Monday, March 29, 2010

எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே











வெளி நாடுகளில் தனியாக வாழும் கர்பிணி பெண்களுக்கு எனக்கு தெரிந்த சில பதிவுகள். -- முதலில் 4 மாதம் வரை ஒன்றும் சாப்பாடு இறங்காது எத பார்த்தாலும் வாந்தி வரும் கிச்சனை பார்த்தாலே கொமட்டும்.
லைட்டான உணவா எடுத்து கொள்ளலாம்.
ஜூஸ் வகைகள் பழங்கள் நிறைய சாப்பிடலாம். புளிப்பு சுவையுடைய குழம்பு வகைகள் வாய்க்கு ருசிபடும். எத சாப்பிட்டாலும் வாமிட் வருதுன்னு சாப்பிட பயந்து ஒன்றும் சாப்பிடாமல் இருப்பது கேஸ் டிரபுள் வந்து, தெம்பிழந்து. குளுக்கோஸ் ஏற்றும் நிலையில் கொண்டு போய் விடும்.
முதலில் இருந்தே எப்போதும் ஆரஞ்சு ஜூஸ், லெமன் ஜூஸில் கொஞ்சம் குளுக்கோஸ்,ஒரு பின்ச் உப்பு போட்டு குடிக்கலாம். இது நல்ல எனர்ஜி மயக்கத்தை கேட்கும்.மாதுளை பழம் வாய்க்கு ருசி படும், வாய் கசப்பிற்கு ஆல் பகடாவை வாங்கி வயில் அடக்கி கொள்ளலாம்.

அதிக வெயிட் தூக்க கூடாது வேக மாக மாடிப்பறி ஏறி இரங்கக்கூடாது.
4 ஆம் மாதம் வாந்தி நின்று கொஞ்சம் தெளிச்சல் ஏற்படும், அப்போது நல்ல இரும்பு சத்துள்ள காய் கறிகள், முக்கியமாக புரோக்கோலி மிகுந்த இரும்பு சத்துடையது. புரோகோலி சூப் மற்றும் புரோக்கோலி மட்டன் வறுவல் சாப்பிட்லாம். 4 லிருந்து 6 மாதம் வரை நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இருப்பு சத்துள்ள உணவு எடுப்பதால் டெலிவரி சமையத்தில் குறையும் ஹிமோகுளோபின் அளவை சரியாக வைத்து கொள்ளலாம்.


ம‌ன்ப‌த்தையில் ஆட்டு பார்ட்சில் ஒன்றான‌ ம‌ண்ப‌த்தையில் அதிக‌ இரும்பு ச‌த்து உள்ள‌து அதை மிள‌கு இஞ்சி பூண்டு சேர்த்து சுட்டு சாப்பிட‌லாம்.
சில‌ர் எண்ணை அதிக‌முள்ள‌ அயிட்ட‌ம் எடுக்க‌ வேண்டாம் என்று ட‌ய‌ட் செய்ப‌வ‌ர்க‌ள் சாப்பிடும் எண்ணையில்லா ச‌ப்பாத்தியை க‌ர்பிணிக‌ள் உட்கொள்ள‌ வேண்டாம்.

நெல்லிக்காய் அவித்து அதில் உப்பு ஊறுகாய் அல்ல‌து தேன்,ச‌ர்க‌க்ரை பாகு, வெல்ல‌ப்பாகில் ஊற‌வைத்து சாப்பிட‌லாம்.
ஒன்றும் பிடிக்க‌லைன்னு சில‌ர் வெரும் த‌யிர் ம‌ட்டும் போட்டு சாப்பிடுவார்க‌ள்.ஓர‌ள‌விற்கு தான் சேர்த்து கொள்ள‌னும், அதிக‌ புளிப்பு அயிட்ட‌ம் ச‌ப்பிடுவ‌தால் க‌ர்ப‌த்திலேயே குழ‌ந்தைக‌ளுக்கு ச‌ளி ஏற்ப‌டுகிற‌து,


இது குழ‌ந்தை பிற‌ந்த‌தும் ரொம்ப‌ ச‌ளியா இருக்குன்னு உட‌னே ஆன்டிப‌யாட்டிக்க‌ கொடுப்பாங்க‌, வெரும் தாய்ப்பால் குடிக்கும் குழ‌ந்தைக்கு எப்ப‌டி ச‌ளி பிடிக்கும், க‌ர்பிணிக‌ள் க‌ர்ப‌ கால‌ததிலும், பிள்ளை பெற்ற‌தும் சாப்பிடும் உண‌வு ச‌ரியான‌தாக‌ இருக்க‌வேண்டும்.
சில‌ருக்கு எதுவுமே பிடிக்க‌லையின்னு ஊற‌வைத்த‌ அரிசி, புட்ட‌ரிசி மாவை அள்ளி சாப்பிடுவார்க‌ள் அது இர‌த்த‌ சோகை ஏற்ப‌டும், குழ‌ந்தையின் த‌லையில் மாவு போல் ஒட்டி கொண்டு பிள்ளை பெறும் நேர‌த்தில் மிக‌வும் சிர‌ம‌ம் ஆகிவிடும்.


இரத்த சோகைக்கு சுவரொட்டி என்னும் மண்பத்தை ஆட்டு பாட்ஸில் ஒன்று இதை கர்பிணி பெண்கள் கர்பகாலத்தில் வாரம் முன்று முறை சாப்பிட்டால் ஹிமோ குளோபின் அள்வு அதிகரிக்கும்.


பாயிஜாவின் சுவரொட்டி பிரையை பார்க்கவும்.


கிட்னி பிரை, ஈரல் கூட்டு இதையும் கர்பிணிகள் அடிக்கடி சாப்பிடாலாம். ஹெல்த் மற்றும் அயர்ன் டானிக்கு பதில் இந்த பக்க உணவை சேர்த்து கொள்ளலாம்.


தங்கைக்கு ஹிமோகுளோபின் அள்வு 6 ஆக குறைந்து விட்டது , ஓரளவிற்கு இதெல்லாம் செய்து கொடுத்து கரெக்டாக பிள்ளை பெறும் நேரத்தில் 10 க்கு கொண்டு வந்தாச்சு, டாக்க்டருக்கே ஆச்சரியம்.
சரியாக ஓவ்வொருவருக்கும் அவர்களுடைய ஹிமோகுளோபின் அளவு 12 இருக்கனும். நம் நாட்டு பெண்கள் அதிக உழைப்பாளிகள் 10 க்கு மேல் ஏர சான்ஸ் இல்லை

7 மாதத்தில் சில பேருக்கு கால் பொத பொத வென பன் மாதிரி வீங்கும், அது கர்ப காலத்தில் வரும் பிரஷரினால் வருவது.
அதற்கு உப்பு சிறிது கம்மியா போட்டு சமைத்து சாப்பிட்டால் போதுமானது.
கால் வீக்கத்துக்கு பார்லி வேக வைத்த தண்ணீர் குடிக்கனும், வெரும் பார்லிய ஊறவைத்து அதை வேகவைத்து வடிகட்டிய தண்ணீர் இது போல நிறையதினம் இரண்டு டம்ளர் அளவிற்கு குடிக்கலாம்
தினம் பார்லி தண்ணீர் குடிக்க முடியாது.
பார்லி காய்கறிகள் எல்லாம் மொத்தமாக வேக வைத்த சூப் செய்து குடிக்கலாம்.


பார்லி அடை கூட சாப்பிடாலாம், சாதா பருப்படை போல் அதில் பார்லியும் கலந்து ஊறவைத்து அரைத்து சுட்டு சாப்பிடலாம்.பார்லி குறிப்புகள் நிறைய மேனகா, கீதா ஆச்சல் பதிவுகளில் இருக்கு, அதை சென்று பார்க்கவும். என் தங்கைக்கு அப்படி தான் செய்து கொடுத்தேன்.காலை கீழே தொங்க போட்டு உட்கார வேண்டாம் வீக்கம் குறையாது.
பெட்டில் உட்காரரும் போதும் காலை நல்ல நீட்டி உட்காரனும்.சேரில் சோபாவில் உட்காரும் போது காலுக்கு ஒரு சின்ன ஸ்டூல் போட்டு உட்காரவும்.தூங்க்ரொம்ப நேரம் நிற்க ,நடக்க வேண்டாம்..

முக்கிய‌மாக ப‌டுக்கும் போது ம‌ல்லாக்க‌ ப‌டுக்க‌க்கூடாது ஏதாவ‌து ஒரு புற‌ம் ச‌ரிந்து வ‌யிற்று ப‌க்க‌ம் ஒரு த‌லைய‌ணையும் இர‌ண்டு காலுக்கிடையில் ஒரு த‌லைய‌னைவைத்து ப‌டுப்ப‌து ந‌ல்ல‌து.குழ‌ந்தைக‌ள் அதிக‌ம் உள்ள‌ வீட்டில், எதிரில் வ‌ந்து இடித்து விட‌ வாய்பிருக்கு எப்போதும் நடக்கும் போது நிற்கும் போது இர‌ண்டு கைக‌ளையும் வ‌யிற்றுக்கு முன்புற‌ம் வைத்து கொள்வ‌து ந‌ல்ல‌து.அதே போல் சோபா சேரில் உட்காரும் போது வ‌யிற்றின் முன் ஒரு சிறிய‌ த‌லைய‌னை வைத்து கொள்ள‌வேண்டும்.

இரவு தூங்க போகும் போது வெது வெதுப்பான வெண்ணீரில் காலை சிறிது நேரம் வைக்கவும்ஹை ஹீல்ஸ் போடக்கூடாது, சாதராண ஷாப்ட்டான செருப்பை பயன் படுத்தவும்.
ஏழாம் மாதத்திலிருந்து தினம் இரவில் பாலை நன்கு காய்ச்சி, அதில் இரண்டு இதழ் குங்குமப்பூ உரைத்து சேர்த்து கலந்து குடிக்கவும். இது கர்பிணிகளுக்கும்,கர்ப காலத்தில் குழந்தைகளுக்கு சேரும் சளியையும் கட்டுப்படுத்தும், பாட்டிமார்கள் அந்த காலத்தில் ஒழுகாக சாப்ரான் பால் குடிக்கனுமே என்று இதை குடித்தால் குழந்தை நல்ல கலராக பிறக்கும் என்று கட்டி விட்டதால் இன்னும் எல்லோரும் குங்குமப்பூ (சாப்ரான்) பால் குடித்தால் குழந்தை சிகப்பாக பிறக்க்கும் என்ற எண்ணம் தான் எல்லார் மனதிலும் இருக்கு.(இது சாதாரனாமாக நாமும் சாப்ரான் பால் சளிக்கு குடிக்கலாம்) நான்ன் பிள்ளைகளுக்கு அடிக்கடி கொடுக்கிறேன்.

எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே என்பார்கள் அந்த கால பாட்டி மார்கள்.
எட்டுமாதத்தில் கர்பிணி பெண்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும், மாடிப்படி இரங்கும் போது, பாத்ரூம் கழுவும் போது , பாத்ரூமிற்குள் நுழையும் போது பார்த்து போக‌னும் சோப்பு நுரை ஏதும் இருந்தால் வ‌ழுக்கி விடும்.இப்ப‌ எல்லா வீடுக‌ளிலும் டைல்ஸ் தான் வீடு துடைத்து இருந்த‌ இட‌த்தில் கொஞ்ச‌மா த‌ண்ணீர் இருந்தாலும் வ‌ழுக்கி ஆப‌த்தை எற்ப‌டுத்தும்.எதாவது பொருட்கள் உயரத்தில் இருந்தால் அதை கிட்ட தானே இருக்கு என்று முயற்சிக்க வேண்டாம், கண்டிப்பாக கீழே விழ சான்ஸ் இருக்கு.



//இப்படி தான் ஒரு வீட்டு பங்க்ஷனில் எட்டு மாத கர்பிணி பெண் டீ போடும் போது இவங்க கீழே உட்கார்ந்து பங்க்ஷன் என்பதால் பெரிய குடம் நிறைய டீ, வடிகட்டியை பிடிக்க, எதிரில் நின்று பெரிய பானையோடு டீயை ஊற்றும் போது கை தவறி அந்த பெண்ணின் வயிற்றில் விழுது பிள்ளை தாச்சிக்கு டீ குளியல் அவள் துடித்து போனால். தோலெல்லாம் உறிந்து அந்த குழ்ந்தை ய பெற்றுடுக்கும் கஷ்டத்துடன் இந்த புண்களோடும் வயிற்றிலிருந்து கால் முழுவதும் கொப்புளங்கள்.அத்துடன் அந்த குழந்தையை பெற்றெடுத்தாள். , எத்தனை கழ்டம் அந்த பெண்ணிற்கு.குழந்தையும் நார்மல் டெலிவரி கிடையாது சிசேரியன் (இது எங்க குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவம்)//


9 மாதம் நல்ல நடை பயிற்சி செய்யுங்கள்.சுக்கு பால், பூண்டு பால், உளுவா கஞ்சி , சோம்பு தண்ணி, முட்டை மிளகு சோறு இதை சாப்பிடால் வாயு கலைந்து சுகப்பிரசம் ஆகும்.
ஒன்பதாம் மாதம் வெது வெதுப்பான வெண்ணீரை இடுப்பில் தினம் ஊற்றவேண்டும்.


கர்பகாலத்தில் மற்றசிந்தனைகள் மற்ற பிரச்சனைகளை மனதில் போடமால் குழ்ந்தைய நல்ல படியாக பெற்றெடுக்கும் நினைவோடு மட்டும் இருங்கள்.
என்னேரமும் திக்ரு , மொழிந்த வண்ணம் இருக்கங்கள். தொழுகை வணக்கங்களில் மனதை செலுத்தவும். நல்ல இனிமையான இசையை கேளுங்கள். அதிரடியான படங்களை பார்க்க வேண்டாம்.


எனக்கு தெரிந்ததை எழுதி இருக்கிறேன், இது தாயகப்போகும் கர்பிணிகளுக்கு பயன் படும் என்று நினைக்கிறேன்.


பிறகு என்ன சுகப்பிரசவ்ம் தான். குழந்தை கையில் வந்து விட்டால் அவர்களை வளர்பதே பெரிய பாக்கியாமாக நாட்கள் சுவரஸியமாக நகரும்.



ஸாதிகா அக்காவில் இந்த அறிவான சந்ததிகளையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.அதோடு, இதில் நான் குழந்தை வளர்பு டிப்ஸ்+குழந்தை உணவையும் போட்டுள்ளேன். ஒவ்வொன்றாக கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.


65 கருத்துகள்:

சீமான்கனி said...

அடே...யப்பா ...இப்போவே கண்ண கட்டுதே அக்கா...
எப்படி இப்டிலாம்???அருமை...

அன்புடன் மலிக்கா said...

கர்பினி பெண்களுக்கு அவசிமான பதிவுக்கா..சூப்பர்

Prathap Kumar S. said...

யக்கோவ்...சூப்பர்... யாருக்கெல்லாமோ டாக்டர் பட்டம் கொடுக்குறாய்ங்க... உங்களை விட்டுடறானுங்க... யாருப்பா அது ஜலீலாக்காவுக்கு ஒரு டாக்டர் பட்டம் பார்சல்லல்ல்ல்ல்....

Chitra said...

அக்கா, மீண்டும் சகலகலாவல்லியின் அறிவுரை தொகுப்பு!!!!! அருமை - அசத்தல் - அட்டகாசம்!!!!!

Anonymous said...

Ellame ore moochula sollittinga!!

Jazakallah sister..

ஜெய்லானி said...

//கிட்னி பிரை, ஈரல் கூட்டு இதையும் கர்பிணிகள் அடிக்கடி சாப்பிடாலாம். ஹெல்த் மற்றும் அயர்ன் டானிக்கு பதில் இந்த பக்க உணவை சேர்த்து கொள்ளலாம்//

உண்மைதான் அயர்ன் டானிக் எல்லா டாக்டரும் எழுதிதருவாங்க .யாருமே குடிக்க மாட்டாங்க. அவ்வளவு நாற்றம்+ பச்சரத்தம் டேஸ்ட். ( என் தங்ஸ் நீங்க ஒரு மூடி குடிங்க நான் இரண்டு மூடி குடிக்கிறேன்னு ஒரே அட்டகாசம். அப்புறம் என்ன ஒரு பாட்டல நானே காலி பண்ணினேன் )

ஜெய்லானி said...

//நாஞ்சில் பிரதாப் யக்கோவ்...சூப்பர்... யாருக்கெல்லாமோ டாக்டர் பட்டம் கொடுக்குறாய்ங்க... உங்களை விட்டுடறானுங்க... யாருப்பா அது ஜலீலாக்காவுக்கு ஒரு டாக்டர் பட்டம் பார்சல்லல்ல்ல்ல்....//

ரொம்ப லேட் ஐயா நீங்க ,குடுத்ததுடந்தான் இந்த பதிவே நீண்ண்ண்ண்டு வந்திருன்னு.

ஜெய்லானி said...

//9 மாதம் நல்ல நடை பயிற்சி செய்யுங்கள்.சுக்கு பால், பூண்டு பால், உளுவா கஞ்சி ,//

உளுவா கஞ்சி --வெந்தய கஞ்சிதானே!!

பித்தனின் வாக்கு said...

நல்ல பயனுள்ள கட்டுரை. அருமை தங்கை,டாக்டர்,திருமதி.ஜலில்லா அவர்களே மிக்க நன்றி.

நல்லா இருக்கு, நிறைய கவிச்சி, கூட கொஞ்சம் பழங்களும் சொல்லியிருக்கலாம், ஆப்பிளும், முக்கியமா அயன் சத்துக்கு மாதுளையும் எடுக்கலாம். நான் கவிச்சி தருவதை தப்பு சொல்ல வில்லை.அப்புறம் அது டைஜிஸ்ட் ஆவதுக்கு நடக்கனும் அல்லது செரிமாணம் கடினம். அதுக்கு பதிலாக நிறைய பழங்கள் சுலபமாக இரத்ததில் சத்துக்கள் கலக்கும். அயன் சத்துக்கு தினமும் ஒரு மாதுளை சாப்பிட்டால் பலன் இருக்கும். பேரீச்சையும் சுலபமாக சத்துக்களை தந்து நன்மை அளிக்கும். நன்றி.

Jaleela Kamal said...

சுதாகர் சார் இதுக்கு தான் கண்ல விளக்கெண்னைய விட்டு கழுவிட்டு பார்க்கனுமுன்னுன்றது, மாதுளையையும், புரோகோலி (காலிபிளவர் பொல் ) இருக்கும் அதையும் சொல்லி இருக்கேன் பாருஙக்ள்.

ஜெய்லானி said...

//Jaleela said..சுதாகர் சார் இதுக்கு தான் கண்ல விளக்கெண்னைய விட்டு கழுவிட்டு பார்க்கனுமுன்னுன்றது//

முன்ன போலி டாக்டர்ன்னு சொல்லிட்டு இப்ப டாக்டர் ஜலீலான்னா. விட்டுடுவீங்களா? சைக்கிள் கேப்பில யானைசவாரியே செஞ்சிடீங்களே!!ஹா..ஹா..

ஹுஸைனம்மா said...

குறிப்பா யாருக்காகவோ எழுதின மாதிரி இருக்குதே அக்கா? ம்ம்... அவசியப்பட்டவங்களுக்குப் பிரயோஜனமா இருந்தா சரி!! ;-)))

Jaleela Kamal said...

ஜீன்ஸ் எழுதும் ஹுஸைனாம்மாவாச்சே.
ஹுஸைனாம்மாவா யாரு சரியான கண்டுப்பிடுப்பு

ஜெய்லானி said...

@@@ ஹுஸைனம்மாகுறிப்பா யாருக்காகவோ எழுதின மாதிரி இருக்குதே அக்கா? ம்ம்... அவசியப்பட்டவங்களுக்குப் பிரயோஜனமா இருந்தா சரி!! ;-)))//

ஒரு வேளை அவங்க ஒத்தவரியில் பதில் சொல்லி இருக்கலாம்தானே.

Barari said...

அனைவருக்கும் பயன்பட கூடிய தகவல்.// 9 மாதத்தில் இனிமையான இசையை கேட்கலாம்//

இங்குதான் சற்று நெருடலாக இருக்கிறது .வாழ்த்துகள்.

Anonymous said...

சுதாகர் அண்ணே சொன்னா நம்ப மாட்டீங்க, அசைவம் சாப்பிட்டு பழகினா செமிக்கிறது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை.. ஹிஹி.. நமக்கெல்லாம் சுத்த சைவம் தான் செமிக்க கஷ்டம்

\\ஜீன்ஸ் எழுதும் ஹுஸைனாம்மாவாச்சே.
ஹுஸைனாம்மாவா யாரு சரியான கண்டுப்பிடுப்பு\\

அதானே!

R.Gopi said...

யப்பா....

தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் எம்புட்டு இருக்கு....

கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான நிறைய விஷயங்களை உள்ளடக்கிய ஒரு சூப்பர் பதிவு (எப்போதும் போலவே....!!!))

அடடே... பலே...பலே ஹூஸைனம்மா கண்டு பிடிச்சுட்டாங்களா!!! சூப்பர்....

சசிகுமார் said...

நல்ல பயனுள்ள தகவல், உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

ஜலி, யாருக்காக எழுதப்பட்ட இடுகை.எனக்கு தெரிந்தே ஆகணும்(.இந்த ஹுசைனம்மா வேறு பட்டாசு சுத்தி சுத்தி போடட்டுமா என்று கொளுத்திப்போட்டுக்கொண்டே இருக்கார்)பிரியாணிவாசனை வேறு லேசா மணக்கிறது.ஆம் ஐ கரெக்ட்??

அன்புடன் மலிக்கா said...

நான் சொல்லவா? இது இது ஹுசைன்னமாவுக்குகுகு கு[இருந்தாலும் இருக்கும்சொல்லமுடியாது] இல்ல.

நம்ம நாஸியாவுக்கு. அச்சோ சொல்லக்கூடாதுன்னு சொல்லிவச்சாக பொம்பள வாய்களை யார் அடைக்கிறது அதேன்ன்ன்ன்ன்ன்ன்ன்.

மங்குனி அமைச்சர் said...

சாரி பார் தி டிலே ,
இந்த பத்தி லேடிஸ் ஸ்பெஷல் , மிக அருமை
போன பதிவுல என்ன கவுதுரிகளா இல்ல புகழ்ரிகலான்னு
ஒண்ணுமே புரியலையே மேடம்

ஸாதிகா said...

ஹுசைனம்மா கங்கிராஜுலேஷன்.ஹுசைனம்மா வர்ரதுக்குள் நான் எஸ்கேப்

சிநேகிதன் அக்பர் said...

இதை ஒரு ரெண்டு வருடத்துக்கு முன் படிச்சிருந்த எவ்வளவு நல்லாயிருக்கும். ஒரு ஒன்பது வருஷத்துக்கு முன்னாடி படிச்சிருந்தா அதைவிட நல்லாயிருக்கும்.

இந்த மாசம்தான் பொண்ணுக்கு 9வது பிறந்த நாளும், பையனுக்கு ஒன்னாவது பிறந்த நாளும் கொண்டாடினோம்.

சரி பின்னாடி யூஸ் ஆகலாம்.

நல்ல பகிர்வு.

Jaleela Kamal said...

எல்லாரும் என்ன என்னவோ கற்பனை பண்ணி ஒருத்தர ஒருத்தர் சொல்லி உண்மைய வரவழைக்கலாமுன்னு பார்க்கிறீங்க.அதெல்லாம் யாருக்குன்னு சொல்ல் முடியாது.

அவ‌ங்க‌ளா வ‌ந்து இங்க‌ ஒத்துகொண்டால் தான் உண்டு.

Jaleela Kamal said...

சீமான் கனி எல்லா டைரியில நோட் பன்ணியாச்சா?
மிக்க நன்றி

Jaleela Kamal said...

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி மலிக்கா

Jaleela Kamal said...

நாஞ்சிலார் ஏற்கனவே எல்லாம் பட்டம் கொடுத்துட்டாஙக், நெஜ டாக்டர்கள் பார்த்தா, என் பதிவுக்கு சீல் வைத்து விட போறாங்க.

Jaleela Kamal said...

உங்கள் அன்பான பாராட்டுக்கு மிக்க நன்றி சித்ரா

Jaleela Kamal said...

மிக்க நன்றி நாஸியா

Jaleela Kamal said...

//உண்மைதான் அயர்ன் டானிக் எல்லா டாக்டரும் எழுதிதருவாங்க .யாருமே குடிக்க மாட்டாங்க. அவ்வளவு நாற்றம்+ பச்சரத்தம் டேஸ்ட். ( என் தங்ஸ் நீங்க ஒரு மூடி குடிங்க நான் இரண்டு மூடி குடிக்கிறேன்னு ஒரே அட்டகாசம். அப்புறம் என்ன ஒரு பாட்டல நானே காலி பண்ணினேன் )//

அப்ப அவங்களுக்கு பதில் உங்களுக்கு ஹிமோ குளோபின் அள்வு ஜாஸ்தியாயிடுச்சா?

ஹுஸைனம்மா said...

மலிக்கா & ஸாதிகாக்கா,

ஹலோ, இப்படிலாம் நீங்க கிண்டல் பண்ணா, உடனே நான் உங்களச் செல்லக் கோவத்தோட போங்கக்கான்னு சொல்வேன்னு நினைச்சீங்கன்னா... ஸாரி... அதுக்கு நான் ஆளில்லை!! ;-))

ஜலீலாக்கா, உங்க பங்குக்கு நீங்களும் சஸ்பென்ஸை கூட்டி விடுறீங்க, குறும்பு?? பதிவு போடும்போது யாருன்னு தெரியாமலா போட்டீங்க?

Jaleela Kamal said...

//ஜலீலாக்காவுக்கு ஒரு டாக்டர் பட்டம் பார்சல்லல்ல்ல்ல்//

என்ன நாஞ்சிலாரே டாக்டர் பட்டத்த என்ன ஹோட்டலிலா விற்கிறாஙங்கள்

Jaleela Kamal said...

உளுவா கஞ்சி --வெந்தய கஞ்சிதானே//


ஆமாம் பதிவில் இருக்கு

Jaleela Kamal said...

ஆமாம் மாதுளை , ஆப்பிள் அது எல்லோருக்கும் தெரிந்த து தானே. பதிவிலும் போட்டு இருக்கேன்.

கருத்து தெரிவித்தமைகு மிக்க நன்றி, போன பதிவில் போலி டாக்டர், இந்த பதிவில் நிஜ டாக்டரா?

Jaleela Kamal said...

ஹுஸைனாம்மா நீங்க சுத்தி விட்டது தான் கீழே பதிவில் ஆளாளுக்கு யாரா இருக்குமுன்னு புகைந்து கொன்டு இருக்கு/

Jaleela Kamal said...

கோபி கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

மலிக்கா ஸாதிகா அக்கா ஏன் ஹுஸைனாம்மாவ இழுக்கலைன்னா உஙக்ளுக்கு தூக்கம் வராதா

Jaleela Kamal said...

அமைச்சரே ரொம்ப பீலிங்காஅ கேட்குரா மாதிரி இருக்கு. உஙக்ளை புகழ்ந்து தான் சொன்னேன், ஐய்யோ ஜெய்லானி வரதுகுள்ள நான் எஸ்கேப்பு...

Jaleela Kamal said...

//இதை ஒரு ரெண்டு வருடத்துக்கு முன் படிச்சிருந்த எவ்வளவு நல்லாயிருக்கும். ஒரு ஒன்பது வருஷத்துக்கு முன்னாடி படிச்சிருந்தா அதைவிட நல்லாயிருக்கும்.

இந்த மாசம்தான் பொண்ணுக்கு 9வது பிறந்த நாளும், பையனுக்கு ஒன்னாவது பிறந்த நாளும் கொண்டாடினோம்.

சரி பின்னாடி யூஸ் ஆகலாம்//



அக்பர் சிரிப்பு தான் வருது , சரி அதுகென்னா பின்னாடி முனாவதுக்கு பயன் படும்

Jaleela Kamal said...

பராரி முதல் வருகைக்கு மிகக் நன்றி.

Jaleela Kamal said...

..சசி குமார் தொடர் வருகைக்கு மிக்க நன்றி/

Radhakrishnan said...

:) நல்லா எழுதி இருக்கீங்க

Menaga Sathia said...

நல்ல பயனுள்ள பதிவு அக்கா.1 1/2 வருடத்திற்க்கு முன்னாலயே இதெல்லாம் சொல்லிருக்கலாம் ஏன்னா எனக்கு உபயோகப்பட்டிருக்கும்...

Jaleela Kamal said...

ஏம்பா அடுத்த குழந்தைக்கு பயன் படும் மேனகா//

Jaleela Kamal said...

//ஜலீலாக்கா, உங்க பங்குக்கு நீங்களும் சஸ்பென்ஸை கூட்டி விடுறீங்க, குறும்பு?? பதிவு போடும்போது யாருன்னு தெரியாமலா போட்டீங்க//

ஹுஸைனாம்மா எனக்கு தெரியும் யாருக்காக போட்டேன் என்று ஆனால் ( நீங்களாச்சு, ஸாதிகா அக்கா வாச்சு, நாஸிஆ, மலிக்கா உங்களுக்குள் பேசி ஒரு முடிவுக்கு வாங்க...

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி ராதிகா கிருஷ்னன்

பனித்துளி சங்கர் said...

மிகவும் பயனுள்ள பதிவு . பகிர்வுக்கு நன்றி !

மின்மினி RS said...

பெண்களுக்கான அருமையான டிப்ஸ்கள்.. நிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன் அக்கா.. நல்ல உபயோகமா இருக்கும். நன்றி நன்றி

mdniyaz said...

சகோதரி ஜலிலா சிறந்த சமையல் நிபுனர் மட்டுமல்ல சிறந்த மருந்துவ ஆலோசகரும் கூட.
வாழ்த்துக்கள்.தொடருக உங்களது எழுதுபணி.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

அன்புத்தோழன் said...

ஆஹா..... ஒண்ணுங்க இன்னும் மூணு மாசத்துல கல்யாணத்த வெச்சுகிட்டு ஒரு திகிலோட இருக்கும்போது இப்படி ஒரு பதிவ போட்டு இம்புட்டு பொறுப்பு இருக்குனு சொல்றீங்க.... ஒரு மாதுரி பயமா தான் இருக்கு.... இதுல இவ்ளோ மேட்டரு இருக்கா....

ஆனா ஒன்னு இங்க வந்து பல பேரு முன்னாடியே தெரிஞ்சிருந்தா ரொம்ப உபயோகமா இருந்திருக்கும்னு சொல்லி பீல் பண்ணாங்க.... அந்த வகைல நான் குடுத்து வெச்சவன் தானுங்கோ.... ரொம்ப நன்றி...

யாருக்கு போட்டீங்களோ என்னவோ.... விஷயம் போதுவானாது..... so கண்டிப்பா எல்லாருக்கும் உபயோகப்படும் வருங்காலத்துல.... ஹி ஹி.... ஆல் இன் ஆல் டாக்டர் ஜலீலாக்கா வாழ்க.... :-))))))

அன்புத்தோழன் said...

//ஹுஸைனாம்மா எனக்கு தெரியும் யாருக்காக போட்டேன் என்று ஆனால் ( நீங்களாச்சு, ஸாதிகா அக்கா வாச்சு, நாஸிஆ, மலிக்கா உங்களுக்குள் பேசி ஒரு முடிவுக்கு வாங்க...//

இதுக்கு தனி பட்டிமன்றம் வேற நடக்குதா.... நடத்துங்க நடத்துங்க....

யாரா இருந்தாலும் என்னங்க... சகோதரி அவங்களுக்கு என்னோட உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்....

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.... ஆமீன்.... சரி விசேஷத்துக்கு ட்ரீட் ஒன்னும் கிடையாதுங்களா.... (பிரியாணி, கிரியாணி?? ஹி ஹி)

ஜெய்லானி said...

///அன்புடன் மலிக்கா said...

நான் சொல்லவா? இது இது ஹுசைன்னமாவுக்குகுகு கு[இருந்தாலும் இருக்கும்சொல்லமுடியாது] இல்ல.

நம்ம நாஸியாவுக்கு. அச்சோ சொல்லக்கூடாதுன்னு சொல்லிவச்சாக பொம்பள வாய்களை யார் அடைக்கிறது அதேன்ன்ன்ன்ன்ன்ன்ன்.//

மலீக்கா ஆண்ட்டி 5 நிமிஷத்தில லிங்க் தரேன்.

ஜெய்லானி said...

http://konjamvettipechu.blogspot.com/2010/03/blog-post_15.html இதில் அவரின் பதில் இருக்கு பாருங்கள்.

// :)) ரொம்ப ரொம்ப நன்றி..///

எவ்வளவோ கண்டுபுடுச்சிட்டோம் இதை கண்டுபிடிக்க மாட்டோமா ?.

சம்பந்தபட்டவர்க்கு::::>> பயப்படாதீங்க ’பிரியானி’ எல்லாம் கேக்க மாட்டேன். வாழ்த்துக்கள்!!!!

அன்புத்தோழன் said...

/எவ்வளவோ கண்டுபுடுச்சிட்டோம் இதை கண்டுபிடிக்க மாட்டோமா ?//

இத அப்பவே சொல்லாம் நினைச்சேன்.... எதுக்கு பாவம்..... சம்மந்தபட்டவக சொல்ல விருப்ப படல போலனு விட்டேன்.... சிம்பாலிக்கா இப்டி //(பிரியாணி, கிரியாணி?? ஹி ஹி)// பின்னூட்டத்துல போட்டதுக்கும் இதான் காரணம்... ஹ ஹ... ஆனா அண்ணன் ஜெய்லானி விஷயத்த ஓடைச்சுட்டாங்க.... எது எப்படியோ பட்டி மன்றம் இனிதே முடிவுக்கு வந்துருச்சு.... :-) அய்யா சாலமன் பாப்பையா வேலையை சிறப்பாக செய்து முடித்த அண்ணனுக்கு ஒ.... ;-) ஆமா இப்போ ட்ரீட்டு எங்கப்பா???????

Vijiskitchencreations said...

நல்ல பதிவு எல்லாருக்கும் பயனுள்ளது. என்ன மேனகா ரொம்ப வருத்தப்டறாங்க. டோண்ட் வொர்ரி நெக்ஸ்ட் அட்டெம்ப்ட் எப்ப.

Jaleela Kamal said...

பனித்துளி சங்கர் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

Priya said...

ம்ம்....சூப்பர் பதிவு. விரைவில் உதவும், நன்றி!

Anisha Yunus said...

ஜலீலாக்கா..,

நான் முதன் முதலில் அறுசுவையை கண்டு அதில் உறுப்பினர் ஆனபோது 7வது மாதம். இந்த மாதிரி குறிப்புகள அஙே அதிகமாக இருந்தன. அம்மா வர முடியாத சூழ்நிலை இருந்ததால் நானே செய்து சாபிட எல்லா வித வீட்டு மருந்துகளுக்கும் அறுசுவைதான் பலன் தந்ததே. அதே ஆதரவை உங்கள் வாலியிலும் பார்க்கின்றேன். அந்த் நேர ஞாபகங்கள எலாம் வந்து கண்கள் நிறைகின்றது. உங்கள மாதிரி ஆளுங்கதான் உண்மைலயே உருப்படியா ப்ளாகை உபயோகிக்கறீங்கன்னு சொல்லலாம். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு இதற்காக இரு உலகின் நன்மையையும் தருவானாக. ஆமீன்.

Jaleela Kamal said...

நன்றி பிரியா/

Jaleela Kamal said...

.//உங்கள மாதிரி ஆளுங்கதான் உண்மைலயே உருப்படியா ப்ளாகை உபயோகிக்கறீங்கன்னு சொல்லலாம். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு இதற்காக இரு உலகின் நன்மையையும் தருவானாக. ஆமீன்//

அன்னு என்னை தேடிவந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
உங்களை மாதிரி நிறைய பேருக்கு என் குறிப்புகள் உதவி இருக்கு அதில் சில பேர் தான் இப்படி வந்து வாழ்த்துவது,
உங்கள் வருகை + கருத்து+ பாராட்டு + தூஆ விற்கு, ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தொஷம்.

Unknown said...

Good

Unknown said...

Good tks

Unknown said...

Valuable tips. Thanks for ur great work.

Jaleela Kamal said...

மிக்க நன்றி எழில்

Unknown said...

جزاك الله خيرا

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா