(பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது கண்ணாடி டம்ளரை உடையாமல் பாதுக்காப்பது போலாக்கும்)
கண்ணாடிகள் கவனம். = M அப்துல் ரஹ்மான் M.P.
நமது சமுதாயம்
சந்தித்து வருகின்ற பிரச்னைகளில் மிக முக்கியமானது வரம்பு மீறிய காதல் பிரச்னைதான். ஓடிப்போகும் சீரழிவுச் செய்தி எல்லாப்
பகுதிகளிலிருந்தும் நீக்கமற வந்த வண்ணமிருக்கின்றன. இதற்கெல்லாம் இதுதான் காரணமென்று பொத்தம்பொதுவாய் ஒன்றைச் சொல்ல முடியாது. செல்போன், சின்னத்திரை, பெரிய திரை,
கல்வி நிலையங்களில் கலந்து பழகுதல் எனப் பல
காரணங்களைச் சொல்லலாம். காரணம் எதுவாயினும் சரி செய்யப்பட
வேண்டிய தலையாய விசயம் இது. இந்தப் பொறுப்பும்
கடமையும் பெற்றோர்களையே சாருகின்றது.
பெற்றோர்களின் கவனக்குறைவினால்தானே அவர்கள்
கீழிறங்கிப் போகின்றார்கள். செல்போன், தொலைக்காட்சி,
இணையதளம் ஆகிய வசதிகளை ஏற்படுத்தித் தருவதோடு
பெற்றோர்களின் பங்கு முடிந்து விடுவதில்லை. அதை அவர்கள்
எப்படிப்பயன்படுத்த வேண்டும் என்பதைச் சொல்லித்தர வேண்டும். அதன் நன்மை தீமைகளை விளக்கித் தர வேண்டும்.
தீவிர கண்காணிப்பும் வேண்டும். மீறும்போது
கண்டிக்கவும் வேண்டும்.
தொடர்ந்து
தொலைக்காட்சி பார்க்கும்போது அதில் காட்டப்படும் கற்பனைக் காட்சிகளால் ஈர்க்கப்படும்
பிள்ளைகள் இளமைக்கால தூண்டுதலால் தானும் அதுபோல செய்ய வேண்டுமென உந்தப்படுகிறார்கள். பிள்ளைகளை
வைத்துக்கொண்டே தொடர்நாடகங்கள், சினிமாக்களைப்
பார்க்கின்றோம். வரம்பு மீறிய காட்சிகளைப்
பார்க்கும் சூழலை நாமே உருவாக்கித் தருகின்றோம். பெற்றோர்கள் நல்ல முன்மாதிரிகளாக இருந்து தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
நம் பிள்ளைகள் தனி அறையில் நீண்டநேரம் யாரோடு
பேசிக்கொண்டிருக்கின்றார்கள்? என்பதைக்
கண்காணிக்க வேண்டும். அவர்களின் கல்லூரி நண்பர்கள் யார்? யாரோடெல்லாம் பழகுகின்றார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். செலவுகளுக்காக அதிகமாகப் பணம் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். அதிக நகைகளை அணிவிக்காமலிருப்பதும், நகைகள் இருக்குமிடம், பணப்புழக்கம் அவர்களுக்குத் தெரியாமலிருப்பதும்
நல்லது. ஏனென்றால் ஓடிப்போகலாம் என்று அவர்கள்
முடிவெடுக்கும்போது பணபலமும் அவர்களுக்குச் சக்தி ஊட்டும்
அம்சமாக இருக்கலாம். நம் பிள்ளைகளின் உரிமைகளில் தலையிடலாமா? என்றெல்லாம் பார்க்காமல் அவர்களின் நலன்களைக் கருதி கண்காணிக்க வேண்டும். ‘படியில் பார்த்து இறங்கு’ என்று சொல்வது அவர்கள் ‘கீழே விழப் போகிறார்கள்’ என்பதற்காக அல்ல. ‘கீழே விழுந்து விடக்கூடாது’ என்பதற்காகத்தான். எல்லாவற்றிற்கும் மேலாக இறையச்சத்தையும், மறுமைச் சிந்தனைகளையும் ஊட்டி வளர்க்க வேண்டும்.
ஒழுக்க மாண்புகளை விதைக்க வேண்டும்.
குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் அழகிய வாழ்வுமுறைகளையும் தெளிவாகப் போதித்தாலே அவர்கள் சிறந்தவர்களாக
வளர்வதற்குப் போதுமானதாகும். பெண்கள் கண்ணாடிகளைப் போன்றவர்கள் என்றார்கள்
நபி (ஸல்) அவர்கள். பெண்களை கண்ணாடியைப் போன்று பாதுகாக்க வேண்டும். கை தவறினால் கீழே விழுந்து உடைந்து
நொறுங்கும். நம் காலையே அது குத்திக் கிழிக்கும். கவனமோடு நம்
பிள்ளைகளை வளர்ப்போம். கண்ணாடிகள் கவனம்.
M அப்துல் ரஹ்மான் M.P.
வேலூர் பாராளுமன்ற
உறுப்பினர்
*****************************************
நானும் என் பதிவில் டிப்ஸ் பகுதியில் முன்பு சொல்லி இருக்கிறேன்.
(பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது கண்ணாடி டம்ளரை உடையாமல் பாதுக்காப்பது போலாகும்)
அப்துல் ரஹ்மான் காக்காவை பற்றிசொல்லனும் என்றால் முதல் முதல் துபாய் வந்த போது முன்பு அண்ணன் வீட்டில் தான் தங்கி இருந்தோம் அப்ப அவரும் அதே அப்பாட்மெட்டில் எதிர் எதிர் பிளாட்டில் எல்லோரும் தங்கி இருந்தோம்.அதற்கு பிறகு எல்லோரும் வீடு மாறி வேறு வேறு இடத்துக்கு சென்று விட்டோம்.
இப்போது பாராளு மன்ற எம்.பி. என்னிலையிலும் பெருமை கிடையாது . அப்ப பார்க்கும் போது எப்படி பேசுவாரோ அதே போல் தான் இப்போதும். சில பேருக்கு பதவி வந்து விட்டால் அவர்களுடைய நடை உடை பாவனை எல்லாமே மாறிவிடும். இது நிறைய பேரிடம் நான் கண்கூடாக பார்த்து இருக்கிறேன்.
முன்று மாதம் முன்பு இங்கு துபாய் வந்த போது அப்துர் ரஹ்மான் வந்து இருக்கிறார்ர் என்றார்கள். ரொம்ப பிஸியாக இருப்பார், அவரை எங்க போய் பார்க்க முடியும் என்று நினைத்தேன்.
நான்கு நாட்கள் கழித்து என்ன ஆச்சரியம். ஆபிஸில் லுஹர் தொழுதுட்டு என் இருக்கைக்கு வந்த போது சாதரணமாக வரவேற்பரையில் உட்கார்ந்து இருந்தார். எனக்கு ஒன்றுமே புரியல. என்ன என்று கேட்டதற்கு கிஃப்டுகள் கொடுக்க வாட்ச் வாங்க வந்தேன் என்றார். பிறகு பேசிவிட்டு என் ஹஸ்கிட்ட பேசனுமே என்று பல் வேலைகள் இருக்கும், திரும்ப எப்ப கூப்பிடலாம் எப்ப நீங்க பிரி என்றேன். சிரிச்சிட்டு எப்ப வேண்டுமானாலும் பேசலாம், கமாலை பேச சொல்லுங்க என்று சொன்னார்.
அதே இப்ப மறுபடி துபாய் வந்த சமயம், ரீஃப் மாலில் என் கணவரை பார்த்து இருக்கிறார். புர்கா ஷாஃப் ஆரம்பித்ததை பற்றி என் கணவர் அவரிடம் சொல்ல, நீங்க எப்படி ஆரம்பித்தீங்க இதுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லையே ஜலீலா தானே பார்க்கனும் என்றார்.
அவர் எதை வைத்து சொல்கிறார் என்றால் முன்பு 15 வருடம் முன் அவங்க மகளுக்கு பட்டு பாவாடையும் , சோளியும் தைத்து கொடுத்தேன். அதை ஞாபகம் வைத்து சொல்லி இருக்கிறார்.
***************************************************
டிஸ்கி டெல்லி சம்பவத்திற்கு எல்லாருமே பதறி போய் உள்ளனர்.
என்ன இருந்தாலும் வக்கிரபுத்தி கொண்ட சில மிருகங்கள் உள்ள இந்த நாட்டில் பெண்கள் என்றுமே விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
இரவில் தனியாக செல்வதை தவிர்ப்பது நல்லது.
அதுக்கு தான் பெரியவர்கள் பெண் பிள்ளைகளை விளக்கு வைத்ததும் (மக்ரிப் தொழுகைக்கு பின்) தனியாக வெளியே போகாதே என்பார்கள்.
ஏன்னு கேள்வி கேட்டா ஷைத்தான் பினனடியே அலைவான் என்பார்கள்.
அது இப்படி பட்ட மிருக ஷைத்தான் களை தான் சொன்னார்களோ என்னவோ?
( நான் சின்ன வயதில் ரொம்ப பயப்படுவேன் ஷைத்தான் பின்னாடியே வருவான் என்றது சின்ன சாமான்கள் வாங்க சந்து முனை கடையில் போய் சக்கரையோ , டீத்தூளோ வாங்கிட்டு வரும் போது ஆஹா கிரான்மா பின்னாடி ஷைத்தான்வருனு சொன்னாஙகளே திரும்பி பார்க்காம ஓட்டம் பிடிப்பேன்.)
இதே தான் 20 வருடம் முன் என் கிரான்மாவும்
பிள்ளைவளர்க்க எங்களுக்கு நல்ல மதியையும்
பிள்ளைகள் வளர அவர்களுக்கு நல்ல புத்தியும் தா நாயனே
என்று சொல்லுவாரக்ள்.
ஏற்கனவே பதிவுகளில் பெண்களுக்கான டிப்ஸ் பகுதியிலும் , வலைச்சர பதிவுகளில் நல்ல பதிவுகளாக அறிமுக படுத்தியதில் குழந்தைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வு பகுதிகள் நான் போட்டு இருந்ததையும் மற்றவரக்ள் பதிந்து இருந்தததையும் சுட்டி இருந்தேன்.
குழந்தைகள் கண்ணாடி யை போல் அதை உடையாமல் பாது காத்து கொள்ளவேண்டியது நம் கடமை.
இங்கு ஜனாப் அப்துல் ரஹ்மான் காக்காவும் அதையே மேலே வெளியிட்டுள்ள செய்தியில் சொல்லி இருக்கிறார்கள்.
பெற்றோர்களாகிய நான் ஆண் பிள்ளைகளாக இருந்தாலும் பெண் பிள்ளைகளாக இருந்தாலும் பிள்ளைகளை வளர்பதில் மேலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
(பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது கண்ணாடி டம்ளரை உடையாமல் பாதுக்காப்பது போலாக்கும்)