Thursday, October 1, 2009

ஸ்டப்டு பிரட் பஜ்ஜி - stuffed bread bajji

பிரட் ஸலைஸ் = 10 துண்டுகள்
கீரின் சட்னி = பிரட்டில் தடவ தேவையான அளவு

கெட்சப் = பிரட்டில் தடவ தேவையான அளவு


பஜ்ஜி மாவு


கடலை மாவு = ஒரு கப்
பொட்டு கடலை பொடி = ஒரு மேசை கரண்டி
மிளகாய் தூள் = ஒரு தேக்கரண்டி
உப்பு தூள் = தேவைக்கு
ரெட் கலர் பொடி = இரன்டு பின்ச்
சோம்பு தூள் = முக்கால் பதம் பொடித்தது
கருவேப்பிலை = ஒரு மேசை கரண்டி பொடியாக சாப் செய்தது
துருவிய இஞ்சி = ஒரு தேக்கரண்டி


முதலில் பிரெட் ஸ்லைஸை முக்கோண வடிவில் வெட்டி கொள்ளவும்.

கீரின் சட்னி புளி சேர்க்காமல் லெமென் சேர்த்து தயாரித்து கொள்ளவும்.
கிரின் சட்னி
கருவேப்பிலை புதினா கொத்து மல்லி ஒரு கப் மண்ணில்லாமல் ஆய்ந்து பொடியாக சாப் செய்து அத்துட‌ன் இஞ்சி ஒரு துண்டு, ப‌ச்ச‌மிள‌காய் ஒன்று, சின்ன‌ வெங்காய‌ம் முன்று, உப்பு சிறிது எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி சேர்த்து அரைத்து கொள்ள‌வும்.

கெட்சப்பையும் தயாராக வைக்கவும்.

பஜ்ஜி மாவில் சேர்க்க வேண்டிய பொருட்களை சேர்த்து கரைத்து கொள்ளவும், அதில் பொடியாக அரிந்த கருவேப்பிலையும் சேர்த்து கொள்ளவும்.

ஒரு பிரெட்டின் ஒரு பக்கம் கெட்சப்பையும், இன்னொரு பிரெட்டில் கிரீன் சட்னியையும் தடவி முடி பிறகு பஜ்ஜி மாவு கலவையில் தோய்த்து எண்ணையை காய வைத்து பொரித்து எடுக்கவும்குறிப்பு
பிரெட் பஜ்ஜி எண்ணை கூட அவ்வளவா குடிக்காது, இப்படி ஸ்டப் செய்து பொரித்து சாப்பிடுவதால் புளிப்பு, இனிப்பு, காரம் என்று கூடுதல் சுவை.

சுவையான மாலை நேர டிபன் ரெடி, தொட்டுகொள்ள பேரிட்சை சட்னி ரொம்ப நல்ல காம்பினேஷன்.
பிள்ளைகளுக்கு இதில் எல்லா சத்துக்களும் சேர்கிறது. (பேரிட்சை, கொத்து மல்லி கருவேப்பிலை , புதினா இலைகள், பிரெட்) எல்லாமே ஹெல்தி

27 கருத்துகள்:

akkila said...

super bajji sister innaikke ithai try panren unga recepies ellam best thanks sister

கவிதை(கள்) said...

இன்னைக்கே மனைவியிடம் செய்ய சொல்கிறேன். நன்றி.

Mrs.Menagasathia said...

superraa irukku!!

pls see this link

http://sashiga.blogspot.com/2009/10/blog-post.html

saravanan said...

superb sister i will try this receipie
by mrs banu

Jaleela said...

டியர் அகிலா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றீ.

வாங்க அடிக்கடி வந்து கருத்து தெரிவிக்கவும்.

Jaleela said...

கவிதை கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. சாப்பிட்டு விட்டு எப்படி இருந்தது என்று சொல்லவும்.

Jaleela said...

மேனகா உங்கள் பாராட்டுக்கும் விருது கொடுத்தமைக்கும் மிக்க நன்றி.

நேரம் கிடைக்கும் போது போட்டு கொள்கிறேன்

Jaleela said...

மிஸஸ் பானு உங்கள் வருகைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.

farvin said...

jaleela sister where is ur child growing news where i should see regularly morning my baby went to motion after lunch also she is going to motion what ishould do bed wetting also she is doing tell me ur openion sister

Jaleela said...

பர்வீன்

என்ன சொல்ல வரீங்க‌

லூஸ் மோஷன் ஆகுதா?

அடுத்து பெட் வெட்டிங்கா?

1. நீங்க உங்கள் பிள்ளைக்கு சளிக்குசொல்லி இருந்தீங்க அந்த பர்வீன் தானே.
இப்ப மருந்து கொடுத்து கொண்டு இருக்கீங்க ,அப்ப லூஸ் மோஷன் ஆக தான் செய்யும்,
என்ன வயசு உங்கள் குழந்தைக்கு

2. பெட் வெட்டிங்கு பதிவில் போடுவேன்,

இரவு எட்டு மணிக்கு மேல் லிக்கியுட் அயிட்டம் ரொம்ப கொடுக்க வேண்டாம்

இரவு இரன்டு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்திருக்க வைத்து ஒன் போக விடுங்கள். ஒரு வாரத்திற்கு அப்படியே பழக்க படுத்தவும்,. கொஞ்சம் உங்கள் தூக்கம் கெடும்,.

குழந்தை வளர்பு பகுதி மொத்தமா இதிலே தான் இருக்கு.

www.kidsfood-jaleela.blogspot.com

இதையா கேட்கிறீர்ங்க

Priya said...

Tasty stuffed bread bajji, pakkura pothey pasikuthu Jaleela..

ஸாதிகா ஹஸனா said...

ஜலி..ஆஹா..அருமையான பஜ்ஜி,அருமையான படங்கள்.கலக்குகின்றீர்கள் ஜலி.
ஸாதிகா

Jaleela said...

பிரியா அப்ப உடனே செய்து சாப்பிடுங்கள், ரொம்ப ஈசி டிரை கலர் பிரெட் பஜ்ஜி

Jaleela said...

வாங்க வாங்க ஸாதிகா அக்கா , உங்கள் பாராட்டுக்கு, கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

kavi.s said...

ஜலீலக்கா இப்ப தெரியுது உங்க ப்ளாக்கிலுள்ள ஃபான்ட்.

அக்கா பிரட் வாங்கிட்டு வந்து அப்படியே இருக்கு,இதை பார்த்தவுடனே ரொம்ப சந்தோஷமா இருக்கு,இன்னைக்கு சாயந்திரமே செய்யனும்,மழை வேற பெய்துட்டு இருக்கு,செய்து பார்த்து சொல்றேன்.

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

ஹை நம்ம பிரெட்!! ஒஹ் சட்னியும் இருக்கா, குட் குட், அடுத்த ஹோம் ஒர்க் ரெடி!!

Jaleela said...

கவி வந்து பதிவில் பதில் போட்டமைக்குரொம்ப சந்தோஷம்,
செய்து பார்த்து எபடி இருந்தது என்று சொல்லுங்கள்

Jaleela said...

வாங்க ஷபிக்ஸ ரொம்ப நாள் கழித்து வரீங்க, உங்களுடைய கருத்துக்கள் தான் இத்தனை பதில் தொடர்ந்து பதிவு போட ஒரு பூஸ்ட்.


ஹோம் வொர்க் ம்ம் ஸ்டாட் பண்ணுங்கள்

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

ஜலீலா, உங்களோட பதிவு ரீடரில் வரமாட்டேங்குதே, ரீடரில் பார்க்கும்போது, போன மாசம் போட்ட ரிச் பாலூடாதான் லேட்டஸ்ட் பதிவுன்னு காண்பிக்குது!!

S.A. நவாஸுதீன் said...

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

ஜலீலா, உங்களோட பதிவு ரீடரில் வரமாட்டேங்குதே, ரீடரில் பார்க்கும்போது, போன மாசம் போட்ட ரிச் பாலூடாதான் லேட்டஸ்ட் பதிவுன்னு காண்பிக்குது!!

அதே பிரச்சனைதான் எனக்கும். இப்பவும் ரிச் ஃபலூதாதான் இருக்கு. அதன் பிறகு உள்ள பதிவுகல் எதுவும் இல்லையே.

S.A. நவாஸுதீன் said...

ஸ்டஃப்ட் பிரட் ஸ்பெசல் பஜ்ஜி செமையா இருக்கே

Jaleela said...

நவாஸ், ஷபிக்ஸ் என்ன பிராப்ளம் ஏன் வரவில்லை என்று தெரிய வில்லையே,

Jaleela said...

சகோதரர் நவாஸ் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

my kitchen said...

ஆஹா..அருமை...........

Jaleela said...

மிக்க நன்றி பிரியா

sakthivel said...

Wow! It looks amazing...I getting hungry now...

halal foodie said...

yummyyy!!! thanks for sending it to my event

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா