அனைவரின் அன்புக்கும் ஆளான நம் சகோ.ஜலீலா அக்காவின் தந்தையார் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு இருந்தனர். இந்த ஒரு வாரமாகதான் சிறு முன்னேற்றம் தென்பட்டிருந்தாலும் இன்று காலை இறைவனின் நாட்டப்படி இவ்வுலகை நீங்கிவிட்டார்கள். தந்தைக்காகவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்காகவும், தந்தையை மிகவும் விரும்பிய, கடந்த சில நாட்களாகவே இதன்பொருட்டு மன உளைச்சலில் இருந்த சகோ. ஜலீலா அக்காவின் மனம் சாந்தி அடைவதற்காகவும் இறைவனிடம் இறைஞ்சுவோம்.
இறைவன் அன்னாரது சிறு பிழைகளையும், பெரும் பிழைகளையும் மன்னித்து, மக்ஃபிரத் அளித்து, குறையாத அவன் கருணையை பொழிந்து அன்னாரின் நல் அமல்களை பொருந்திக் கொள்வானாக. ஆமீன்
அவரின் கப்ரில் விசாலத்தையும், வெளிச்சத்தையும் தந்தருள்வானாக. ஆமீன்
கப்ரின் வேதனையிலிருந்தும், அதன் நெருக்கத்திலிருந்தும் பாதுகாப்பளிப்பானாக. கேள்வி கணக்குகளை எளிதாக்குவானாக. ஆமீன்
மறுமை நாள் வரையிலும், தீர்ப்பு கூறும் அந்நாளிலும், அதன் பின்பும் எல்லா வேதனைகளிலிருந்தும் கடினங்களிலிருந்தும் காப்பாற்றி அருள்வானாக. ஆமீன்
அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்களின் ஷிஃபா’அத்தை பெற்றுத் தருவானாக. ஆமீன்
மறுமை வாழ்வில் ஜன்னத்தையே பரிசாக தந்து ஜஹன்னத்திலிருந்து விடுதலை அளித்து ரட்சிப்பானாக. ஆமீன்
எங்கள் ரப்பே அன்னாருக்காக எங்களின் து’ஆவை ஏற்றுக் கொள்வாயாக. அன்னார் நோய்வாய்ப்பட்டு வருந்திய நொடிகளனைத்தையும் அன்னாரது மறுமையில் அமல்களாக மாற்றி ஷி’ஃபா தந்தருள்வாயாக. ஆமீன்
எங்களைப் படைத்து பாதுகாப்பவனே அன்னாரை இழந்து வாடும் அவர் குடும்பத்திற்கும், மற்றும் அவரது உறவினர்களுக்கும் அமைதியையும், உன் கருணையையும் தந்தருள்வாயாக. ஆமீன்
ஜலீலா அக்காவின் மனதிற்கு தைரியத்தையும் இந்த துயரத்திலிருந்து மீண்டு வாழ்வை எதிர்கொள்ளும் சக்தியையும் தந்தருள்வாயாக. ஆமீன்
தூயோனே... உன்னிடத்திலிருந்தே வருகிறோம். இன்னும் உன் புறமே திரும்ப உள்ளோம். துயரம் சூழ்ந்த இந்த நொடிகளில் எங்களையும், எங்கள் ஈமானையும் பாதுகாப்பாயாக. ஆமீன், ஆமீன், யா ரப்பில் ஆலமீன்.
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக்க ஹமீதுன்ம் மஜீத்.
அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக்க ஹமீதுன்ம் மஜீத்.
Tweet | ||||||