Wednesday, December 5, 2012

Linky tool - குறிப்புகளை இணைப்பது எப்படி?

 
 
 
 
இந்த சமையல் அட்டகாசத்தில் பேச்சுலர் சமையல் போட்டி அறிவித்துள்ளது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
 
அதில் பதிவுக்கு கீழே  உங்கள் குறிப்புகளை இணைக்க சொன்னேன்
அது தோழிகளுக்கு நிறைய சந்தேகம்.
 
எப்படி இணைப்பது என்று? இணைத்தால் என் மெயில் ஐடி எல்லாம் எல்லோருக்கும் தெரியவருமா?
 
 
இதில் கிழே நான் இணைத்தை ஸ்டெப் பை ஸ்டெப் போட்டுள்ளேன் இதை பார்த்து இதை போல் உங்கள் குறிப்புகளை  இணைக்கவும்.
 
உங்கள் மெயில் ஐடி ஏதும் தெரியாது.
 
ஒன்லி இணைத்த குறிப்பு மட்டும் தான் போட்டோவோடு டிஸ்ப்ளை ஆகும்.
சரி இப்ப எப்படி இணைப்பது என்று பார்ப்போம்
 
முதலில் ஈவண்ட் பேஜில் கீழே உள்ள  you are nex,   Click here to enter
 
கீழே உள்ளபடி என்பதை கிளிக் பண்ணுங்கள்
 
 
படம் - 1
 




அடுத்து படம் இரண்டில் உள்ள ஒரு பார்ம் ஓப்பன் ஆகும்.


படம் - 2

லின்கி
 
 
 
அதில் படம் முன்றில் என் குறிப்பின் விளக்கம் கொடுத்துள்ளேன் பாருங்கள். அதன் படி 1,2,3 ஃபில் பண்ணுங்கள்.
 
படம் - 3
 
4வதாக  உள்ளதில் Auto crop my image என்பதில் ஒரு டிக் பண்ணிட்டு
 
 From web  என்பதை கிளிக் செய்யுங்கள்.
 
 
படம் - 4



 மேலே படம் 4 கில் உள்ள படி

இப்படி ஓப்பன் ஆகும் உங்கள் பிலாக்கில் உள்ள சில படங்கள் ஓப்பன் ஆகும் .

அதில் உங்கள் மெயின் பிச்சரை ஒரு முறை கிளிக் செய்து விட்டு விட்டு இணைத்து விடுங்கள் மறுபடி என் பிலாக்குக்க்கு திரும்பி வந்து விடுவீர்கள் ,

படம் - 5


 
படம் 5 தில் உள்ளபடி உங்க போஸ்ட் இங்கு வந்து விடும்.
 
 
மெயிலில் என்னிடம் சந்தேகம் கேட்ட தோழிகளுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
 
டிஸ்கி: வலை உலகில் அடிஎடுத்து வைத்த நாளில் இருந்து நானே மண்டைய உடைத்து பல எடிட் கள் செய்திருக்கிறேன்.
 
ஆரம்பித்து இரண்டு வருடமாக முழுநேர பிளாக்கர் போல ஒரு நாளைக்கு 50 போஸ்ட் கூட போட்டு எடிட் செய்து வைத்துள்ளேன். போஸ்ட் போடலன்னாலே என்ன்ன்வோ போல் இருக்கும்.
 
ஆனால் இப்ப போஸ்ட் போட்டு வைத்தாலும் பப்லிஷ் செய்ய நேரம் கிடைக்க வில்லை.
 
இந்த லின்கி டூலும் அப்படி தான் ஆறு மாதம் முன்பே முயற்சித்து அது முடியாம போகவே விட்டு விட்டேன்.
எப்படி முடியாம போகும் மறுபடி முயற்சி செய்து ஒரு வழியா போட்டு முடிச்சாச்சு. 
 
 
 கடைசியில் பாதியில் கொஞ்சம் டவுட் வந்தது . ஆசியா ஞாபகம் வந்தது மணி இரவு 10.30 க்கு மேல் ஆகுது தயக்கமாக இருந்த இரவில் மற்றவர்களை தொந்தரவு செய்வது என் கணவருக்கு பிடிக்காது.
அவங்களும் வேலையாக இருந்தாங்க இருந்தாலும் ஒரளவுக்கு லின்க் எல்லாம் அனுப்பினாங்க.எனக்கு பிடிபட வில்லை. அங்கயே டெமோ இருக்கு பாருங்கள் அதை பார்த்து செய்யுங்கள் என்றார்கள்.
 
 
ஒருவழியா அங்கே டெமோ இருந்தது எப்படியே போடுவோம். அதை இரண்டு முன்று முறை பார்த்து போட்டேன். வரது வரட்டும் என்று போட்டேன்.
மறுநாள் மாலை எல்லம் சரியாக வந்து விட்டது.ஓவ்வொன்ன்றும் புதுசா கற்றுகொள்ளும் போது ஒரு சந்தோஷம் தான்
 
 
 
 
 
 
 
போட்டிக்கான குறிப்புகளை இங்கு கிளிக் செய்து உங்கள் குறிப்புகளை இணைக்கவும்.
 
இன்னும் 15 நாட்கள் தான் இருக்கிறது.
 
இதில் ஒரு ( ரங்கமணியும்) கலந்து கொள்ள ஆசைபடுகிறார்,
ஆண்கள் யாரும் கலந்து கொள்ள விருப்பம் இருந்தால் கலந்து கொள்ளுங்கள்.
 
 
 
 
 
 

3 கருத்துகள்:

Asiya Omar said...

பயனுள்ள பகிர்வு.நிச்சயம் புதிதாக இணைப்பவர்களுக்கு பயன்படும்.

ஹுஸைனம்மா said...

அக்கா, வீடு, ஆஃபீஸ், வலைப்பூ, பிஸினஸ் என்று எல்லாவற்றையும் இறைவனருளால் திறம்பட நிர்வாகம் செய்கிறீர்கள். உங்க உழைப்பும், விடாமுயற்சியும், கற்றுக் கொள்ளும் ஆர்வமும் நாங்கல்லாம் பார்த்து வியக்கும் ஒன்று.

கற்றுக் கொண்டதைப் பிறருக்கும் கற்றுத் தரமுடிவதும் ஒரு பாக்கியம்தான்.

பாரணை முடிச்ச:) அதிரா said...

ஜலீலாக்கா. நீங்க இதில் பச்சை எழுத்தில் போட்டிருக்கும் லிங் எதுவும் ஓபின் ஆகுதில்லை..

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா