2. சில கிரேப்ஸ் புளிப்பாக இருக்கும் அதை அப்படி தண்ணீர் ஊற்றி குக்கரில் அல்லது வெளியில் வேக போடுங்கள்.
வெந்து ஆறியதும் நன்கு மசித்து வடிக்கடி அது ரொம்ப கட்டியாக இருந்தால் அத்துடன் தேவைக்கு தண்ணீர், சர்க்கரை (அ) குளுக்கோஸ் சேர்த்து குடிக்கவும்.
3. இல்லை புளிப்பு திராட்சையை புரூட் சாலடில் போட்டு சாப்பிட்டால் புளிப்பு தெரியாது.
4. ஹோட்டலில் உள்ல கிரேப் ஜூஸ் போல் செய்யனுமா கிரேப்பை எஸன்ஸ் சர்க்கரை சேர்த்து நன்கு மிக்சியில் அடித்து கொஞ்சம் தனியாக கிரேப்ஸை எடுத்து தோலெடுத்து உள்ளே உள்ள கொட்டையையும் நீக்கி விட்டுஅதை நான்காக அரிந்து ஜூஸுடன் போட்டு குடிக்கவும்.
5. பெண்களுக்கு ஏற்படும் அதிக உதிர போக்கை கட்டு படுத்தும் இந்த திராட்சை பழ ரசம். முன்று நாள் தொடர்ந்து குடிக்கலாம்.
6. கர்பிணி பெண்கள் வாய் கசப்பிற்கு பச்சை திராட்சையை சாப்பிடலாம்.7. பிளெம்ஸ் புளிப்பாக இருந்தால் அதை அப்படியே தக்காளி ரசம் போல் தக்காளிக்கு பதில் பிளெம்ஸை பயன் படுத்தி ரசம் வைக்கலாம்.
8. சில நேரம் பார்ட்டிக்கு வைத்து நிறைய பழங்கள் வேஸ்டாகி விட்டால் புரூட் காக்டெயில் மற்றும் புரூட்சேலட், பாலுதா செய்து விடலாம்.
9. சில குழந்தைகள் புரூட் ஜூஸ் குடிக்க மாட்டார்கள் அவர்களுக்கு புருட், பால், சிறிது ஐஸ்கீரிம் சேர்த்து அடித்து கொடுக்கலாம்
10 வெயிட்டை குறைக்க நினைப்பவர்கள் ஒரு நாள் முழுவதும் டயட் செய்ய பழங்கள் சாலட், ஜூஸ் என்று தேர்ந்தெடுத்து கொள்ளலாம். பழங்களில் உப்பு மிளகு தூள் சாட் மசாலா தூவி ஒரு பவுள் முழுவதும் சாப்ப்பிட்டு ஒரு பிளாக் டீ குடித்தால் ஒரு முழுமையான காலை உணவு சாப்பிட்டது போல் இருக்கும்.
11.குழந்தைகள் கிரேப்ஸை பார்த்ததும் அப்படியே எடுத்து வாயில் போட்டு முழுங்குவார்கள் , குழந்தைகளுக்கு கொடுக்கும் போது தோலெடுத்து கொட்டை எடுத்து கொடுக்கனும், இல்லை ஜூஸாக அடித்து கொடுத்து விடுங்கள்
11. கிரேப்ஸ், கிரேப் ஜூஸ் போன்றவை சாப்பிடும் போது குடிக்கும் போது சிலருக்கு தொண்டை அடைத்தது போல், தொண்டை கர கரப்பு ஏற்படும் அப்படி இருந்தால் கிரேப்ஸ் உடன் நான்கு இதழ் சாப்ரான் சேர்த்து அடித்து குடிகக்வும்
Tweet | ||||||
20 கருத்துகள்:
திராட்சை முன்னாடியெல்லாம் சாப்பிடமாட்டேன். இப்ப பச்சை(விதையற்றது)திராட்சை மட்டும் அதிகம் சாப்பிடுவதுண்டு. தகவலுக்கு நன்றி சகோதரி
வெயிட்டை குறைக்க நினைப்பவர்கள் ஒரு நாள் முழுவதும் டயட் செய்ய பழங்கள் சாலட், ஜூஸ் என்று தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.//
நல்ல தகவல். நன்றி சகோதரி..
//கிரேப்ஸ், கிரேப் ஜூஸ் போன்றவை சாப்பிடும் போது குடிக்கும் போது சிலருக்கு தொண்டை அடைத்தது போல், தொண்டை கர கரப்பு ஏற்படும் அப்படி இருந்தால் கிரேப்ஸ் உடன் நான்கு இதழ் சாப்ரான் சேர்த்து அடித்து குடிகக்வும்// டிப்ஸ்க்கு நன்றி ஜலிலாக்கா!!
wait kooda enna seiyalam??????????
அக்கா புளிப்பு பழம் என்பதால் நான் அதனை குடிக்க மாட்டேன். நீங்கள் சொல்லுவது போல் செய்து இனி சாப்பிட்டால் புளிப்பு தெரியாது என்று நினைக்கிறேன்.
நன்றிங்க!!!
அப்போ இனிமே எந்த நரியும் ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும்னு சொல்ல முடியாது!!!
நிஜமாவாவே கலராயிடுவனா ...
கருப்பு திராட்சைக்கும், சீட்லெஸ் பச்சை திராட்சைக்கும் என்ன வித்யாசம்? நண்பர் நவாஸ் கூறியது போல் என்னோட பேவரைட் பச்சை தான், அப்படியே சாப்பிடுவேன்.
//திராட்சை முன்னாடியெல்லாம் சாப்பிடமாட்டேன். இப்ப பச்சை(விதையற்றது)திராட்சை மட்டும் அதிகம் சாப்பிடுவதுண்டு. தகவலுக்கு நன்றி சகோதரி//
நவாஸ் திராட்சையில் இந்த கருப்பு திராட்சை ரொம்ப நல்ல இருக்கும், இதிலேயே பல வகைகள் இருக்கே,
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
அதிரை அபூ பக்கர் ஆமாம் வெயிட்டை குறைக்க நினைப்பவர்களுக்கு பசி எடுத்தால் நல்ல ஒரு கப் முழுவதும் , வேண்டிய பழம் எடுத்து சாப்பிடு ஒரு பிளாக் டீ குடித்தால் நல்ல வயிறு நிரம்பியது போல் இருகும்.
புளிப்பு பழஙக்ளை சிறிது உப்பு, சர்க்கரை , பெப்பர் பொடி, லெமென் ஜூஸ் ஒரு டிராப் சேர்த்து சாப்பிட்டால் புளிப்பு தெரியாது
ஆமாம் மேனகா, என் பையனுக்கு சாப்பாட்டை விட ஜூஸ் அயிட்டம் தான் ரொம்ப பிடிக்கும், அதுக்கு புரூட் சேலட், கிரெப் ஜூஸ், எலலாத்துலயும் சளி பிடிக்காமல் இருக்க ஒரு பின்ச் பெப்பர் பொடி (அ) சுக்கு பொடி (அ) சாப்ரான் கலந்து கொடுப்பேன்.
இது குளிர்காலத்தில் இரவில் அவ்வளவா சாப்பிட கூடாது சளி பிடிக்கும்.
கருத்துக்கு மிக்க நன்றி மேனகா
வாங்க ஷா வருகைக்கு மிக்க நன்றி , வெயிட் கூட குறிப்பு பதிவில் பிரகு போடு கிறேன்
//அக்கா புளிப்பு பழம் என்பதால் நான் அதனை குடிக்க மாட்டேன். நீங்கள் சொல்லுவது போல் செய்து இனி சாப்பிட்டால் புளிப்பு தெரியாது என்று நினைக்கிறேன்//
பாயிஜா புளிப்பா இருந்தால் ஒரு பின்ச் உப்பு = கொஞ்சம் சர்கக்ரை தூவி சாப்பிடுங்கள், இப்ப நீங்க மாதுளை வங்கி சாப்பிடுங்கள் அதுவும் புளிபபஅ இருந்தால் சாப்ரான் சேர்த்து ஜூஸ் அடித்து குடிங்க.
குழந்தைகள் திரட்சை பாத்தது அப்ப்டியே போட்டு மென்று சாப்பிடாமல் முழுங்குவார்கள் , அது அப்ப்டியே நெஞ்சில் நிற்கும் ,ஆகையால் அவர்களுக்கு சாப்பிட தோதுவாகொடுக்கனும்
//அப்போ இனிமே எந்த நரியும் ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும்னு சொல்ல முடியாது//
ராஜ் சான்ஸே இல்லை, சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று சொல்ல
அது எப்படி உடனே நரி கதை ஞாபகம் வந்து விட்டது.
//ஆமாம் டிரை பண்ணி பாருங்களே/
நட்புடன் ஜமால் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
பிளெம்ஸை பயன் படுத்தி ரசம் வைக்கலாம???
தகவல் எல்லாமே அருமை அக்கா....அப்போ இனிமேல் புளிப்புக்கு கூட்ப்யே.. தான்....
ஆமாம் சீமான் கனி பிளெம்ஸை பயன் படுத்தி ரசம் வைக்கலாம்.
இனி புளிப்பு திராட்சைக்கு குட் பை தான்,,,
excellent..
cheers,
ammu.
Thank you ammu
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா