Sunday, November 1, 2009

சாப்ப‌ஸ் டிரை ம‌ட்ட‌ன் ஃப்ரை. - Mutton Chops fry



மட்டன் சாப்பஸ் துண்டுகள் = ஒரு கிலோ
மிளகு = இரண்டு தேக்கரண்டி
உப்பு = தேவையான அளவு
பச்ச மிளகாய் = ஆறு
தனியாத்தூள் = ஒரு மேசை கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் = நான்கு தேக்க‌ர‌ண்டி
எண்ணை + டால்டா(அ) ப‌ட்ட‌ர் = நான்கு தேக்க‌ர‌ண்டி
க‌ர‌ம் ம‌சாலா தூள் = அரை தேக்க‌ர‌ண்டி




ப‌ச்ச‌மிள‌காயை சிறிது த‌ண்ணீர் விட்டு ந‌ன்கு அரைக்க‌வும்.சாப்ப‌ஸ் ம‌ட்ட‌னை ந‌ன்கு சுத்த‌ம் செய்து அதில் அரைத்த‌ ப‌ச்ச‌ மிள‌காய், மிள‌கு தூள், த‌னியாதூள்,உப்பு தூள், சேர்த்து ந‌ன்கு பிர‌ட்டி 10 நிமிட‌ம் ஊற‌வைக்க‌வும்.

பிற‌கு குக்க‌ரில் ம‌ட்ட‌னை வேக‌ விட்டு இர‌க்கி ம‌ட்ட‌னில் உள்ள‌ த‌ண்ணீரை வ‌ற்ற‌விட‌வும்.

ஒரு நான் ஸ்டிக் த‌வ்வா (அ) தோசை க‌ல்லில் எண்ணை + டால்டாவை விட்டு வெந்த‌ ம‌ட்ட‌னை சேர்த்து க‌ர‌ம் ம‌சாலா தூள் தூவி ந‌ன்கு சிவ‌றும் வ‌ரை வ‌றுத்தெடுக்க‌வும்.



குறிப்பு

சாப்ப‌ஸ் துண்டு த‌னியாக‌ கிடைக்கிற‌து, அது இல்லை என்றால் எலும்புட‌ன் கூடிய‌ ம‌ட்ட‌னையே ப‌ய‌ன் ப‌டுத்த‌லாம்.
ஹோட்ட‌லில் வைக்கும் ரிச் சாப்ப‌ஸ் டிரை ம‌ட்ட‌ன் ஃப்ரை.
ஆனால் செய்வ‌தோ ரொம்ப‌ சுல‌ப‌ம்.

17 கருத்துகள்:

ஸாதிகா said...

சுலபமாக செய்யும் மட்டன் சாப்ஸ்.அழகான படங்களுடன் செய்து காட்டி இருக்கின்றீர்கள்.

S.A. நவாஸுதீன் said...

சாப்ஸ் போட்டு சப்பு கொட்ட வச்சிட்டீங்க.

Yousufa said...

அக்கா,

அழகா இருக்கு; எனக்கு ரொம்பவும் பிடித்த ஐட்டம். சாப்ஸ் தனியாக கிடைக்கிறதா சூப்பர்மார்க்கெட்களில்?

Menaga Sathia said...

its really superr!!

அதிரை அபூபக்கர் said...

உங்கள் சமையல் குறிப்புகள் அனைத்துமே படங்களுடன் தருகிறீர்கள்.. அருமை.

GEETHA ACHAL said...

Yummy...Looks tempting...Nice recipe...My mother-inlaw is an expert in cooking mutton chops..Thanks.

Anonymous said...

Karam masala?

thaniya powder?

English names or other tamil names for these spices please ....I want to try..

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

நாவாஸ் இது எங்க அத்தானுக்கு ரொம்ப பிடித்தது, இன்னும் இரண்டு முறைகளில் இதை செய்யலாம்.

ஹுஸைனாம்மா ஆமாம் எல்லா பட்ஸ் பீஸுமே தனித்தனியாக கிடைக்கிறது.

எப்போது ஒவ்வொருதடவை மட்டன் வாங்கும் போதும் நாலு நாலு பீஸா சேர்த்து வைத்து செய்வேன், ஆனால் கேரிபோரில், மாயா லால்ஸில் தனியா சாப்ஸ், சூப் வைக்கும் எலும்பு எல்லாமே தனித்தனியாக இருக்கு.
அப்படி வாங்கி தான் செய்த்தேன்.

நன்றி மேனகா/

Jaleela Kamal said...

அதிரை அபூபக்கர் வாங்க இடையில் கொஞ்ச நாளா ஆளை காணும்.

ரொம்ப நன்றி, எல்லாமே ஸ்டெப் பை ஸ்டெப் இருக்கு ஆனால் போட நேரமில்லை.

Jaleela Kamal said...

கீதா ஆச்சல் மிக்க நன்றி. இது கிரேவி போல் ரெட் மசாலா கொடுத்தும் இதே போல் டீப் பிரை செய்யலாம்.

Jaleela Kamal said...

அனானி யாருன்னு தெரியல.

பெய‌ர் சொல்லி இருக்க‌லாம்.. ச‌ரி

1). க‌ர‌ம் ம‌சாலா 3 வ‌கை உண்டு.

அதில் இது ஒன்லி (ப‌ட்டை, கிராம்பு, ஏல‌ம்)

ப‌ட்டை ஒரு ப‌ங்கு என்றால் அதில் பாதி கிராம்பு, அதில் பாதி ஏல‌ம்)

திரித்து கொள்ள‌வும்.

2).த‌னியா என்ப‌து கொத்து ம‌ல்லி தூள். கோரிய‌ண்ட‌ர் ப‌வுட‌ர்.

இதில் கிரீன் மசாலா பிடிக்காதவர்கள் மிளகாய் தூளும் பயன் படுத்தலா,
கரம் மசாலா ரெடி மேட் தூள் இருந்தாலும் பயன் படுத்தலாம்.

Anonymous said...

romba super.I love it.

Sarah Naveen said...

Oh wow!!!
Mutton chops fry looks so yummy... i m drooling here...gr8 job!!!

சீமான்கனி said...

ஆஹா...அக்கா படிக்கும்போதே நாக்குல தண்ணி வருது...எனக்கு பிடிச்ச மட்டன்லே...நிறைய வெரைட்டி போடுறிங்க அருமை நன்றி...

பித்தனின் வாக்கு said...

&&&&&& thanks

Jaleela Kamal said...

நன்றி அனானி

உங்க‌ள் பாராட்டுக்கு மிக்க‌
நன்றி சாரா நவீன்


சீமான் க‌னி ம்ம் ம‌ட்ட‌ன் ரெசிபி தானே போட்டுட்டா போச்சு.

ந‌ன்றி பித்த‌ன் சார் .

Anonymous said...

ரொம்ப நல்லா இருக்கு லாத்தா.. இன்ஷா அல்லாஹ் ட்ரை பண்ணி பாக்குறேன்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா