Monday, November 16, 2009

இஸ்லாமிய இல்ல விசேஷ‌ சமையலுடன் தக்காளி ஹல்வா





இது என் 300 வ‌து ப‌திவு இந்த‌ பிலாக்கில். இது இஸ்லாமிய‌‌ இல்ல‌ விசேஷ‌த்தில் செய்யும் பல சமையல் வகைகளில் இதுவும் ஒன்று .இதே போல் தேங்காய்பால் சாதம் , மருந்து சோறுக்கும் இது ரொம்ப நல்ல பொருந்தும். இது போல் ப‌க‌றா கானா, மீன் குழ‌ம்பு, மீன் பிரை, த‌க்காளி ஹ‌ல்வா, பிளெயின் தால் வைப்போம், இத்துட‌ன் ச‌ப்பாத்தி (அ) தோசை (அ) இடியாப்ப‌மும் சேர்த்து வைத்தால் இன்னும் ரிச்சாக‌ இருக்கும்



தேவையான பொருட்கள்

தக்காளி ‍ ஒரு கிலோ
சர்க்கரை ‍ 400 கிராம்
நெஸ்லே க‌ண்டென்டஸ்ட் மில்க் = 200 கிராம்
நெய் - 150 கிராம்
ஏலக்காய் - 6
பாதம் ‍ 100 கிராம் (ஒன்றும் பாதியுமா பொடித்தது)
உப்பு - ஒரு சிட்டிக்கை
முந்திரி - 75 கிராம்
பிஸ்தா, அக்ரூட் = 25 கிராம்
கிஸ்மிஸ் பழம் - 25 கிராம்
கோதுமைமாவு - இரண்டு தேக்கரண்டி



செய்முறை

முதலில் தக்காளியை மூழ்கும் அளவு த‌ண்ணீர் விட்டு மூன்று விசில் விடவும்.

வெந்த த‌க்காளி ஆறியதும் தோலை எடுத்து விட்டு பழத்தை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

அரைத்த தக்காளியில் ஏலக்காய்,உப்பு, 50 கிராம் நெய், அனைத்தையும் போட்டு வேகவிடவும்.
ஒரு பத்து நிமிடம் வெந்தால் போதும் பிறகு பொடித்து வைத்துள்ள பாதாமை போட்டு சர்க்கரையை சேர்த்து கிள‌ற‌வும்.

சர்க்கரையை போட்டதும் தண்ணீ போல் ஆகிவிடும்.

நல்ல கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.

கடைசியாக கனண்டென்ஸ்ட் மில்க்கை ஊற்றவும், கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்ததும் அடி பிடிக்கும் ஆகையால் இடை இடையில் கிள‌றி விட‌வும்.

முந்திரி வ‌றுக்க‌ தேவையான‌ நெய் த‌விர‌ மீதி நெய்யை ஊற்றி ந‌ன்கு கொதிக்க‌ விட‌வும்.

தண்ணீர் வற்றவிலை என்றால் கோதுமையை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து ஊற்றவேண்டும். கட்டியாகிவிடும்.(தேவைப்ப‌ட்டால் தான் ஊற்ற‌னும்) நாங்க‌ முன்று கிலோ செய்யும் போது த‌ண்ணி விடும் ஆகையால் கோதுமை மாவு கரைத்து சேர்ப்போம்.

கடைசியில் மீதி உள்ள நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் பழம் வறுத்து தூவி இரக்கவும்.


மீன் குழ‌ம்பு





பிளெயின் தால்




குறிப்பு:


இது பேரித்தம் பழம் சேர்த்து இந்த ஹல்வா செய்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.


இடை இடையில் நெய் ஊற்றிகிளறவும்.இல்லை என்றால் அடிபிடித்து விடும்.நான் ஸ்டிக் பேனில் செய்தால் நல்லது.


இது என் மாமியார் வீட்டில் பெரிய‌ விஷேஷ‌ங்க‌ளுக்கு அடிக்க‌டி செய்வ‌து, என் அம்மா வீட்டில் பீட்ரூட் கேர‌ட் ஹ‌ல்வா, இந்த தக்காளி ஹல்வா என் கிரான்மா விற்கு ரொம்ப‌ பிடித்தது.

நானும் என் கிரான்மாவும் அப்போ இனைபிரியாத தோழிகள் எல்லா பேத்திமாரும் பார்த்து பொறாமைபடும் அளவிற்கு, ஒரு நாள் கூட என்னை பார்க்காமல் அவர்களால் இருக்க முடியாது. (1985 லிருந்து 1993 வரை)நான் படிக்கட்டிலிருந்து ம்ம்ம்மா ம்மாஅ என்று கூப்பிடும் போது மேலே கதவை திறக்க வரும் போது என் செல்ல மவளே வந்துட்ட்டீயாமா என்று சொல்லி கொண்டே வந்து கதவை திறப்பார்கள். இத பற்றி பேசனும் என்றால் நிறைய இருக்கு மலரும் நினைவுகள்

300 வது பதிவு,
பிரியாணிக்கு ஏற்ற ஸ்வீட் இஸ்லாமிய இல்லங்களில் விஷேஷ‌ங்களில் அடிக்கடி செய்யக்கூடிய ஸ்வீட்.

35 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் said...

முதலில் 300-வது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அதிரை அபூபக்கர் said...

300-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.. தொடருங்கள் 500-யை தாண்டி...

தக்காளி sweet அருமை...

Anonymous said...

wow! super laatha!

asiya omar said...

வாழ்த்துக்கள்,ஜலீலா.இதற்குள் 300 பதிவு போட்டாச்சா?நான் பார்க்க வேண்டியது நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய இருக்கு.

Chitra said...

Congrats on ur 3rd century..All the dishes are super :)

S.A. நவாஸுதீன் said...

தக்காளி ஸ்வீட் ரொம்ப ரொம்ப பிடிச்சதாச்சே.

S.A. நவாஸுதீன் said...

வலிமா விருந்தில் பிரியாணி என்றாலே இதுவும் இருக்குமே

GEETHA ACHAL said...

தங்கள் 300வது பதிவிற்கு வாழ்த்துகள்..

போன பதிவிலே வாழ்த்து கூறி இருந்தாலும்,,இன்னொருமுறை வாழ்த்துகள்...

தக்காளி ஹல்வா சூப்பர்ப்...

கோதுமை மாவிற்கு பதிலாக மைதா மாவு உபயோகிக்கலாமா...

இதுவரை தக்காளி ஹல்வாவில் கண்டன்ஸ்டு மில்க சேர்த்தது கிடையாது..

அடுத்த முறை செய்யும் பொழுது ட்ரை செய்து பார்க்கிறேன்.

நன்றி

அப்துல்மாலிக் said...

congrates for 300

Menaga Sathia said...

300 வது பதிவுகள் வாழ்த்துக்கள் ஜலிலாக்கா!!மேலும் நிறைய குறிப்புகள் கொடுக்கவும் வாழ்த்துக்கள்.

தக்காளி அல்வாவுடன் கொண்டாடிட்டீங்க.

நனும் இதில் பால்+கோதுமை மாவு சேர்த்ததில்லை.

Jaleela Kamal said...

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி நவாஸ்

Jaleela Kamal said...

அதிரை அபூப்பக்கர் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி, ஏற்கனவே வெப் சைட்டில் 500 க்கு மேல் ரெசிபிகள் கொடுத்தாச்சு.

Jaleela Kamal said...

ந‌ன்றி நாஸியா

Jaleela Kamal said...

சித்ரா

Thank you chitra

Jaleela Kamal said...

ஆமாம் ந‌வாஸ் இது க‌ல்யாண‌ம் முடியும் போது மாப்பிள்ளைக்கு ம‌றுவீடு சாப்பாடு மீன் சாப்பாடு என்பார்க‌ள், ஆனால் இது கூட‌ இன்னும் நாலு ஐந்து அயிட்ட‌ம் கூட‌ இருக்கும்

Jaleela Kamal said...

கீதா ஆச்ச‌ல் உங்க‌ள் பாராட்டுக்கு மிக்க‌ ந‌ன்றி.
இதில் கோதுமைமாவு தான் இது வ‌ரை அதுவும் நிறைய‌ செய்யும் போது தான் ரொம்ப‌ ச‌ர்க‌க்ரை சேர்த்த‌தும் த‌ண்ணீயாகும், கொதிக்கும் போது மேலே தெரிக்கும் பார்த்து கிள‌ற‌னும்.
பாத‌ம் பொடித்து சேர்ப்ப‌து என் ஐடியா அதுவும், க‌ண்டென்ஸ்டும் தான் த‌னி ருசி.
என‌க்கு தெரிந்து கோதுமைக்கு ப‌தில் மைதா போட‌லாம்.

Jaleela Kamal said...

ந‌ன்றி அபுஅஃப்ஸ‌ர்

Jaleela Kamal said...

மேனகா நாங்க‌ இந்த‌ முறையில் தான் செய்வோம், ஊரில் இனிப்பில்லா பால் கோவா போடுவார்க‌ள்/

பாத‌ம் + க‌ண்டென்ஸ்ட் மில்க், கோதுமை எல்லாம் சேர்ந்தால் அது ஒரு த‌னி ருசி.
ந‌ன்றி மேனகா

Saraswathy Balakrishnan said...

What a spread ma..pakumbothe sapdanum pole iruku...esp the tomato :)

ஸாதிகா said...

ஆஹா..அசத்துகின்றீர்களே!!படத்தைப்பார்த்ததும் உடனே இதே போல் செய்ய வேண்டும் போல் உள்ளது.மீன் குழம்புதான் கொஞ்சம் உதைக்கின்றது.

ஸாதிகா said...

300ஆவது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜலி.விரைவில் பத்து சதம் அடிக்க வாழ்த்துக்கள்

suvaiyaana suvai said...

தங்கள் 300வது பதிவிற்கு வாழ்த்துகள்

சீமான்கனி said...

300ஆவது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா...தக்காளி அல்ல்வாவா??? நான் இப்போதான் பாக்குறேன் சூப்பர்...இன்னும் கலக்குங்கள்....வாழ்த்துகள்..

பித்தனின் வாக்கு said...

முன்னூறாவது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள். உங்களின் பொறுமையும், ஆர்வமும் தங்களை இந்த அளவு கொண்டுவந்துள்ளது. இன்னமும் ஆயிரம் ஆயிரம் பதிவுகள் இட வாழ்த்துக்கள். நன்றி. மலைக்கு விரதம் ஆரம்பித்து விட்டேன். ஆதலால் தக்காளி அல்வா மட்டும் பார்சல் அனுப்பவும். நன்று. அருமையான பதிவு. நன்றி.

Jaleela Kamal said...

சரஸ்வதி ரொம்ப நன்றி.

ஸாதிகா வாங்க உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
ஏன் ஏன் மீன் குழம்பு உங்களை உதைக்கிறது.

சுவையான சுவை நன்றி

சீமான் கனி ஆமாம் தக்காளி ஹல்வா தான் பிஸியா நேரத்திலும் வந்து பாராட்டியதற்கு மிக்க நன்றீ.

சுதாகர் சார், ரொம்ப நன்றி, தக்காளி ஹல்வா தாராளமாக எடுத்து கொள்ளலாம், மீன் தவிர மீதி இரண்டு சமையலும் கூட வெஜ் தான் அதையும் சேர்த்தே எடுத்து கொள்ள‌லாம்.

Jaleela Kamal said...

வாங்க ஆசியா உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

shirin said...

jaleela sister 300 வ்து பதிவுக்கு எனது வாழ்த்துக்கள் உங்கள்து அருமையான் குறிப்பிக்ள் தொட்ர்ந்து தர என வாழ்த்துக்க்ள் உங்க த்க்களி அல்வா எல்லாம் பார்த்தவுட்ன் அருசுவை சாப்பிட்ட் மாதிரி இருக்கு இதே மாதிரி ஒவ்வொரு function க்கும் என்னலாம் செய்யலாம்னு உண்வு வ்கைக்ளை selected foods த்ந்த ரொம்ப ந்ல்லா இருக்கும் எல்லருக்கும் ஒரு idea கிடைக்கும் லாத்தா ரொம்ப ந்ல்லா இருக்கு

பாவா ஷரீப் said...

ஜலீ அக்கா 300 பதிவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
அனைத்து பதிவுகளையும் புத்தகமாக கொண்டு வரவும்.

பாத்திமா ஜொஹ்ரா said...

அனைத்து பதிவுகளையும் புத்தகமாக கொண்டு வரவும்.சுவையான சுவை.சூப்பர்...இன்னும் கலக்குங்கள்....வாழ்த்துகள்..

Anonymous said...

Hi akka,

congrats on your 300th post..thakkaali halwa super.

அன்புடன் மலிக்கா said...

300, வது குறிப்புக்கு. வாழ்த்துக்கள் ஜலீ,,க்கா.

இன்னும் தொடர்ந்து குறிப்புகள்தந்து ஜமாயிங்க..

அக்கா அக்கா வாழ்த்தெல்லாம் சொல்லியிருக்கேன்.. கொஞ்சம் தக்காளி ஹல்வா சுட சுட செய்து தாறீங்களா:{

Jaleela Kamal said...

sbs banu வாங்க புது வரவு
கண்டிப்பா நீஙக்ள் கேட்பது போல் செட் செட்டாக குறீப்பு கொடுக்கிறேன்

நன்றி கருவாச்சி, புத்தகமாகவா எல்லோரும் இதை தான் சொல்கிறார்கள். யாராவது உதவுங்கள்
ரொம்ப நன்றீ பாத்திமா.
அம்மு மிக்க நன்றி

மலிக்கா சுட சுட தானே எங்கு வந்து கொடுக்கனும் சொல்லுங்க வரேன் உடனே வரேன்.
பாராட்டுக்கு மிக்க நன்றி

Priya Suresh said...

Congrats Jaleela, thakkali halwa kuripuku migavum nandri..Udane saapidanam pola irruku..Manakuthu meen kuzhambu..

kanchana radhakrishnan said...

தங்கள் 300வது பதிவிற்கு வாழ்த்துகள்

Jaleela Kamal said...

கருத்து தெரிவித்தமைக்கும் உங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி பிரியா


நன்றி காஞ்சனா

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா