இது டயட் செய்பவர்களுக்கு ஏற்ற டிஷ்.சப்பாத்தி குப்பூஸுடன் சாப்பிட சூப்பாரான அயிட்டம்
தேவையான பொருட்கள்
மீடியமான முழு மீன் - இரண்டு
பூண்டு பொடி - ஒரு தேக்கரண்டி
காஷ்மீரி சில்லி பொடி - ஒரு தேகக்ரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு தூள் - ஒன்னறை தேக்கரண்டி(தேவைக்கு)
எலுமிச்சை சாறு - முன்று மேசை கரண்டி
பப்பரிக்கா பவுடர் - அரை தேக்கரண்டி
வினிகர் - ஒரு தேக்கரண்டி
உருளை கிழங்கு - இரண்டு
வெங்காயம் – ஒன்று
செய்முறை
மீனை சுத்தம் செய்து இடை இடையே நன்கு ஆழமாக கீறி விடவும்.
மேலே குறிப்பிட்ட அனைத்து மசாலாக்களையும் மீனில் நன்கு பிரட்டி முன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
200 டிகிரியில் முற்சூடு செய்ய பட்ட அவனில் 35 நிமிடம் பேக் செய்யவும்.
முதலில் உருளை கிழங்கை வட்ட வடிவமாக கட்செய்து டிரேயின் அடியில் வைத்து அதன் மேல் மீனை வைத்து மேலே வெங்காயத்தை வட்டவடிவமாக கட்செய்து வைக்கவும்.
இது பேக் செய்யும் போது தண்ணீர் கீழே நிற்கும்.அதற்கு முதலில் மேல் தீயில் 15 நிமிடம் வைக்கவும்
அடுத்து மேலும் கீழும் உள்ள தீயை செலக்ட் செய்து 10நிமிடம் வைக்கவும்.
கடைசியாக அடியில் டிரேயில் வைத்து பத்து நிமிடம் வைக்கவும்.குபூஸுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
சுவையான பேக்டு முழு மீன் கிரில் ரெடி.
இதில் உள்ள குபூஸ் வீட்டில் என் கை பக்குவதில் செய்தது.
முன்பு அடிக்கடி செய்வேன். இப்ப ஓவன் ரிப்பேர் ஆனதில் இருந்து செய்வதில்லை, எல்லாம் வீட்டு கிட்டேயே நிறைய க்டைகள் வந்துவிட்டது, ஆகையால் அவ்வளவா செய்வதில்லை/
முழு மீன் டீப் ஃபிரை
டிஸ்கி: இதை ஏற்கனவே அருசுவையில் 1 1/2 வருடம் முன் கொடுத்தது. யார் யாரோ என் குறிபப காப்பி அடித்து அவஙக் தளத்தில் அவர்கள் குறிபப் போட்டு கொள்கிறார்கள், அதான் இங்கேயும் பிளாக் தோழ தோழியர்களுக்காக இங்கும்.இப்ப என் அரேபிய சமையல் ரெசிபிகளும், சாண்ட்விச் அயிடங்கள்,சிக்கன் கிரில் பார்பிகியு மட்டுமே எடுத்து ஒருத்தங்க பிலாக் ஆரம்பித்து இருக்காங்க, பெயர் சொல்ல விரும்பவில்லை.
நானே மறந்தாலும், கிளப்பி விட்டுடுராங்களே..
23 கருத்துகள்:
மிக்க அருமை ஆனால் மூன்றுமணிநேரம் ஊரவிடனுமா ?அதுக்குள்ள பசி போயிடுமே
டயட்டிற்கு ஏத்த சூப்பர்ர் ரெசிபி!!
சூப்பர் சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
Mouthwatering here...tempting!
looks so yumm!!
Supera irukku. Seithu thanthal saapida nalla irukku.
நல்லாருக்குது..
இந்த கிரில்டு வெல மீனுடன் குபூஸும்,ஹமூஸும் சேர்த்து தோஹா ரொட்டானா ரெஸ்டாரெண்டில் சாப்பிட்டது நாக்கை சப்புக்கொட்ட வைக்கின்றது.
Nice , i cant try .. iam a vegetarian..
migavom arumai..please rush ur entries for Fast food-Noodles in my blog.
ஹாஜா
நல்ல மீனில் மசாலா ஊறினால் தான் சுவை நன்றாக இருக்கும்.
ரொம்ப பொறுக்க முடியலன்னா
ஒரு மணி நேரம் கூட போதுமானது தான்
வருகைக்கு மிக்க நன்றி
ஆம் மேனகா ஓவனில்வைத்து சாப்பிடுவதால் எண்ணை இல்லாமல் சப்பாத்தி குபூஸுடன் அருமையாக இருக்கும்
கருத்திற்கு மிக்க நன்றி மேனகா
வாங்க வேலன் சார் ரொமப் நாள் கழித்து வந்து இருக்கீங்க,
வருகைக்கு மிக்க நன்றீ +சந்தோஷம்.
thank you very much priya
thank you for your visit sara naveen
மிக்க நன்றி எல் கே
குறிஞ்சி வாங்க செய்து கொடுத்துட்டா போச்சு
நன்றி அமைதி சாரால்
ஆமாம் ஸாதிகா அக்கா ஹமூஸ்டன், சாப்பிட சூப்பராக இருக்கும்
உஙக்ளுக்கு இங்கு வந்த சென்றதெல்லாம் அசை போடுதா?
தொடர் வருகை புரிந்து கருத்து தெரிவிப்பவதற்கு மிக்க நன்றி ஸாதிகா அக்கா
வருகைக்கு நன்றி சித்ரா/
வருகைக்கு மிக்க நன்றி ஷமா உஙகல் ஈவண்டுக்கு கண்டிப்பாக அனுப்புகிறேன்
பார்க்கவே அட்டகாசமாக இருக்கு.
வலைச்சரத்தில் உங்களை பற்றி குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ... http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_08.html
Grill fish super aa irukku akka.
இதெல்லாம் துபாய் ஸ்பெசலா சகோதரி
நன்றி ஆசியா
நன்றி அப்பாவி தங்கமணி
வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி + சந்தோஷம்
கருத்துக்கு மிக்க நன்றி விக்கி
கொங்கு சாட்டை வாங்க உஙக்ள் முதல் வருகைக்கு மிக்க நன்றி
ஆமாம் அரபுநாடுகளில்
எண்ணை காரம் அவ்வள்வா சாப்பிட மாட்டார்கள்
மீன், சிக்கன், மட்டன், கபாப் வகைகளை கிரில் செய்து குபூஸ் ஹமூஸுடன் சாப்பிடுவார்கள்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா