Sunday, December 19, 2010

பழைய சாதத்துடன் அப்பாவை பற்றிய பழைய ஞாபகங்களும்.

இது என் 500 வது பதிவு,என் பதிவுகளை தவறாமல் படித்து பதில் அளித்து ஓட்டு போடும் பதிவுலக தோழ தோழியர்களுக்கும் மிக்க நன்றி.






பழைய சாதத்துடன் அப்பாவை பற்றிய பழைய ஞாபகங்களும்.


அப்பாக்கள் என்றுமே கிரேட் அப்பாக்கள் தான், அவர்கள் நமக்கு செய்ய்ம் ஓவ்வொரு விஷியமும் நினைத்து பார்த்தால் அனைத்தும் மிக அருமையான கனாக்காலம் தான்

அந்த காலத்தில் (அவ்வையார் பாட்டி காலம் இல்லை) சின்ன வயதில் , ஞாயிற்று கிழமைகளில் ஆகா அருமையாக ரேடியோவில் முகம்மது ரஃபி பாடல் கேட்டு கொண்டே





எல்லோரும் சேர்ந்து பழைய சாதமும், தொட்டுக்க நாலனா மசால் வடைசாப்பிட அருமையோ அருமை ஆனந்தமோ ஆனந்தம்.





அதுவும் எங்க எங்க அப்பா தான் எல்லோருக்கும் காலையில் இதை செய்து கொடுப்பது.

எப்படி செய்வது

மீதியான சாதம்
வெங்காயம்
பச்சமிளகாய்
மோர் (அ) தயிர்
கொத்துமல்லி தழை
உப்பு


//இரவே மீதியான சாதத்தை ஊற வைத்து அதை காலையில் நன்கு பிசைந்து அதில் வெங்காயம் பச்சமிளகாய் பொடியாக அரிந்து சேர்த்து மோர் (அ) தயிர் மற்றும் உப்பு, கொத்துமல்லி தழை நறுக்கி போட்டு தொட்டுக்க நாலனா மசால் வடை நான் போய் வாங்கி வருவேன்.இல்லை நார்த்தங்காய் ஊறுகாய்.//







தீபாவளி அப்ப எல்லாரும் வெளியில் வெடிக்கும் சங்கு சக்கரம், புஸ்பான், ராக்கெட் , சரவெடி எல்லாத்தையும் வேடிக்கை பார்ப்போம், உடனே மத்தாப்பு சுர் சுர் கம்பி வாங்கி வந்து வீட்டுல எல்லா லைட்டையும் ஆஃப் செய்து விட்டுஅரிக்கன் லைட், மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் தங்கைகளுடன் கொளுத்தி மகிழ்வோம். ரொம்ப அருமையான் கனாக்காலம.

/



சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும், என்பது போல் ”பானு சில்க் பேலஸ்”எங்கேன்னு கேட்டா சுற்று வட்டாரத்தில் அனைவருக்கும் தெரியும். பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன், எங்கு வந்து வெளியூரில் இருந்து வந்து இரங்கி ”பானு சில்க் பேலஸ்” எங்கே ந்னு கேட்டா எல்லோரும் வழி காண்பிப்பார்கள், அந்த அளவுக்கு பேமஸ்.










ரேடியோ படம் சிங்கக்குட்டி பதிவில் இருந்து சுட்டது , நன்றி சிங்கக்குட்டி.







ஞாயிற்று கிழமைகளில் மதியம் சாப்பிட்டு முடித்ததும் எல்லோரும் சேர்ந்து
வானொலியில் நாடகம் கேட்டு கொண்டே கேரம் ஆடுவது ரொம்ப நல்ல இருக்கும்.





எப்பவும் எங்கும் எப்ப லேட்டா வந்தாலும் ஜலி ஜலீ என்று சொல்லி தான் கதவை தட்டுவார், அம்மா கோச்சுக்குவாங்க ஆமாம் ஜலியா வந்து கதவை திறக்கிறாள் என்பார்கள்.

இப்பவும் எப்ப போன் செய்தாலும் மனக்கழ்டமா இருந்தால் ஒன்றும் கவலை படக்கூடாது தைரியமா இருக்கனும், அனாவஷிய செலவு செய்ய கூடாது. அது அது நடப்பது தானா நடக்கும் என்பார்.அவர் சொல்லும் போதே பாதி கவலை போன மாதிரி ஆகிடும்.

ஆச்சு 35 வருடம் கடையிலேயே இருந்து அண்ணன் தம்பி எல்லோரையும் கவனித்து, அக்கா தங்கைகள் , அவர்கள் பிள்ளைகள்,பேத்திகள் வரை உதவி, நாங்க தலை எடுக்கும் போது கையில் ஒன்றும் இல்லை, பிறகு பத்து வருடகாலமாக நீச்சல் அடித்து பிறகு சவுதி சென்று சம்பாதித்து எல்லோரையும் கரை சேர்த்தார் . பிறகு அங்கேயே ஸ்டோரில் எண்ணை தடுக்கி விழுந்து கால் நடக்க முடியாம ஆப்ரேஷன் செய்து பிற்கு பணி தொடர முடியாமல் ஊருடன் வந்துவிட்டார்.




அப்பா எங்கு சென்றாலும் நடந்து தான் போவார் அவர் கூட் நடக்கனும் என்றால் நாங்க கூட் ஓடதான் செய்யனும் அப்படி ஒரு ஸ்பீட்.நானும் இங்கு வந்ததிலிருந்து இங்கு சம்பாத்தித்து முடிந்த வரை அப்பாவிற்கு உத்வினேன், அதில் என்க்கு மிக மனதிருப்தி.

கால் ஆப்ரேஷனில் இருந்து இப்ப வேகமாக நடப்பது சற்று சிரமம் தான்.
ரொம்ப கவலையாக இருக்கும் இங்கிருந்து போன் செய்தாலே டாடி கால் வலி இல்லாம இருக்கா பாத்ரூம் போனா பாத்து கால வையுங்கோ. படி இறங்கும் போது அவசர பட வேண்டாம், மெதுவா இரங்குங்கள் மழை பெய்தால் வெளியில் போகும் போது ஒழுங்கான செருப்ப போட்டு கொண்டு போங்க டாடி. போன் வந்த அவசரமா ஓடி வரவேண்டாம் என்று சொல்வேன்.



சின்ன வயதில் கூட இருந்ததோடு சரி அதற்கு பிறகு இது வரை பிரிந்து தான் இருக்கிறோம். படிக்கும் காலத்தில் பொருள் ஈட்ட பிரிந்து இருந்தார், கல்யாணம் ஆகி நாங்களும் சிறிதுகாலத்தில் பிரிந்தாச்சு. அப்ப வெக்கேஷன் லீவில் பார்ப்பதோடு சரி, ஆனால் முன்பு அடிக்கடி போன் செய்ய முடியாது. சவுதியில் இருக்கும் போது தனியா இருக்கிறாரே என்று அடிக்கடி போன் செய்து விசாரித்து கொண்டே இருப்பேன். இப்பவும் தோன்றூம் போதெல்லாம் பேசுவேன்.




அப்பாக்கள் என்றுமே கிரேட் தான் அவர்களை பற்றி சொல்லனுமுன்னா சொல்லி கொண்டே இருக்கலாம்.







///அப்பாக்களை பற்றி சுவரசியமான மறக்க முடியாதவை நிறைய வே இருக்கும் நீங்கள் இந்த பதிவை படிப்பவர்கள் தொடர நினைத்தால் தொடரலாம்///









இந்த பதிவில் சேகர் அவர்கள் பழைய சாதத்தை பற்றி அருமையா சொல்லி உள்ளார் பருங்கள்
தோழி ஆசியா அன்பாக விருதுகள். மிக்க நன்றி ஆசியா.

விருது களுக்கு மிக்க நன்றி ஆசியா/



எல்லோரும் வாங்கி விட்டார்கள் யாருக்கு கொடுப்பத்து. யோசிக்கிறேன்.இதற்கு தனியாக பதிவு போடனும், முடிந்த போது போடுகிறேன்.










இது என் 500 வது பதிவு

இந்தாங்க எல்லோரும் கேக் எடுத்து கொள்ளுங்கள்

இங்கு இவ்வளவு தூரம் வருகை தந்து என் பதிவுக்கென்று நேரம் ஒதுக்கி படித்து கமெண்ட் அளித்த அனைத்து பதிவுலக தோழ தோழியர்களுக்கு மிக்க நன்றி,



தொடர்ந்து முடிந்த போது வந்து உங்கள் அன்பான கருத்துக்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.








டிஸ்கி:
500 வது பதிவு என்ன போடலாம் என்று யோசித்து கடைசியில் அப்பாவை பற்றி எழுதலாம் என்று தோன்றியது. டிசம்பரில் தான் அவருக்கு பிறந்த நாளும், இந்த மாத ஆரம்பத்திலிருந்து என்னேரமும் அவர் நினைப்பு தான்.நேற்று அவர் மட்டும் விட்டில் இருந்தார் , அம்மா வெளியில் போயிருந்தாங்க. தனியா இருப்பதால் நான் போன் செய்யவும் அப்படி பழைய கதைய பேசி கொண்டு இருந்தார், ரொம்ப நல்ல இருந்தது. அதான் அப்படியே அவரை பற்றி பதிவில் போட்டு விட்டேன்.


64 கருத்துகள்:

எல் கே said...

வாழ்த்துக்கள் சகோ.. அனைத்து தந்தைகளும் ஒவ்வொருவிதத்தில் சிறந்தவர்கள்தான்

Geetha6 said...

அப்பாக்கள் என்றுமே கிரேட் தான்
yes ..it is true.

ரஜின் said...

ஸலாம்,ஜலீலாக்கா...அப்பாவை பற்றிய தங்களின் நினைவுக்குறிப்புகளும்,அதை தொகுத்த விதமும்,உங்களது உள்ளக்கிடக்கை உணரச்செய்கிறது...

பலரும் அவர்களது அருமையை அவர்கள் இருக்கும் வரை உணர்வதே இல்லை.

அன்புடன்
ரஜின்

Chitra said...

அக்கா, உங்களது பதிவுலகில் மைல் கல்லாக உள்ள 500 வது பதிவில் அப்பாவை பற்றி எழுதி அசத்தி விட்டீர்கள். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும், அக்கா!

மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

மாதேவி said...

500 க்கு வாழ்த்துக்கள் ஜலீலா.

மேலும் வாழ்த்துக்களும் வெற்றிகளும் தொடரட்டும்.

அப்பாவிடம் எனது வாழ்த்தையும் கூறுங்கள்.

அந்நியன் 2 said...

Arumaiyaana Padhivu ellame padikka nallaa irukku. 500 padhivu itadhukku vaazhththukkal. Tamizh Font work aavudhulai rompa naalaa try pandren blog lock panni irundhuchchu.mail ellaam return varudhu.

ஸ்ரீராம். said...

ஐநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். அவரவர் அப்பாக்கள் எல்லோருக்குமே கிரேட்தான்...குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு அப்பா மேல் இருக்கும் பாசம் தனி. பழைய சாதம் ரெசிப்பி நாங்கள் கூட எங்கள் சின்ன வயதில் தஞ்சையில் சாப்பிட்ட ஞாபகம் வந்தது. ரங்காவளியில் ரஃபி, கிஷோர் பாட்டு...ஆஹா தான். நல்ல பதிவு.

Kurinji said...

Congrats!!!
appakkal endrume gr8!
Kurinji

Asiya Omar said...

ஜலீலா உங்க அப்பாவை பற்றி எழுதி உங்களின் 500 வது பதிவிற்கு அன்பு மகுடம் சூட்டி விட்டீர்கள்.
அருமை.வாழ்த்துக்கள்.தொடர்ந்து வெற்றியுடன் வலம் வர வாழ்த்துக்கள்.

Angel said...

congrats jaleela for the 500 .
DAD s are great . all the daughters are daddys girls.
give my hearty birthday wishes to your dad.

Nithu Bala said...

Thangaludaya 500 pathivukku vazhthukal. appa patriya katurai arumai..nice Dad:-)

ungal pathivukalin updates ethum en reading list-il update varuvathu illai..athanal thaan unkal blog pakkam varavillai:-)

Jaleela Kamal said...

நன்றி எல் கே, ஆம் எல்லா அப்பாக்களும் ஓவ்வொரு விதத்தில் சிறந்தவர்கள் தான், உண்மை

சைவகொத்துப்பரோட்டா said...

நெகிழ வைத்து விட்டீர்கள், எளிமையான எழுத்து நடை. 500 க்கு வாழ்த்துக்கள். உங்கள் தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

ஜலி,உங்கள் அப்பாவைப்பற்றிய நினைவலைகள் என் தந்தயின் ஞாபகத்தைத்தூண்டி கண்களில் நீர் வரவழைத்து விட்டது.உண்மையில் படிப்பதற்கு நெகிழ்ச்சியாக இருந்தது.

ஸாதிகா said...

500 க்கு அன்பு வாழ்த்துக்கள்.விரைவில் ஆயிரம் தொட மனதார வாழ்த்துகின்றேன்.

அந்நியன் 2 said...

நீங்களாவது அப்பாவை ஜிப்பா போட்டு அழகு பார்க்கிறியே வாழ்த்துக்கள்.

நிறையாப் பேரு மப்பா வந்து அப்பாவை காலால் எட்டி உதைக்கும் கன்றாவியும் நடக்கத்தான் செய்யுது,இன்று முதியோர் இல்லங்களில் காணக்கிடக்கும் சில அப்பாமார்களை கண்டாலே கண்ணீர்தான் வருகிறது காரணம் நாம் சிறிய வயதில் மழலையில் கொஞ்சிப் பேசும்போது காது கொடுத்து கேட்க்கும் ஒரே ஜீவன் அப்பாதான்,அப்படிப் பட்ட அப்பாக்கள் அனாதையாக கேட்ப்பாரின்றி நாதியற்று கிடக்கும் காட்சி மனதை குமுற வைத்தாலும் இன்றைய கால கட்டத்தில் அப்பாவை நினைவு கூர்ந்த நீங்கள் வாழ்த்துக்குரியவர்கள்.

வாழ்க பல்லாண்டு !

Unknown said...

hearty congratulations..........

Vaitheki said...

உண்மை தாங்க அப்பாவுக்கு ஈடு இணை இந்த உலகில் யாருமே இல்லைங்க.உங்கள் 500௦௦ வது பதிவுக்கு என் இனிய வாழ்த்துக்கள்!

சாருஸ்ரீராஜ் said...

500ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள் ஜலீலாக்கா. பெண்கள் அனைவருக்குமே அப்பானா ஒரு தனி பாசம் தான்.

ஜெய்லானி said...

500 இதுக்கு பின்னால் இன்னும் ஐந்து முட்டைகள்)சைபர்கள் வர அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..!!

ஜெய்லானி said...

இதை படிக்கும் போது நிறைய நினைவுகளை கண் முன்னே கொண்டு வந்துட்டீங்க..!!

பிறந்த நாள் , நினைவுகள் , 500வது பதிவு வாழ்த்துக்கள் மற்றும் துவா வுடன் :-)

ஹுஸைனம்மா said...

வாப்பாவைப் பற்றி உங்களின் 500வது பதிவில் குறிப்பிட்டது, உங்களின் வளர்ச்சியில் பெற்றோரை மறக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. மகிழ்ச்சி & பாராட்டுகள்.

மறக்காம இதுலயும் ஒரு சமையல் குறிப்பைக் கொடுத்துட்டீங்க பாருங்க!! பழக்கதோஷம்?? :-))))))

Thenammai Lakshmanan said...

மிக அருமை ஜலீலா.. நெகிழ்ச்சியாக இருந்தது..

500 ., 50,000 ஆக வாழ்த்துக்கள்..

Kanchana Radhakrishnan said...

படிப்பதற்கு நெகிழ்ச்சியாக இருந்தது.
.உங்கள் 500 வது பதிவுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.

சுந்தரா said...

ஐநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஜலீலா.

அப்பாவின் ஞாபகங்களை அழகாகப் பகிர்ந்திருக்கீங்க. எல்லோர் மனசும் நிச்சயம் சிறுவயசுநாட்களை நினைத்துப்பார்க்கும்.

R.Gopi said...

ஜலீலா அவர்களே...

500வது பதிவிற்கு முதற்கண் வாழ்த்துக்கள்... தாங்கள் இது போல் பல 500, 1000 பதிவுகள் எழுதிட மனமார வாழ்த்துகிறேன்...

அதிலும் இந்த ஸ்பெஷல் பதிவில், தந்தையாரை நினைவு கூர்ந்து பல விஷயங்களை விரிவாக எழுதியமை பாராட்டத்தக்கது...

பொதுவாகவே பெண்கள் அம்மாவை விட அப்பாவையே அதிகம் விரும்புவார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்... இது கரெக்டா?

pudugaithendral said...

அட நேத்துதான் நான் 700ஆவது பதிவு போட்டேன். நீங்க 500ஆ. சந்தோஷம். மனமார்ந்த வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

ஆமாம் கீதா கிரேட் அப்பாக்கள்
நன்றி கீதா


//ஸலாம்,ஜலீலாக்கா...அப்பாவை பற்றிய தங்களின் நினைவுக்குறிப்புகளும்,அதை தொகுத்த விதமும்,உங்களது உள்ளக்கிடக்கை உணரச்செய்கிறது...

பலரும் அவர்களது அருமையை அவர்கள் இருக்கும் வரை உணர்வதே இல்லை.//


வா அலைக்கும் அஸ்ஸலாம் ரஜின் என்ன செய்ய சில பேர் அப்படி இருக்கிறார்கள்.

Jaleela Kamal said...

Chitra said...
//அக்கா, உங்களது பதிவுலகில் மைல் கல்லாக உள்ள 500 வது பதிவில் அப்பாவை பற்றி எழுதி அசத்தி விட்டீர்கள். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும், அக்கா!

மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!//

சித்ரா வருகைக்கும் வாழ்த்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி சித்ரா

Jaleela Kamal said...

//500 க்கு வாழ்த்துக்கள் ஜலீலா.

மேலும் வாழ்த்துக்களும் வெற்றிகளும் தொடரட்டும்.

அப்பாவிடம் எனது வாழ்த்தையும் கூறுங்கள்//
வாங்க மாதேவி, வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி

கண்டிப்பாக சொல்லி விடுகிறேன்,

Jaleela Kamal said...

நன்றி அந்நியன் வாங்க வாழ்த்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
பாண்ட் வொர்க் ஆகையாலா?
ஏன்


http://samaiyalattakaasam.blogspot.com/2010/06/blog-post_10.html

இதில் நிரைய லிங்குகள் கொடுத்துள்ளேன் பாருங்கள்

Jaleela Kamal said...

//Kurinji said...
Congrats!!!
appakkal endrume gr8!
Kurinji//
மிக்க நன்றி குறிஞ்சி

Jaleela Kamal said...

asiya omar said...
ஜலீலா உங்க அப்பாவை பற்றி எழுதி உங்களின் 500 வது பதிவிற்கு அன்பு மகுடம் சூட்டி விட்டீர்கள்.
அருமை.வாழ்த்துக்கள்.தொடர்ந்து வெற்றியுடன் வலம் வர வாழ்த்துக்கள்///
உங்கள் தொடர் வருகைக்கும் அருமையான பாராட்டுக்கு மிக்க நன்றி + சந்தோஷம் ஆசியா.

Jaleela Kamal said...

// ஸ்ரீராம். said...
ஐநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். அவரவர் அப்பாக்கள் எல்லோருக்குமே கிரேட்தான்...குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு அப்பா மேல் இருக்கும் பாசம் தனி. பழைய சாதம் ரெசிப்பி நாங்கள் கூட எங்கள் சின்ன வயதில் தஞ்சையில் சாப்பிட்ட ஞாபகம் வந்தது. ரங்காவளியில் ரஃபி, கிஷோர் பாட்டு...ஆஹா தான். நல்ல பதிவு.

December 19, 2010 3:10 PM//

பெண்குழ்ந்தைகளுக்கு பாசம் அதிகம் தான்
ஸ்ரீராம் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

//angelin said...
congrats jaleela for the 500 .
DAD s are great . all the daughters are daddys girls.
give my hearty birthday wishes to your dad//

வாங்க ஏஞ்சலில் நிங்கள் சொல்வது மிகச்சரியே.
கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ஏஞ்சலின்

Jaleela Kamal said...

// Nithu Bala said...
Thangaludaya 500 pathivukku vazhthukal. appa patriya katurai arumai..nice Dad:-)

ungal pathivukalin updates ethum en reading list-il update varuvathu illai..athanal thaan unkal blog pakkam varavillai:-)//
நீத்து வாழ்த்துக்கு மிக்க நன்றி

பிலாக் பெயரை மாற்றியதிலிருந்து நிரைய பேருக்கு என் பதிவு அப்டேட் ஆகல,

Jaleela Kamal said...

//சைவகொத்துப்பரோட்டா said...
நெகிழ வைத்து விட்டீர்கள், எளிமையான எழுத்து நடை. 500 க்கு வாழ்த்துக்கள். உங்கள் தந்தைக்கு பிறந்த நாள் //
வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றீ சை.கொ ப.
பாராட்டுக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

//ஸாதிகா said...
ஜலி,உங்கள் அப்பாவைப்பற்றிய நினைவலைகள் என் தந்தயின் ஞாபகத்தைத்தூண்டி கண்களில் நீர் வரவழைத்து விட்டது.உண்மையில் படிப்பதற்கு நெகிழ்ச்சியாக இருந்தது.//

ஸாதிகா அக்கா தினம் தினம் பெற்றோரை நினைத்தாலும், இது போல சில் விஷியங்கலை சொல்லும் போதுஎல்லோருக்கும் இன்னும் நினைகக் தோனும்

தொடர் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

/அந்நியன் 2 said...
நீங்களாவது அப்பாவை ஜிப்பா போட்டு அழகு பார்க்கிறியே வாழ்த்துக்கள்.

நிறையாப் பேரு மப்பா வந்து அப்பாவை காலால் எட்டி உதைக்கும் கன்றாவியும் நடக்கத்தான் செய்யுது,இன்று முதியோர் இல்லங்களில் காணக்கிடக்கும் சில அப்பாமார்களை கண்டாலே கண்ணீர்தான் வருகிறது காரணம் நாம் சிறிய வயதில் மழலையில் கொஞ்சிப் பேசும்போது காது கொடுத்து கேட்க்கும் ஒரே ஜீவன் அப்பாதான்,அப்படிப் பட்ட அப்பாக்கள் அனாதையாக கேட்ப்பாரின்றி நாதியற்று கிடக்கும் காட்சி மனதை குமுற வைத்தாலும் இன்றைய கால கட்டத்தில் அப்பாவை நினைவு கூர்ந்த நீங்கள் வாழ்த்துக்குரியவர்கள்.//

அந்நியன், பாண்ட் இப்ப்ப ஒகே வா.

என்ன செய்வது சில இடத்தில் இது போல் கேள்வி படும் போது ரொம்ப மனக்குமுறலாக தான் இருக்கும்.


வாழ்க பல்லாண்டு !

December 19, 2010 8:48 PM

Jaleela Kamal said...

//savitha ramesh said...
hearty congratulations..........

December 19, 2010 8:56 PM//

சவிதா வாங்க வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

S பாரதி வைதேகி said...
உண்மை தாங்க அப்பாவுக்கு ஈடு இணை இந்த உலகில் யாருமே இல்லைங்க.உங்கள் 500௦௦ வது பதிவுக்கு என் இனிய வாழ்த்துக்கள்!

December 20, 2010 12:23 AM

பாரதி வைதேகி வாங்க உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க ந்ன்றி

Jaleela Kamal said...

//சாருஸ்ரீராஜ் said...
500ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள் ஜலீலாக்கா. பெண்கள் அனைவருக்குமே அப்பானா ஒரு தனி பாசம் தான்.

December 20, 2010 10:43 AM//

சாரு ஆமாம் பெண்கலுக்கு அப்பா என்றால் தனி பாசம் தான்

Jaleela Kamal said...

ஜெய்லானி said...
500 இதுக்கு பின்னால் இன்னும் ஐந்து முட்டைகள்)சைபர்கள் வர அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..!!

December 20, 2010 11:39 AM

//
ஜெய்லானி said...
இதை படிக்கும் போது நிறைய நினைவுகளை கண் முன்னே கொண்டு வந்துட்டீங்க..!!

பிறந்த நாள் , நினைவுகள் , 500வது பதிவு வாழ்த்துக்கள் மற்றும் துவா வுடன் :-)

December 20, 2010 11:42 AM//
\

ஜெய்லானி என்ன 5 சைபரா, நானே பிலாக் எழுதுரத நிறுத்தலாமுன்னு இருக்கேன்,

உங்கள் துஆவுக்கு, பாராட்டுக்கு, தொடர் வ்ருகைக்கும், வாழ்த்திற்கு மிக்க ந்னறி

Jaleela Kamal said...

//ஹுஸைனம்மா said...
வாப்பாவைப் பற்றி உங்களின் 500வது பதிவில் குறிப்பிட்டது, உங்களின் வளர்ச்சியில் பெற்றோரை மறக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. மகிழ்ச்சி & பாராட்டுகள்.

மறக்காம இதுலயும் ஒரு சமையல் குறிப்பைக் கொடுத்துட்டீங்க பாருங்க!! பழக்கதோஷம்?? :-))))))

December 20, 2010 11:57 AM//
ஹுஸைனாம்மா என்றுமே மறக்க முடியாது, அவர்கலுக்கு வயசாக வயசாக இன்னும் பாசம் அதிகரிக்குது.

ஆமாம் பழக்கதோஷ்ம சமையல் குறிப்ப போட வைத்து விட்டது.

Jaleela Kamal said...

// தேனம்மை லெக்ஷ்மணன் said...
மிக அருமை ஜலீலா.. நெகிழ்ச்சியாக இருந்தது..

500 ., 50,000 ஆக வாழ்த்துக்கள்..

December 20, 2010 8:17 PM//

தேனக்கா வாங்க தேடி வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி
ரொம்ப சந்தோஷம்.

Jaleela Kamal said...

//Kanchana Radhakrishnan said...
படிப்பதற்கு நெகிழ்ச்சியாக இருந்தது.
.உங்கள் 500 வது பதிவுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.

December 20, 2010 8:31 PM//

வாங்க காஞ்சனா, உங்கள் தொடர் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

//சுந்தரா said...
ஐநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஜலீலா.

அப்பாவின் ஞாபகங்களை அழகாகப் பகிர்ந்திருக்கீங்க. எல்லோர் மனசும் நிச்சயம் சிறுவயசுநாட்களை நினைத்துப்பார்க்கும்.

December 20, 2010 11:21 PM//

சுந்தரா வாங்க தோழி, கண்டிப்பா எல்லாருடைய மனதும் அப்பாவுடன் கழித்த சிறு வயசு நாட்களை அசை போடும்.

நன்றி சுந்தரா.

Jaleela Kamal said...

// R.Gopi said...
ஜலீலா அவர்களே...

500வது பதிவிற்கு முதற்கண் வாழ்த்துக்கள்... தாங்கள் இது போல் பல 500, 1000 பதிவுகள் எழுதிட மனமார வாழ்த்துகிறேன்...

அதிலும் இந்த ஸ்பெஷல் பதிவில், தந்தையாரை நினைவு கூர்ந்து பல விஷயங்களை விரிவாக எழுதியமை பாராட்டத்தக்கது...

பொதுவாகவே பெண்கள் அம்மாவை விட அப்பாவையே அதிகம் விரும்புவார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்... இது கரெக்டா?

December 21, 2010 2:12 PM//

//கோபி உங்கள் அருமையான் வாழ்த்திற்கு மிக்க நன்றி


பெண்கள் பொதுவாக அம்மாவை விட அப்பாவை விரும்புவது.

அப்பா பெண்களை இன்னொருத்தர் வீட்டுக்கு போகிறவர்கள் என்று இருக்கும் வரை பாசத்தை கொட்டுவார்கள்.

அம்மா இன்னொருத்தர் வீட்டில் நல்ல பெயர் வாங்கனுமேன்னே பாசத்தை திட்டு கொட்டுவாகள்.//

ஆண்பிள்ளை கள் மேல் அப்பாக்கலுக்கு நிரைய பாசம் இருந்தாலும் கான்பிப்பதில்லை, படிக்காமால்கெட்டு போய் விடுவார்களோன்னு பயம். கம்பி முனையிலேயே தான் நிற்க வைப்பார்கள்.

ஆக மொத்தம் பாசம் எல்லோரின் மேலும் ஒன்று தான்

Jaleela Kamal said...

//புதுகைத் தென்றல் said...
அட நேத்துதான் நான் 700ஆவது பதிவு போட்டேன். நீங்க 500ஆ. சந்தோஷம். மனமார்ந்த வாழ்த்துக்கள்

December 21, 2010 4:30 PM//

வாங்க புதுகை தென்ற்ல் ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க.
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி
அடேங்கப்பா 700 பதிவுகளா?

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

வேலன். said...

முதலில் வாழ்த்துக்கள் சகோதரி...(நேரம் இல்லாமையால் பதிவுகளுக்கு சரியாக வரமுடியவில்லை. விரைவில் அனைத்தும் சரிசெய்துவிடுகின்றேன்.)வாழ்க வளமுடன்.
வேலன்.

Mahi said...

500-வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஜலீலாக்கா! இன்னும் ஆயிரக்கணக்கில் பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்!

இப்படி பதிவுகள் படிக்கும்போதுதான் என் இழப்பு தெரிகிறது.எனக்கு நினைவு தெரியுமுன்னே இறைவன் அவரை அழைத்துக்கொண்டுவிட்டான்.
இருந்திருந்தால் என் அப்பாவும் இப்படித்தான் இருந்திருப்பார்.

அருமையான நினைவுப்பகிர்வுகள்! உங்க வாப்பாவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மறக்காம சொல்லிடுங்க ஜலீலாக்கா!

Jaleela Kamal said...

வேலன் சார் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
பரவாயில்ல எப்ப முடியுதோ அப்ப வந்து கருத்து தெரிவியுங்கள்.

Jaleela Kamal said...

மகி உங்கள் வாழ்த்துக்குமிக்க நன்றி

//இப்படி பதிவுகள் படிக்கும்போதுதான் என் இழப்பு தெரிகிறது.எனக்கு நினைவு தெரியுமுன்னே இறைவன் அவரை அழைத்துக்கொண்டுவிட்டான்.
இருந்திருந்தால் என் அப்பாவும் இப்படித்தான் இருந்திருப்பார்.//


இத படிச்சிட்டு ரொம்ப மனசு கஷ்டமா போச்சு, உங்கள் வாழ்வில் அதற்கு ஈடான அன்பு உங்கள் கணவ்ர் மூலம் கிடைக்க பிராத்திக்கிறேன்.

உங்கள் வாழ்த்தையும் கண்டிப்பாக என் வாப்பாவிடம் தெரிவிக்கிறேன்.

Mahi said...

/உங்கள் வாழ்வில் அதற்கு ஈடான அன்பு உங்கள் கணவ்ர் மூலம் கிடைக்க பிராத்திக்கிறேன்./
உங்க அன்பான வார்த்தைகளுக்கு நன்றி!உங்க பிரார்த்தனை நிறைவேறிடுச்சு ஜலீலாக்கா!:)

ஒன்றை இழந்தால்தான் இன்னொன்று கிடைக்கும்னு சொல்லுவாங்க,அதுமாதிரி இப்போ என் கணவர் எல்லாமுமாய் இருக்கிறார்.இறைவனுக்கு நன்றி!

Vikis Kitchen said...

I was always with amma and never thought of appa, as he is always busy (advocate), due to lot of family burden:). Many a times I don't know how to talk with him. My hubby makes me talk more with my dad:) After reading your post only I recollect a lot of things about my appa. yes! appa is a hero and its a great post dear. Sugarcane chopping, nala ana masal vadai....wow! Your childhood is really sweet dear friend!Reminds me of mine too:) That too , school and house nearby....love it:)
My hearty wishes and prayers for appa to be healthy and happy always. Please convey him all our well wishes. Thanks.

அன்புடன் மலிக்கா said...

500 க்கு வாழ்த்துக்கள் ஜலீலாக்கா.

மேலும் வாழ்த்துக்களும் வெற்றிகளும் தொடரட்டும்.

வரயிலவில்லை அதான் லேட்ட சொல்கிறேன்க்கா..

வாப்பாவின் நினைவுகள் நெஞ்சுக்குள் வந்து செல்கிறது வருத்ததுடன்..

தாங்களின் வாப்பாவுக்கும் வாழ்த்துக்கள்..

Ramya said...

5-வது centuryக்கு வாழ்த்துக்கள் ஜலீலா அக்கா. எல்லா பெண் பிள்ளைகளுமே அப்பாக்களின் செல்லங்கள். உங்களுடைய இந்த பதிவை படிக்கும் போது எனது அப்பாவின் நியாபகம் வந்து கண்ணீர் வந்து விட்டது.

Krishnaveni said...

Many congrats madam, looks like you are dad's chellam, nice write up about your lovely dad

R.Gopi said...

அருமையான விளக்கத்திற்கு நன்றி ஜலீலா...

அதுவும் முத்தாய்ப்பாக இப்படி சொல்லி முடித்தது ரொம்ப நன்றாக இருந்தது...

//ஆக மொத்தம் பாசம் எல்லோரின் மேலும் ஒன்று தான்//

வாழ்த்துக்கள்... நீங்க வாழ்க்கையில ரொம்ப பக்குவப்பட்டுட்டீங்க...

Vikis Kitchen said...

ரொம்ப அருமையா எழுதிருக்கேங்க. . பழைய சாதம் எங்கள் வீட்டிலும் இப்படி தான் செய்வோம்:) இந்த பதிவுக்கு பதில் எழுதும் பொழுது என்னால் தமிழில் எழுத கூட பொறுமை இல்லை....உடனே என் அப்பாவிடம் போன் செய்து பேசினேன்:) தங்கள் அப்பா எப்போதும் நலமுடன் மகிழ்ச்சியாக வாழ பிரார்த்திக்கிறேன். குடும்பத்தார் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

மீண்டும் இந்தப் பகிர்வை கண்ணீருடன் வாசித்தேன்..மனதை தொட்ட மறக்க முடியாத பகிர்வு..

Unknown said...

Assalamu alaikum.....இதை படிக்கும் போது நிறைய நினைவுகளை கண் முன்னே கொண்டு வந்துட்டீங்க..!!

கதம்ப உணர்வுகள் said...

தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
அன்பு வாழ்த்துகள்.

மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள இணைப்பைச் சொடுக்கவும் நன்றி.

வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_15.html

வல்லிசிம்ஹன் said...

அனபு ஜலீ,அப்பா என்றுமே நலமுடனே இருக்கணும்பபா.அருமையான 500 ஆவது பதிவறகும மனம நிறைந்த வாழத்துகளப்பா

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா