பேபி கார்ன் பஜ்ஜி
குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்தது, சத்தும் அதிகம் இதை செய்யும் போது முழுவது கடலைமாவில் முக்கி பொரிக்காமல் லேசாக கார்ன் வெளியில் தெரிவது போல் செய்தால் பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
பேபிகார்ன் = ஆறு
கடலை மாவு = முன்று மேசை கரண்டி
கார்ன் மாவு = ஒரு தேக்கரண்டி
பொட்டு கடலை பொடி = ஒரு தேக்கரண்டி
உப்பு = ருசிக்கு தேவையான அளவு (கால் தேக்கரண்டி)
பெப்பர் பொடி = கால் தேக்கரண்டி
ரெடி கலர் பொடி = கால் தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் = கால் தேக்கரண்டி
எண்ணை + பட்டர் = பொரிக்க தேவையான அளவு
செய்முறை
1.பேபி கார்னை நன்கு கழுவி நீளவாக்கில் இரண்டாக கட் பண்ணி கொள்ளவும்.
2.கடலைமாவு, கார்ன் மாவு, பொட்டுகடலை பொடியை மற்றும் உப்பு, பெப்பர் பொடி, பேக்கிங் பவுடர் அனைத்தையும் பஜ்ஜிமாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
3. மாவு கரைப்பது எப்போதும் அகலமான பாத்திரத்தில் கரைத்து கொள்ளவும்.அப்பதான் சரியாக தோய்ச்சி போட முடியும்.
4. பட்டர் + எண்ணையை காயவைத்து தீயின் அளவை மீடியமாக வைத்து வானலியில் கொள்ளும் அளவிற்கு போட்டு பொரித்து எடுக்கவும்.
5. சுவையான குழந்தைகளுக்கு பிடித்த கார்ன் பஜ்ஜி ரெடி டொமேட்டோ கெட்சப்புடன் சாப்பிட கொடுக்கவும், எல்லா கார்னும் நிமிஷத்தில் பறந்து விடும்
முட்டை பஜ்ஜி
இது ஒரு சத்தான முட்டை பஜ்ஜி, சில குழந்தைகளுக்கு அவித்த முட்டை பிடிக்காது, அவர்களுக்கு இப்படி பஜ்ஜியாக கொடுத்து விடலாம். நோன்பு காலங்களிலும் கஞ்சிக்கு செய்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
முட்டை = இரண்டு
கடலை மாவு = அரை டம்ளர்
அரிசி மாவு = ஒரு மேசை கரண்டி
காஷ்மீரி சில்லி பொடி = அரை தேக்கரண்டி
உப்பு தூள் = தேவைக்கு
இஞ்சி பூண்டு பேஸ்ட் = கால் தேக்கரண்டி
பெப்பர் பொடி = சிறிது
ரெடி கலர் பொடி = கால் தேக்கரண்டி
இட்லி சோடா = சிறிது
செய்முறை
1. முட்டையை வேகவைத்து ஆறியதும் ஒன்றை நான்கு துண்டுகளாக போட்டு கொள்ளவும். மொத்தம் எட்டு துண்டுகள். முழுசா போட்டா அவ்வளவா நல்ல இருக்காது முழுசா முட்டையை சாப்பிடுவது போல் இருக்கும். கட் செய்து செய்வது ருசியாக இருக்கும்.
2. கட் செய்த முட்டையில் சிறிது பெப்பர் பொடி, உப்பு தூள் தூவி கொள்ளவும். இது கேஸ் ட்ரபுள் வராமல் இருக்க இப்படி தூவி கொள்ளலாம். இல்லை நேரம் இருந்தால் லேசாக பொரித்து பிறகு சுட்டாலும் நல்ல இருக்கும்.
3. கடலைமாவு,அரிசி மாவு, உப்பு,மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட்,இட்லி சோடா, ரெடிகலர் பொடி அனைத்தையும் ஒன்றாக பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து ஒவ்வொரு முட்டையாக மெதுவாக உடையாமல் போட்டு பொரித்து எடுக்கவும்.
4. சுவையான சத்தானதொரு முட்டை பஜ்ஜி ரெடி.
இது இந்துக்களின் பெண்பார்க்கும் விஷேஷங்களில் சொஜ்ஜி , பஜ்ஜி க்கு முக்கிய பங்குண்டு.இது திடீர் விருந்தாளிகளை சமாளிக்க ஏற்றது பஜ்ஜி தான்.நோன்புகாலங்களிலும் கஞ்சி கூட சாப்பிட சுட்டு கொள்ளலாம்.
வாழைக்காய் = ஒன்று பெரியது
கடலை மாவு = முன்று குழிகரண்டி அளவு
அரிசி மாவு = இரண்டு மேசைகரண்டி
மைதா மாவு = அரை தேக்கரண்டி
காஷ்மிரி சில்லி பொடி = முக்கால் தேக்கரண்டி
உப்பு = தேவைக்கு
பெருங்காயப்பொடி = கால் தேக்கரண்டி
சோம்புதூள் = கால் தேக்கரண்டி (தேவைப்பட்டால்)
இட்லி சோடா = கால் தேக்க்ரண்டி
ரெடி கலர் (அ) யெல்லோ கலர் பொடி = கால் தேக்கரண்டி
செய்முறை
1. வாழைக்காயை தோலெடுத்து நீளவாக்கில் வெட்டாமல் வட்ட வடிவமாக மெல்லிய வில்லைகளாக போட்டு கொள்ளவும். கடையில் போடுவது போல் நீளவாக்கில் போட்டு தோய்த்து சுடும் போது அதிக எண்ணை உள்ளே இழுக்கும்.இப்படி பொடியாக வெட்டுவதால் எண்ணையில் போட்டதும் சீக்கிரம் வெந்துவிடும். உடனே எடுத்து விடலாம். குழந்தைகளுக்கும் சாப்பிட இலகுவாக இருக்கும்.
2. வாழைக்காய் தவிர மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் ரொம்ப தண்ணியாக இல்லாமலும், கட்டியாக இல்லாமலும் பஜ்ஜி பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
3. எண்ணையை சூடுபடுத்தி வானலியில் கொள்ளும் அளவிற்கு போட்டு பொரித்து எடுக்கவும்.
4. சுவையான வாழைக்காய் பஜ்ஜி ரெடி, புதினா துவையல்,பொட்டுகடலை துவல், கெட்சப்புடன் சாப்பிடவும்.
5. இது விரும்பியவர்கள் நீளவாக்கிலும் கட் செய்து சுட்டு சாப்பிடலாம்.
கொட மிளகாய் பஜ்ஜி
மிளகாய் பஜ்ஜி என்றது மெரினா பீச் தான் நினைவுக்கு வரும், சில பேருக்கு சாப்பிட ஆசையா இருந்தாலும் அதில் உள்ள காரம் வயிற்று வலிக்கும், அல்சர் வரும் என்று சில சாப்பிடுவதில்லை. காரமில்லாமல் மிளகாய் பஜ்ஜி சாப்பிடவும் ஒரு வழி இருக்கு.இது வாய் கசப்பிற்கு ரொம்ப நல்ல இருக்கும்.
எப்போதும் போல் வாழைக்காய் பஜ்ஜிக்கு உள்ள அள்விலேயே செய்யலாம்.
ஆனால் மிளகாயை கழுவி நீளவாக்கில் இரண்டாக (அ) பெரிய மிளகாயாக இருந்தால் நான்காக காம்போடு பிளக்கவும். உள்ளே உள்ள விதைகளை நீக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வினிகர்,சிறிது உப்பு, சர்க்கரை போட்டு கட் செய்த மிளகாயை பத்து நிமிடம் ஊறவைக்கவும். அதிக நேரம் ஊறினாலும் நல்ல தான் இருக்கும்.
இப்போது எப்போதும் போல அந்த ஊறிய மிளகாயை எடுத்து பஜ்ஜிகளாக சுட்டெடுக்கவும்.இனி இந்த மிளகாய் பஜ்ஜியை சாப்பிடும் போது ஆஸ் வூஸ் என்று சாப்பிட தேவையில்லை. சுவைத்தே சாப்பிடலாம்.
கெட்சப்புடன் சாப்பிட ஆஹா ஆஹா ஆஹா சுவை அபாரம்.
குறிப்பு
பஜ்ஜி என்றது எண்ணையா பிழியும், அதை சுடும் போது இரன்டு முன்று டிஷு (அ) பேப்பர் ( அ) கண் வடி வைத்து நல்ல வடித்து எடுத்தால் எண்ணை வடியும்.அதை மறுபடி எடுத்து வேறு டிஷு பேப்பரில் வைத்து சாப்பிடவும்.
பஜ்ஜியை எண்ணையில் போட்டது சும்மா பெறட்டி பெறட்டி விடக்கூடாது.அப்ப எண்ணை ரொம்ப குடிக்கும்.
சிம்மில் வைத்தும் பொரிக்கூடாது, எண்ணை உள்ளே ரொம்ப இழுக்கும்.
இது காய் கறி சாப்பிட குழந்தைகளுக்கு சாதத்திற்கு தொட்டு கொள்ள இது போல் ஏதாவது ஒரு காயில் பொரித்து கொடுக்கலாம்.
பஜ்ஜி என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவது.
அதை பல விதமாக செய்யலாம். இது அனைத்தும் நான் செய்யும் முறை.இதே போல் கத்திரிக்காய், காளிபிலெவர், வெண்டைக்காய் தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய், வெண்டைக்காய் எல்லாவற்றிலும் செய்யலாம்.
Tweet | ||||||
16 கருத்துகள்:
//மிளகாய் பஜ்ஜி என்றது மெரினா பீச் தான் நினைவுக்கு வரும்//
ஆனா !! இனிமேட்டு பஜ்ஜி இன்னாலே , தங்கச்சி ஜமீலா சொன்னா மேரி செஞ்ச பஜ்ஜி தான் நாபகம் வரும் , அக்காங் !!
செரி எனுக்கு ஒரு டவுட்டு இது மேரி துன்னாக்கா நானு தாரு பேரலு கணக்கா ஆயி பூட மாட்டேனா ? ஏற்க்கனவே இட்லி குண்டான் கணக்கா தான்
கீறேன் !! செரி ஆய்சைக்கி ஒன்னு துன்னலாம் !!
விதவிதமான பஜ்ஜிகள் செய்வதை..அருமையாக சொல்லியுள்ளீர்கள்.. நீங்கள் ஒரு சமையல் குறிப்பு புத்தகம் எழுதலாமே...
ஆஹா. விதவிதமா இருக்கே.
ஐ....எல்ல பஜ்ஜயும்...நல்ல இருக்கு அக்கா...
குறிப்பா பேபி கார்ன் பஜ்ஜி வித்யாசமா
இருக்கு...நன்றி.....அக்கா...
இத படிச்சதும் ஒரேசிரிப்பு தான் ரொம்ப வருஷம் முன் முனிம்மா , ராக்கம்மான்னு பிரெண்ட்ஸோடு சேர்ந்து கலாய்ச்ச ஞாபக வருது, திருப்பி பதில் கொடுக்கலாமா இல்ல இந்த டவுசர் பாண்டி, பதிவுலக கூட்டத்தையே இஸ்தாந்துருவாரா,,,
தங்கச்சின்னு வேறு சொல்லி பூட்டீங்க அய்ய பாண்டி அண்ணாத்த ஒருக்கா கண்ண கொஞ்சம் கய்விட்டு படிங்க என் பெயரை , ஜமீலா இல்ல ஜலீலா...
அட என்னைக்காவது ஒரு நாள் வெட்ட வேண்டியது தான் குட்டானை நினைத்தா எந்த நொருக்கு ஐயிட்டமும் துண்ண முடியாது..
அதிரை அபூபக்கர் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
புஸ்த்கமா போடனும்னு எனக்கும் ஆசை தான்
நன்றி உலவுடாட்காம்
ஆஹா. விதவிதமா இருக்கே
நவாஸ் உங்கள் கருத்துக்கு நன்றி.
சீமான் கனி, பேபிகார்ன் மட்டும் தான் வித்தியாசமா? காரமில்லாமல் மிளகாய் பஜ்ஜி எப்படி சாப்பிடனும் என்று சொல்லி கொடுத்துள்ளேனே மிளகாய் பஜ்ஜி படிக்கலையா?
பேபிகார்ன் பஜ்ஜி!! நான் இதுவரை சாப்பிட்டதே இல்லை, இப்போ எங்க வீட்டில புதுசா பிரட்டில் பஜ்ஜி போடுறாங்க, கெட்சப்புடன் சாப்பிட நல்லா இருக்கு. Good collection of Bajji!!
பஜ்ஜி கலக்ஷன் கலக்கலா இருக்கு ஜலிலாக்கா.நமக்கும் ஒரு ப்ளேட் அனுப்புங்க.
உங்கள் மற்றும் டவுசர் பாண்டி அண்ணாத்தே மெட்ராஸ் பாஷை படித்து ஒரே சிரிப்பு.
வித விதமான பஜ்ஜி ரொம்ப நல்லா இருக்கு , மிளகாய் பஜ்ஜி குறிப்பு சூப்பர்..
ஷபிக்ஸ் அந்த பிரெட் பஜ்ஜியை போட மறந்துடேன்.
ரொமப் நல்ல இருக்கும். எல்லாமே பிள்ளைகளுக்காக செய்வது
மேனகா உங்களுக்கு இல்லாததா? ம்ம் எடுத்துக்கங்க.
ரொம்ப யோசிச்சு தான் அந்த பதிவை போட்டேன்.
டவுசர் பாண்டி பதிவு போட்டதும் உடனே போடனும் என்று தோணுச்சு ..சும்ம ஜோக்குக்கு தான்
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி சாரு ,
எல்லாவித பஜ்ஜிமும் இருக்கே.. குறிப்புகளும் தெளிவாக இருக்கு .. அருமை அக்கா
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா