1. பத்து பாத்திரங்களை தேய்த்து, துணிதுவைக்கும் சோப்பு ஒத்து கொள்ளாமல். தரையை துடைக்கும் பிளீச்சிங் ஒத்து கொள்ளாமல் கை விரல்களில் நகங்கள் அழுகிவிடும்.
இதன் பின் விளைவு பல வியாதிகளை உண்டாக்கும்.
2. கையில் சிலருக்கு நக சுத்தி வந்து பாடா படுத்தும் புளி கரைக்க முடியாது, மீனுக்கு மசாலா தடவ முடியாது.எந்த காயையும் அரிய முடியாது.
3. இதற்கு எலுமிச்சை பழத்தை கை விரலின் மேல் தொப்பி போல் வைப்பார்கள்.
இது அந்த அளவிற்கு கேட்காது.
//மருதாணி தான் பெஸ்ட்//
***************
மருதாணி பவுடர் தொப்பி வைக்க தேவையான அளவு
மஞ்சள் தூள் = ஒரு தேக்கரண்டி
கிராம்பு = நான்கு
கடுகு எண்ணை = ஒரு தேக்கரண்டி
நீலகிரி தைலம் = ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு = ஒரு தேக்கரண்டி
டீ தூள் = ஒரு தேக்கரண்டி
தண்ணீர் = முக்கால் கப்
சர்க்கரை = அரை தேக்கரண்டி
செய்முறை
***********
1. தண்ணீரை கொதிக்க வைத்து அதில் டீ தூளை போட்டு நன்கு கொதிக்கவிட்டு சர்க்கரஈ சேர்த்து கலக்கி வடி கட்டவும்.
2. மருதாணியில் , மஞ்சள் தூள் சேர்க்கவும், கிராம்பை பொடி செய்து சேர்க்கவும், எலுமிச்சையை சாறெடுத்து ஊற்றி கலக்கவும்.
3. இதில் வடிகட்டிய டீ டிகாசனை தேவைக்கு கலந்து கொள்ளவும்.
4. கடைசியாக கடுகு எண்ணை, நீலகிரி தைலம் சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊறவைத்து ஆறியதும் அதை கையில் உள்ள நகத்துக்கு தொப்பி போல் வைக்கவும்.
5. இது தொடர்ந்து முன்று நாட்கள் வைக்கவும், முதல் நாள் வைக்கும் போதே வலி எல்லாம் குறைந்து விடும்.
6. கையும் அழகாச்சு,வலியும் போயே போச்சு.இது நான் பல பேருக்கு சொல்லி கை நகம் சரியாகி உள்ளது.
குறிப்பு:
*******
தொப்பி வைக்கும் போது கரெக்ட்டாக ஷேப்பாக வைக்க சின்ன சல்வார் டேப்பை எது வரை வைக்க போகிறீர்களோ அதுவரை சுற்றி மருதாணி இடவும்.
குளுமை உடம்பு உள்ளவர்கள், மருதாணி வைத்தால் உடனே சளி பிடிக்கும், தும்மல் வரும் என்பவர்கள்.
ஒரு மணி நேரத்துக்கு மேல் வைக்க வேண்டாம்.அப்படியே வைத்தாலும், கை மணிக்கட்டு, கழுத்து நரம்புகளுக்கு ஏதாவாது ஒரு தைலத்தை தடவி கொள்ளவும்.
இது நான் நிறைய பேருக்கு சொல்லி விரல் நகம் சரியாகி உள்ளது.
11 கருத்துகள்:
சூப்பர் டிப்ஸ்!!
படிக்க நிறைய விஷயம் இருக்கு உங்கள் ப்ளாகில். உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்.
thanks sister please write more like this
very nice
மிக்க நன்றி மேனகா. இது நான் பல பேருக்கு சொல்லி சரியாகி உள்ளது
//படிக்க நிறைய விஷயம் இருக்கு உங்கள் ப்ளாகில். உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்//
கவிதை வாங்க உங்கள் வரவுக்கும், உடனே கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி. அடிக்கடி வந்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.
//thanks sister please write more like this/
ஏற்கனவே நிறைய டிப்ஸ் இருக்கு பாருங்கள்
பெயர் யாருன்னு தெரியல தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க்க நன்றி. தொடர்ந்து தங்கள் வருகை தரவும்.
//anboduungalai said...
very nice//
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து தங்கள் வருகை தரவும்.
பயனுள்ள பதிவு.. உங்க எல்லா இடுகைகளும் நல்லாயிருக்கு!
கலையரசன் , ரொம்ப சந்தோஷம், உங்கள் வருகைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி
ம்.ம். நல்ல விடயங்கள் குறிப்புகள் ஜலீலா...
பிரயோசனமான பதிவு. வாழ்த்துக்கள்!
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா