Tuesday, December 21, 2010

மின்ட் புலாவ் - mint pulao



புத்துணர்வு தரும் புதினா, துவையல் சாப்பிட்டாலே அருமையாக இருக்கும் அதுவே சாதமாக என்றால் ஒரே மணம் தான்.சும்மா கும்முன்னு இருக்கும்.
பாசுமதி அரிசி – 200 கிராம்
1. வறுத்து பொடிக்க
மிளகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
பட்டை – ஒரு சின்ன துண்டு
பிரியாணி இலை – இரண்டு
கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
2. வதக்கி அரைக்க
பட்டர் (அ) நெய் – ஒரு ஸ்பூன்
புதினா – 1 பன்ச்
வெங்காயம் – 1
பூண்டு – 4 பல்
3. தாளிக்க
எண்ணை + பட்டர் – ஒரு ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
வெங்காயம் – பொடியாக அரிந்த்து ஒரு மேசை கரண்டி
செய்முறை
1. அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும். வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை வறுத்து பொடிக்கவும்.
2. வதக்கி அரைக்க வேண்டியவைகளை வதக்கி அதனுடன் பொடித்த பொடியையும் கலக்கவும்.
3. குக்கரில் எண்ணை + பட்டர் சேர்த்து கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
4. அரைத்த கலவையை சேர்த்து தேவைக்கு உப்பு போட்டு அரிசி ஒரு பங்குக்கு ஒன்னறை அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இரக்கவும்.
சுவையான மனமான மின்ட் புலாவ் ரெடி

41 கருத்துகள்:

Gayathri Kumar said...

Looks so colourful and tasty..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

1.வாசனை
2.சத்து
3.சுவை
மூன்றும் நிறைந்த புலாவ் நிச்சயம் அனைவருக்கும்
பிடிக்கும் என நம்புகிறேன். வாழ்த்துக்கள்!

Kurinji said...

Looks so tempting to try it immediately...
Kurinji

ஆமினா said...

வித்தியாசமான குறிப்பு அக்கா

Mahi said...

அப்படியே சாப்பிடலாம் போல இருக்கு மின்ட்-புலாவ்!

ஸ்ரீராம். said...

சுவையான மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட. நன்றி.

Asiya Omar said...

நல்லாயிருக்கு ஜலீலா.

மங்குனி அமைச்சர் said...

எண்ணை + பட்டர்////

மேடம் நானும் எல்லா கடையிலும் கேட்டுப் பாத்துட்டேன் , எண்ணை இருக்கு , பட்டார் இருக்கு ஆனா இந்த "+" மட்டும் எங்கையும் கிடைக்கல ....... உங்க ஊருல இருந்தா கொஞ்சம் வாங்கி அனுப்புங்களேன்

Jaleela Kamal said...

// மங்குனி அமைச்சர் said...
எண்ணை + பட்டர்////

மேடம் நானும் எல்லா கடையிலும் கேட்டுப் பாத்துட்டேன் , எண்ணை இருக்கு , பட்டார் இருக்கு ஆனா இந்த "+" மட்டும் எங்கையும் கிடைக்கல ....... உங்க ஊருல இருந்தா கொஞ்சம் வாங்கி அனுப்புங்களேன்

December 22, 2010 12:40 PM//

அமைச்சரே சாப்பிட மட்டுமே தெரிந்த உஙக்ளுக்கு இத பற்றி ஒன்னுயோ தெரியாது.

இது வடிவேலு செயிலுக்குள்ள இருக்கும் போது “அண்ணே எல்லா மார்கெட்டும் போய் பார்த்துடேன்.

எல்லா மீனும் இருக்கான் ஆனா நீங்க கேட்ட ஜாமீனு மட்டும் இல்லையான்னே அந்த கதையா இல்ல இருக்கு,

(+) க்கு உங்க்ள் வூட்டு கிச்சனில் போய் நீர் முட்டி கொள்ளும்

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி காயத்ரி

Jaleela Kamal said...

நிஜாமுதீன் வாங்க வருகைக்கு மிக்க நன்றி அருமையாக ருசித்து கமெண்ட் போட்டார் போல இருக்கு

Jaleela Kamal said...

வருகைக்கு நன்றி குறிஞ்சி

Jaleela Kamal said...

ஆமீனா ஆமாம் புதினா சாதம் செய்யனும் ஆனால் என் இஷ்டப்படி தான் பொருட்களை சேர்க்கனும் என்று இப்படி செய்தேன்

Jaleela Kamal said...

//Mahi said...
அப்படியே சாப்பிடலாம் போல இருக்கு மின்ட்-புலாவ்!

December 22, 2010 4:38 AM//

அடிக்கடி செய்ய தூண்டும், மறுபடி செய்ய பிரெஷ் புதினாவுக்காக வெயிட்டிங், வாங்கிய புதினாவ இன்று குஸ்காவுக்கு சட்னி பண்ணியாச்சு/.

வருகைக்கு மிக்க நன்றி மகி

Jaleela Kamal said...

ஸ்ரீராம் உஙக்ள் தொடர் வருகைக்கு மிக்க ந்ன்றி.ஆமாம் நீங்கள் சொல்வது போல் ஆரோக்கியமான சுவையான சாதம், மிக புத்துணர்வு அளிக்கும்

Jaleela Kamal said...

// asiya omar said...
நல்லாயிருக்கு ஜலீலா.

December 22, 2010 9:58 AM//

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ஆசியா

ஸாதிகா said...

ஆஹா..ஜலி அருமையான சதக்குறிப்பு.நல்ல சத்தானது, மணம் மிக்கதும் கூட.படமும் அழகாக வந்திருக்கு.

ஹுஸைனம்மா said...

மிளகு, சீரகம், க/உ பருப்பு போட்டு புலாவா!! புதுசா இருக்கு; செஞ்சுப் பாக்கணும்.

vanathy said...

சூப்பரா இருக்கு. படத்தில் காப்பி ரைட்ன்னு போட்டு சூப்பர் ஐடியா போங்கள்.

வேலன். said...

அட அட்டகாசமா செய்திடவேண்டியதுதான்.
படமும் பதிவும் அருமை சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

படமும் அருமை..பதிவும் அருமை...வீட்டுக்காரம்மாவிடம் சொல்லி செய்யசொல்லிட வேண்டியதுதான்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

RAZIN ABDUL RAHMAN said...

ஜலீலாக்கா..புதினா புலாவ்..செய்முறை அருமை..இன்ஷா அல்லாஹ் ஒருநாள் ரூம்ல ட்ரையல் பாத்துரவேண்டியதுதா,
ஆனா நம்ம பசங்க நா எது செஞ்சாலும் நல்லா இருக்குன்னு சொல்லிர்வாங்க...
நா கொஞ்சம் சமயல் பிரியன்..எல்லா உங்களமாதிரி எக்ஸ்பர்ட்ஸோட உபயத்துனால,...தேத்தி ஓட்டிட்டு இருக்கேன்..நம்ம பசங்கல்லா இந்த ப்ளாக் வாடையே இல்லாதவங்க...நா எழுதுரதையே ஆகா ஓகோம்பாங்க...
எல்லா ஐட்டமும் ஓக்கே..

கடலை "பருத்து" எங்கக்கா கெடைக்கும்...(just kidding.)
திருத்தீர்ங்க...

வஸ்ஸலாம்...

Mahi said...

ஜலீலாக்கா,இந்த அவார்டை பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
Be prepared!! :))))))

http://mahikitchen.blogspot.com/2010/12/blog-post_22.html

Angel said...

jaleela
mint pulau super .tasty and healthy too .

Anonymous said...

my fav dish thanks for sharing

Anonymous said...

i love ur blog and asiyaomar blog. u people are inspiring me to start blog i will post my recipes soon...

Nithu Bala said...

arumayana pulav:-)

Jaleela Kamal said...

//ஸாதிகா said...
ஆஹா..ஜலி அருமையான சதக்குறிப்பு.நல்ல சத்தானது, மணம் மிக்கதும் கூட.படமும் அழகாக வந்திருக்கு.
//
ஆமாம் ஸாதிகா அக்கா போட்டோ சூப்ப்பராக வந்தது , ரெசிபியும் மிக அருமை.
ஆனால் பதிவில் போட தான் லேட் ஆகிவிட்டது, தொடர் வருகைக்கு மிக்க ந்ன்றி ஸாதிகா அக்கா.

Jaleela Kamal said...

//ஹுஸைனம்மா said...
மிளகு, சீரகம், க/உ பருப்பு போட்டு புலாவா!! புதுசா இருக்கு; செஞ்சுப் பாக்கணும்.
//

ஹுஸைனாம்மா சும்ம தோன்றும் விதத்தில் ஏதாவது ஆட் செய்து செய்வேன் அது நல்ல வந்தால் உடனே புது ரெசிபி, இது வரை முயற்சித்து எதுவும் ஃபெயிலியர் ஆகல.

Jaleela Kamal said...

vanathy said...
சூப்பரா இருக்கு. படத்தில் காப்பி ரைட்ன்னு போட்டு சூப்பர் ஐடியா போங்கள்


என்ன செய்வது வனதி இப்படி போட்டலாவது காப்பி செய்யாமல் இருக்காஙக்ளான்னு பார்க்கலாம்/

Jaleela Kamal said...

//வேலன். said...
படமும் அருமை..பதிவும் அருமை...வீட்டுக்காரம்மாவிடம் சொல்லி செய்யசொல்லிட வேண்டியதுதான்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
//

வேலன் சார் வருகை தந்தமைக்கு மிக்க நன்றி, கண்டிப்பாக உங்கள் வீட்டு காராமா கிட்ட சொல்லி செய்ய சொல்லுங்கள்.

Jaleela Kamal said...

ரஜின் அப்துல் ரஹ்மான் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி

கடலை பருப்ப்பு தவற்றை சுட்டி காண்பித்தமைக்கு மிக்க நன்றி /

உங்கள் ரூமில் நீங்கள் தான் சமைக்கிறார்கள் அப்ப நீங்க என்னை விட பெரிய எக்ஸ்பேட் தான்.
அது சரிதான் சமைக்க தெரியாத பேச்சிலர்களுக்கு நீங்கள் வெரும் ரசம் வைத்தாலே தேவாமிர்தம் தான்.

Jaleela Kamal said...

Mahi said...
ஜலீலாக்கா,இந்த அவார்டை பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
Be prepared!! :))))))

http://mahikitchen.blogspot.com/2010/12/blog-post_22.ht
மகி உஙக்ள் அன்புக்கும் அவார்டுக்கும் மிக்க நன்றி,
தொடர் பதிவா எழுத நாளாகும்//
ஏற்கன்வெ நிறைய தொடர் பதிவு, ரெசிபிகள் எல்லாம் அப்படியே நிற்குது, முடிந்த போது கண்டிப்பாக போட்டு விடுகிஎறேன்.

Jaleela Kamal said...

//angelin said...
jaleela
mint pulau super .tasty and healthy too .

December 23, 2010 3:21 AM
//

கருத்து தெரிவிததமைக்கு மிக்க நன்றி ஏஞ்சலின்

Jaleela Kamal said...

// mahavijay said...
i love ur blog and asiyaomar blog. u people are inspiring me to start blog i will post my recipes soon...
//

வாஙக மஹா விஜய் எல்லோரும் என் பிலாக் பார்த்த பிறகு தான் ஆசை பட்டு ஆரம்பிச்சு இருக்காங்க.
நீங்களும் போடுங்க முடிந்த போது வந்து சுவைக்கிறேன்,
வருகை தந்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

//Nithu Bala said...
arumayana pulav:-)

December 23, 2010 7:29 PM
/
வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி நீத்து

R.Gopi said...

மின்ட் புலாவ் ... கும்..கும்..கும்னு இருக்கு...

ஆஹா... வாசனை இங்க வரைக்கும் வருதே...

கிடைச்சா, ஒரு பிடி பிடிக்கலாம்...

Kanchana Radhakrishnan said...

நல்லாயிருக்கு.

Vijiskitchencreations said...

நல்ல ஹெல்தி ரெசிப்பி. எனக்கு பிடித்த ரைஸ்.அவசியம் உங்க டைப்பில் அடுத்த முறை செய்திடலாம்.

Jaleela Kamal said...

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி கோபி

நன்றி காஞ்சனா

நன்றி விஜி கண்டிப்பா செய்து பாருங்கள்.

நாகா ராம் said...

ரொம்ப நாளா தேடின குறிப்பு இது சுலபமா இருக்கு செய்துட்டு சொல்றேன்கா

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா