Friday, October 23, 2009

மிளகு மட்டன் கிரேவி - Pepper mutton Gravy
தேவையான பொருட்கள்

மட்டன் = ஒரு கிலோ

வறுத்து பொடிக்க
----------------- -----
மிளகு ‍ நான்கு தேக்கரண்டி
சீரகம் ‍- இரண்டு தேக்கரண்டி
சோம்பு ‍ - ஒரு தேக்கரண்டி
பட்டை ‍ இரண்டு இன்ச் அளவு ஒன்று
கிராம்பு ‍ நான்கு
ஏலம் ‍ முன்று

தாளிக்க‌
-----------

வெங்காயம் ‍ நான்கு பெரியது
தக்காளி ‍ முன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் ‍ இர‌ண்டு மேசைக‌ர‌ண்டி
உப்பு - தே.அளவு
மிளகாய் தூள் ‍ அரை தேக்கரண்டி
தனியாத்தூள் ‍ இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணை ‍ ஆறு தேக்கரண்டி
பச்ச மிளகாய் ‍ முன்று
செய்முறை

1.மட்டனை நன்கு கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும்

2. குக்கரில் எண்ணை விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

3. பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்ச வாடை போனதும் தக்காளி ,பச்சமிளகாய்,உப்பு,கொத்து மல்லி கீரை போட்டு வத்க்கவும்.

4. மிளக்காய் தூள்,மஞ்சதூள், தனியாதூள் சேர்த்து வதக்கி மட்டனை சேர்த்து நல்ல கிளறி பொடித்து வைத்துள்ள் பொடியை சேர்த்து ந்ன்கு கிளறவும்.

5. கொஞ்சமா தண்ணீர் வீட்டு மூன்று விசில் விட்டு இரக்கவும்.

6. இரண்டு பத்தை தேங்காய் அரைத்து ஊற்றி கொத்திக்கவிட்டு இரக்கவும் தேவைப‌ட்டால் தேங்காயுட‌ன் சிறிது முந்திரியும் வைத்து அரைத்து ஊற்ற‌லாம்.


7. சூப்பர் பெப்பர் மட்டன் கிரேவி ரெடி. சும்மா சுள்ளுன்னு இருக்கும்.


குறிப்பு:

இது குழ‌ம்பு போல் இல்லாம‌ல் கிரேவியா வ‌ர‌னும்.கார‌ம் அதிக‌ம் தேவைப‌டுவ‌ர்க‌ள் தேங்காய் சேர்த்துகொள்ள‌ வேண்டாம்.
இதை பிரட் ரைஸ், பிளெயின் ரைஸ் , ரொட்டி போன்றவைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்
பனிகாலங்களில் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம், சளி ஜலதோஷம் பிடிக்காமல் இருக்க வாரம் இரு முறை செய்ய்யலாம், தொண்டைக்கு இதமாக இருக்கும்.

23 கருத்துகள்:

THAMEEM ANSARI said...

Assalamu alaikkum

www.thameem1984.spaces.live.com

Sarah Naveen said...

Mutton looks so tempting!!!
Yummy!!!!

Mrs.Menagasathia said...

காரசாரமான கிரேவி ரொம்ப நல்லாயிருக்கு ஜலிலாக்கா!!

Balakrishna Saraswathy said...

Yummy..the mutton gravy looks so rich dear...

சிங்கக்குட்டி said...

தெரிந்த மற்றும் எனக்கு ரொம்ப பிடித்த உணவு.

பதிவு நல்லாயிருக்கு ஜலீலா.

Jaleela said...

வா அலைக்கும் அஸ்ஸலாம் தமீம் அன்சாரி, வருகைக்கு மிக்க நன்றி.

Jaleela said...

Sarah naveen, thank you

mix said...

நண்பர்கள் கவனத்திற்கு

Tamil

Web Submit

Tamil News Submit

English

Top Blogs

Cinema

Cine Gallery

Jaleela said...

மேனகா ம்ம் கார சாரமா இருக்கும். கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

Jaleela said...

சரஸ்வதி தொடர்ந்து குறிப்புகளுக்கு கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி.

Jaleela said...

சிங்க குட்டி வாங்க ரொம்ப சந்தோஷம் நீங்கள் பதில் தந்தது.

S.A. நவாஸுதீன் said...

Hi syednavas,

Congrats!

Your story titled 'மொகலாய் சிக்கன் கிரேவி' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 22nd October 2009 06:24:01 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/128041

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

************************************************

மிளகுக்கறி, தேங்காய்ப்பால் ரசம் நல்ல காம்பினேசன். ரொம்ப பிடிச்ச ஒன்னு. எண்ணெய கூட விடுரதில்லை.

லீவ் முடிஞ்சு வர்ரதுக்குள்ளே நீங்களே தமிழிஸ்ல போட்டாச்சா

Jaleela said...

நன்றி . ஆமாம் நேற்று வெளியில் போவதால் உங்களை போஸ்ட் செய்ய சொன்னேன்.

எனக்கு தமிலிழ் சம்மிட் செய்வது ஓட்டுபோடுவது ரொம்ப பிராப்ளமா இருக்கு , கணக்கிலடங்க வின்டோ ஓப்பன் ஆகி ரொம்ப படுத்துது

Jaleela said...

ஆமாம் நவாஸ் நாங்களும் மெளகு கறி செய்தால் ரசத்துக்கு தான் இரவு ரொட்டிக்கு,. ரொம்ப சூப்பரா இருக்கும்.

பாத்திமா ஜொஹ்ரா said...

அக்கா,மீண்டும்,மீண்டும் வந்து ஒரு அசத்து அசத்துறீங்க.ஏற்கனவே சிலது தெரிஞ்சதா இருந்தாலும்,உங்க ரெசிப்பி தரம் தனி ரகம் தான்.

Jaleela said...

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி + சந்தோஷம் பாத்திமா.

ஹர்ஷினி அம்மா said...

ஜலீலா அக்கா திரும்பவும் தொடர்ந்து நல்ல நல்ல குறிப்புகளை தர ஆரம்பிச்சுடீங்க ...வாழ்த்துகள் அக்கா

Kavi.S said...

ஜலீலக்கா... இந்த சனிக்கிழமை மிளகு மட்டன் கிரேவி செய்தேன்,கூட உங்க ஸ்பெஷல் பிரியாணியோட சும்மா சூப்பரா காரமா இருந்தது,அஷ்..புஷ்னு சாப்பிட்டோம்:)

Jaleela said...

நன்றி ஹர்ஷினி அம்மா

Jaleela said...

கவி செய்து பார்த்து தவறாமல் இங்கு வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி கவி.

அன்னு said...

ஸலாம் அலைக்கும் ஜலீலாக்கா,

இந்த மட்டன் கிரேவி ரொம்ப நல்லா இருந்துச்சு. மதியம் செஞ்சது. சாப்பாடுக்கும் சப்பாத்திக்கும் தொட்டுக்க ரொம்ப நல்லா இருக்கு. நான் தேங்கா சேத்தலை. எங்க வூட்டுக்காரருக்கு தேங்கா சேர்த்தியிருக்குன்னாலே உள்ள எறங்காது. ஆனா, இது காரம் ஒன்னும் அவ்வளவா தெரியலை. ரொம்ப நல்லா இருந்தது. என்ற வாலும் மத்தன் மத்தன்னு கேட்டு கேட்டு சாப்பிட்டிச்சு. தேங்க்ஸ்க்கா.

வ ஸலாம்.

Jaleela Kamal said...

அன்னு இந்த பதிலை இப்ப தான் பார்த்தேன்

என் சமையலில் காரம் கம்மியாக தான் இருக்கும்.

செய்து பார்த்து பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க ந்னறி

உங்கள் வீட்டு வாலுக்கு பிடித்திருந்தது குறீத்து ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

அன்னு said...

ஜலீலாக்கா,

நேற்று இதை செய்தேன். எங்கம்மாவும் இதை செய்வார்கள், சிறு சிறு அளவில் தேங்காயை வெட்டிப் போடுவார்கள் இதனுள். மட்டனை விட கிரேவியில் ஊறிய தேங்காய் துண்டுகளுக்குதான் அடிதடி நடக்கும் வீட்டில். சூப்பர் டேஸ்ட். ஒரியாக்காரர், ஜலீலாக்காவிற்கு தேன்க்ஸ் சொல்லிவிடு என்று சொல்லிக்கொண்டே சாப்பிட்டார் :))

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா