இட்லி என்றாலே அது போல ஒரு லைட்டான உணவு எதுவுமே கிடையாது.நமக்கு சட்னியோ ,குழம்போ வைத்து சாப்பிடுவோம். வயிற்று புண், அல்சர், வந்தவர்கள் கூட இந்த இனிப்பு இட்லியை சாப்பிடலாம். குழந்தைகளுக்கு என்று தனியாக செய்ய முடியாத போது
இப்படி கொடுத்தால் நல்ல சத்தான இட்லி சாப்பிட்ட மாதிரி ஆச்சு.
முட்டை தேன் இட்லி
முட்டை = ஒன்று
இட்லி மாவு = 5 இட்லி சுட தேவையான அளவு
தேன் = 5 தேக்கரண்டி
நெய் = சிறிது
முட்டையை நுரை பொங்க அடித்து கொள்ள வேண்டும்.அதில் தேனை கலந்து கொள்ளவும்.
இட்லி பாத்திரத்தில் நெய்யை தடவி அதில் ஓவ்வொரு குழியிலும் சிறிது மாவை ஊற்றி அதன் மேல் முட்டை கலந்த தேனை ஊற்றி மேலே சிறிது மாவு ஊற்றவும்.
இதே போல் 5 இட்லியிலும் சமமாக ஊற்றி இட்லி வேக 7 நிமிடம் ஆகும்.
வெந்ததும் எடுத்தால் பூப்போல் மெத்துன்னு இருக்கும்.
//குழந்தைகளுக்கு எந்த பக்க உணவும் இல்லாமல் சின்ன பீஸா கட் செய்து அப்படியே ஒரு ஃபோர்க்கை போட்டு கொடுத்தால் ஈசியாக சாப்பிடுவார்கள்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் கொடுத்து அனுப்பலாம். //
முட்டை மிளகு இட்லி
இனிப்பு இட்லி பிடிக்காத குழந்தைகளுக்கு இப்படி மிளகு சேர்த்து செய்து கொடுக்கலாம்.
இட்லி மாவு = 5 இட்லிக்குக்கு தேவையான அளவு
முட்டை = ஒன்று
மிளகு தூள் = ஒரு தேக்கரண்டி
உப்பு = சிறிது
நெய் = சிறிது
மிளகு, முட்டை, உப்பை நன்கு நுரை பொங்க அடித்து கொள்ளவும்.
இட்லி தட்டில் நெய்யை தடவி முதலில் சிறிது இட்லி மாவு பிறகு முட்டை கலவை மீண்டும் சிறிது இட்லி மாவு ஊற்றி இட்லிகளாக வார்த்து எடுக்கவும்.
எங்களுக்கெல்லாம் (நான் வெஜ் சாப்பிடுபவர்கள்) குழம்பில்லாமல் இரங்காது என்கிறீர்களா?
ம்ம் மீன் குழம்பு, சாம்பார், கால் பாயா , மட்டன் எலும்பு சூப் எல்லாம் இட்லிக்கு பொருந்தும், ஆனால் குழம்பு கட்டியா வைக்காமால் ஓடு தண்ணீரா வைக்கனும்.
இட்லி, பாகற்காய் சாம்பார்
சர்க்கரை வியாதி உள்ளவர்கள், பாகற்காய் சாம்பார் வைத்து கொள்ளலாம். சாம்பாரில் போடுவதால் பாகற்காயில் கசப்பு கூட இதில் தெரியாது.
இந்த ரெசிபி , என் தம்பி, என் தங்கை,என் தோழிகளின் குழந்தைகளுக்காக (8 மாத குழந்தைகளுக்கு) க்காக நான் முயற்சி செய்தது.
67 கருத்துகள்:
சொல்லியாச்சி
பாகர்காண்ட்ய் நெம்ப பிடிக்கும் கசப்பா இருந்தாலும் அப்படியே(சமைத்த பின்) சாப்பிடுவேன்
ஜலீலா கலக்குறீங்க..
உங்க வலைத்தளத்துக்கு வந்தவுடனே என் பெயரில் உள்ள உணவைத்தான் பார்த்தேன் ..ரசித்தேன்
ரொம்ப வித்யாசமா இருக்கு உங்கள் சமையல் அட்டகாசம் தொடரட்டும் வாழ்த்துக்கள்
என்னவோ போங்க , வுங்க வூட்டுகாரர் பாவம் , எப்டியும் அவருட்ட தான முதல்ல டெஸ்ட் பண்ணுவீங்க.அவரு ஜாதகம் அப்படி குரங்கா பொறந்தா ஏதாவது சயன்டிஸ்ட் கிட்ட மாடிருப்பாறு , பாவம் மனுசனா பொறந்து உங்கள்ட மாட்டிகிட்டார். (சும்மா தமாசு )
நல்லா யோசிக்கிறிங்க மேடம் , முட்டை இட்லி இப்பதான் கேள்விபடுறேன் , பிரிண்ட் எடுத்தாச்சு
நன்றி ஜமால் சொல்லியாச்சா அப்ப உடனே செய்ய சொல்லிடுங்க
வாங்க தேனக்கா உங்க பெயரை படித்ததும் இப்ப்டி தான் கூப்பிட தோனுது
வருகைக்கு மிக்க நன்றி, ரொம்ப சந்தோஷம்.
நல்ல பொருத்தம் உங்கள் வருகையுடன் தேன் இட்லி..
உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
அமைச்சருக்கு லொள்ள பாரு.
ஆமாம் இது குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக கேட்டார்கள், அதான் ரொம்ப யோசித்து இந்த ரெசிபி முயற்சித்து செய்து போட்டு இருக்கேன்.
முட்டை இட்லி..அட..உங்க அட்டகாசம் தாங்க முடியலியேப்பா.மீன் குழம்புடன் இட்லி..ம்ஹும் நினைத்துக்கூட பார்க்க முடியலே.
இட்லியை தேனில் தொட்டு கொடுத்து தான் பழக்கம்,சேர்த்தே அவிப்பது புதுசாக இருக்கு.முட்டை தோசை செய்வோம்,இங்கு முட்டை இட்லியா?அருமையான அட்டகாசங்கள்.
அருமை.. நாக்குல எச்சி ஊறுது; இந்த இட்லியை பார்த்தவுடன்
முட்டையும், இட்லிமாவும் அடித்து குழிப்பணியாரச் சட்டியில் ஊற்றி எடுப்பதுண்டு. இது புதுசு.
முட்டையை ஆவியில வேகவச்சா உப்பி, ஊதி வருமே, வெளியே சிந்திவிடாதாக்கா?
aahhh.. muttai idli... but ippa venaam :(
முட்டை இட்லி சூப்பர்
இட்லியை இப்படியும் செய்யலாமா! அசத்தறீங்க ஜலீலாக்கா
ஆஹா ரொம்ப தேங்ஸ்க்கா டிப்ரண்ட் ஹெல்தி புட் சொன்னதுக்கு நிச்சயம் டிரை செய்கிறேன்..இப்பதான் மெயில் படிச்சேன் இன்று காலையோட இட்லி மாவும் காலியாகிட்டு சோ அடுத்த முறை டிரை செய்கிறேன்..அக்கா அப்படியே ஒரே ஒரு எட்டுவந்து ஊட்டிட்டு போய்ட்டீங்கன்னா ரொம்ப இல்லை ரொம்பவே சந்தோசம் ஒரு வேலை இங்கே ஒரு வேளைக்கு ரூபிக்கு அம்மணிக்கு ஓகேவா :))
சகோதரி ஜலிலா
இட்லியில் இப்படி ஒரு வகையா?
இனி இட்லிக்கு சட்னி பகைதான்!
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்
ஜலீலக்கா முட்டை இட்லி சூப்பர்,ஆனா இதை நாந்தான் சாப்பிடணும்,சாமுக்கு தேனும்,முட்டையும் பார்த்தாலே ஓடி போயிடுவாரு:(
செஞ்சு பார்த்து சொல்றேங்க்கா...
ஆகா வித்தியாசமான உணவா இருக்கு முயற்சி செய்வோம்.
நன்றி ஜலீலா
பிகு: மான்புமிகு மங்குனி அமைச்சரே இந்த சமையல் குழந்தைகளுக்காக ஜலீலா கூறிய செய்முறை. நீங்கள் இதே இட்லிக்கு சாதா முட்டைக்கு பதில் டைனோசர் முட்டையில் செய்து சாப்பிட்டு பார்கவும்.
:-)))))))
நல்ல யேசிக்கிறீங்க சகோதரி, "எக் இட்லி" காலைல சாப்பிட்டாத்தான் உடம்புக்கு நல்லதுண்டு நான் நினைக்கிறேன்.
அக்கா, இப்போதான் இட்லிக்கு மீன் குழம்பும் தேங்காய் சட்னியும் வச்சு சாப்பிட்டு விட்டு வாரேன். :-)
அக்கா, விவிக்கா - இனிப்பு இட்லி ரெசிபி தரீங்களா? நன்றி.
நல்லா இருக்கு. முட்டை இல்லாமலும் தேன் மற்றும் கரும்புப் பாகில் தொட்டுச் சாப்பிட்டால் நல்லா இருக்கும். மிளகு இட்டிலிக்கு இட்லி ஆம்லேட்னு பேர் கொடுக்கலாம் போல, படம் நல்லா இருக்கு. பாகக் காய் இட்லி கூட அருமை. ஆனா எனக்கு முருங்கக்காய்,சின்ன வெங்காயம் போட்ட சாம்பாரில் ஊறிய மினி இட்லிதான் பிடிக்கும். நன்றி ஜலில்லா.
மங்குனி ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்.......
புதுசு புதுசு...அக்கா எனக்கு இப்பவே சாப்டனும் போல இருக்கு ஒரு பர்செல்....
இட்லியை இப்படியும் செய்யலாமா! அசத்தறீங்க jaleela
ஜலீலா!
வித்தியாசமான இட்லி! முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
ஆனா ஒரு சின்ன சந்தேகம். தேனை சூடுபண்ணக்கூடாதுன்னு
கேள்விப்பட்டிருக்கேன்.
ஆவியில் வேகவிட்டாலும் சூடாத்தானே ஆகும்.
ஜலதோஷத்திற்கு கூட தேனை வெதுவெதுப்பான பாலில்தான்
கலக்கச்சொல்வார்கள்!
தயவுசெய்து தவறாக நினைக்காமல் விளக்கவும்
அருமை.. நாக்குல எச்சி ஊறுது.
எட்டி பார்த்தேன்
எஸ்கேப் ஆனேன்...
செஞ்சாச்சு.சாப்ட்டாச்சு. ரியலி சூப்பர்ப்.
நேரமின்மையால் யாருக்கும் பதில் போடல , பிறகு போடுகிறேன்.
எம்,எம். அப்துல்லா ரொம்ப சந்தோஷம் செய்து பார்த்து சாப்பிட்டு வந்து பதில் சொன்னதற்கு.
இந்த ரெசிபி , என் தம்பி, என் தங்கை,என் தோழிகளின் குழந்தைகளுக்காக (8 மாத குழந்தைகளுக்கு) க்காக நான் முயற்சி செய்தது.
தேன் இட்லி, மிளகு இட்லி. நல்ல குறிப்புங்க. செய்து பார்க்கிறேன்.
படத்தை பார்தால் ஐட்டம் இட்லி நடுவிலே இருக்கு. ஓகே...
நடுவில் உள்ள ஐட்டத்தை மட்டும் சாப்பிட்டால் மீதி வெறும் இட்லியை என்ன செய்ய ??
நல்ல டிஸ் ஜலீக்கா
இங்க வாங்க உங்களை ஒரு தொடருக்கு அழைத்திருக்கிறேன்.
http://niroodai.blogspot.com/2010/03/blog-post_14.html
something different and super.
so far we've been using idly patter, egg and honey separatly, but the combined form must be tastier. let me try.
i am out of station so bear with my english comments.
ஜெய்லானி said...
இட்லியை பாக்க வந்தால் பின்னாலேயெ ஆர்டர்ல வருது.!!! நடக்கட்டும்...நடக்கட்டும்.
// Jaleela கூறியது...
ஆஹா என்னையும் கோத்து விட்டுட்டீங்களா? ம்ம் பிடித்த பெண்கள் தானே நிறைய பேர் இருக்க்காங்க போட்டுட்டா போச்சு
நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் பெண்களும் சூப்பர்///
அங்க அப்படி கமெண்ட்டா!!! அப்படியே என்வீட்டையும் கொஞ்ஜம் பாருங்கக்கோவ்வ்வ்வ்வ்வ்வ்
http://kjailani.blogspot.com/2010/03/blog-post_14.html
வித்தியாசமான இட்லிகள்.மகளுக்கு செய்து கொடுக்கனும் ஜலிலாக்கா....
என்னங்க இது புதுசா இருக்கு, இப்ப இட்லியை சைவத்தில் சேர்ப்பதா இல்லை அசைவத்தில் சேர்ப்பதா என்ற பிரச்சினையை ஆரம்பித்து விடுவார்கள்.
அருமையான ரெசிப்பி.
//பாகர்காண்ட்ய் நெம்ப பிடிக்கும் கசப்பா இருந்தாலும் அப்படியே(சமைத்த பின்) சாப்பிடுவேன்//
சந்தோசம்ண்ணே
ஆசியா ஆமாம் தேன் தொட்டு கொடுப்போம் இது அப்படி அதில் ஊற்றி அவித்தால் பிள்ளைகளுக்கு கொடுக்க ஈசியாக இருக்கும், இன்னொரு முறை வெல்லத்தில் செய்வது.
என்ன ஸாதிகா அக்கா என் அட்டகாசம் தாஙக் முடியலயா?
மீன் குழம்புவைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
ஸ்டார்ஜன் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
ஹுஸைனாம்மா உப்பி வராது அது குழி முழுவது ஊற்றாமல், ஸ்பூன் அளவிற்கு முதலில் மாவு, அடுத்து முட்ட்டை, (அ) தேன் மறுபடி ஒரு ஸ்பூன் மாவு முக்கால் குழி அளவிற்கு ஊற்றினால் போதும்.
முட்டை இட்லி இப்ப வேண்டாம் என்றால் மசக்கையா?
நன்றி கவி, ஆமாம் இட்லியை பலவிதமாக செய்யலாம் இப்படியும் செய்யலாம்
நன்றி சாருஸ்ரீ
மர்யமுக்கு குசும்பு ஜாஸ்தி , வரேன் வரேன் அடுத்தமுறை ஊர் வரும் போது ஒரு எட்டு வந்து ஊட்டி விட்டுட்டு போறேன்,மர்லி வருகைக்கு மிக்க சந்தோஷம்
சகோ.நியாஸ் வருக்கைக்கு மிக்க நன்றி.
இது குழந்தை உணவிற்காக நான் முயற்சி செய்தது/.
புதுவை சிவா வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.
நல்ல சொன்னீங்க மங்குனி அமைச்சருக்கு டயனோசர் எக்
கருத்து தெரிவித்தமைக்கு நன்றி தாஜ் ஆமாம் காலையில் சாப்பிட்டால் நல்ல சத்தானது
சித்ரா அதற்குள் சாப்பிட்டாச்சா, மீன் குழம்புடன், இனிப்பு இட்லி போடுகிறேன்.
சுதாகர் சார், நீங்கள் சொன்ன
இட்லி ஆம்லேட் பெயரும் சூப்பரா இருக்கு.
பாகற்காய்,
கூட ஐந்து வகை காய் சேர்த்து தான் எப்போதும் சாம்பார் வைப்பேன்.
ஆமாம் காஞ்சனா இட்லியை இப்படியும் செய்யலாம், வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.
கீதா தேன் நாங்க கர்பினி பெண்களுக்கு, பிள்ளை பெற்றவர்களுக்கு மருந்து காய்ச்சி கொடுக்கும் போது பத்து மருந்தில் தேனும் ஒன்றும்.
ஜலதோஷத்துக்கு இஞ்சி சாறு தேன் கலந்து கொடுப்போம்,
வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி கீதா/
சே.குமார் முதல் வருகைக்கும் மிக்க நன்றி.
ராமலக்ஷ்மி வாஙக் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி
ஜெய்லானி அதில் முட்டை இட்லி முழுவதும் இருக்கும்.
தொடர் வருகைக்கு மிக்க நன்றி
சீமான் கனி புதுசே தான் ஒகே எத்தனை பார்சல் வேண்டும் , தந்துட்டா போச்சு
கவி ஷாமுக்கு செய்து கொடுத்து பாருங்கள் கண்டிப்பா பிடிக்கும்.
நானானி வருகைக்கு மிக்க நன்றி..
மலிக்கா மிக்க நன்றி வரேன் வரேன்.
மேனகா செய்து பாருங்கள் கண்டிப்பா ஷிவானிக்கு பிடிக்கும்.
சசி குமார் ஆமாம் இதை சைவமா அசைவமான்னு கேட்டா பட்டி மன்றம் வைத்து தீர்ப்பு சொல்ல சொல்லலாம்.
அக்பர் வாங்க வருகைக்கு மிக்க நன்றி
நான் முட்டை+மிளகு+தேன் சேர்த்தே நேற்று இந்த இட்லி செய்து கொடுத்தேன் மகளுக்கு.என்ன ஆச்சர்யம் 1 இட்லிகூட சாப்பிடாத மகள் 2 இட்லி சாப்பிட்டாங்க.ரொம்ப சந்தோஷமா இருண்டஹ்து.நன்றி ஜலிலாக்கா இந்த அருமையான குறிப்புக்கு...
வாவ் ஜலீலாக்கா,
நான் ஜுஜ்ஜூவை இவ்வளவு ஆசையா கடகடன்னு சாப்பாட்டை சாப்பிட்டு பாத்ததில்லை. மாஷா அல்லாஹ். முட்டை தேன் இட்லியும் மிளகு மட்டன் சால்னாவில் இருந்து மட்டனும் சின்ன சின்னதா கட் பண்ணி வெச்சவுடனே பையன் கடகடன்னு எல்லாத்தையும் முடிச்சிட்டான். அல்ஹம்துலில்லாஹ். ரொம்ப நன்றி. :)) இன்னும் இவர்களை இப்படியே அழகா சாப்பிட வைக்க இடியா குடுங்க ப்ளீஸ் :))
Thaen milagu muttai idli vithyasama nalla irukku... oru murai senchu paakanum
நன்றி மேனகா
நன்றி அன்னு
நன்றி கிரித்தி
இது குழந்தகைகளுக்காக நான் முயற்சி செய்தது கண்டிபபக சாப்பிடுவார்கள்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா