இஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும்.
சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில்.
https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw
போன பதிவில் தேங்காய் பூ மாவு செய்யும் முறையை சொல்லி இருந்தேன் இப்போது அதை வைத்து அருமையாக பிரட், பேன் கேக் பிஸ்கட் போன்றவை தயாரிக்கலாம்
தேங்காய் மாவு - ஒரு கப்
முட்டை - 3
தேங்காய் எண்ணை - 2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
உப்பு - அரை சிட்டிக்கை
பட்டை பொடி - கால் தேக்கரண்டி
பாதாம் பவுடர் - சிறிது தேவைபட்டால்
nigella seeds or fennel seed lhalf tspn - ( optional)
முட்டையை நன்கு நுறை பொங்க அடித்து அதில் தேங்காய் எண்ணை தேங்காய் பூ சக்கை, பேக்கிங் பவுடர், உப்பு , பட்டை பொடி. சேர்த்து ஓவனில் 200 டிகிரியில் செட் செய்து 20 நிமிடம் பிரீஹீட் செய்து 25 லிருந்து 30 நிமிடம் பேக் செய்யவும்.
பேலியோவில் இல்லை என்றால் சிறிது நட்ஸ் பவுடர் சேர்க்கலாம்
முக நூல் மற்றும் பிலாக்கர் அறுசுவை தோழி ஹுசைனாம்மா பேலியோ ரெசிபிகள் பற்றி பேசும் போது இப்படி ஈசியாக செய்யலானு ரெசிபி லின்க் கொடுத்து அவர்களும் செய்து போட்டு இருந்தார்கள் , நானும் ச்ய்துசில பொருடகள் ஆட் செய்து பார்த்தேன் ரொம்ப நல்ல வந்ததும்
தேங்காய் பூ மாவு செய்வது எப்படி? பேலியோவிற்கு உகந்த மாவு, பிஸ்கட் , கேக், பேன்கேக் போன்றவை இதில் செய்யலாம்.
coconut flour
Homemade coconut flour
தேங்காயை ஆப்பம் மற்றும் குருமா வகைகளுக்கு தேங்காயை பால் எடுத்து விட்டு பிழிந்து எடுக்கும் அந்த சக்கையை குப்பையில் எரியாமல் அதை பதப்படுத்தில் காயவைத்து பொடித்து சலித்து வைத்து கொண்டால் பேலியோ டயட் பாலோ செய்பவர்களுக்கு கோதுமை மைதாவிற்கு பதில் கேக் , பிஸ்கட், பேன் கேக் செய்ய வசதியாக இருக்கும்.
இதை வைத்து பேலியோ ப்ரட் எப்படி செய்யலாம் என்று அடுத்த ரெசிபியில் பார்க்கலாம்.
மாதுளை பழம் கர்பிணி பெண்களுக்கு மிகவும் உகந்தது, கேன்சர் நோயை கட்டு படுத்தும், தோல் சம்பந்தப்பட்ட நோய்களை நிவர்த்தி செய்யும்.
மலட்டு தன்மை நீங்க ஆண் பெண் இருவரும் ஆறு மாதங்கள் தொடர்ந்து மாதுளை முத்துகளை சாப்பிட்டு வர குழந்தை பேறு உண்டாகும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
இரத்த சோகையை சீராக்கும். வாய் புண் மற்றும் வயிற்று புண்ணை ஆற்றும்.
அதை குச்சி ஐஸ்சாகவும் செய்து சாப்பிடலாம்
மாதுளை குச்சி ஐஸ்
மாதுளை – 6 பழம்
தண்ணீர் – 50 மில்லி
ஐஸ் கட்டிகள் – 5
ஸ்ட்ராபெர்ரி எசன்ஸ் – 2 துளி
சர்க்கரை – அரை கப்
குங்குமபூ – சிறிதளவு
வடிகட்ட மஸ்லின் துணி
முதலில் மாதுளை முத்துக்களை பிரித்து எடுத்து
கொள்ளுங்கள்
மிக்ஸியில் மாதுளை முத்துக்கள், ஐஸ்கட்டிகள்,
மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்த கலவையை மஸ்லின் துணி அல்லது வடியில்
வடித்து கொள்ளவும்.
அதில் சிறிது சாப்ரான் சேர்த்து ஐஸ் கிரீம்
மோல்டில் ஊற்றி பிரீஜரில் 8 மணி நேரம் வைத்து எடுக்கவும்.
சுவையான மாதுளை குச்சி ஐஸ் ரெடி. ஐஸ் கிரீம் மோல்ட் இல்லாதவர்கள் டீ குடிக்கும் கிளாஸில் வைத்து 4 மணி நேரம் முதலில் குளிர வைத்து இடையில் எடுத்து இரண்டு டூத்பிக்கை நடுவில் சொருகி வைத்து மீண்டும் 4 மணி நேரம் வைக்கவும்.
Pomegranate popsicles
Pome Popsicle perfect summer treat
Pomegranate - 6 fruit
water - 50 ml
ice cube - 5
Strainer or muslin cloth
Strawberry essence – 2 drops
sugar – ½ cup
saffron
In a blender (mixie), add Pomegranate and water,ice cubes and sugar blend well.
Strain the juice in a strainer or muslin cloth. Add saffron and
pour the pome juice mix into ice cream mould keep it inside the freezer and refrigerate for 6 to 8 hours.
பொதுவாக முடி வளற மற்ற அயர்ன் சத்து மற்றும் அனிமியா, இரத்த சோகைக்கு கருவேப்பிலையை காலையில் மென்று சாப்பிட்டால் போதுமானது, ஆனால் சிலருக்கு பச்சயாக சாப்பிட பிடிக்காது. அதற்கு நாம் தினப்படி செய்யும் உணவில் அரைத்து சேர்க்கலாம். பருப்படை, கருவேப்பிலை சாதம் , கருவேப்பிலை பொடி, இல்ல இப்படி தொக்கு , துவல் , சட்னி போல செய்து சாப்பிடலாம் சுவையும் பிரமாதமாக இருக்கும்.
Preparation time : 20 minutes cooking time : 20 mintes
Iron Key Ingredients: Curry leaves and coriander and mint
தேவையான பொருட்கள்
கருவேப்பிலை – இரண்டு கட்டு
கொத்துமல்லி கீரை – ஒரு கட்டு
புதினா ஒரு கட்டு
பூண்டு – இரண்டு பெரியது
தேங்காய் – அரைமுடி
ginger - 1 inch size
புளி – ஒரு சிறிய எலுமிச்சை சைஸ் (அ) புளி கியுப் 1
பச்சமிளகாய் – 6
நல்லெண்ணை – ஒரு மேசைகரண்டி ( வதக்க)
நல்லெண்ணை – கால் கப்
செய்முறை
கருவேப்பிலை, கொத்தும்மல்லி, புதினா வை நன்கு காம்பு நீக்கி நன்கு அலசி தண்ணீரை வடிக்கவும். புளியை கட்டியாக கரைத்து வைக்கவும்.
நல்லெண்ணை சூடு படுத்தி பச்சமிளகாய், கருவேப்பிலை, கொத்துமல்லி , புதினா கரைத்து வைத்துள்ள புளி தேங்காய், புளி கரைத்து ஊற்றி.பூண்டு இரண்டு பெரிய பூண்டு , ginger, தேங்காய் பச்சமிளகாய் 6 வதக்கி உப்பு போட்டு ஆறவைத்து தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
ஒரு வாயகன்ற வானலியில் நல்லெண்ணை ஊற்றி அரைத்த கலவையை ஊற்றி நன்கு சுருள கிளறி தள தளன்னு கொதிக்க விட்டு தண்ணீர் வற்றியதும் இரக்கவும்.
சுவையான கருவேப்பிலை கொத்துமல்லி புதினா கிரேவி.
இதை ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம். தேங்காய் போடாமல் செய்தால் ஒரு மாதம் வரை கெடாது.
Linking to #livogenironchef the Iron Chef contest on IndiBlogger. ww.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
ஹிமோகுளோபின் கம்ம்பியாக இருப்பவர்கள், ரொம்ப அனிமியாவாக இருப்பவர்கள் இதுபோல ஆட்டு நுரை, ஈரல், கிட்னி , மன்பத்தை என செய்து வாரம் முன்று நாள் என ஒரு மாதம் சப்பிட்டால் கண்டிப்பாக அனிமியா சரியாகும் ஹிமோகுளோபினும் சரியான லெவலுக்கு வரும்.
மிளகு (செட்டி நாடு ஸ்டைல்) பேப்ஷா
பேப்ஷா ( ஆட்டு நுரை ஈரல்) என்பது ஆட்டு நுரைய்யிரல் இதை கத்திரிக்காய் போட்டு சால்னா செய்வோம். இல்ல பொரிச்ச கறி கூட்டு போல செய்வோம். இதை கொஞ்சம் காரசாரமாக செய்வோன்னு செட்டிநாட் டைப்பில் செய்துள்ளேன்.
ஆட்டு நுரை ஈரல் - 200 கிராம்
வெங்காயம் - இரண்டு
தயிர் இரண்டு மேசைகரண்டி
திரிக்க
சோம்பு , சீரகம் மிளகு தலா ஒரு தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - ஒன்று
பட்டை ஏலம் கிராம்பு
அரைக்க
தக்காளி அரை பழம்
பாதம் முந்திரி - தலா3
தாளிக்க
நல்லெண்ணை + நெய் - 4 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை
கருவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்னரை தேக்கரண்டி
செய்முறை
நுரையீரலை கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து வைக்கவும். திரிக்க கொடுத்துள்ளதை திரித்து வைக்கவும்
அரைக்க கொடுத்துள்ளதைகெட்டியாக அரைத்து வைக்கவும்/
குக்கரில் நல்லெண்ணை+ நெய் ஊற்றி பிரிஞ்சி இலை கருவேப்பிலை இஞ்சி பூண்டுசேர்த்து வதக்கவும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் நுரையீரல் உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும். அடுத்து அரைத்த மற்றும் திரித்து வைத்துள்ள பொடிவகைகளை சேர்த்து நன்கு கிளறி தயிர் சேர்த்து குக்கரை மூடி வேகவிடவுமசு
சுவையான செட்டிநாடு ஸ்டைல் நுரை ஈரல் ரெடி.
Linking to #livogenironchef the Iron Chef contest on IndiBlogger.
இது என் 1000 மாவது பதிவு, இதுவரை ஆதரவும் கொடுத்து வரும் அனைவருக்கும் நன்றி இது என் யுடியு சேனல் சமையல் அட்டகாசங்கள் இன்னும் பெயர் மாற்றவில்லை ( jaleelakamal ) என்ற பெயரில் தான் போஸ்ட் பண்ணி கொண்டு இருக்கிறேன்/ சப்ஸ்க்ரைப் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்
இது என் 1000மாவது பதிவு
இது வரை ஆதரவு கொடுத்து வந்த தோழ தோழியர்களுக்கு மிக்க நன்றி.
நெத்திலி மீன் வடை டிராப்ட் ல வச்சிருந்த போஸ்ட் தான். முள்ளில்லாத நெத்திலி வடை ஒரு வயது குட்டீஸ் முதல் பாட்டீஸ் வரை பக்க உணவுக்கோ அல்லது மாலை நேர சிற்றுண்டிக்கோ , இரவு பரோட்டா குபூஸ் உடனோ அல்லது காலை டிபனுக்கு பிரட் பண்ணிலோ வைத்து சாப்பிடலாம் . சாப்ட் அன்ட் டேஸ்டி ரெசிபி.
My you tube channel please subscribe and share to your friends,
என்னுடைய You tube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் முடிந்த போது பல சூப்பரான குறிப்புகள் போட இருக்கிறேன்.
உங்களுக்கு ஏதாவது குறிப்பு என் பிளாகில் உள்ளது செய்து காண்பிக்கனும் என்றாலும் செய்து போஸ்ட் செய்வேன்.
கவனிக்க: பெண்களுக்கு கிடைக்கும் நேரத்தை வேஸ்ட் செய்யாதீர்கள், பிளவுஸ் சுடிதார் தைக்க இப்ப ரொம்ப விலை டிமான்டும் ஜாஸ்தி.
நிறைய பெண்கள் இப்போது ஒன்லி சுடி அன்ட் பிலவுஸ் தைக்க கற்று கொண்டு ஒரு பெரிய கடை ஆரம்பித்து தெரிந்ததை சொல்லி கொடுத்தும் மற்றவர்களுக்கு தைத்து கொடுத்தும் சம்பாதிக்கிரார்கள்.
ஒரு சுடிதார் தைதால் ஒரு நாளில் 370 அல்லது 400 சம்பாதிக்கலாம்
இது என்னுடைய கனவாகவும் இருந்தது.ஆனால் கொஞ்சல் செய்ல படுத்தினாலும் தொடர முடியாமல் போய் விட்டது. அப்ப ஒரு ப்ளவுஸ் சுடி ஓரம் தைக்க ரொம்ப கம்மியா தான் சார்ஜ் பண்ணேன்.
My you tube channel சமையல் அட்டகாசஙக்ள் Please subscribe and share to your friends
Preparation Time: 20 minutes + Cleaning time cooking time : 20 minutes Iron - Fish Serves - 4 தேவையான பொருட்கள்
நெத்திலிமீன் - 200 கிராம்
மிளகாய்தூள் – அரைதேக்கரண்டி
மஞ்சள்தூள் – கால்தேக்கரண்டி
இஞ்சிபூண்டுபேஸ்ட் – அரைதேக்க்கரண்டி
பச்ச மிளகாய் – 2
கரம் மசாலா – கால் தேக்கரண்டி (பட்டை,கிராம்பு,ஏலம்)
சோம்பு தூள் – அரை தேக்கரண்டி
சீரகதூள் – அரை தேக்கரண்டி
தேங்காய் துருவியது அல்லது ட்ரை – 1 மேசை கரண்டி
வெங்காயம் – 1
பொட்டுகடலை பொடி – கால் கப் அல்லது 50 கிராம்
ஹாட் அண்ட் சில்லி கிரம்ஸ் - ஒரு மேசை கரண்டி
எண்ணை – சுட தேவையான அளவு
செய்முறை:
நெத்திலி மீன் கழுவும் விதம்:
நெத்திலி மீனை தலையை கிள்ளி அப்படியே வயிற்றில் உள்ள முள்ளை எடுக்கவும். சைடில் செதில் பகுதியில் உள்ள முள்ளையும் எடுத்து நன்கு கழுவி தண்ணீரை வடிக்கவும்.
முதலில் மிளகாய் தூள் உப்பு மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து இரண்டு நிமிடம் லேசாக வதக்க்கவும்.
பிறகு பொடியாக அரிந்த பச்ச மிளகாய், வெங்காயம் சோம்பு தூள், சீரகதூள், தேங்காய் சேர்த்து முன்று நிமிடம் வதக்கி ஆறவைக்கவும்
.
ஆறியதும் மிக்சியில் அரைத்து அதில் பொட்டுகடலை பொடி மற்றும் ஹாட் அண்ட் சில்லி கிரம்ஸ் பவுடரை நன்கு கலக்கவும்.
கலக்கிய கலவையை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து உருட்டி டூத்பிக்கில் சொருகி லேசாக அழுத்தி விடவும்.
பிறகு தோசை தவ்வாவில் கொஞ்சமாக எண்ணை விட்டு பொரித்து எடுக்கவும் அல்லது கிரில்லும் செய்யலாம்..
முள்ளில்லாத மீன் எந்த மீனில் இந்த வடையை செய்யலாம். குழந்தைகளுக்கும் வயதான பெரியவர்களுக்கும் சாப்பிட இலகுவாக இருப்பது இந்த வடை அதை ( கறி (அ) சிக்கன் (அ) இறால் (அ) மீன் என்று ருசிக்கு ஏற்றவாறு செய்து கொள்ளலாம், ஈசியாக செரிமானம் ஆகும்.
Linking to #livogenironchef the Iron Chef contest on IndiBlogger.
நானே கவனிக்க வில்லை இது என் 1000 மாவது பதிவு
1000th post
இது வரை ஆதரவு கொடுத்து கொண்டு இருக்கும் அனைவருக்கும் நன்றி
இதில் பார்த்து செய்து பயணடைந்த குறிப்புகளை
என் மெயிலுக்கு அனுப்பி வைத்தால் நல்ல இருக்கும்.
cookbookjaleela@gmail.com
My you tube channel சமையல் அட்டகாசஙக்ள் Please subscribe and share to your friends
Key Iron Ingredients: Tomato and Beetroot Preparation Time : 7 cooking time : 13 minutes serve 3 or 4 சாதரண புளி ரசம் தயாரிப்பதோ அதற்கு பதில் இப்படி இரும்பு சத்து அதிகமாக உள்ள பீட்ரூ, தக்காளி சேர்த்து செய்தால் சும்மா 3 டம்ளர் அப்படியே குடிக்கலாம். என்ன டயட்டோஅது வெயிட் குறைக்கவோ அல்லது டயாபட்டீஸ்க்கோ வேற என்ன காரணத்துக்காக குறைக்கனும் நினைக்கிறீங்கள் .
அதுக்கு முதலாவதாக நான் சொல்லும் டயட்
சூப் தான் !! ஆமா!1
சூப் என்றால் ஐய்யோ நமக்கு செய்ய வராதே என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீங்களா?
கவலை வேண்டாம் எளிமையாக செய்ய நான் சொல்லி தரேன்
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஆரோக்கியமான சூப் தயாரிக்கலாம்.
வாங்க
Tomato Beet Rasam (soup)
*தக்காளி பீட் ரூட் ரசம் (சூப்)*
தக்காளி பெரியது 4
பீட் ரூட் பொடியாக அரிந்தது கால் கப் அ இரண்டு மேசைகரண்டி
உப்பு தேவைக்கு
ரசம் பொடி ஆச்சி அ சக்தி
கொத்து மல்லி தழை கொஞ்சம்
புளி ஒரு சின்ன திராட்சை பழம் அளவு - தேவைபட்டால்
மஞ்சள் தூள் சிறிது
மிளகாய் தூள் கால் தேக்கரண்டி
தாளிக்க
நெய் ஒரு தேக்கரண்டி
கடுகு கால் தேக்கரண்டி
கருவேப்பிலை சிறிது பூண்டு இரண்டு பல்
பச்சமிளகாய் சின்னது ஒன்று
பெருங்காயம் ஒரு சிட்டிக்கை
செய்முறை
தக்காளி பீட் ருட் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சிறிது கருவேப்பிலை சிறிது கொத்துமல்லி தழை
இவை அனைத்தையும் முன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடுங்கள்
வெந்ததும் மசித்து தண்ணீரை வடிகட்டவும்.
மறுபடி அந்த வடிகட்டிய தக்காளியில் அரை கப் தண்ணீர் ஊற்றி கலக்கி வடித்து வடிகட்டிய தக்காளி பீட் சாற்றை கொதிக்க விடவும்.
பிறகு கடைசியாக தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொதித்து கொண்டு இருக்கும் தக்காளி சாறில் சேர்த்து கலக்கி இரக்கவும்.
இதை வாரம் ஒரு நாள் அல்லது முன்று நாட்கள்
ஒரு முட்டை மற்றும் பொரியலுடன் இரண்டு டம்ளர் அளவுக்கு குடிக்கலாம்
Liquid Diet
Linking to #livogenironchef the Iron Chef contest on IndiBlogger.
பேலியோ டயட் கடைபிடிப்பவர்களுக்கு இந்த ரெசிபி உதவும். இஸ்லாமிய இல்லங்களில் செய்யும் அசைவ பக்க உணவுகளுடன் பேலியோவில் சொல்ல பட்ட எண்ணை வகைகளை சேர்த்து கொண்டால் மிகவும் இலகு.
மட்டன் கூட எல்லா காய்கறிகளும் நாங்கள் சேர்த்து செய்வோம்/
மட்டன் முருங்கக்காய் சால்னா
மட்டன் உருளை சால்னா
மட்டன் கத்திரிக்காய் சால்னா
மட்டன் வெண்டைக்காய் சால்னா
மட்டன் கருனை கிழங்கு சால்னா
என்ன காய்கள் சேர்க்கும் நேரமும் வேக வைக்கும் நேரமும் மாறுபடும்
என் யுடியுப் சேனலில் முடிந்த அளவு குறிப்புகள் போஸ்ட் பண்ணி கொண்டு இருக்கிறேன்,.
உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து சப்ஸ்கிரைப் செய்ய கொள்ளுங்கள்
இந்த பிலாக் ஆரம்பித்து 7 வருடங்கள் மேல் ஆகி விட்டது,
யாருக்கு என்ன குறிப்பு போடனும் என்று சொன்னாலும் செய்து வீடியோவாக தர பார்கிறேன்.
இத்தனை வருடம் ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி இனியும் உங்கள் அனைவரின் ஆதரவும் தொடரும் என நம்புகிறேன்.
என் குறிப்புகளை செய்து பார்ப்பவர்கள் அதை சுவையை இங்கே பகிர்ந்து கொண்டால் மிகவும் சந்தோஷ படுவேன்.
மட்டனுடன் மற்ற காய்கள் போடுவதை விட முருங்கக்காய் சேர்த்து செய்தால் கம கமன்னு 10 வீட்டு கதவை தட்டும்.. இந்த சாலானாவின் வாசனை...
கறி முருங்ககாய் சால்னா
தேவையான பொருட்கள்
கறி மட்டன் 1/2 கிலோ
வெங்காயம் 2
தக்காளி 2
முருங்கக்காய் 2
நல்லெண்ணை
நெய்
தயிர் கால் கப்
பட்டை ஏலக்காய் லவங்கல்
தனியா தூள் 3 தேக்கரண்டி
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
ம்ஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
தேங்காய் கால் கப்
செய்முறை
குக்கரில் நல்லெண்ணை + நெய் போட்டு பட்டை லவங்கம் ஏலக்காய் பெரிய ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம் நீளவாக்கில் அரிந்து சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் மடங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து பச்ச வாடை போக நன்கு வதக்கவும்.
அடுத்து தக்காளி, பச்சமிளகாய் புதினா கொத்துமல்ல்லி எல்லாம் சேர்த்து நன்கு வதக்கவும்
தக்காளி மடங்கியதும் மசலா தூள் வகைகளை சேர்த்து கிளறி 5 தயிர் சேர்த்து வதக்கவும். இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றில் குக்கரை மூடி மட்டனை வேக விடவும், 5 விசில் விட்டு இரக்கவும்.
குக்கர் ஆவி அடங்கியதும் முருங்க்க்காயை கட் செய்து சேர்த்து தேங்காய் அரைத்து ஊற்றி கொதிக்க விட்டு இரக்கவும். முருங்க்காய் சேர்த்ததும் 5 நிமிடத்தில் வெந்துவிடும் ரொம்ப நேரம் விட்டால் குச்சி தான் மிஞ்சும். குக்கரில் இருந்து சால்னாவை வேறு ஒரு சட்டிக்கு மாற்றி விட்டு முருங்க்கக்காய் , தேங்காய் சேர்த்து கொதிக்க விட்டு இரக்கவும்.
Linking to #livogenironchef the Iron Chef contest on IndiBlogger.
ரொம்ப சுலபமாக செய்துடலாம், வெளிநாடுகளில் முருங்கீரை கிடைப்பதில்லை, அதற்கு நீங்கள் ஊரிலிருந்து எப்படி பருப்புபொடி, கருவேப்பிலை பொடி எல்லாம் தயார் செய்து கொன்டு வருகீர்களோ அதே போல முருங்ககீரை பொடி செய்து கொண்டு வந்து பயன் படுத்தலாம்.
வாரம் முன்று முறை முருங்க்ககீரை எடுத்து கொண்டால் , பெண்களுக்கு ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் ஒரு நல்ல மருத்துவ குறிப்பாக அமையும்.
கர்பிணி பெண்களுக்கு , பூப்பெய்திய பெண்களுக்கு, கருத்தரித்துள்ள பெண்களுக்கு , இன்னும் ரத்த சோகையால் வெளிறி போயிருப்பவர்களுக்கு அனைவருக்கும் ஏற்ற அருமருந்து இந்த முருங்கீரை. https://youtu.be/3AfAivpZpXc
முருங்கக்கீரை பெரட்டல்
முருங்ககீரை - இரண்டு கப்
தேங்காய் - அரை மூடி
தாளிக்க
நெய் - ஒரு மேசைகரண்டி
உளுந்து பருப்பு - அரை தேக்கரண்டி
காஞ்ச (நீட்டு) மிளகாய் - 4 எண்ணிக்கை
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 6 பல்லு
வெங்காயம் - 2 பெரியது
உப்பு தேவைக்கு
வெந்த பருப்பு - சிறுபருப்பு (அ) துவரம்பருப்பு - இரண்டு மேசைகரண்டி
செய்முறை
முருங்கக்கீரையை சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.
ஒரு வாயகன்ற சட்டியில் நெய்யை ஊற்றி சூடு படுத்தி காஞ்ச மிளகாய், பூண்டுதட்டி போட்டு, சீரகம், உளுந்து பருப்பு சேர்த்து நன்கு வதக்கி , வெங்காயத்தை பொடியாக அரிந்து சேர்த்து வதக்கி முருங்ககீரை , உப்பு சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும்.
கடைசியாக தேங்காய் பூ சேர்த்து , வெந்த பருப்பை சேர்த்து நன்கு கிளறி 5 நிமிடம் வதக்கி இரக்கவும்.
கவனிக்க: முருங்கக்கீரை பெரட்டலுக்கு தேங்காய் + வெங்காயம் அதிகமாக போட்டால் தான் நல்ல இருக்கும் ,பெரிய வெங்காயம் பதில் சின்ன வெங்காயம் சேர்த்தால் கூடுதல் சுவைகிடைக்கும்.
வீடியோ சமையல். Jaleela's Cookery Video.Moringka Leaves Poriyal
Key Iron Ingredients - Beetroot,Broccoli,tomato paste
அரபு நாடுகளில் சாப்பிடும் உணவுகளில் மட்டன் கப்சா, சிக்கன் கப்சா, இறால் கப்சா , மீன் கப்சா என்று பல வகை உண்டு, அதை சைவ விருப்ம்பிகளும் சுவைக்க வேண்டும் என்பதால் பீட்ரூட் , ப்ரோக்கோலில் செய்துள்ளேன்.
வெஜ் கப்ஸா ( அரபிக் வெஜ் பிரியாணி)
தேவையான பொருட்கள்
தரமான பாசுமதி அரிசி - அரைகிலோ
எண்ணை + பட்டர் – 50 கிராம்
காய்ந்த எலுமிச்சை – 1
வெங்காயம் – 1 பெரியது
கேரட் – 50 கிராம்
பீட்ரூட் – 50 கிராம்
கார்ன் – 50 கிராம்
புரோக்கோலி – 50 கிராம்
தக்காளி பேஸ்ட் – 25 கிராம்
தக்காளி – அரை பழம்
மேகி அல்லது நார் பிராண்ட் வெஜிடேபுள் ஸ்டாக் 1 துண்டு
அரபிக் கப்ஸா மசாலா
கருப்பு மிளகு தூள் – அரை தேக்கரண்டி
சீரகம் – முக்கால் தேக்கரண்டி
பப்பரிக்கா – கால் தேக்கரண்டி
முழுதனியா – ஒரு தேக்கரண்டி
கிராம்பு - 2
ஜாதிக்காய் – கால் தேக்கரண்டி
பட்டை – 1 இன்ச் பீஸ்
ஏலக்காய் - 1
செய்முறை
வெஜிடேபுள் ஸ்டாக்கை 3 ½ டம்ளர் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து வைக்கவும்.
அரிசியை களைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்,
குக்கரில் எண்ணை + பட்டரை காயவைத்து காய்ந்த எலுமிச்சை ,வெங்காயம் சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து தக்காளி ,தக்காளி பேஸ்ட் மற்றும் அரபிக் மசாலாவை சேர்த்து கிளறவும். பிறகு காய்களை சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும்.
அரிசியை தண்ணீரை வடித்து சேர்த்து சமப்படுத்தி.காய் வெந்ததும் அதில் வெஜிடேபுள் ஸ்டாக்கை ஊற்றி கொதிக்க விட்டு வறுத்து வைத்துள்ள அரிசியை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு, 2, 3 விசில் விட்டு இரக்கவும், சுவையான அரபிக் வெஜ் கப்ஸா (அரபிக் பிரியாணி) ரெடி. காய்கறி சல்சாவுடன்சாப்பிட அருமையாக இருக்கும்.
கவனிக்க: அரேபியர்கள் காரம் அவ்வளவாக சாப்பிடமாட்டார்கள். இந்த பிரியாணி லைட்ஆக அதே நேரத்தில் ஹெல்தியாகவும் இருக்கும். நான்வெஜ் பிரியர்கள் மட்டன் சிக்கனில் செய்துகொள்ளலாம். Linking to #livogenironchef the Iron Chef conteston IndiBlogger.
வாங்க எல்லோரும் நல்ல சாப்பிடுங்கள். அப்பதா பதிவ படிக்க தெம்பா இருக்கும். கொஞ்ச நாளா புதினா மேல அலாதி பிரியம் வந்துவிட்டது. சுக்கு சோம்ப...
About Me
Jaleela Kamal
சமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு.
தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.