தே.பொருட்கள்
பஜ்ஜி மாவிற்கு
மைதா மாவு = முன்று குழிகரண்டி
கார்ன் பிளார் மாவு = ஒரு குழிகரண்டி
பேக்கிங் பவுடர் = ஒன்னறை தேக்கரண்டி
எண்ணை = முன்று தேக்கரண்டி
உப்பு = சிறிது
சிக்கனில் மசாலா
சிக்கன் = முன்னூரு கிராம் (போன்லெஸ்)
காஷ்மிரி சில்லி பொடி = அரை மேசை கரண்டி
உப்பு தூள் = ருசிக்கு தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒன்னறை தேக்கரண்டி
லெமென் ஜுஸ் = அரை தேக்கரண்டி
எண்ணை = பஜ்ஜி பொரிக்க தேவையான அளவு
செய்முறை
1. சிக்கனை நன்கு கழுவி சிறிய துண்டுகளக போட்டு கொள்ளவும்.
2. சிக்கனை சிறிய துண்டுகளாக போட்டு மசாலா போட்டு அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
3. பஜ்ஜி மாவு கலக்க வேண்டியதை கட்டியாக கரைத்து பத்து நிமிடம் ஊறவைத்து கொள்ளவும்.
4. எண்ணையை காய வைத்து பஜ்ஜி போல சிக்கனை மைதா கலவையில் போட்டு தீயை மீடியமாக வைத்து வெந்ததும் பொரித்து எடுக்கவும்.
5. குழந்தைகளுக்கு பிடித்த யம்மி யம்மி சிக்கன் பஜ்ஜி ரெடி, பெரியவர்களுக்கும் ரொம்ப பிடிக்கும், செய்வது ரொம்ப சுலபம்.
குறிப்பு
நல்ல சுவையான சிக்கன் பஜ்ஜி, இது போல் கடலை மாவிலும் முட்டையெல்லாம் சேர்த்து செய்யலாம்.இதே போல் இரண்டு முன்று வகையாக செய்யலாம்.
15 கருத்துகள்:
ரொம்ப நல்லாயிருக்கு அக்கா
சிக்கனா எஸ்கேப்... ஃபோட்டோ நன்றாக இருக்கு..
போட்டோவினை பார்க்கும் போதே அதன் சுவை தெரிகிறது ஜலிலாக்கா.
ம்ம்ம்ம்ம்ம்.. பார்க்கவே அருமையா இருக்குங்க..
யம்மி யம்மி சிக்கன் பஜ்ஜி ...சுப்பெர்ர்ர்ர்....
தினமும்...எப்படி அக்கா...இப்டி....சான்ஸ் சே...இல்ல....
நன்றி அக்கா...
By,
பஜ்ஜி அண்ணா...
pls see this link,take it
http://sashiga.blogspot.com/2009/09/blog-post_8241.html
அருமை.
விதம் விதமாக செய்து பார்க்கின்றீர்கள்
வாழ்த்துகள்
வருகைக்கு மிக்க நன்றி உலவுடாட்காம்.
//ரொம்ப நல்லாயிருக்கு அக்கா//
குழந்தைகள் இதை டேஸ்ட் செய்தார்கள் விட மாட்டார்கள்.
//யம்மி யம்மி சிக்கன் பஜ்ஜி ...சுப்பெர்ர்ர்ர்....
தினமும்...எப்படி அக்கா...இப்டி....சான்ஸ் சே...இல்ல....
நன்றி அக்கா//
பஜ்ஜி சாரி புஜ்ஜி அண்ணா உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
pls see this link,take it
http://sashiga.blogspot.com/2009/09/blog-post_8241.html
மிக்க நன்றீ மேனகா. தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவதற்கும் மிக்க நன்றி
//அருமை.
விதம் விதமாக செய்து பார்க்கின்றீர்கள்
வாழ்த்துகள்//
பாராட்டுக்கு நன்றி சகோதரர் ஜமால், இது பிள்ளைகளுக்காக அடிக்கடி செய்வது , இதே இரண்டு முன்று முறையில் செய்வேன்.
சிக்கனா எஸ்கேப்... ஃபோட்டோ நன்றாக இருக்கு..
தர்ஷினி நன்றி.
சிக்கன் பஜ்ஜி நமக்கு புடிச்ச ஒன்னு. நோன்பு கஞ்ஜிக்கு நல்ல கம்பெனி
ஆமாம் நவாஸ் இது கஞ்சிக்கு ஏற்றது.
எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும்.
உங்களுக்கு மீண்டும் நன்றி, என் பதிவை தமிலிஷில் போட்டு பிரபலமாக்கியதே நீஙக்ள் தான்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா