துபாய் வருவதற்கு முன் நோன்புகாலங்களில் தினம் தரவீஹ் தொழுகை வீட்டில் தான் தொழுவோம். கிரான்மா வீட்டில் எல்லோரும் மகள்கள் பேத்திமார்கள் என கூட்டாக சேர்ந்து தொழுவோம்.
ஆனால் இங்கு வந்தவுடன் முதலில் பள்ளிகளில் பெண்கள் தொழுவது தெரியாது. வீட்டில் நானே தனியாக தொழுது கொள்வேன்.
கொஞ்ச நாட்கள் கழித்து தான் ஈடிஏவில் பெண்களுக்கு என தொழ தனியாக இடம் உள்ளது என்று தெரிய வந்த்து27 தொழுகைக்கு மட்டும் அங்கு போய் தொழுவோம்,எங்க சொந்தங்களும் சில பேர் அங்கு வருவார்கள், எல்லோரையும் பார்த்த மாதிரி இருக்கும்.
இரவு தொழுகைக்கு எங்க ஏரியாவிலேயே உள்ள பள்ளியில் தொழ போவோம்.
பிறகு பக்கத்தில் உள்ள பள்ளியிலேயே இத்தனை வருடமாக நாங்க என் பையன் , ஹஸ்,பக்கத்துவீட்டு பேமிலி எல்லோரும் போய் தொழ போவோம்.
இந்த தடவை பையனும் ஹஸ் தினம் தொழுதுட்டு அருகில் இருக்கும் ரீஃப் மாலுக்கு போனால் அங்கு நடுவில் கூடாரம் அமைத்து காவா டீ யும் பேரிட்சையும் தரப்படும்,
பிறகு சில வருடங்களாக வீட்டின் அருகே உள்ள பள்ளிகளிலேயே தினம் தொழ போவோம். இருந்தாலும் ஓவ்வொரு வருடமும் சின்ன வயதில் கிரான் மா வோடு தொழுதோமே அந்த நாளை எண்ணிதான் பார்க்க தோனும். ஆனால் அது போல் சொந்தங்களோடு கூட்டாக தொழுகை எப்ப தொழுவோம் என நினைத்து கொள்வேன், 27 குர் ஆன் கத்தம் செய்வதால் எங்க மாமியார் பாலும் பழம் கரைத்து எல்லோருக்கும் கொடுப்பார்கள்.மற்றநாட்களில் அம்மா ரோஸ்மில்க் சப்ஜாவிதை சேர்த்து கரைப்பார்கள்.பார்க்கவேகலர் அழகாகாக இருக்கும் பெரிமா நன்னாரி சர்பத் கரைத்து கொடுப்பார்கள்எல்லோருக்கும் விளம்புவதும் ஒன்றாக சேர்ந்து குடிப்பதும் அருமையாக இருக்கும்.
##############################################################################
இன்றுஇரவு 27 தொழுகைக்கு போகனும் மதியம் சகோ,ஹுஸைனாம்மா பதிவு படித்து விட்டு இன்னும் பழைய நாட்கள் ஞாபகம் அதிகமாவே அசை போட்டு கொண்டு இருந்தது.
பதிவ படிச்சிட்டு கமெண்ட் டும் போட்டுட்டு மாலை நோன்பு திறந்து முடிந்ததும் என் சின்ன பையன் குர் ஆன் முடித்தான் அவனுக்காக கமலா பழ கேசரி செய்தேன்.
(கேசரியில பெயர் போட நேரமில்லை யாராவது சுட்டிங்க அவ்வளவு தான்)
குர் ஆன் முடித்து விட்டு, தரவீஹ் சென்றோம் . அங்கும் தொழுகை முடிந்ததும் இரவு தொழுகை என்ன செய்வது பள்ளியில் சுபுஹ் வரை தொழுவார்கள் காலை வேலைக்கும் போகனும் தள்ள ஆரம்பித்துடுமே. அங்குள்ள பங்களாதேசி, சூடானி,மேங்க்ளூர் பெண்கள் எல்லாம் இதே தான் பேசி கொண்டு இருந்தார்கள் , உடனே தினம் வரும் பங்ளாதேசி பெண் வேனுமுன்னா வாஙக் ஈரானி அம்மா (ஈரானி அம்மாக்கே கர்) வீட்டுக்கு போய் தொழலாம்.
எனன் ஈரானி அம்மாவா அவங்க வீடு எங்கிருக்கு சரி தொழுகை முடிந்தது கூடவே போய் பார்த்து வைத்து கொண்டு இரவு தொழுகை ஆரம்பிக்கும் நேரத்தையும் கேட்டு வரலாம் என போனால் ஒரு பெரிய வில்லா.
வீட்டு கிட்டதான் , தினம் அதை கடந்து தான் போவேன், வண்டிக்காக காலையில் காத்திருக்கும் போது நிறைய பெண்கள் குர் ஆனுடன் அங்கு போவார்கள்.
தினம் ஒரு நோட்ட்ம் இடுவேன் எப்படியாவது ஒரு நாள் இந்த வீடு எப்படி இருக்குன்னு பார்க்கனும் எனக்கு ஆசை. ஆனால் அவர்களோ ஈரானிகளும் அரபிகளும்.12 மணிக்கு வரனும் என்று சொன்னார்கள்.2.30 க்கும் முடியும் என்றார்கள்.
ரொம்ப சந்தோஷம் நானும் என் கூட இருக்கும் தோழியும் போய் துக்கமே வரல அந்த வீட்டுக்கு போகப்போறோம் என்று 11.30 க்கே ரெடி யாகிட்டோம்.
இரண்டு பேரும் அங்கு போனோம் உள்ளே தொழுகை ஆரம்பிச்சிட்டாங்க போய் சேர்ந்து கொண்டோம் , ஏற்கன்வே ஹால் முழுவது ஆட்கள் நிறம்பி இருந்ததால் முதல் வரிசையில் இடம் கிடைத்தது அங்கே நின்று கொண்டேன்,
இது வரை பள்ளி வாசலில் பெண்கள் பகுதியில் ஆண்கள் பக்கம் தொழவைப்பார்கள் அங்கு தான் மைக் இருக்கும். இங்கு மைக் இல்லாமலே அந்த பெண்ணின் கிரா அத் குரல் மிக அருமையாக இருந்தது. 4 பெண்கள் தொழ வைத்தார்கள்.அதில் ஒரு அம்மா தான் ”ஈரானி அம்மா” அசல் எங்க கிரான்மாவ பார்த்த மாதிரி இருந்தது, 4 பெண்கள் மாற்றி மாற்றி தொழ வைத்தார்கள். மைக் சவுண்டில் தொழ கேட்டு இப்ப பக்கத்திலேயே நின்று ஒதி தொழ வைத்தபோது இன்னும் நல்ல இருந்தது.
அதில் என் தங்கையின் பெயர் கொண்ட ஹுமேரா, இடையில் அடுத்து தொழ வைக்க ஹுமேரா ஹுமேரா என்று கூப்பிட்டார்கள். நம் தங்கை எங்கு திடீருன்ன்னு இங்கே என்று நினைத்தேன், பின்னாடி சோபாவில் கை குழந்தையோடு உட்கார்ந்து இருந்த பெண் நுழையும் போது தொழ வைத்தவர், மீண்டும் கடைசியாக வந்து தொழ மு.டித்தார்கள் அருமையான ராகத்துடன் எல்லா துஆக்களும் ஓதி முடித்தார்கள்.
பிறகு கிளம்புறோம் என்றோம். கை துரு துருன்னு இருந்து எப்படியாவது போட்டோ எடுக்கனும் என்று தெரியாம ஒரு கிளிக்.
வெயிட் பண்ணுங்க சாப்பிட்டு போங்க என்றார்கள் , பிள்ளைகள் இருக்க்கிறார்கள் கிளம்பனும் என்றேன், 10 நிமிடம்தான் வாங்க வந்து உட்காருங்கன்னு வெளி ஹாலுக்கு கூப்பிட்டு போனாங்க.
சுற்றிலும் உள்ள சோபாவில் வ்ந்திருந்த எல்லா பெண்களும் அமர்ந்தோம்.
ஈரானி அம்மாவும் இரண்டு வேலை காரிகளும், சின்ன பெண்களும் நடுவில் உள்ள டேபிலில் எல்லா உணவு பொருட்களையும் கொண்டு வந்து வைத்தார்கள்.
பாயில்ட் டபுள் பீன்ஸ் சுட சுட, இரண்டு வகை ஜூஸ், எள் கார கேக், மஷ்ரூம் பிஸ்ஸா, டேட்ஸ் நட்ஸ் கேக்,இன்னும் ஒரு கான்பிளேக்ஸ் டேஸ்ட் டிலைட்,சாக்லேட் எல்லாம் வைத்து கொடுத்தார்கள்.
.அங்கு இருக்கும் வீட்டு ஆட்களுக்கு உட்கர சோபாவில் இடம் இல்லை , எல்லாம் அழகாக கீழே வட்டமாக உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள், நான் என் பங்கை என் பையனுக்காக எடுத்து வைத்து கொண்டேன். ஈராணி அம்மாவின் அருமையான விருந்தோம்பல், ஓடி ஆடி சிரித்த முகத்துடன் எடுக்க வெக்கப்பட்டாலும் டிரேவை நீட்டி களாஸ் கரோ களாஸ் கரோ என்றார்கள்.கடைசியா சுலைமானி டீயும் வந்தது. குடித்து விட்டு கை கொடுத்து முஸாபா (ஹக்) செய்துட்டு கிளம்பிட்டோம்.
எல்லாமே அந்த இறைவனின் கருனை என்னன்னு நான் சொல்வது , மதியம் 20 வருட முன் தொழுத தொழுகை இனி எப்ப கிடைக்கும் என நினைத்தேன் இரவே ஆண்டவன் நிறைவேற்றி வைத்து விட்டான், அதே சமயம் நீண்ட நாளா அந்த வீட்டிற்குள் போகனும் என்ற என் எண்ணமும் நிறைவேறியது. இதுவரை துபாய் வந்து வெளியில் போய் தொழுததில் இன்று ரொம்ப மனநிறைவாகவும், சந்தோஷமாக வும் இருந்தது. இன்ஷா அல்லா அடுத்தவருடம் இங்கிருந்தா தினம் தராவீஹ் தொழுகைக்கு இங்கு தான் வரனும் என்று நினைத்து கொண்டு வெளியில் வந்தேன்.
அந்த ஈரானி அம்மா வீடு உள்ளே சும்மா சொல்லகூடாது அருமையாக இருந்தது.
தொழுது கொண்டு இருக்கும் இடையில் அர்ரஹ்மான் சூராவும் வந்தது. இது அவர்கள் ஓதி கொண்டு இருக்கும் போது என் டாடி ஞாபகம் வந்து விட்டது கம்பியுட்டரில் சாட், மெயில் உள்ளே உள்ள எந்த ஆப்ரேஷனும் தெரியாது ஆனால் என் பையன் காலேஜ் சேரும் முன் அங்கு இருந்து குர் ஆன் டவுண்ட் லோடு செய்து டெஸ்க் டாப்பில் போட்டு கொடுத்தான் கம்பியுட்டரை ஆன் செய்து குர் ஆன் பகுதியை ஓப்பன் செய்து தினம் கூடவே ஓதிகொண்டு இருப்பார்கள். இந்த சூராவை டாடி ஓதும் போது இன்னும் நல்ல இருக்கும்.
மறுநாள் இந்தியாவில் 27 தொழுகை மம்மியிடம் போன் செய்து பித்ரா கொடுக்க வேண்டியதை கொடுக்க சொல்லிட்டு , முன்பு நாம் எல்லம் ஒன்று சேர்ந்த்து கிரான்மாவுடன் தொழுதது போல் நேற்று போய் தொழுதேன் என்றேன்.ரொம்ப சந்தோஷ பட்டார்கள்.
நோன்பு 27 பிறை யில் தான் பெரிய பையனும் பிறந்தான்.இன்று காலை போன் செய்தேன்,எப்படி இருக்கே நல்ல இருக்கிறான்னு கேட்டேன். 27 வது ஜுஜு வரேன் மம்மி என்றான், துஆ செய்யுங்கள் என்றான் என்றான் துஆ செய்தேன்.
ஆண்டவன் அனைவரின் நாட்ட தேட்டங்களையும் நிறைவேற்றி வைப்பானாக..
டிஸ்கி: இந்த பதிவு போட்டது வெளிநாடுகளில் உள்ள பள்ளிகளில் பெண்களுக்கென தனி இடம் இருக்கு என்பதை தெரிவிக்க தான். நிறைய பெண்கள் ஊரில் எல்லோரோடும் இருந்து விட்டு இங்கு வந்து தனிமையாகிவிடுகிறார்கள். நோன்பு காலங்களிலும் மற்ற நாட்களில் இப்படி போய் தொழுது கொள்ளலாம்.
Tweet | ||||||