//இது டயட்டில் உள்ளவர்கள், பிரியாணி சாப்பிட ஆசை பட்டால் இது போல் மீன் பிரியாணி செய்து சாப்பிடலாம்.
மீன் பொரிக்க ஆலிவ் ஆயிலை பயன் பயன் படுத்தவும்.தாளிக்கும் போது எண்ணை கூட சிறிது கம்மியாக ஊற்றி கொள்ளலாம். நெய் தேவையில்லை./
தேவையான பொருட்கள்
சீலா மீன் - அரை கிலோ
அரிசி அரை கிலோ
வெங்காயம் - முன்று பெரியது
இஞ்சி பூண்டு பேஸ்ட் இரண்டு மேசை கரண்டி
தக்காளி - ஐந்து பெரியதுதயிர் = இரண்டு மேசை கரண்டி
பச்ச மிளகாய் - நான்கு
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
பட்டை,ஏலம்,கிராம்பு - ஒன்று ஒன்று
எண்ணை அரை கப்
நெய் - ஒரு மேசை கரண்டி
எலுமிச்சை - அரை பழம்
ரெடி கலர் பொடி - ஒரு பின்ச்
கொத்து மல்லி, புதினா கால் கட்டு
மீன் மசாலா போட்டு பொரிக்க
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எலுமிச்சை சாறு - ஒரு மேசை கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு மேசை கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
பப்பரிக்கா பவுடர் - கால் தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் - மீன் பொரிக்க தேவையானது
ஆலிவ் ஆயில் - மீன் பொரிக்க தேவையானது
செய்முறை
மீனை கழுவி சுத்தம் செய்து முன்றில் ஒரு பங்கை முள்ளெடுத்து விடவேண்டும்.
மீனில் போட வேண்டிய மசாலாக்களை போட்டு பத்து நிமிடம் ஊறவைத்து. முள்ளெடுத்ததை லேசாகாவும், மீதியை நல்ல பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.
அரிசியை 20 மணி நேரம் ஊறவைக்கவும்.
மீனில் போட வேண்டிய மசாலாக்களை போட்டு பத்து நிமிடம் ஊறவைத்து. முள்ளெடுத்ததை லேசாகாவும், மீதியை நல்ல பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.
அரிசியை 20 மணி நேரம் ஊறவைக்கவும்.
தாளிக்க
சட்டியை காய வைத்து பட்டை ,கிராம்பு,ஏலம் போட்டு வெங்காயத்தை போட்டு வதக்குங்கள்.வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நல்ல கிளறி சிம்மில் வைக்கவும்.
பிறகு கொத்து மல்லி புதினா போட்டு இரண்டு நிம்டம் கழித்து தக்காளி,பச்சமிளகாய் போட்டு வதக்கவும்.
இப்போது தக்காளியில்,மிள்காய் தூள்,மஞ்சல் துள் போடு வதக்கவும்.
பிறகு தக்காளி கூட்டாக வெந்ததும் தயிர், லேசாக பொரித்து வைத்த மீனை சேர்த்து லேசாக கிளறி, அரை லெமென் பிழியவும்.
உலை கொதிக்கவிட்டு அரிசியை தட்டி அதில் தேவைக்கு உப்பு சேர்த்து சிறிது கொத்துமல்லி புதினாவை சேர்த்து முக்கால் பதத்தில் வடிக்கவும்.
இப்போது கிரேவியை முன்றாக பிரிக்கவும்.பொரித்து வைத்துள்ள மீனை இரண்டாக பிரிக்கவும்.
ஒரு பெரிய சட்டியில் முதலில் கொஞ்சம் கிரேவி,ரைஸ், பொரித்த மீன். கொஞ்சம் நெய்.அடுத்து கொஞ்சம் கிரேவி ,சாதம் பொரித்த மீன், கொஞ்சம் நெய்.அடுத்து கொஞ்சம் கிரேவி,மீதி ஊள்ள சாதம் மேலே ரெட் கலர் பொடியை கரைத்து தெளித்து மீதி சமப்படுத்தி 20 நிமிடம் தம்மில் வைக்கவும்.
இரக்கியதும் உடையாமல் நல்ல கிளறி சாப்பிடவும்.சுவையான் மீன் பிரியானி ரெடி
குறிப்பு
மற்ற பிரியாணியை விட மீன் பிரியாணிக்கு கொஞ்சம் வேலை அதிகம் மீன் என்பதால்பொரித்து லேயராக வைத்து தம் போட்டு இரக்கனும்.
இது சரியாக செய்ய வராதவர்கள் ஃபிரைட் ரைஸுக்கு செய்வது போல் கூட செய்யலாம்.
இதுக்கு பாப்புலட் மீனும், ஹமூர் மீனும் கூட நல்ல இருக்கும்.
Tweet | ||||||
15 கருத்துகள்:
சீலா மீனும்,வஞ்சிரம் மீனும் ஒரே மீனா?சீலா மீனுக்கு ஆங்கிலத்தில் தெரியுமா அக்கா?இங்கு அமெரிக்காவில் சில மீன்கள் கிடைப்பதில்லை.சொன்னால் கடையில் சொல்லி கேட்க தோதாக இருக்கும்.மீன் பிரியாணி திண்டு நாளாச்சி.எங்க ஊர்ல கொடுவா மீன்ல செஞ்சு சாப்பிட்டிருக்கேன்.
மீன் எந்த வயதினரும் சாப்பிடலாம் அதிலும்..பிரியாணி...ஆகா.. அருமையான செய்முறை விளக்கம்..நன்றி..
Wow arumaiyana meen briyani..pakkum pothey saapida thonuthu..
பாத்திமா ஜொக்ரா வருகைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி,
சீலா மீன் என்றால் கிங் பிஷ், வஞ்சிரம் பெரிய மீனாக இருக்கு கட் செய்து வாங்கி வருவார்கள்.
பிறகு தெரிந்தால் சொல்கிறேன்
அதிரை அபூப்பக்கர் நலமா? கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
எல்லா வயதினரும் சாப்பிடலாம் வெயிட் போடாது.
வாங்க சித்ரா வருகைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.
அதுக்கென்ன பிரியா உடனே செய்து சாப்பிடுங்கள்
சூப்பராயிருக்கு பிரியாணி ஜலிலாக்கா.செய்து சாபிட ஆசை வந்துடுச்சு..
//சூப்பராயிருக்கு பிரியாணி ஜலிலாக்கா.செய்து சாபிட ஆசை வந்துடுச்சு//
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி மேனகா, உடனே செய்து சாப்பிடுங்கள்
மீன் பிரியாணி செய்முறை விளக்கம் ஔஅருமை.
=இஸ்மாயில் கனி
http://kaniraja.blogspot.com
வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.இஸ்மாயில் கனி
மீன் பிரியாணி ரொம்பவும் அருமை,பார்த்தவுடன் சாப்பிட தோணுது.
ஆசியா உங்கள் வருகைக்கும் , கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி
//அரிசியை 20 மணி நேரம் ஊறவைக்கவும்.//
I think it's a typing mistake. Please Correct it.
செய்முறை விளக்கம் அருமை! ஆனால் ஓரிடத்தில் //அரிசியை 20 மணி நேரம் ஊறவைக்கவும்// என்று குறிப்பிட்டு இருக்கின்றீர்கள்.
I think it's a typing mistake. Pls correct it. - Thanks
வாங்க அகமது வருகைக்கு மிக்க ந்ன்றி
20 நிமிடம் தவறாக டைப் செய்து இருக்கேன். தவற்றை சுட்டி காண்பித்தமைக்கு மிக்க நன்றி
திருத்தி விடுகிறேன்.
( தவறா போட்டாலும் அதை தப்பாவே சில பேர் இங்கிருந்து காப்பி செய்து போட்டு கொள்கிறார்கள்.)
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா