Monday, September 30, 2013

காரா பூந்தி ரைய்தா - Kara Boondhi Raita




இந்த பூந்தி ரெய்தா நார்த் இந்த்யாவில் தான் பிரபல்மானது  இதில் சீரகம் வறுத்து திரித்து சேர்த்து சிறிது மிளகாய் தூள் மற்றும் சாட் மசாலா சேர்ப்பார்கள். இதில் நான் சிம்பிளாக எப்போதும் பிரியாணிக்கு செய்யும் ரெய்தாவில் காராபூந்தி சேர்த்துள்ளேன்.


காரா பூந்தி ரெய்தா
தேவையான பொருள்கள்
தயிர் – 150 மில்லி
பொடியாக அரிந்த வெங்காயம் – 2
பொடியாக நறுக்கிய – பச்சமிளகாய் – 2
வெள்ளரிக்காய் - சிறியது ஒன்று
லெமன் ஜூஸ் – 1 தேக்கரண்டி
சர்க்கரை – அரை சிட்டிக்கை
உப்பு –தேவைக்கு
காராபூந்தி – தேவைக்கு.


செய்முறை

தயிரை நன்கு அடித்து அதில் வெங்காயம், வெள்ளரிக்காய், பச்சமிளகாய் கொத்துமல்லி கீரை, சர்க்கரை , உப்பு , லெமன் ஜூஸ் அனைத்தையும் கலந்து பிரிட்ஜில் வைக்கவும்.
பரிமாறும் போது காராபூந்தியை தூவி பரிமாறவும்.
இதை பிரியாணிக்கு என்றில்லை சாலட் போல் சும்மாவும் சாப்பிடலாம், சப்பாதிக்கும் தொட்டு சாப்பிடலாம்.

இந்த பூந்தி ரெய்தா நார்த் இந்த்யாவில் தான் பிரபல்மானது  இதில் சீரகம் வறுத்து திரித்து சேர்த்து சிறிது மிளகாய் தூள் மற்றும் சாட் மசாலா சேர்ப்பார்கள்.


/மோர்குழம்பு ,தயிர் சாதம், தயிர்வடை எது வைத்தாலும் காராபூந்தியுடன் சாப்பிடுவது என் பையனுக்கு பிடிக்கும்.

நான் பிரியாணிக்கு பக்க உணவாக அடிக்கடி வெஜ் ரெய்தா, மிண்ட் குகும்பர் ரெய்தா, தேங்காய் தயிர் பச்சடி ,பிட்ரூட் பீனட் ரெய்தா என்று செய்வேன்..
 இதில் சிம்பிளாக  வெங்காய தயிர் பச்சடி(ரெய்தா) உடன் காராபூந்தி சேர்த்துள்ளேன்./
மோர் குழம்பு, கேரட் சாலட், காராபூந்தி





தயிர் சாதம், ஸ்பைசி பாயில்ட் எக் ஃப்ரை, காரா பூந்தி, நார்த்தங்காய் ஊறுகாய்

Linking to Walk through Memory Lane hosted by Priya Ananda Kumar


 https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

Tuesday, September 24, 2013

வேர்கடலை வெண்டைக்காய் பொரியல் - Ladies Finger Peanut Stir Fry




 வேர்கடலை என்றதும் எங்க டாடி ஞாபகம் தான் வருகிறது.ஞாயிற்று கிழமைகளில் மாலை கண்டிப்பாக எங்க அம்மா சுண்டல் அல்லது வேர்கடலை செய்வார்கள். அப்ப டாடி சொல்வாங்க எம்மா மல்லாட்டை வெவிக்க போடுமா என்று , ம்ம் ஊரிலிருந்து மூட்டை மூட்டையாக அப்ப எங்க வீட்டுக்கு வரும். சொந்தங்களுக்கு கொடுத்த்து போக மீதி வீட்டில் விடுமுறை நாட்களில் வேகவைத்து நாங்க எல்லோரும் டாடியோடு ஒன்றாக உட்கார்ந்து  சாப்பிடுவோம். பெரிய பானையில் உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடித்து அதன் தோலை உரிப்பதற்குள் போதும் போதும் என்றாகிடும்.

இப்போதெல்ல்லாம் தோல் எடுத்த வேர்கட்லையே இங்கு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. என் கணவருக்கும் ரொம்ப பிடிக்கும் காலை டிபனுக்கு வேர்கடலை சாலட், வேர்கடலை அல்லது சுண்டல் வகைகள் மாதம் இருமுறை செய்வேன். புளி சாதம் , பிஸிபேளாபாத் செய்யும் போது கண்டிப்பாக வேக வைத்த வேர்கடலை யுடன் தான் செய்வது, சில நேரம் புளி சாதத்தில் வேக வைத்த கருப்பு கொண்டை கடலை சேர்த்தும் செய்வேன்.


வேர்கடலை வெண்டைக்காய் பொரியல்/Ladies Finger Peanut Stir Fry/Peanut & Okra & Boiled Peanut Stir Fry

தேவையானவை
வெண்டைக்காய் – கால் கிலோ
வேக வைத்த வேர்கடலை – முன்று மேசைகரண்டி
தாளிக்க
எண்ணை – இரண்டு தேக்கரண்டி
கடுகு உளுத்தம் பருப்பு கடலை பருப்பு – 1 மேசைகரண்டி
பொடியாக அரிந்த வெங்காய்ம் – 1
பொடியாக அரிந்த தக்காளி – அரை பழம்
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு தூள் – அரை தேக்கரண்டி




செய்முறை :

வெண்டைக்காயை கழுவி அரிந்து கொள்ளவும்.ஒரு வாயகன்ற வானலியை சூடு படுத்தி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெண்டைக்காய், மற்றும் வேக வைத்த வேர்கடலை சேர்த்து நன்கு கிளறி மிளகாய் தூள், உப்பு தூள் சேர்த்து கிளறி இரண்டு தேக்கரண்டி தண்ணீர் தெளித்து முடி போட்டு (வெண்டைகாய் சீக்கிறம் வெந்து விடும்) 5 நிமிடம் வேகவைக்க்கவும்.சுவையான சத்தான வெண்டைக்காய் வேர்கடலை பொரியல்ரெடி.. பீட்ரூட் ,கேரட் போன்ற பொரியல்கள் செய்யும் போதும் சேர்த்து கொள்ளலாம். 
பொரியல் வகைகளில் சீக்கிறமாக செய்யக்கூடிய பொரியல் வெண்டைக்காய் தான். வெண்டைக்காயை அரிந்து விட்டு கழுவக்கூடாது கொழ கொழன்னு ஆகிவிடும். முதலில் கழுவி விட்டு கொண்டையை வாலையும் அரிந்து விட்டு பிறகு அரியனும்.
வெண்டைக்காய் வதக்கும் போது சிறிது தயிர் சேர்த்து வதக்கினால் கொழ கொழப்பாகாது.
சோம்பு தயிர் வெண்டைக்காய் பொரியல்

வெண்டைக்காய் குர் குரே

வெண்டைக்காய் தால் பொரியல்

Linking to Tamizar samaiyal Tuesday Event FB Group & Gayatri's walk through memory lane hosted by Priya Anadhakumar
தமிழர் சமையல் நளினி சுரேஷின் ஈவண்ட் ,ஓவ்வொரு மாதமும் மாதத்தில் இரண்டாவது நான்காவது மாதம் போஸ்ட் செய்யனும் என்பது விதிமுறை. இங்கு நான் பகிர்வது ஏராளமாக நம்மூர் சமையல் தான் , போஸ்ட் போட்டு அதை லிங்க் பண்ணுவது பெரும் பாடாக இருக்கிறது . எப்ப்போது முடிகிறதோ அப்போது மட்டும் பகிர்ந்து கொள்ளலாம் என்று இந்த வேர்கடலை வெண்டைக்காய் பொரியலை தமிழர் சமையலில் பகிர்கின்றேன்.



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

Monday, September 23, 2013

வடா பாவ்/வடா ப்ரட் - Vada Pav/Vada Bread


வடா பாவ்
இது வட இந்தியாவில் பிரத்தி பெற்ற ஒரு சிற்றுண்டி, பாவ் பன்னுடன் சாஸ் சேர்த்து இதை உள்ளே வைத்து சாப்பிட அருமையாக இருக்கும்.

 Vada Pav




Vada Bread



தேவையானவை
பிரட் – 8 (அ) பன் – 4
பட்டர் – பொரிக்க தேவையான அளவு
டொமேட்டோ கெட்சப் – தேவைக்கு
டேட்ஸ் சட்னி (அ) இனிப்பு சட்னி
வடா செய்ய
ரெடி மேட் பஜ்ஜி மாவு – அரை கப்
கார்ன் மாவு – ஒரு மேசை கரண்டி





உருளை கிழங்கு பட்டாணி மசாலா
வேகவைத்த உருளைகிழங்கு – ஒன்று
வெங்காயம்  - ஒன்று
பச்ச மிளகாய் – ஒன்று
மஞ்சள் பொடி – கால் தேக்கரண்டி
எண்ணை – ஒரு தேக்கரண்டி
தாளிக்க
கடுகு – கால் தேக்கரண்டி
சீரகம் – கால் தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிது
பட்டானி (புரோஜன்)  - ஒரு மேசை கரண்டி
பெருங்காயப்பொடி – ஒரு சிட்டிக்கை

செய்முறை
முதலில் உருளைகிழங்கு மசாலா தயாரித்து கொள்ளவும்
வாயகன்ற வானலியில் எண்ணையை ஊற்றி கடுகு, சீரகம்,கருவேப்பிலை, பெருங்காயப்பொடி சேர்த்து தாளித்து பொடியாக அரிந்த வெங்காயம் மற்றும் பச்சமிளகாய்,பட்டானி சேர்த்து நன்கு வதக்கவும்.
மஞ்சள் தூள் உப்புதூள் வெந்த உருளைசேர்த்து நன்கு மசித்து கிளறி ஆறவைக்கவும்.
ஆறிய உருளைமசாலாவை சிறிய உருண்டைகளாக பிடித்துவைக்கவும்.
( வட நாட்டு உருளை மசாலாவில் சேரும் மசாலாக்கள் வேறு, இது நம்ம பூரி பாஜிக்கு செய்யும் மசாலா போல் தான் செய்துள்ளேன்)

பிரட் (அ) பன் பொரித்து கொள்ளவும்/
பிரட்டை (அ) பன்னை பட்டர் தடவி பொரித்து கொள்ளவும்
பஜ்ஜிமாவை கார்ன் மாவு சேர்த்து கலக்கி கொள்ளவும்.
வானலியில் எண்ணையை காயவைத்து உருட்டிய மசாலா உருண்டைகளை பஜ்ஜிமாவில் தோய்த்து பொரித்து எடுக்கவும்.

வடா பன் (பாவ்)

பொரித்த பிரெட்டில் ஒரு பக்கம் கெட்சப்பும், மறுபக்கம் டேட்ஸ் சட்னியும் தடவி ஒரு பொரித்த மசாலா பஜ்ஜியை நடுவில் வைத்து  மூடவும்.

 குறிப்பு:
இது பிள்ளைகளுக்கு என்பதால் கெட்சப் மட்டும் போதுமானது,  பெரியவர்களுக்கு ஒரு பக்கம் கீரின் கார சட்னியும், மறுபக்கம் டேட்ஸ் சட்னியும் வைத்து செய்யலாம்.அருமையான மாலை நேர சிற்றுண்டியும், குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸுக்கும் சூப்பரான டிபன். சுவைத்து மகிழுங்கள்.

Vada Bread English Version
Linking to Akila's Dish Name Starts with V 


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

Saturday, September 21, 2013

அவல் உப்புமா - Poha Upma




அவல் உப்புமா
பேச்சுலர்களுக்கும் வேலைக்கு செல்பவர்களுக்கும் காலை டிபனுக்கு செய்ய ஈசியான ரெசிபி.
இங்கு துபாயில் வெள்ளி விடுமுறை , சனிக்கிழமை தான் இங்குள்ள ப்ரைவேட் கம்பேனிகளுக்கு வாரத்தின் முதல் நாள். லிவு முடிந்து மறுநாள் ஆபிஸ் செல்ல மனசே இருக்காது. காலையில் டிபன் உப்புமாதான் என்று முடிவு பண்ணி விடுவது. இன்னும் ஈசியான டிபன் உப்புமாவை தவிர , புட்டு, இனிப்பு சேமியா, இனிப்பு  கோடா,வறுத்தமாவு கொழுக்கட்டை இது போல் ஏதாவது செய்து விடுவேன்.

இந்த முறை அவல் உப்புமா இப்படின்னு கை நொடிக்கும் நேரத்திற்குள் செய்து முடித்துவிடலாம்.
தேவையான பொருட்கள்
வெள்ளை அவல் – 1 டம்ளர்
தாளிக்க
எண்ணை  - இரண்டு தேக்கரண்டி
கடுகு உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
பொடியாக அரிந்த வெங்காயம் – இரண்டு மேசைகரண்டி
கருவேப்பிலை – 5 இலை
பச்ச மிளகாய் – 2 கீறியது

மஞ்சள் பொடி – கொஞ்சம்

செய்முறை
அவலை இரண்டு முறை  களைந்து தண்ணீரை வடித்து வைக்கவும்.
தாளிப்பதற்குள் தண்ணீரில் சிறிது ஊறிவிடும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அவலை கொட்டி கிளறி மூடி போட்டு ஒரு நிமிடம் சிம்மில் வைத்து இரக்கவும்.
சுவையான அவல் உப்புமா 5 நிமிட்த்துக்குள் ரெடியாகிவிடும்.
அதிக நேரம் ஊறவைத்தால் குழைந்த்து போல் ஆகிவிடும்.புளிப்பு சுவை வேண்டும் என்றால் அரை தேக்கரண்டி லெமன் பிழிந்து கொள்ளலாம்,
 உதிரியாக வேண்டும் என்றால் தாளித்த உடன் அடுப்பை ஆஃப் செய்து விட்டு அவலை கழுவி வடிகட்டி உடனே சேர்த்து மீண்டும் அடுப்பை ஆன் செய்து முன்று நிமிடம் நன்கு கிளறி இரக்கவும்.
Linking to Walk through Memory Lane hosted by Priya Ananda Kumar


 https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

Wednesday, September 18, 2013

தொழுகை முட்டாக்கு தைப்பது எப்படி? - Prayer Makkaanna/Prayer Hijab



Prayer Hijab  @ Chennai Plaza


Prayer Makkaannaa தொழுகை முட்டாக்கு படம் இங்கு சென்று பார்க்கலாம்

தொழுகை முட்டாக்கு , மக்கான்னா இதை எல்லோரும் ஓவ்வொரு முறை ஹஜ் செல்லும் போதும்  ஆண்களுக்கு தொப்பியும், பெண்களுக்கு இந்த ப்ரெயர் மக்கான்னா /தொழுகை முட்டாக்கும் வாங்கி வருவார்கள்.அது எல்லாமே எலாஸ்டிக் துணியில் தான் இருக்கும் சிலது இப்ப காட்டனிலும் லேஸ் வைத்து விற்கிறார்கள். வெள்ளை கலரில் அகோபா டிசைன் தொழுகை முட்டாக்குகளும் கிடைக்கின்றன.


யார் எத்தனை கொடுத்தாலும் பஞ்சுபோல் வாயில், காட்டன் துணிஎடுத்து அதை தைத்து போட்டு கொள்வது தான் எனக்கு பிடிக்கும்.
வீட்டில் இருக்கும் போது முன்பு இது போல் நிறைய் தைத்து வைப்பேன். வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தாலும் ஆளுக்கு ஒன்று கொடுத்து தொழுக கொடுக்க வசதியாக இருக்கும்.இது போல் காட்டன் துணியும் தைத்து கொண்டால் ஊருக்கு போகும் போது ஹாண்ட்பேக்கில் வைத்து கொள்ளலாம். எந்த வீட்டுக்கு போனாலும் தொழுகை முட்டாக்கை தேடிக்கொண்டு இருக்கவேண்டியதில்லை, மேலே படத்தில் உள்ளது இப்ப தைத்தது இல்லை. 7 வருடம் முன் தைத்தது.




1 & 2, 3 & 4 உயரம்  - 35இன்ச்
1 & 3, 2 & 4 அகலம் மடிப்புடன் (போல்டிங்) 42 இன்ச்
1&5 (தலை) முகம் - ஒப்பன் - போல்டிங்) மடிப்புடன் - 9இன்ச் (மொத்தம் 9+9 - 18 இன்ச் வரும்)
6 & 7 அடியில் ஷேப் வரை
பைப்பிங் தைக்க ரோப் அல்லது எலாஸ்டிக்




அகலம் சைடில் மடிப்புடன் துணியை எடுத்து கொள்ளவும் , 42 இன்ச் அளவுக்கு அகலம் கிடைக்கவில்லை என்றால் ஒட்டு போட்டு கொள்ளலாம்.
உயரம் மடிப்பில்லாத பக்கம் வைத்துகொள்ளவும்.
தலையில் கொள்ளும் அளவுக்கு  ஒரு பக்க 9, மற்றொரு பக்கம்  இன்ச் மொத்தம் 18 இன்ச் வரும், உயரத்தை புடவைக்கு ஓரம் தைப்பது போல் மடித்து தைத்து கொள்ளவும்.


இரண்டு துணியையும் சேர்த்து உயரத்தில் 9 இன்ச் குறித்து கொண்டு மீதியை நேராக  5 &  2 இணைக்கவும்.



2 , 6, 7 & 3 இந்த ஷேப்பையும் அப்படியே அதே வடிவில் ஓரத்தை மடித்து தைக்கவும் .


தொழுகை முட்டாக்கு ரெடி, தலையில் மாட்டியதும் தொழும் போது வழுக்கி வழுக்கி வராமல் இருக்க 1& 5 க்கு நடுவில் சரியாக காதுக்கு கிட்டே வரும் அங்கிருந்து ஒரு நாடா இருபுறமும் தைத்து கொண்டு அதை அப்படியே தலையில் மாட்டி கொண்டால் பின்னந்தலையில் சரியாக நிற்கும், நாடாவிற்கு பதில் எலாஸ்டிக்கும் வைத்து தைத்து கொள்ளலாம்.

புர்கா பயன் படுத்துபவரக்ளுக்கு காட்டன் சுடிதார் துப்பட்டா அப்படியே புதுசாகவே இருக்கும். அது இந்த தொழுகை முட்டாக்குக்கு சரியாக இருக்கும்.
அதை கூட இப்படி தைத்துகொண்டால் வெயில் காலத்தில் அடிக்கும் வெயில் அடிக்கடி கரண்டும் கட்டாகிடும். பாலிஸ்டரை முட்டாக்கு போட்டு ஹாராரத்தா வருவதற்கு இப்படி இதமான காட்டன் தொழுகைமுட்டாக்கு போட்டு ஆனந்தமாய் தொழலாம்.இன்னும் டிசைன்னாக வேண்டும் என்றால் பார்டர் ஷேப் வரும் இடத்தில் பைப்பிங் , லேஸ் போன்றவை வைத்து தைக்கலாம்.

தொழுதுட்டு அப்படியே பிரேயர் மேட்டில் வேர்வையோடு சுற்றி வைப்பதால் வாடை வரும் வாரம் ஒரு முறை இந்த தொழுகை முட்டாக்கை கண்டிப்பாக துவைத்து வைக்கனும், கொஞ்சம் வாசனை செண்ட் போட்டு வைத்தாலும் நல்லது. 



எங்க சென்னை ப்ளாசா கடையில் இந்த தொழுகை முட்டாக்கு வைத்துள்ளோம்.காட்டன் அக்கோபா துணியில் தேவைப்பட்டாலும் கிடைக்கும்.




 https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

Sunday, September 15, 2013

அரேபியர்களின் கப்ஸா ரைஸ் சமைப்பது எப்படி?- Arabic Kabsa











அரேபியர்களின் கப்ஸா ரைஸ் சமைப்பது எப்படி?
அரபு நாடுகளில் அவர்கள் அன்றாடன் உண்ணும் உணவு வகைகளில் இந்த கப்ஸா சாதம்(ரைஸ்)  மும் ஒன்று. இது சவுதியில் தான் மிகவும் பிரபலம், சவுதி கப்ஸா என்று தான் சொல்வார்கள்.


கப்ஸா ரைஸ்/சவுதி கப்ஸா – 2 முறை/Lolipop Kabsa/அரபிக் கப்ஸா

இதில் இரண்டாவது முறை தான் நான் அடிக்கடி செய்வது.
தேவையானவை
·         சிக்கன் லாலி பாப் 8 துண்டுகள்
·         அரிசி - அரை கிலோ (இரண்டறை ஆழாக்கு)
·         எண்ணை - 50 மில்லி (கால் டம்ளர்)
·         பட்டை ஒரு விரல் நீளம் -இரண்டு
·         ஏலம் - முன்று
·         கிராம்பு – நாலு
·         காய்ந்த பெரிய எலுமிச்சை
·         வெங்காயம் - முன்று
·         தக்காளி - முன்று
·         இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்னறை டேபுள் ஸ்பூன்
·         பட்டர் - ஒரு தேக்கரண்டி
·         உப்பு தேவைக்கு

செய்முறை
1.    


  1. அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும்.
  2. லாலிபாப் சிக்கனை சுத்தம் செய்து குக்கரில் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  3. வெந்த்தும் லாலி பாப் சிக்கனை தனியாக வடிகட்டி அதில் மசாலாக்களை சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
  4. ரைஸ்குக்கரில் எண்ணை + பட்டர் விட்டு காய்ந்த எலுமிச்சை, பட்டை , ஏலம், பிரிஞ்சி இலை,கிராம்பு சேர்த்து தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து சிவறாமல் வதக்கி சிக்கன் வெந்த தண்ணீரை ஒன்றுக்கு ஒன்னறை அளவு அளந்து ஊற்றி உப்பு சேர்த்து ரைஸ்குக்கரில் சமைத்து எடுக்கவும்.








  5. இதைக்குக்கரிலும் செய்யலாம். தனியாக தம் போட்டும் இரக்கலாம்.
  6. குக்கரில் வைக்கும் போது தண்ணீர் அளந்து ஊற்றியதும் இரண்டு விசில் வந்த்தும் குக்கரை ஆஃப் செய்து ஆவி வெளியானதும் இரக்கி ஃபோர்க்கால் பிரட்டி விடவும்.
  7. தம் போடுவதாக இருந்தால் அரிசி தட்டி தண்ணீர் அளந்து ஊற்றியதும் கொதிக்க விட்டு தீயின் தனலை சிம்மில் வைத்து 20 நிமிடம் தம் போடவும்.
  8. வெள்ளை வெலேருன்னு சிக்கன் மனத்துடன் அப்படியே பிடிச்சி சாப்பிட நல்ல இருக்கும். குழந்தைகளுக்கு இந்த சாதம் ரொம்ப பிடிக்கும்.
     சிக்கனில் சேர்க்க வேண்டிய மசாலாக்கல் மிளகாய் தூள்,உப்பு தூள், கார்ன் மாவு + கிரம்ஸ் பவுடர். சேர்த்து பிரட்டி ஊறவைக்கவும்.
  9. இப்போது ஏற்கனவே மசாலா போட்டு ஊறவைத்த சிக்கனை டீப் ஃப்ரை அல்லது ஷாலோ பிரை செய்து எடுக்கவும்.
  10. இதற்கு பக்க உணவு  ஏற்கனவே பொரித்து வைத்துள்ள லாலிபாப் சிக்கன் ,டொமெட்டோ சல்சா , சாலட் வகைகள் மிக அருமையாக இருக்கும்.(அல்லது)சிக்கன் மட்ட்னை கிரில் அலல்து கபாப் போல் செய்து சாப்பிடலாம்

குழந்தைகளுக்காக ஸ்பெஷலாக நான் தயாரித்த கப்ஸா ரைஸ் அடுத்த பதில் போடுகிறேன்.
இந்த சாப்பாட்டுக்கு காரம் + கலர் தேவைப்பட்டால் முழு மிளகு சிறிதும் சாஃப்ரானும் சேர்த்து கொள்ளலாம்.



பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு
ஆயத்த நேரம் - 25 நிமிடம்
சமைக்கும் நேரம் - 30 நிமிடம்

அரேபியர்களில் கப்ஸா ரைஸ் சமைப்பது எப்படி?

 How to make Arabic Kabsa Rice


கப்ஸா ரைஸ்/saudi kabsa – 1 முறை
தேவையானவை

·         முழு கோழி – இரண்டு (அ) சிக்கன் லாலி பாப் 8 துண்டுகள்
·         அரிசி - அரை கிலோ (இரண்டறை ஆழாக்கு)
·         எண்ணை - 50 மில்லி (கால் டம்ளர்)
·         பட்டை ஒரு விரல் நீளம் -இரண்டு
·         ஏலம் - முன்று
·         கிராம்பு – நாலு
·         காய்ந்த பெரிய எலுமிச்சை
·         வெங்காயம் - முன்று
·         தக்காளி - முன்று
·         இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்னறை டேபுள் ஸ்பூன்
·         பட்டர் - ஒரு தேக்கரண்டி
·         உப்பு தேவைக்கு


செய்முறை
  1. முழு கோழியை சுத்தம் செய்யவும்.
  2. அரிசியை இருபது நிமிடம் ஊறவைக்கவும்.
  3. அதில் அரிசி ஒன்றுக்கு ஒன்னறை பங்கு தண்ணீர் 3 3/4   அளவு வறுகிறது நான்கு டம்ளரக எடுத்து கொண்டு சுத்தம் செய்த கோழியை அப்படியே போட்டு வேகவிடவும்.
  4. வேக வைத்து அந்த தண்ணீரை தனியாகவும் கோழியை தனியாகவும் வைக்கவும்.
  5. சட்டியை காயவைத்து அதில் எண்ணை பட்டரை ஊற்றி பட்டை,ஏலம்,கிராம்பு போட்டு மனம் வந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.சிவற விட வேண்டாம்.
  6. பிற்கு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்ச வாடை போகும் வரை வதக்கவும். தக்காளி சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைத்துள்ள கோழி வெந்த தண்ணீரை தாளித்த சட்டியில் அளந்து ஊற்றவும். .
  7. கொதிவந்ததும் அரிசியை தட்டி உப்பும் சேர்த்து கொதிக்கவிட்டு வெந்து வைத்துள்ள கோழியையும் சேர்த்து தீயை குறைத்து தம் போடவும்.
  8. இது தான் அரேபியர்களின் கப்ஸா சோறு.


குறிப்பு:
அரேபியர்கள் காரம் அவ்வளவாக சாப்பிடமாட்டார்கள். அவர்கள் செய்யும் பிரியாணியில் கூட அவ்வளவாக மசாலா இருக்காது,கோழியோ கறியோ முழுசா சட்டியில் போட்டு தான் வேக விடுவார்கள். நோன்பு கஞ்சிக்கு கூட நாம் கீமா போடுவோம் அவர்கள் அப்பட்டியே முழுசா மட்டன் அல்லது சிக்கனை போட்டு ரொம்ப நேரம் வேக விட்டு செய்வார்கள்.மசாலா அதிகம் சேர்க்க மாட்டார்கள்.ஆனால் இது ரொம்ப மஸ்த்(வெவி) சிலருக்கு இந்த சாத்த்தில்கோழியை போட பிடிக்கவில்லை என்றால் அதை அப்படியே பட்டரில் வறுத்து மசாலா எதுவும் சேர்க்காமல் சாப்பிடுவார்கள் .நான் அப்படி தான் செய்வது.






https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam