங்களையும் சந்தித்தோம். அருமையான நாட்கள். எல்லோரும் சேர்ந்து மொத்தமாக வெளியில் போனோம்.
அங்கு ஒரு ஹோட்டலில் பூண்டு சட்னி ரொம்ப நல்ல இருந்ந்தது போட்டோவும் எடுத்து ரெசிபியும் கேட்டு வந்துள்ளேன், செய்தால் ரெசிபி போடுகிறேன்.எல்லோரும் ஒன்றாக போனது ஒரே ஜாலி தான்.


அறுசுவை பாபு, ஸாதிகா அக்கா,மர்லி ,ஜே மாமி,சுஹைனா,பாயிஜா, செல்வி அக்கா, சீதா லக்‌ஷிமி அக்கா எல்லோரிமும் போனில் பேசியது ரொம்ப சந்தோஷம்ஸாதிகா அக்கா, மர்லி வீட்டுக்கு வந்தே ஆகனும் என்று ஓவ்வொரு நாளும் அம்மா வீடு மாமியார் வீடு, தங்கைகள் வீடு, கல்யாணங்களுக்கு போக்வே நேரம் சரியாக இருந்த்து,

பிறகு பையன்காலேஜில் கொண்டு போய் விட அப்படியே சின்ன டூர். .
எல்லாம் டூர் அனுபவத்தையும் எழுதனும் என்று தான் ஆனால் நேரமில்லை முடிந்த போது படங்களாவது இனைக்கிறேன்.






முதல் முதல் டெல்லி எங்கும் தமிழ் கிடையாது ஒரே ஹிந்தி மயம் பாஷ தெரிந்த்தால் ஒகே






டீவியில பட்த்துல பார்த்த தாஜ் மாஹால் நேரில் பார்க்கும் போது ஆனந்தம்.நிறைய போட்டோக்கள் எடுத்தேன் பிறகு பகிர்ந்து கொள்கிறேன்






ஜெய்ப்பூர் ரொம்ப நல்ல இருந்த்து சூப்பர்
வண்டியில் எங்களை கூப்பிட்டு வந்த சுபிஷ் சில இடங்களை அருமையாக விளக்கி கொண்டேவந்தார்.
தங்க போன ஹோட்டலில் எல்லாம் நுழையும் போது பயங்கர செக்கிங்.+ நல்ல கவனிப்பு, எல்லா ஹோட்டலிலும் டிபன் ஃபிரி,எல்லாமே அருமை ஒரு பிடி தான்


அங்கு யானை சவாரி போனோம் ரொம்ப அருமை

மந்த மந்தையாக யானைகள் எல்ல்லோரையும் எம்பர்ர் போர்டில் யானை சாவாரி இங்கு நடந்த் இரண்டு நகைச்சுவைய சொல்லியே ஆகனும்.
ஒன்று யானை மேலே எல்லோரும் இரண்டு இரண்டு பேரா ஏறி உட்கார்ந்தாங்க எங்க டேன்னும் வ்ந்ந்த்து, அண்ணனும் தம்பியும் ஒன்றாக ஏறி கொண்டார்கள். நானும் என் ஹஸும் ஒரு யாணையில். ரொம்ப பயந்து பயந்து ஏறினேன்.கேமராவ கையில் எடுக்க கூட பயமா இருக்கு, எங்களுக்கு முன் ஒரு வெள்ளைகார பாட்டி தாத்தா ரொம்ப தைரியமா ஏறி உட்கார்ந்து போய் கொண்டு இருந்தார்கள், எவ்வள்வு பேர் போறாங்க நீ ஏன் இப்படி பயப்ப்படுரே என்றார் , நாம ஏறின நேரம் அதுக்கு மதம்பிடிச்சிட்டுதுன்னா,

அதுக்கு ஏற்றர் போல யாணைய ஓட்டி செல்பவர் காலால் அதை உதைத்து தள்ளினார். எல்லோரும் ஏறியதும் கட கடன்னு யாணைகள் நகர்ந்த்து ஆனால் நாங்க ஏறியதும் இரண்டு அடி கூட் எடுத்து வைக்கல அப்படியே நின்னுடுச்சி பின்னாடி வர யாணை எல்லாம் முன்னே போய் கொண்டு இருக்கு. எனக்கு ஒரே பயம் சொன்னா மாதிரி ஏதும் நடக்குமா இல்லை வெயிட் தாஙக் முடியாம நின்னுடுச்சா, சும்ம இரு என்றார், கீழே இரங்கி ஓடவும் முடியாது.
பார்த்தா யாணைக்கு உச்சா வந்துடுச்சாம், போவுது போவுது போயிக்கிட்டே இருக்கு அப்படியே குடம் குடமா...... போய் கொண்டே இருக்கு,
அப்பரம் மின்னல் வேகத்தில் நடந்த்து மலை மேலே (ரோடு பக்கம்) ஏறியது போக போக ரொம்ப நல்ல இருந்த்து, இன்னும் நாலு ரவுண்டு போகனும் போல இருந்த்து., ஜெய்பூர் போனா எம்பர்ர் போர்ட்டில் உள்ள யானை சவாரிய மிஸ் பண்ணிடாதீங்க.

அடுத்து போய் மேலேசுற்றி பார்த்துட்டு காரில் கீழே வந்தோம் வந்த களைப்பில் கோன் ஐஸ் வாங்கி சாப்பிட்டோம், சாப்பிட்டோம் இல்ல, நான் மட்டும் சாப்பிடல, வாங்கி வாயில் வைக்க்க போனேன் எங்கிருந்து தான் வந்துச்சுன்னு தெரியல ஒரு குரங்கு கண் இமைக்கும் நேரத்தில் லபக்குன்னு பிடிங்கி கொண்டு போய் விட்டது.என் பையனுக்கு ஒரே சிரிப்பு.நான் ஐஸ் போனது போகட்டும் மறுப்டி என்னை தொரத்த கூடாதே பே பே பே.... திரும்பி பார்த்தா நிறைய குரங்கு எங்க வந்து தலை பிடிச்சி இழுத்துடு உட்கார்ந்துடுமோன்னு...







இன்னும் ஒன்று ஹவ்வா மஹால் இத சுற்றியுள்ள நாலு ரோடு பிரிவுகள் அங்கு தான் முழுவதும் பஜார் போல லைனா கடைகள்.
ஜெய்பூரில் பிக் பஜார் பக்கத்தில் தான் ஹோட்டல் பையனுக்கு தேவையான பொருட்கள் அங்கேயே வாங்கி கொண்டோம். போனதுக்கு அங்கு பாந்தினி சேலை சுடி எல்லாம் பேமஸாம் வளையல்கள் ஆகா என்ன அருமை அருமை, எனக்கும் ஊரில் எல்லோருக்கு வாங்கினேன், பசங்க நான் வளையல் கடையில் நின்னு வாங்கியதில் வெருத்து போய் விட்டார்கள்





பிறகு அங்கிருந்து அலஹாபாத் ட்ரெயினில் போய் முன்று நாள் பையன் கூடவே இருந்து ஹாஸ்டல் கூட இருக்கிற பையனை எல்லாம் பார்த்து அம்மாக்களுக்கே உரித்த்தான கண்ணீரை வடித்து கொண்டு வந்தேன்.


பையனை விட்டுட்டு திரும்ப வந்த ட்ரெயின் + பிளைட் அனுபவம் அங்கிருந்து சென்னை வந்து சேர்ந்த்து இது வரை லைபில் மறக்க முடியாது. முடிந்த போது பதிவிடுகிறேன்






வந்த்தும் ஸாதிகா அக்கா, விடல வரனும் என்ற அன்பு தொல்லை.

அடுத்து சீதாலக்‌ஷ்மி அக்கா ஏற்போட்டிலாவது வந்து உங்களை பார்க்கீறேன் என்றார்கள்.

ஜேமாமி பையனுக்கு கல்யாணம் முடிந்த்து , அவஙக்ளை போய் பார்க்க்லாம் என்றால் ஞாயிற்று கிழமைதான் பிரி ஆகையால் பார்க்க முடியல.

கடைசியில் ஸாதிகா அக்காவை பார்க்க மர்லிய கூப்பிட்டு கொண்டு போய் பார்க்க போனேன், தனியா எங்கேயும் போனதில்லை, போகனும் என்று டிசைட் செய்து சொல்லியாச்சு மாலை 5 மணியிலிருந்து கிளமபவே முடியல,
ஒரு வழியா நான் என் பையனையும் , மர்லி மரியத்தையும் கூப்பிட்டு வந்தாங்க, ஒரே ஆனந்தம் தான், ஸாதிகா அக்கா தங்கைகள், தம்பி மனைவி, அம்மா எல்லோரையும் பார்த்து பேசினோம், பெட்டிஸ், நான் செய்யும் முர்தபா போல வேறு சுவையில் இருந்த்து.

வீட்டிலேயே செய்த மிக்சர் சூப்பர், இனிப்பு பணியாரம் கொஞ்சம் டென்ஷனில் கிளம்பி போனதால் பேர சரியா கேட்கல . கொஞ்சம் நேரம் இருந்துட்டு முதலே சொல்லி இருந்தா விருந்து ஏற்பாடு செய்து இருப்ப்பேன் ஜலீ இப்படி திடீருன்னு வந்து இருக்கீங்களே என்றார்கள் நேரமில்லத்தால் அப்படி போக வேண்டியதா போச்சு, இரவு கிளம்ப சொல்லி வைத்திருந்த ஆட்டோ லேட் ஆனதால் தீடீர் மொரு மொரு தோசை, பொட்டுகடலை சட்னி, மிளகாய் பொடி, அருமையா இருந்த்து.பிறகு நானும் மர்லியும் அங்கிருந்து கிளம்பி விட்டோம்.








மறுநாள் மாமானார் வீட்டில் எல்லா நாத்தனார்கள், அவர்கள் பிள்ளைகள் பேரன் பேத்திகள் எல்லோரும் ஒன்றாக அரட்டை அடித்து விட்டு பீச் போயே ஆகனும் என்று எல்லா பிள்ளைகளும், அடம் சரி மொத்தமா அனைவரும் பீச் போய் ஒரு மணி நேரம் உட்கார்ந்து அரட்டை , பிள்ளைகளும் நல்ல விளையாடினார்கள்,
கொஞ்ச நேரத்தில் ஜோன்னு மழை எல்லோரும் ஒன்றாக சேர்ந்து நனைந்து கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தோம் ரொம்ப வருடம் கழித்து மழையில் நனைந்து நடந்து வந்தோம் பீச்சில் எங்கும் போய் ஒதுங்க முடியாது.அப்படியே மறு நாள் கிளம்பி இங்கு வந்து சேர்ந்தாச்சு.
அடுத்த பையன் வருகைக்க்காக வெயிட்டிங்... .....