Wednesday, December 29, 2010

பதிவுலக தோழ தோழியர்களே வாங்கப்பா




வாங்க எல்லோரும் நல்ல சாப்பிடுங்கள். அப்பதா பதிவ படிக்க தெம்பா இருக்கும்.
கொஞ்ச நாளா புதினா மேல அலாதி பிரியம் வந்துவிட்டது.

சுக்கு சோம்பு,புதினா டீ, புதினா இஞ்சி பிளாக் டீ, புதினா புலாவ், புதினா பேரிட்சை சட்னி, புதினா லெமன் துவையல், புதினா வடை

இது போல் கிச்சனில் நுழைந்தாலே எனக்கு தோன்றும் சமையல் அட்டகாசம் தான் சேர்ப்பது தான் மசாலா,

Tuesday, December 28, 2010

எனது மண் எனது கலாச்சாரம்














எனது மண் எனது கலாச்சாரம்.
வளர்ந்ததில் இருந்து வீட்டை விட்டு வெளியில் அவ்வளவா எங்கும் போனதில்லை வெளியூர் டூர் எதுவும்.
வருடா வருடம் பள்ளி விடுமுறைக்கு திண்டிவனத்திலிருந்து சென்னை மட்டும் போய் வருவோம்.அதற்கு பிறகு சென்னை வந்து செட்டில் ஆனதும் சென்னைய தவிர எங்கும் போனதில்லை.
.கல்யாணத்தி|ற்கு பிறகு தேனிலவுக்கு எல்லோரும் போவது போல் பெங்ளூர் மைசூர், ஊட்டி, கொடைக்கானல் போயிருக்கேன்.
வெளிநாடு, சிங்கப்பூர்,சவுதி, நார்த் சைட் டூர் இதெல்லாம் நினைத்து கூட பார்த்ததில்லை.
கல்யாணம் ஆனதும் ரங்ஸ் உடனே சவுதி சென்றுவிட்டு அங்கிருந்து அப்படியே துபாய் என்று முன்று வருடம் ஆகிவிட்டது ஊருக்கு வர முடியாம போய் விட்டது, பிறகு ஆகையால் என்னை துபாய்க்கு

Sunday, December 26, 2010

சிக்கன் ஸ்பகதி - chicken spaghetti

தேவையான பொருட்கள்
1. ஸ்பகதி - 200 கிராம்
2. போன் லெஸ் சிக்கன் - 100 கிராம்
3. டொமெட்டோ கெட்சப் - முன்று தேக்கரண்டி
4. வெங்காயம் - ஒன்று
5. மிளகாய் தூள் அரை தேக்கரண்டி
6. சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி
7. பூண்டு - 3 பல்
8. சர்க்கரை - ஒரு சிட்டிக்கை

















செய்முறை

1.ஸ்பகதியை இரண்டாக ஒடித்து குக்கரில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அரைஸ்பூன் எண்ணை- சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து வடித்து வைக்க்கவும்.

2.ஒரு வாயகண்ற வானலியில் பட்டர் + எண்ணையை சேர்த்து வெங்காயம், பூண்டு பொடியாக அரிந்து சேர்த்து வதக்கவும்.

3. வதங்கியதும் அதில் சிக்கன், மிளகாய் தூள் , உப்பு தூள், சோயா சாஸ்,சர்க்கரை,கெட்சப் சேர்த்து நன்கு கிளறி தீயின் தனலை சிம்மில் வைத்து சிக்கனை நன்கு வேகவிடவும்.

4.சிக்கன் வெந்து கூட்டானதும் வடித்து வைத்த ஸ்பாகதியை சேர்த்து கிளறி இரக்கவும்.




சுவையான சிக்கன் ஸ்பகதி ரெடி குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது.இதை வெஜ், முட்டை,மட்டன் சேர்த்தும் சமைக்க்கலாம்.

Thursday, December 23, 2010

கிருஸ்மஸ் வாழ்த்துக்களுடன் துபாய் மால்






துபாய் மால்
பிள்ளைகளுக்கு எல்லாம் பஸ் டிரெயினுன் போவதா இருந்தா ஒரு குஷி தான்
வீட்டிலிருந்து எல்லா பிள்ளைகளையும் கூப்பிட்டு கொண்டு பஸ் ஏறி மெட்ரோ டிரெயின் ஸ்டேஷன் வந்தாச்சு டிக்கட் எடுத்தாச்சு டிரெயிகுள்ளேயும் ஏறியாச்சு உள்ள

கூ ஊஊஉ சிக்கு புக்கு சிக்குப்புக்கு டிரெயின் கிளம்பிடுச்சு, ஆனால் ஊர் டிரெயில் போல சத்தம் எல்லாம் வராது, நாம தான் சத்தம் போட்டுக்கனும்.
அரபி பசங்க ஆட்டம் அதுகளம்,
பிலிப்பைனி கூட்டம் தான் அதிகம் யார பற்றியும் கவலை கிடையாது காதுல ஸ்கீர மாட்டிட்டு பாட்டு கேட்டு கொண்டே வருதுகள்.



துபாய் மால் உள்ளே
சிங்கப்பூரில் உள்ள சென்தோஷாவ விட பெரியது,
உள்ளே மீன் கள் நீந்துவதை பக்கத்தில் இருந்து பார்க்கலாம். உள்ளே போய் நீந்துபவர்கள் மீனுடன் நீந்தி கொள்ளலாம்.

கண்ணாடி உடைந்தால் அவ்வளவு தான் துபாய் மால் முழுவது மீனுடன் நாமும் நீந்த வேண்டியது தான்








ஒரே கூட்டமா இருக்கே என்னன்னு பார்க்கிறீங்களா?
துபாய் மால் அங்குதான் புர்ஜ் கலிபா பக்கத்தில் தண்ணீ (குதிக்கிற) டான்ஸ் ஆடுவது பார்க்க தான் இவ்வள்வு கூட்டம்
புர்ஜ் கலிபாவ பற்றி ஹுஸைனாம்மா பதிவில் விரிவா படித்து கொள்ளுங்கள்.











போன வாரம் துபாய் மால் போன போது எடுத்தது,. பிள்ளைகள் ஆசை பட்டதால் அங்கு வைக்கப்பட்டுள்ள சாண்ட கிளாசுஅருகில் ஆண்டி என்னை போட்டோ எடுங்க என்று என் தங்கை மகன் சொன்னதால் எடுத்தது.
இங்கு தூபாயில் உள்ள எல்லா மால் களிலும் கோலகலமாக அலங்காரமாக கிருஸ்மஸ் மரஙகளும் , சீரியல் லைட்டுகளும் சாண்ட கிளாசும் வைக்க பட்டுள்ளது,
இங்கு வீடுகளில் எல்லாம் கலர் கலரா அலங்கார விளக்குகள் மின்னுகின்றன.
குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.



துபாய் மால் பார்த்துட்டு டிரெயின விட்டு வர வழியில் ஒரு சின்ன பொண்ணு ஓடி வந்து பிள்ளைகள் எல்லோருக்கும் கிஃப்ட் அழகா பேக் செய்து இருந்த கிஃப்ட எல்லோருக்கும் ஆளுக்கொன்னா கொடுத்தது,பெரிய பணக்கார ஆண்டி ரிக்கா பிஸினெஸ் செண்டர் கீழே ஒரு பெரிய பாக்கெட்டோடு உட்கார்ந்து அந்த பக்கம் போற வர குழந்தைகளுக்கெல்லாம் கிஃப்ட்
கலர் பென்சில், ஜாமெண்ட்ரி பாக்ஸ் எல்லாம். நம்ம பசங்க உடனே என்னிடம் இருந்த சாக்லெட்ட வாங்கி கொண்டு போய் அந்த பொண்ணுக்கு கொடுத்து விட்டு வந்தார்கள்.
எல்லா மால்களிலும், சூப்பர் மாட்கெட்டுகளிலும் வித விதமான கேக்குகள்.






கிருஸ்மஸ் கொண்டாடும் அனைத்து தோழிகளுக்கும் ஹாப்பி கிருஸ்மஸ் நல் வாழ்த்துக்கள்.
தோழிகள்
இமா, செபா ஆண்டி,செல்வி அக்கா, சித்ரா, விக்கி, கவி இனிய கிருஸ்மஸ் நல் வாழ்த்துக்கள்
இன்னும் கிருஸ்மஸ் கொண்டாடும் தோழ தோழியர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Tuesday, December 21, 2010

மின்ட் புலாவ் - mint pulao



புத்துணர்வு தரும் புதினா, துவையல் சாப்பிட்டாலே அருமையாக இருக்கும் அதுவே சாதமாக என்றால் ஒரே மணம் தான்.சும்மா கும்முன்னு இருக்கும்.
பாசுமதி அரிசி – 200 கிராம்
1. வறுத்து பொடிக்க
மிளகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
பட்டை – ஒரு சின்ன துண்டு
பிரியாணி இலை – இரண்டு
கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
2. வதக்கி அரைக்க
பட்டர் (அ) நெய் – ஒரு ஸ்பூன்
புதினா – 1 பன்ச்
வெங்காயம் – 1
பூண்டு – 4 பல்
3. தாளிக்க
எண்ணை + பட்டர் – ஒரு ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
வெங்காயம் – பொடியாக அரிந்த்து ஒரு மேசை கரண்டி
செய்முறை
1. அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும். வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை வறுத்து பொடிக்கவும்.
2. வதக்கி அரைக்க வேண்டியவைகளை வதக்கி அதனுடன் பொடித்த பொடியையும் கலக்கவும்.
3. குக்கரில் எண்ணை + பட்டர் சேர்த்து கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
4. அரைத்த கலவையை சேர்த்து தேவைக்கு உப்பு போட்டு அரிசி ஒரு பங்குக்கு ஒன்னறை அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இரக்கவும்.
சுவையான மனமான மின்ட் புலாவ் ரெடி

Sunday, December 19, 2010

பழைய சாதத்துடன் அப்பாவை பற்றிய பழைய ஞாபகங்களும்.

இது என் 500 வது பதிவு,என் பதிவுகளை தவறாமல் படித்து பதில் அளித்து ஓட்டு போடும் பதிவுலக தோழ தோழியர்களுக்கும் மிக்க நன்றி.






பழைய சாதத்துடன் அப்பாவை பற்றிய பழைய ஞாபகங்களும்.


அப்பாக்கள் என்றுமே கிரேட் அப்பாக்கள் தான், அவர்கள் நமக்கு செய்ய்ம் ஓவ்வொரு விஷியமும் நினைத்து பார்த்தால் அனைத்தும் மிக அருமையான கனாக்காலம் தான்

அந்த காலத்தில் (அவ்வையார் பாட்டி காலம் இல்லை) சின்ன வயதில் , ஞாயிற்று கிழமைகளில் ஆகா அருமையாக ரேடியோவில் முகம்மது ரஃபி பாடல் கேட்டு கொண்டே





எல்லோரும் சேர்ந்து பழைய சாதமும், தொட்டுக்க நாலனா மசால் வடைசாப்பிட அருமையோ அருமை ஆனந்தமோ ஆனந்தம்.





அதுவும் எங்க எங்க அப்பா தான் எல்லோருக்கும் காலையில் இதை செய்து கொடுப்பது.

எப்படி செய்வது

மீதியான சாதம்
வெங்காயம்
பச்சமிளகாய்
மோர் (அ) தயிர்
கொத்துமல்லி தழை
உப்பு


//இரவே மீதியான சாதத்தை ஊற வைத்து அதை காலையில் நன்கு பிசைந்து அதில் வெங்காயம் பச்சமிளகாய் பொடியாக அரிந்து சேர்த்து மோர் (அ) தயிர் மற்றும் உப்பு, கொத்துமல்லி தழை நறுக்கி போட்டு தொட்டுக்க நாலனா மசால் வடை நான் போய் வாங்கி வருவேன்.இல்லை நார்த்தங்காய் ஊறுகாய்.//







தீபாவளி அப்ப எல்லாரும் வெளியில் வெடிக்கும் சங்கு சக்கரம், புஸ்பான், ராக்கெட் , சரவெடி எல்லாத்தையும் வேடிக்கை பார்ப்போம், உடனே மத்தாப்பு சுர் சுர் கம்பி வாங்கி வந்து வீட்டுல எல்லா லைட்டையும் ஆஃப் செய்து விட்டுஅரிக்கன் லைட், மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் தங்கைகளுடன் கொளுத்தி மகிழ்வோம். ரொம்ப அருமையான் கனாக்காலம.

/



சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும், என்பது போல் ”பானு சில்க் பேலஸ்”எங்கேன்னு கேட்டா சுற்று வட்டாரத்தில் அனைவருக்கும் தெரியும். பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன், எங்கு வந்து வெளியூரில் இருந்து வந்து இரங்கி ”பானு சில்க் பேலஸ்” எங்கே ந்னு கேட்டா எல்லோரும் வழி காண்பிப்பார்கள், அந்த அளவுக்கு பேமஸ்.










ரேடியோ படம் சிங்கக்குட்டி பதிவில் இருந்து சுட்டது , நன்றி சிங்கக்குட்டி.







ஞாயிற்று கிழமைகளில் மதியம் சாப்பிட்டு முடித்ததும் எல்லோரும் சேர்ந்து
வானொலியில் நாடகம் கேட்டு கொண்டே கேரம் ஆடுவது ரொம்ப நல்ல இருக்கும்.





எப்பவும் எங்கும் எப்ப லேட்டா வந்தாலும் ஜலி ஜலீ என்று சொல்லி தான் கதவை தட்டுவார், அம்மா கோச்சுக்குவாங்க ஆமாம் ஜலியா வந்து கதவை திறக்கிறாள் என்பார்கள்.

இப்பவும் எப்ப போன் செய்தாலும் மனக்கழ்டமா இருந்தால் ஒன்றும் கவலை படக்கூடாது தைரியமா இருக்கனும், அனாவஷிய செலவு செய்ய கூடாது. அது அது நடப்பது தானா நடக்கும் என்பார்.அவர் சொல்லும் போதே பாதி கவலை போன மாதிரி ஆகிடும்.

ஆச்சு 35 வருடம் கடையிலேயே இருந்து அண்ணன் தம்பி எல்லோரையும் கவனித்து, அக்கா தங்கைகள் , அவர்கள் பிள்ளைகள்,பேத்திகள் வரை உதவி, நாங்க தலை எடுக்கும் போது கையில் ஒன்றும் இல்லை, பிறகு பத்து வருடகாலமாக நீச்சல் அடித்து பிறகு சவுதி சென்று சம்பாதித்து எல்லோரையும் கரை சேர்த்தார் . பிறகு அங்கேயே ஸ்டோரில் எண்ணை தடுக்கி விழுந்து கால் நடக்க முடியாம ஆப்ரேஷன் செய்து பிற்கு பணி தொடர முடியாமல் ஊருடன் வந்துவிட்டார்.




அப்பா எங்கு சென்றாலும் நடந்து தான் போவார் அவர் கூட் நடக்கனும் என்றால் நாங்க கூட் ஓடதான் செய்யனும் அப்படி ஒரு ஸ்பீட்.நானும் இங்கு வந்ததிலிருந்து இங்கு சம்பாத்தித்து முடிந்த வரை அப்பாவிற்கு உத்வினேன், அதில் என்க்கு மிக மனதிருப்தி.

கால் ஆப்ரேஷனில் இருந்து இப்ப வேகமாக நடப்பது சற்று சிரமம் தான்.
ரொம்ப கவலையாக இருக்கும் இங்கிருந்து போன் செய்தாலே டாடி கால் வலி இல்லாம இருக்கா பாத்ரூம் போனா பாத்து கால வையுங்கோ. படி இறங்கும் போது அவசர பட வேண்டாம், மெதுவா இரங்குங்கள் மழை பெய்தால் வெளியில் போகும் போது ஒழுங்கான செருப்ப போட்டு கொண்டு போங்க டாடி. போன் வந்த அவசரமா ஓடி வரவேண்டாம் என்று சொல்வேன்.



சின்ன வயதில் கூட இருந்ததோடு சரி அதற்கு பிறகு இது வரை பிரிந்து தான் இருக்கிறோம். படிக்கும் காலத்தில் பொருள் ஈட்ட பிரிந்து இருந்தார், கல்யாணம் ஆகி நாங்களும் சிறிதுகாலத்தில் பிரிந்தாச்சு. அப்ப வெக்கேஷன் லீவில் பார்ப்பதோடு சரி, ஆனால் முன்பு அடிக்கடி போன் செய்ய முடியாது. சவுதியில் இருக்கும் போது தனியா இருக்கிறாரே என்று அடிக்கடி போன் செய்து விசாரித்து கொண்டே இருப்பேன். இப்பவும் தோன்றூம் போதெல்லாம் பேசுவேன்.




அப்பாக்கள் என்றுமே கிரேட் தான் அவர்களை பற்றி சொல்லனுமுன்னா சொல்லி கொண்டே இருக்கலாம்.







///அப்பாக்களை பற்றி சுவரசியமான மறக்க முடியாதவை நிறைய வே இருக்கும் நீங்கள் இந்த பதிவை படிப்பவர்கள் தொடர நினைத்தால் தொடரலாம்///









இந்த பதிவில் சேகர் அவர்கள் பழைய சாதத்தை பற்றி அருமையா சொல்லி உள்ளார் பருங்கள்
தோழி ஆசியா அன்பாக விருதுகள். மிக்க நன்றி ஆசியா.

விருது களுக்கு மிக்க நன்றி ஆசியா/



எல்லோரும் வாங்கி விட்டார்கள் யாருக்கு கொடுப்பத்து. யோசிக்கிறேன்.இதற்கு தனியாக பதிவு போடனும், முடிந்த போது போடுகிறேன்.










இது என் 500 வது பதிவு

இந்தாங்க எல்லோரும் கேக் எடுத்து கொள்ளுங்கள்

இங்கு இவ்வளவு தூரம் வருகை தந்து என் பதிவுக்கென்று நேரம் ஒதுக்கி படித்து கமெண்ட் அளித்த அனைத்து பதிவுலக தோழ தோழியர்களுக்கு மிக்க நன்றி,



தொடர்ந்து முடிந்த போது வந்து உங்கள் அன்பான கருத்துக்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.








டிஸ்கி:
500 வது பதிவு என்ன போடலாம் என்று யோசித்து கடைசியில் அப்பாவை பற்றி எழுதலாம் என்று தோன்றியது. டிசம்பரில் தான் அவருக்கு பிறந்த நாளும், இந்த மாத ஆரம்பத்திலிருந்து என்னேரமும் அவர் நினைப்பு தான்.நேற்று அவர் மட்டும் விட்டில் இருந்தார் , அம்மா வெளியில் போயிருந்தாங்க. தனியா இருப்பதால் நான் போன் செய்யவும் அப்படி பழைய கதைய பேசி கொண்டு இருந்தார், ரொம்ப நல்ல இருந்தது. அதான் அப்படியே அவரை பற்றி பதிவில் போட்டு விட்டேன்.


Wednesday, December 15, 2010

மு்துகு வலிக்கு குட் பை


jumerah beach










இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் எல்லோரும் அதிக நேரம் செலவிடுவது கம்பியுட்டரில் தான் இதானால் கண்டிபாக முதுகெலும்பு, இடுப்பெலும்பு பிரச்சனை எல்லோருக்கும் உண்டு.



என்னேரமும் ஆபிஸில் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்வளுக்கு கண்டிப்பாக முதுகு வலி வர வாய்ப்பு இருக்கிறது.ஒரே பொஷிஷனிலும் உட்காரக்கூடாது.




//back pain பற்றி பேசும் போது அவர் 25 வருட அனுபவம் கொண்ட ஒரு ஆர்தோ டாக்டர் சொன்னார்.
ஆர்தோ டாக்ட‌ரிட‌ம் பேக் பெயின் ப‌ற்றி பேசும் போது அவ‌ர் Swimming is best for back bone problem சொன்னார்.

அதே போல் பேக் பெயினுக்கா பிசியோ தரஃபி லேடி டாகடரும் சொன்னார்கள், நீந்துதல் உடற்பயிற்சி மேற்கொண்டால் பேக் பெயின் வர வாய்ப்பே இல்லை என்று.//





ஓ வெள்ள‌ கார‌ ஆன்டி அங்கிள் எல்லாம் பேரன் பேத்தி எடுத்த பிறகும் எப்ப‌டி ஸ்ட‌டியா வெளியில் வேலைக்கு போகிறார்கள் என்று இபப் தான் புரிகிறது. அடிக்க‌டி sunbath,swimming எடுத்து கொள்கிறார்க‌ள்




ஆண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி மற்றும் முதுகு வலிக்கு நீச்சல் உடற்பயிற்சி செய்தால எந்த தைலம், மருந்தும் தேவையில்லை.


இது பெண்கள் பல பேர் ஸ்விம்மிங் போனாலாலும், சில பேர் போவதில்லை.
ஆனால் ஆண்கள் எல்லோரும் இந்த நீச்சல் உடற்பயிற்சியை செய்து உங்கள் முதுவலியில் இருந்து நிவாரணம் அடைந்து கொள்ளலாம் இல்லையா?
துபாயிலும் ராச‌ல் கைமா, அல் அயினில் வெண்ணீ ஊற்று இருக்கு.

பெண்க‌ளுக்கு த‌னி இட‌ம், ஆண்க‌ளுக்கு த‌னி இட‌ம் இஷ்ட‌ம் போல் ஆட்ட‌ம் போட‌லாம்.அப்ப‌ முதுகு வ‌லி உள்ள‌ பெண்க‌ளும் இது போல் போய்கொள்ள‌லாம்.

எல்லோருக்கும் தண்ணியில மிதக்கனும்னா ( அட அந்த தண்ணி இல்லங்க) , விளையாடனும்னா ரொம்ப பிடிக்கும் இல்லையா?

நல்ல நீந்துங்கள், முதுகுவலிய போக்கிக்கங்க.

இப்படி நீந்துதல் உடற்பயிற்சியால், உடலும், எலும்புகளும் பலம் பெறுகிறது. வெயிட்டும் குறையும், நல்ல கொடி இடையாகிவிடலாம்
குழந்தைகளையும் பழக்குவது நல்லது, நீச்சல் உடற்பயிற்சியால் குழந்தைகள் உயரமாக வளருவார்கள்.

டாக்டர் சொன்னதை தவிர மற்றதெல்லாம் என் சொந்த கருத்து.

1. முதுகுவலி, கால் வலி உள்ளவர்கள் காலுக்க்கிடையிலோ அல்லது காலுக்கு கீழோ தலையணை வைத்து படுத்தால் ஓரளவிற்கு முதுகுவலியில் இருந்து விடுதலை பெறலாம்.


2. சிலருக்கு டெலிவரியின் போது முதுகு தண்டில் ஊசி போடுவதாலும் ஏற்படும்.

3. முதுகுவலி உள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், வெயிட் அதிகமாக தூக்கக்கூடாது.



4. ஓவர் வெயிட்டாக இருந்தாலும் முதுகு வலி வரும் வெயிட்டை குறைத்தால் கூட இடுப்பு வலி முதுகு வலியில் இருந்து விடுதலை பெறலாம்.

5. முதுகுவலி இருப்பவர்கள் அதுவும் ஆபிஸில் வேலை செய்பவர்கள் ஒரே இடத்தில் வெகு நேரம் உட்காருவதை தவிர்க்கவும்.

6. அரை பக்கெட் தண்ணீரை கூட தம் பிடித்து தூக்கக்கூடாது, இதனால் இடுப்பு வலி முதுகுவலி ஏற்பட வாய்ப்பிருக்கு.

7. ஒரு நாளைக்கு இரு முறை ஹாட் வாட்ட‌ர் பேக் ஒத்த‌ட‌ம் கொடுத்தால் 50% வ‌லி குறையும்.

8. கர்பிணி மாதம் ஏற ஏற வெயிட் காலில் இறங்கும் போது அவர்களுக்கு கால் வலி பிரசவத்திற்கு பிறகு முதுகுவலி வர வாய்ப்பிருக்கு. அதற்கு அவர்கள் காலுக்கடியில் சைடில் கூட தலையணை வைத்து படுத்தால் கர்ப காலத்திலும் அதற்கு பிறகும் வரும் வலியில் இருந்து விடுதலை பெறலாம்.

9. சேரில் உட்காரும் போது பின்னாடி ஒரு சிறிய தலையணை வைத்து கொண்டு உட்காரலாம்.


10. ரொம்ப முதுகுவலி உள்ளவர்கள் பெட்டில் படுக்காமல் கீழே படுத்து கொண்டு முதுகுக்கு மட்டும் ஒரு திக்கான துணியை விரித்து படுத்தால் ஓரளவிக்கு கட்டு படும்.


11. எந்த ஒரு பொருளையும் கீழே சட்டுன்னு குனிந்து எடுக்கக்க்கூடாது.
குழந்தைகளை குளிக்க வைக்கும் போது ஒரு சிறிய சேர் போட்டு உட்கார்ந்து குளிக்க வைக்கலாம்.


12. துணிகளையும் ரொம்ப நேரம் குனிந்து துவைக்கக்கூடாத


Note:

(இடுப்பு பலம் பெற முட்டை வட்லாப்பம், சிக்கன் மற்றும், மட்டன் எலும்பு சூப்,உளுந்து கஞ்சி,உளுந்து சுண்டல்,வெந்தய கஞ்சி போன்றவை சாப்பிடலாம்.ரொம்ப இடுப்பு வலி உள்ளவர்கள் இரண்டு முட்டை அவித்து மிளகு உப்பு தூவி சாப்பிடலாம்).




zumerah beach

இங்கு துபாயில் ஜுமேரா பீச் ரொம்ப பேமஸ், இங்கு அரபிகள் சின்ன குழந்தைகளை கூட் கூப்பிட்டு வந்து தண்ணீரில் விட்டு விடுவார்கள்,

ஆனால் இதுபோல பீச் களீள் துபாயில் இப்ப பிலிப்பைனிகள் தான் ஜாஸ்தி.தண்ணியில் கிடப்பது.


Sunday, December 12, 2010

சின்ன வெங்காய சாம்பார் வடை - Pearl Onion sambar vadai





தேவையான பொருட்கள்.





வடை தயாரிக்க
உளுந்து பருப்பு – 150 கிராம்
இஞ்சி – ஒரு மேசை கரண்டி
பச்ச மிளகாய் – 2
வெங்காயம் – 2 மிடியம் சைஸ்
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – இரண்டு ஆர்க்
இட்லி சோடா – ஒரு சிட்டிக்கை
எண்ணை – வடை பொரிக்க தேவையான அளவு


சாம்பாருக்கு

பருப்பு வேகவைக்
பருப்பு 75 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
மஞ்சள் பொடி – அரை தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
தக்காளி - ஒன்று பெரியது
பூண்டு – இரண்டு பல்
தாளிக்
எண்ணை - ஒரு மேசைகரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சின்னவெங்காயம் – 25 கிராம்
கருவேப்பிலை – இரண்டு ஆர்க்
நெய் – ஒரு தேக்கரண்டி
சாம்பார் பொடி – ஒரு மேசை கரண்டி
வெள்ளை புளி - ஒரு கொட்டைப்பாக்களவு.
அலங்கரிக்
கொத்துமல்லி தழை
பொடியாக அரிந்த வெங்காயம் - இரண்டு மேசை கரண்டி

செய்முறை
1.முதலில் வடைக்கு அரைக்க உளுந்தை ஒரு மணிநேரம் ஐஸ் வாட்டரில் ஊறவைத்து வடிக்கட்டியில் தண்ணீரை வடிகட்டி உப்பு, இட்லி சோடா சேர்த்து மையாக அரைக்கவும்.
2. அதில் வெங்காயம், கருவேப்பிலை,இஞ்சி, பச்சமிளகா முன்றையும் பொடியாக அரிந்து கலக்கி வைக்கவும்.

சாம்பார் தயாரிக்
1. பருப்பை களைந்து குக்கரில் சின்ன வெங்காயம் முழுதாக தோலை எடுத்து போடவும். தக்காளியை இரண்டாக அரிந்து சேர்க்கவும்.மேலும் மஞ்சள் தூள் சீரகத்தையும் சேர்த்து ஒன்றிற்கு இரண்டு பங்கு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊறவைத்து அடுப்பில் ஏற்றவும், வெயிட் போட்டு தீயின் தனலை குறைத்து வைக்கவும்.

2. இரண்டு முன்று விசில் வந்த்தும் இரக்கவும். குக்கர் ஆவி அடங்கியதும். மத்தால் (அ) கரண்டியால்,(அ) பிளண்டாரால் வெந்த பருப்பை நன்கு மசிக்க்வும்.

3. அரை டம்ளர் தண்ணீர் சாம்பார் பொடியை கரைத்து, கால் டம்ளர் சுடு வெண்ணீரில் புளியை ஊறவைத்து கரைத்து இரண்டையும் பருப்பில் சேர்த்து கொதிக்க விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கடைசியாக் நெய்யை விடவும்.

4. இப்போது அரைத்து வைத்துள்ள வடைமாவை வடைகளாக சுட்டெடுத்து எண்ணையை வடித்து ஒரு பெரிய வாயகண்ற பவுளில் வைக்கவும்.

5. தாளித்து வைத்து இருக்கும் சின்ன வெங்காய சாம்பாரை வடையின் மேல் ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம் மற்றும் கொத்துமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.

6. பத்து நிமிடம் கழித்து நன்கு வடையில் சாம்பார் ஊறி இருக்கும்.
தனியாக தேவைக்கு எடுத்து பரிமாறவும்.
சுவையான கம கம சாம்பார் வடை ரெடி
குறிப்பு:
உளுந்து வடையில் இட்லிசோடா விருப்பம் இல்லை என்றால் போட வேண்டாம்./இது வடைக்கு என்பதால் இதில் எந்த வகையான காயும் சேர்க்கவில்லை. உளுந்தை ஐஸ்
வாட்டரில் ஊற வைப்பதால் நிறைய மாவு காணும்.





those recipe goes to priya's complete my thali GMT DAAL/KHADI/SAMBAR/RASAM EVENT