தேவையான பொருட்கள்
மட்டர் தால் = ஒரு டம்ளர்
இஞ்சி = இரண்டு அங்குலம் அளவு
பச்ச மிளகாய் = ஒன்று
வெங்காயம் = ஒன்று
பூண்டு = முன்று பல்
பட்டை = ஒருசிறிய துண்டு
கிராம்பு = ஒன்று
சோம்பு = அரை தேக்கரண்டி
உப்பு = தேவைக்கு
கருவேப்பிலை ,கொத்துமல்லி புதினா = சிறிது
இட்லி சோடா = ஒரு பின்ச்
செய்முறை
1. மட்டர் தாலை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் தண்ணீர் முழுவதையும் ஒரு வடி தட்டில் வடிக்கவும்.
2. முன்றில் ஒரு பாகம் மட்டர் தால் எடுத்து அத்துடன் கிராம்பு, பட்டை,இஞ்சி, பூண்டு , சோம்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.அப்போது தான் எல்லாம் மசாலாவும் ஒன்று சேரும்.
3. இப்போது மீதி உள்ள மட்டர் (பட்டாணி பருப்பு) தாலை மிக்சியில் விப்பரில் இரண்டு முறை திருப்பி எடுக்கவும். மிக்சியை ஓடவிடமல் இப்படி திருப்பி எடுத்தால் ஒன்றும் பாதியுமாய் இருக்கும்.
4. எல்லா வற்றையும் ஒன்றாக கலந்து அதில் வெங்காயம், பச்சமிளகாய், கருவேப்பிலை, புதினா, கொத்து மல்லி பொடியாக அரிந்து போட்டு உப்பு மற்றும் இட்லி சோடா சேர்த்து நன்கு பிசைந்து ஐந்து நிமிடம் ஊறவைத்து தேவைக்கேற்ப பெரிய வடைகளாகவோ, சிறிய வடைகளாகவோ பொரித்து எடுக்கவும்.
சூப்பரான கிரிஸ்பி ஸ்பெஷல் மட்டர் தால் வடை ரெடி.
குறிப்பு
மசால் வடை என்றால் பட்டாணி பருப்பில் செய்தால் நல்ல கிரிஸ்பியாக வரும். அது கிடைக்காதவர்கள் கடலை பருப்பே பயன் படுத்தலாம்.
லெமென் ரைஸ், தயிர் சாதம், புளி சாதம், மாலை சிற்றூண்டி, நோன்பு நேரத்தில் கஞ்சிக்கு ஏற்றது.
அனைவரும் விரும்பி சாப்பிடுவது எல்லா டீ கடைகளிலும் கிடைக்கும். வீட்டில் செய்வது ரொம்ப சுலபம்
Tweet | ||||||
13 கருத்துகள்:
இந்த ரெசிபி சகோதரர் ஜமால் கேட்டதால் போட்டது.
மிக்க மகிழ்ச்சிங்க, ஜமாலோட சேர்ந்து நாங்களும் சாப்பிடுறோம்!!
நமக்கும் ரொம்ப புடிச்ச ஐட்டம். நன்றி சகோதரி
மட்டர் தால் வடை சூப்பர்!!
வடை சூப்பர்
Mattar dal enraal enna ? any other name plz ? it loooks superb,First time here..Nice recipe collections..WIll visit often..DO come to my blog @ ur free time :)
ஷஃபிக்ஸ் இது எல்லோருக்காகவும் தான்.
தவறாமல் வந்து கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி
நவாஸ் ம்ம் எங்க வீட்டில் இது ரொம்ப பேவரிட், வெரும் ரசம் சாதத்திற்கு தொட்டு சாப்பிட சூப்பரா இருக்கும்.தொடர்ந்து கருத்து தெரிவித்து ஊக்கமளிப்பதற்கு மிக்க நன்றி.
நன்றி மேனகா தவறாமல் வந்து கருத்து தெரிவிப்பதற்கு.
வாங்க கோகுக்குல ராணி(சாரு), உங்கள் பாரட்டுக்கு மிக்க நன்றி.
ஹாய் சித்ரா வருகைக்கு மிக்க நன்றி,
மட்டர் தால் என்றால் பட்டாணி பருப்பு. கடலை பருப்பு மாதிரி தான். இது முப்பருப்பு வடை மற்றும் அடையில் அரைத்து சுடும் போது இன்னும் கிரிஸ்பியாக இருக்கும்.
முடிந்தால் அந்த பருப்பு படம் போடுகிறேன்.
உங்கள் பிலாக்கை கண்டிப்பாக வந்து பார்க்கிறேன்
பொங்களுக்கு நல்லதொரு சைட் டிஷ்
நன்றி சகோதரி.
நட்புடன் ஜமால் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா