Friday, September 11, 2009

உளுந்து பருப்பு போண்டா - urad Dal Bonda





போண்டா என்றாலே சென்னையில் உள்ள‌ திருவல்லிகேனியில் இருக்கும் ர‌த்னா கேஃபே தான் ஞாபகம் வரும் அங்கு தான் இது ரொம்ப பேம‌ஸ். அங்கு கிடைக்கும் போண்டாவின் சுவையே த‌னி.இப்போது ம‌ற்ற‌ இட‌ங்க‌ளிலும் கிடைக்கிற‌து. என‌க்கு ரொம்ப‌ பிடித்த‌ அயிட்ட‌ங்க‌ளில் இதுவும் ஒன்று. இது ர‌த்னா கேஃபே அள‌விற்கு சுவை இல்லை என்றாலும் என் சுவைக்கு இதை நான் இந்த முறையில் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ செய்து வ‌ருகிறேன்.







தேவையான‌ பொருட்க‌ள்

உளுத்தம் பருப்பு = ஒரு டம்ளர்
அரிசி = ஒரு மேசை கரண்டி
க‌ட‌லை ப‌ருப்பு = ஒரு தேக்க‌ர‌ண்டி
உப்பு = தேவைக்கு
ஆப்ப சோடா கால் தேக்கரண்டி
தேங்காய் = இரண்டு பத்தை
மிளகு = ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை = இரண்டு மேசை கரண்டி
பெருங்காய‌ப் பொடி = ஒரு பின்ச்(தேவைப‌ட்டால்)


செய்முறை

1. உளுந்து ப‌ருப்பு, க‌ட‌லை ப‌ருப்பு, அரிசி மூன்றையும் ஒரு ம‌ணி நேர‌ம் ஊற‌வ‌த்த்து மிக்சியில் அரைக்க‌வும்.அரைத்து முடிக்கும் போது மிள‌கை சேர்த்து ஒரு சுற்று சுழ‌ற்றி எடுக்க‌வும்.

2. உப்பு + ஆப்ப‌சோடாவை ஒரு ஸ்பூன் த‌ண்ணீரில் க‌ரைத்து மாவில் க‌ல‌க்க‌வும். தேங்காயை பொடிப்பொடி சில்லாகாக‌ ந‌ருக்கி சேர்க்க‌வும். க‌ருவேப்பிலையை பொடியா அரிந்து க‌ல‌க்க‌வும்.

3. மாவை ந‌ன்கு பிசைந்து சிறிது த‌ள‌ர்த்தியாக‌ இருக்க‌ட்டும்.

4. போண்டா பொரிக்க‌ தேவையான‌ அள‌வு எண்ணையை காய‌வைத்து தீயின் த‌ன‌லை மீடிய‌மாக‌ வைத்து போண்டாக்க‌ளாக‌ உருண்டை பிடித்து போட‌வும். இது வேக‌ லேட்டாகும் பொறுமையாக மெதுவாக‌ பொரித்து எடுக்க‌வும்.






குறிப்பு


இத‌ற்கு எண்ணை கொஞ்ச‌ம் நிறைய‌ ஊற்றி பொரிக்க‌வும். வேக‌ டைம் எடுக்கும் மெதுவாக‌ பிர‌ட்டி விட்டு ந‌ன்கு சிவ‌ந்து வ‌ரும் போது எடுத்து எண்ணையை வ‌டித்து எடுக்க‌வும்.இது மிள‌கு வாச‌ம் சாப்பிடும் போது ரொம்ப‌ ம‌ண‌மாக‌ இருக்கும்.
சாம்பார், பொட்டுக‌ட‌லை துவைய‌ல், புதினா துவைய‌ல் எல்லாம் பொருந்தும்.
காலையில் உப்புமாவிற்கு ந‌ல்ல‌ காம்பினேஷ‌ன்.குழ‌ந்தைக‌ளுக்கு ஏற்ற‌ மாதிரி சிறிய‌ போண்டாவாக‌ செய்து கொடுக்க‌லாம். தேவைப‌ட்டால் ப‌ச்ச‌மிள‌காய் சிறிது பொடியாக‌ அரிந்து போட்டு கொள்ள‌லாம்.

10 கருத்துகள்:

Unknown said...

அக்கா இது புது மாதிரியான கலவையில் போண்டா இருக்கு செய்து பார்க்கிறேன்

ப்ரியமுடன் வசந்த் said...

ஆஹா நம்மூர் போண்டா கண்ணுல பாத்து எம்பூட்டு நாளாச்சு இந்த அரபிகள் கண்ணுலயே காட்ட மாட்டேன்றாய்ங்களே....

நட்புடன் ஜமால் said...

சூடா சட்னியோடு இருந்தால் சாப்பிடலாம்

நன்றிங்கோ.

Jaleela Kamal said...

பாயிஜா ஆமாம் இது ரொம்ப‌ ந‌ல்ல‌ இருக்கும். க‌ருத்து தெரிவித்த‌மைக்கு மிக்க‌ ந‌ன்றி

Jaleela Kamal said...

ஆஹா நம்மூர் போண்டா கண்ணுல பாத்து எம்பூட்டு நாளாச்சு இந்த அரபிகள் கண்ணுலயே காட்ட மாட்டேன்றாய்ங்களே....

வாங்க‌ பிரிய‌முட‌ன் வ‌ச‌ந்த். வருகைக்கும், க‌ருத்து தெரிவித்த‌மைக்கும் மிக்க‌ ந‌ன்றி

ஆமா இது ந‌ம்முர் போண்டா, அர‌பிக‌ளுக்கு தெரிந்த‌தெல்லாம் பிலாபில் ஒன்று தான்

Jaleela Kamal said...

நவாஸ் சட்னியோடு சூப்பரா இருக்கும் அந்த அளவிற்கு பொருமை இல்லை சட்னி வைத்து போட்டோ எடுக்க
உங்களுக்கும் மிக்க நன்றிங்கோ

சாருஸ்ரீராஜ் said...

நான் செய்யும் முறை இது தான் ஆனால் நான் கடலை பருப்பு சேர்ப்பதில்லை , ஏன் கடலை பருப்பு சேர்க்கனும் . கொஞ்சம் சொல்லுங்கள் , இந்த முறையில் செய்து பார்கிறேன்

Jaleela Kamal said...

சாருஸ்ரீ கடலை பருப்பு சேர்ப்பதால் கொஞ்சம் கிரிஸ்பி + கலர் கிடைக்கும்.

வ‌ந்து க‌ருத்து தெரிவித்த‌மைக்கு மிக்க‌ ந‌ன்றி.

parveen said...

I tried this recipe yesterday it came very superb, thanks jaleela sister

Jaleela Kamal said...

மிக்க நன்றி செய்து பார்த்து உடனே வந்து தெரிவித்தமைக்கு

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா