தர்பூசணி பிங்கர்ஸ் (குழந்தைகளுக்கு)
தேவையானவை
தர்பூசணி பெரிய துண்டு – 1
சுக்கு பொடி – ஒரு பின்ச்
குளுக்கோஸ் – 1 தேக்கரண்டி
செய்முறை
தர்பூஸ் பழத்தில் உள்ள தோலையும் கொட்டைகளை நீக்கவும்.
பழங்களை ஒரு விரல் நீள அளவிற்கு வெட்டவும்.
அதில் சுக்கு தூள் மற்றும் குளுக்கோஸை தூவ்வும்.
வேண்டிய வடிவில் தட்டில் அழகாக அடுக்கிவைக்கவும்.
தர்பூசணி கலருக்கும் பார்த்த்தும் எடுத்து சாப்பிடும் வண்ணம் இப்படி ரெடியாவைத்தால் குழந்தைகள் மட்டும் இல்ல பெரியவர்களுக்கும் ரொம்ப பிடிக்கும்.
பார்ட்டி, வீட்டில் விருந்தாளி என்றாலே நான் முதலில் யோசிப்பது குழந்தைகளை தான் பிறகு தான் மற்ற மெனுவை பற்றி யோசிப்பது.
இது இரண்டு பேருக்கு தேவையான அளவு , பார்ட்டி ஏற்றவாறு நிறைய தர்பூசணி வாங்கி இப்படி அழகாக பரிமாறலாம்.
இது பாயிஜாவின் பார்டி ஈவண்டுக்காக அனுப்புகிறேன்.
டிப்ஸ்:
சுக்கு தூள் தூவுவது சளி ஏற்படுத்துவதை கட்டுப்படுத்தும். இனிப்பு சுவை குறைவாக உள்ள பழங்களில் சர்க்கரை தூவி சாப்பிடலாம் , சர்க்கரைக்கு பதில் குளுக்கோஸ் சேர்ப்பது மிகவும் நல்லது.
டிஸ்கி: ஆங்கில தளங்களில் தான் நிறைய ஈவண்டுகள் நட்த்தி கொண்டு இருக்கிறார்கள். இப்போது முதல் முறையாக தோழி பாயிஜா ஆரம்பித்து இருக்காங்க. இது கண்டிப்பாக எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
குழந்தைகளுக்கும் வித விதமாக செய்து கொடுக்கலாம்.
நாமும் இங்கு தமிழ் வலைகளிலும் நிறைய் தோழிகள் இருக்கிறார்கள்.நாமும் நட்த்தினால் என்ன் என்று சில மாதங்கள் முன்பு தான் நானும் ஆசியாவும் சந்திக்கும் போது இதை பற்றி பேசி கொண்டு இருந்தோம்.கூடிய விரைவில் ஆரம்பிப்போம். இப்ப பல வேலைகளில் பிஸியாக இருப்பதால் கொஞ்ச நாட்கள் கழித்து ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். அதற்கு வலையில் சமையல் குறிப்பு எழுதாத தோழிகளையும் அன்புடன் அழைக்கிறேன். எல்லாரும் கலந்து கொள்ளனும்.
Tweet | ||||||