பால் = அரை லிட்டர்
ரூ ஆப் ஷா = ஒரு குழி கரண்டி ( முன்று மேசை கரண்டி)
ரோஸ் எஸன்ஸ் = இரண்டு ட்ராப்
ரோஸ் வாட்டர் = ஒரு ட்ராப் (தேவைபட்டால்)
சப்ஜா விதை = ஒரு மேசை கரண்டி
நட்ஸ் வகைகள் = இரண்டு மேசை கரண்டி
சர்க்கரை = 9 தேக்கரண்டி
செய்முறை
1. சப்ஜா விதை கடுகை விட பொடியாக இருக்கும் இதை ஒரு மணி நேரம் முன்பே ஊறவைக்கவும். ஊறியதும் ஜவ்வரிசி போல் சிறிது முத்து போல் வரும்.இதுவும் வயிறு உபாதைகளுக்கு மிகவும் நல்லது.
2. பாலை தேவைக்கு தண்ணீர் சேர்த்து காய்ச்சி ஆறவைக்கவும்.
3.நட்ஸ் வகைகள் (பாதம் + பிஸ்தா) பொடியாக நீளவாக்கில் அரிந்து வைக்கவும். சோம்பேறிதனம் படுபவர்கள் மிக்சியில் ஒன்றும் பாதியுமாய் திரித்து கொள்ளுங்கள்.
4. ஆறிய பாலில் சர்க்கரை, ஊறிய சப்ஜா விதை, ரூ ஆப் ஷா, ரோஸ் எஸன்ஸ்,நட்ஸ் கலந்து கரைத்து பிரிட்ஜில் குளிர வைத்து மாலை நோன்பு திறக்கும் போது குடிக்கவும்.
5. ஜில்லுன்னு வயிறுக்கு நல்ல குளு குளுன்னு இருக்கும். அல்சர், மற்றும் வயிற்று புண்ணுக்கு ரூ ஆப்ஷாவை தினம் பாலில் கலந்து குடிக்கலாம்.
6. இன்னும் கலர் புல்லா இருக்க வேண்டும் என்றால் கடல் பாசியை பச்சை கலரில் செய்து பொடியாக கட் செய்து போடவும்.
7.சர்க்கரை அதிகம் என்று நினைப்பவர்கள் அவரவர் விருப்பத்திற்கு சேர்த்து கொள்ளவும்.
Tweet | ||||||
23 கருத்துகள்:
ஆஹா! இதுவும் குளிர்ச்சிதானே சகோதரி
நன்றி நன்றி.
நல்லா இருக்குங்க, எங்க வீட்டில கடல் பாசியும், இஸாப் கூல் சேர்த்து போடுவாங்க. இஸாப் கூல் பார்த்து இருக்கிங்களா? வயிற்றுக்கு நல்லது, இங்கு எல்லா மளிகை கடைகளிலும் கிடைக்கிறது.
ஆகா!! சூப்பர் ரோஸ்மில்க். கொஞ்சம் பிசின் சேர்த்துக்கிட்டால் இன்னும் நல்லது.
ரோஸ்மில்க்...செய்முறை விளக்கம் அருமை..தொடர்ந்து நிறைய தகவல் எழுத வாழ்த்துகிறேன்...
பார்க்கும் போதே ஆசையை தூண்டுகிறது
வாவ் சூப்பர் ரோஸ்மில்க்.பார்க்கும் போதே குடிக்கத் தோனுது.
ஈசி ரோஸ் மில்க் சுப்பேர்ப்.......
நன்றி அக்கா..
Thanks and regards,
gani...
ம்ம்ம்ம்ம்............
நட்புடன் ஜமால் ஆமாம் இதுவும் குளிர்சி தான்.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
ஷபிக்ஸ் இந்த் பெயர் தெரியமல் தான் போடல அந்த சப்ஜா விதையின் பெயர் தான் இஸாப் கல்
நன்றி, பெயர் ஞாபகப்படுத்தியமைக்கு.
சாரு ஸ்ரீ பார்க்கும் போதே ஆசைய தூண்டு கிறதா செய்து குடித்து பாருஙக்ள்
பதில் அளித்தமைக்கு நன்றி
/ஆகா!! சூப்பர் ரோஸ்மில்க். கொஞ்சம் பிசின் சேர்த்துக்கிட்டால் இன்னும் நல்லது/
நவாஸ் பாராட்டுக்கு நன்றி , பிசின் அதான் இங்கு இன்னும் எனக்கு கிடைக்கல.
ஈசி ரோஸ் மில்க் சுப்பேர்ப்.......
நன்றி அக்கா..
சீமான் கனி நன்றி
//ம்ம்ம்ம்ம்............//
நன்றிங்க ராஜ்
ரோஸ் மில்க்னா பால் + ரோஸ் எஸ்சென்ஸ் மட்டும் தான் யூஸ் பண்ணுவாங்கன்னு நினச்சிட்டு இருந்தேன் நீங்க சொல்லி இருக்கும் ரெசிபி பார்த்தா ரோஸ் ரோஸ் ரோஸ் மில்க் போல இருக்கே .. நீங்க சொல்லி இருக்கும் பொருட்கள் எல்லாம் சென்னைல கிடைக்குமா ???
/ரோஸ் மில்க்னா பால் + ரோஸ் எஸ்சென்ஸ் மட்டும் தான் யூஸ் பண்ணுவாங்கன்னு நினச்சிட்டு இருந்தேன் நீங்க சொல்லி இருக்கும் ரெசிபி பார்த்தா ரோஸ் ரோஸ் ரோஸ் மில்க் போல இருக்கே .. நீங்க சொல்லி இருக்கும் பொருட்கள் எல்லாம் சென்னைல கிடைக்குமா ???//
ராஜ ராஜன் வருகைக்கு மிக்க நன்றி
ஆமாம் நீங்கள் சொன்ன மாதிரி ரோஸ் ரோஸ் ரோஸ் தான் எல்லா ஜூஸையும் ஒன்றாக வைத்தால் இது தான் மோர் அட்ராக்ஷனா இருக்கும்.
சென்னையில் கிடைக்காத அயிட்டமே இல்லை.
சப்ஜாவிதை = இசாப் கல்
ரூ ஆப்ஷா அதுவும் கிடைக்கிறது
""இசாப் கல்"" இது எங்க கிடைக்கும் ?? நான் ரிலையன்ஸ் பிரெஷ்ல தேடி பாத்தேன் கிடைக்கல ...
ராஜ ராஜன் சார் நீங்க எங்கு இருக்கிறீர்கள், இது இந்தியாவில் என்றால் நாட்டு மருந்து கடைகளில்கேட்டு பாருங்கள்.
மிகவும் நன்று. அருமையான ரெசிபி.
several tips உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
ரூ ஆப் ஷா என்றால் என்ன? அது எப்படி இருக்கும். இதுவரை நான் இந்த பெயரை கேள்வி பட்டதே இல்லை. அதை பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா ஜலீலா
mdibu82 = ரூ ஆப் ஷா என்றால் ஜூஸ் வகைகளுக்கு கலக்கும் எசன்ஸ்
சென்னையில் நன்னாரி எசன்ஸ் கிடைக்கும் அது லெமன் ஜுஸில் மிக்ஸ் பண்ணனும். அதே போல் இது பாலில் கலந்து குடிப்பது,
படம் இனைத்துள்ளேன் பாருங்கள்
எல்லா டிபாட்மெண்டல் ஸ்டோரில் இந்த ரூ ஆப்ஷா கிடைக்கும்.
வயிறு உபாதைகளுக்கு இது மிகவும் நல்லது.
வருகைக்கு மிக்க நன்றி.
Tried cameout superb.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா