Saturday, May 8, 2010

பாயா குருமா, வட்லாப்பம்


எல்லோருக்கும்உலகில் உள்ள அனைத்து அன்னையர்களுக்கும். அன்னையர் தின வாழ்த்துக்கள்.

இது என் அம்மாவின் ஸ்பெஷல் முட்டை வட்லாப்பம்,சின்னதில் ஓவ்வொரு புது வருடபிறப்புக்கும் கண்டிப்பாக செய்வார்கள்.


இது இஸ்லாலிய இல்லத்தில் கல்யாணவீடுகளில் மாப்பிள்ளை தஸ்தரில் வைக்கும் பல உணவுகளில் இந்த காம்பினேஷனும் உண்டு. (இடியாப்பம், வட்லாப்பம், கால் பாயா, ரொட்டி)


வட்லாப்பம்
முட்டை - பத்து
சர்கக்ரை - இரண்டு டம்ளர்
தேங்காய் ஒரு முறி முழுவதும்
ஏலக்காய் - முன்று
முந்திரி - 6
நெய் - அரை தேக்கரண்டி

செய்முறை


தேங்காயை அதிகம் தண்ணீர் ஊற்றாமல் கட்டியாக பால் எடுக்கவும்.
முட்டையை நல்ல நுரை பொங்க அடித்து கொள்ளவும்.
சர்க்கரை பொடித்து , தேங்காய் பால்,சர்க்கரை, முட்டையை ஒன்றாக நன்கு கலக்கவும்.
முந்திரியை பொடியாக அரிந்து நெயில் வறுத்து சேர்க்கவும்.
ஏலக்காயை அப்படியேவும் போடலாம், நேரம் கிடைப்பவர்கள் ஏலக்காயின் உள்ளே இருக்கு விதைகளை மட்டும் எடுத்து லேசாக வறுத்து பொடித்து போட்டால் சுவை சூப்பராக இருக்கும்.
எல்லாம் கலக்கிய்தும் கலவையை ஒரு முடி போட்ட சில்வர் டிபன் பாக்ஸில் வைத்து குக்கரி ஆவி வந்து வெயிட் போட்டு ஐந்து விசில் வந்ததும் தீயின் தனலை சிம்மில் வைத்து பத்து நிமிடம் கழித்து இரக்கவும். குக்கர் அடியில்







சரியான அளவு தண்ணீரை ஊற்றி கொள்ளவும்.


சுவையான சூப்பரான முட்டை வட்லாம் ரெடி.



இது இடியாப்பம், ஆப்பம், தோசை ஆகியவற்றிற்கு பொருந்தும், இஸ்லாமிய இல்ல ஸ்பெஷல் உணவாகும்.


பாயா குருமா
ஆட்டுகால் - ஒரு செட்
வெங்காயம் - ஐந்து
தக்காளி - ஐந்து
பச்ச மிளகாய் - நான்கு
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
உப்பு தூள் - ருசிக்கு தேவையான அளவு
த்னியாதூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கொத்து மல்லி, புதினா - ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - முன்று மேசைகரண்டி
எண்ணை - நான்கு மேசை கரண்டி
பட்டை கிராம்பு, ஏலம் - தலா நான்கு
தயிர் - நான்கு மேசைகரண்டி
தேங்காய் - அரை மூறி
முந்திரி - பத்து
கசகசா- ஒரு மேசைகரண்டி

செய்முறை

1. முதலில் சுத்தம் செய்த பாயாவில் முழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி உப்பு ,மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு மேசை கரண்டி அளவு சேர்த்து கலக்கி குக்கரில் நன்கு வேகவிடவும், பாய வேக 20 லிருந்து 30 நிமிடம் எடுக்கும்.

ஐந்து விசில் வந்ததும் தீயின் தனலை குறைத்து வைத்து பிறகு வேகவிட்டு இரகக்வும்.

2. தேங்காய்,கசகச, முந்திரியை நல்ல மையாக அரைத்து கொள்ளவும்.

3. ஒரு வாயகன்ற சட்டியில் எண்ணையை காயவைத்து பட்டை + கிராம்பு+ஏலம் சேர்த்து வெடிய விட்டு, வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்து நன்கு வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு கலர் மாறும் வரை வதக்கவும்.

4. அடுத்து சிறிது கொத்துமல்லி ,புதினா, தக்காளி, பச்சமிளகாய், மிளகாய் தூள், தனியாதூள், மஞ்சள் தூள், உப்பு தூள், எல்லாம் சேர்த்து வதக்கி, தயிரையும் சேர்த்து நன்கு கிரேவி பதம் வர தீயின் தனலை சிம்மில் வைத்து கூட்டை
கிரிப்பாக்கவும்.

5. கால் வெந்ததும் கூட்டில் அரைத்த தேங்காய் கலவையையும் ஊற்றி தேவைக்கு குழம்பு பததிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு தேங்காய் வாடை அடங்கும் வரை கொதிக்க விட்டு, மீதி உள்ள கொத்து மல்லி புதினாவை தூவி இரகக்வும்



.


குறிப்பு

குருமா என்று சொல்லும் போது தனியாத்தூள் அதிகமாக சேர்க்க தேவையில்லை. நாங்க ரொம்ப கம்மியாக தான் இதில் சேர்ப்போம், சில பேருக்கு தனியாதூள் சேர்த்து செய்து பழக்கம் ஆகையால் குறைந்த அளவில் இதில் கொடுத்துள்ள்ளேன்.
கால்பாயா மிளகு சால்னாவில் (மிளகு, தனியா தூள் கூடுதலாகவும் சேர்க்கனும்) இது பாயா குருமா.
ஆட்டு பாட்ஸில், கால், குடலில் கொழுப்பு சத்து அதிகமாக இருக்கும் ஆகையால் அதிக எண்ணை தேவையில்லை.
இதற்கு கோதுமை ரொட்டி நல்ல இருக்கும்.
நடக்க ஆரம்ப்பிக்கும் குழந்தைகளுக்கு இது காரமிலலாமல் அடிக்கடி செய்து கொடுப்பது நல்லது,
அதிக கால் வலி மூட்டு வலி உள்ளவர்களும் அடிக்கடி செய்ட்து சாப்பிடலாம்.



வெளிநாடுகளில் பிரிந்து வாழ்பவர்கள். பல வேலை பிஸியில் இருப்பீர்கள், வாரம் ஒரு முறையாவது அம்மாவை தனிப்பட்ட முறையில் விசாரியுங்கள், தாய் தன் தேவையை யாரிடமும் கூறுவதில்லை.தன்னை கவனித்துகொள்வதும் இல்லை. நீங்களா பார்த்து என்ன தேவை என்பதை உரிய நேரத்தில் செய்யுங்கள். பிழைப்பை கருதி அனைவரும் பிரிந்து வாழ்கிறோம். தாயிக்கென சிறிது நேரமாவது ஒதிக்கி இனிதாய் பேசுங்கள்.
தாய் என்றும் நம்மையே நினைத்து கொண்டு இருப்பவள். என்ன வீட்டு செலவிற்கென பணம் அனுப்பினாலும் , அம்மாவிற்கு என்று தனியாக ஒரு தொகை அனுப்புங்கள்.
தாயின் காலடியில் தான் சொர்க்கம் உள்ளது என்பதை மறக்க வேண்டாம்/
உலகில் உள்ள அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்.


38 கருத்துகள்:

இமா க்றிஸ் said...

வட்டிலப்பம். ம். யம் ஜலீ. ;)

ஜெய்லானி said...

//உலகில் உள்ள அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்.//

பெரிய சல்யூட்.......

ஜெய்லானி said...

வட்லாப்பத்தில் நீங்க பண்ணீர் (ரோஸ் வாட்டர் ) சேக்க மாட்டீங்களா ? சில நேரம் முட்டை வாசம் வரும் .

Jaleela Kamal said...

ரோஸ் எசன்ஸ் சேர்த்ததில்லை,

சரியான அளவில் சேர்த்தால்ல் முட்டை வாசம் வராது.

Jaleela Kamal said...

முட்டையில் அளவும், கட்டிபாலின் அளவும் சரி சமமாக இருந்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.

கிரே கலரில் வ்ந்தால் சரியான பதம்.
சர்க்கரையோ, முட்டையோ அதிகமானாலும், கலர் மாறும்.

Jaleela Kamal said...

முதல் முதல் வ்ந்து கமெண்ட் போட்டதற்கு மிக்க நன்றி+சந்தோஷம் இமா.

SUFFIX said...

வட்லாப்பம், பாயா!! ரெண்டும் ஸ்பெஷலாச்சே, சூப்பர் :)

சசிகுமார் said...

தங்களுக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Angel said...

jaleela .this is great. some srilankas use kithhul jaggery in vattalappam.i dont know what is it but the vattalappam will be dark brown in colour.thanks for the recipe

Chitra said...

அன்னையர் தின மெசேஜ் மற்றும் வாழ்த்தும் மிகவும் பொருத்தம், அக்கா.
சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள், அக்கா!

இமா க்றிஸ் said...

That's right Angelin. We always use kithul. It adds a special taste to it. (also we add a pinch of nutmeg with cardamom.)

But, vattilappam is vattilappam is vattilappam. yum always. ;)

சீமான்கனி said...

வட்லாப்பம், பாயா!! ரெண்டும் சூப்பர்..

//தாயின் காலடியில் தான் சொர்க்கம் உள்ளது என்பதை மறக்க வேண்டாம்//
மறக்கமாட்டோம்...
அன்னையர் தின நல் வாழ்த்துக்கள் அக்கா...

Priya said...

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்!
Thanks for a superb recipe!

Asiya Omar said...

இது நம்ம ஊர் ஸ்பெஷல் ஆச்சே,மாப்பிள்ளை பசியாறா என்றால் இதுவும் ஒருநாள் இருக்குமே.

Anonymous said...

ம்ம்ம்ம்...எத்தனை வகை தான் தெரிந்து வச்சிருக்கீங்கன்னே தெரியலையே சலிக்காமல் புதுப்புது ஐட்டம்ஸ் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கீங்க தோழி....இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

பாச மலர் / Paasa Malar said...

சமையல் கலையில் புலியாய் இருப்பீங்கன்னு நினைக்கிறேன்..
அன்னையர் தின வாழ்த்துகள்...

Anonymous said...

வட்டலப்பம்.. ஐ ஆம் கமிங்!

ஜெய்லானி said...

@@@ நாஸியா--//வட்டலப்பம்.. ஐ ஆம் கமிங்!//
வரும் போது பார்ஸல் பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

Menaga Sathia said...

super dishes!!

Jaleela Kamal said...

நன்றி ஜெய்லானி நாஸியாவுக்கு பார்சல் போடும் போது கண்டிப்பாஉங்களுக்கும் உண்டு

Jaleela Kamal said...

ஷ்பிக்ஸ், வட்லாப்பம், பாயா இஸ்லாமிய இல்ல ஸ்பெஷல் சமையல்

தொடர் வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி சசிகுமார்
நன்றி சீமான்கனி
ஏஞ்சலின் உங்கள் வருகைக்கு மிகக் நன்றி

Jaleela Kamal said...

இமா கித்துல் என்பது என்ன எனக்கு புரியலையே

Jaleela Kamal said...

சித்ரா, பிரியா, ஆசியா கருத்து தெரிவித்த்மைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

சித்ரா, பிரியா, ஆசியா கருத்து தெரிவித்த்மைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

தமிழரசி உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

தினம் செய்யும் அயிட்டம் தான் நேரம் கிடைக்கும் போது போடுகிறேன்,. அவ்வளவு தான்

Jaleela Kamal said...

பாச மலர் வருகைக்கு மிக்க நன்றி,சமியலில்
புலி எல்லாம் கிடையாது என்னை பொருத்தவரை இன்னும் சிறிய எலி தான், கற்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு

Jaleela Kamal said...

வருகைக்கு நன்றி பாத்திமா/



நாஸியா வாய் ஊறுகிறதா?

நட்புடன் ஜமால் said...

வட்லாப்பம் + பாயா - இதுவரை சாப்பிட்டதில்லை, பிடித்தவர்களுக்கு சொல்லி விடுகிறேன்.

ஜெய்லானி said...

@@@Jaleela--//..இமா கித்துல் என்பது என்ன எனக்கு புரியலையே //

பனை வெல்லம் இப்ப புரியுதா ?

Anonymous said...

வட்டலப்பத்தை சிங்களவர்களது டெசட் என்று சொல்லுவார்கள். ஆனால், அது முஸ்லிம்களின் டெசட் என்றும் சிலர் சொல்லுவார்கள். கித்துல் என்று ஒரு வகை சர்க்கரை இலங்கையில் உண்டு. அதில் தான் வட்டலப்பம் செய்வார்கள். அந்த சர்க்கரைக்கு ஒரு அருமையான மணம் உண்டு. நீங்கள் சொல்வதைப்பார்த்தால் இஸ்லாமியர்களால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது என்று புரிகிறது.

வட்டலப்பத்துக்கு முக்கியமான ஸ்பைஸ், சாதிக்காய் (நட்மெக்) அதில் கொஞ்சம் போடுவார்கள். ஒரு துளி தான். நிறைய போட்டால் மூக்கை அரிக்கும் வாசனையில் கசப்பு+உரைப்பான வட்டலப்பம் வரும். ஹி ஹி. (கருவா கராம்பில் கொஞ்சம் போடலாம் விருப்பம் என்றால். ஆனால் அவசியமில்லை). சிலர் முட்டை வெள்ளைக்கருவை மட்டும் போடுவார்கள். மண் சட்டியில் போட்டு பிரிஜில் வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். கிண்ணத்தில் கொடுக்கும் போது கொஞ்சம் கித்துல் பாணியும் பொடியாக வெட்டிய முந்திரியும் போட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.

எங்கள் இடத்தில் செய்வது கொஞ்சம் பிரவுன் நிறத்தில் இருக்கும்.

ஜெல்யானி, அதற்குத் தானே ஏலம் போடுகிறார்கள். மணம் வராது.

பனம் வெல்லத்துக்கு பேர், கருப்பட்டி.

ஸ்டீம் பண்ண முடியாதவர்களுக்கு இரண்டு வழிகள் இருக்கு.

1) மைக்ரோவேவில் வைப்பது.

2) சில்வர் சட்டியில் ஊற்றி மூடிவிட்டு தண்ணீரை கொதிக்க வைப்பது. அப்படி செய்யும் போது மூடியில் இருந்து ஒரு இஞ்சியாவது குறைவாக தண்ணீர் மட்டம் இருக்குமாறு பாருங்கள்.

மைக்ரோவேவில் செய்வது ஈசி.

Krishnaveni said...

excellent dish. kids will love to eat. Happy mother's day to all

இமா க்றிஸ் said...

ஜலீ & ஜெய்லானி,
இதுதான் கித்துள் மரம், பார்க்க கமுகு போல இருக்கும். இலை மட்டும் வேறு மாதிரி இருக்கும்.

http://en.wikipedia.org/wiki/Caryota_urens

http://www.junglemusic.net/palmadvice/palms-caryotas.htm

http://en.wikipedia.org/wiki/File:Caryota_urens_0003.jpg

http://en.wikipedia.org/wiki/File:Caryota_urens_0005.jpg

Vikis Kitchen said...

Superb Vatlappam. Paya kuruma and the health tips are very useful dear.

Jaleela Kamal said...

சகோ.ஜமால் வட்லாப்பம், பாயா சாப்பிட்டத்தில்லை என்றால் ஆச்சரியாமாக இருக்கு.

Jaleela Kamal said...

ஜெய்லாணி கிதுல் பனை வெல்லம் கிடையாது, அனாமிகாவும், இமாவும் விளக்கி உள்ளனர்..

Jaleela Kamal said...

அனாமிக்கா தெளிவான விளக்கத்துக்கு மிக்க நன்றி

ஸாதிகா said...

இப்பொழுதெல்லாம் சமையல் குறிப்பிகளை வித்தியாசமான தொணியில் போட்டு அட்டகாசம் அல்ல ..அல்ல..புரட்சி செய்கின்றீர்கள் ஜலி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா