Thursday, November 16, 2017

மிக்சட் கிரீன் கார்டன் சூப் - Mixed Green Garden Soup

  



Mixed Green Leaves Soup 
Iron Chef Contest (key iron ingredients): Mixes Leaves ( parsely,palak,coriender leaves,mint, curry leaves,oreigano and basil)
Type of dish - Daily or Dinner/ Party
Preparation Time : 20 min
cooking time : 20 min

கிரீன் கார்டன் சூப் - Green Garden Soup

-- ஒரு கீரை வகையை சா[ப்பிட்டாலே போதுமான அயர்ன்சத்து கிடைத்துவிடுகிறது, அதில்லாமம் எல்லா கீரை வகையையும் சேர்த்து சூப் செய்து வாரம் ஒரு முறை அல்லது இருமுறை சாப்பிடால் எல்லா சத்துகளும் ஒருங்கே கிடைத்து விடுகிறது 


ஒரு கீரை வாரம் முன்று முறை சமைத்து சாப்பிட்டால் எல்லா சத்துகளும் ஒருங்கே கிடைத்து பல வியாதிகளில் இருந்து விடுபடலாம்
அதே ஆல் இன் ஒன் ஆக பல கீரைகளை ஒரே சூப்பீல் சேர்த்து வாரம் ஒரு முறை குடித்தால் செம்ம இல்லையா??

டயட் என்ன செய்யலாம் என்று என்னிடம் கேட்டால் நான் முதலில் குறிப்பிடுவது சூப் தான். நல்ல இரண்டு டம்ளர் சுட சுட குடித்து பாருங்கள். வயிறு நல்ல பில்லிங்காக இருக்கும்.




இது பேலியோ டயட் பாலோ செய்பவர்களுக்கும் , கர்பிணி பெண்களுக்கும் , குழந்தைகளுக்கும் நோயளிகளுக்கும், வயதானவ்ர்களுக்கும் இது சரியான சத்தான சூப்


பச்சை காய்கறிகள் கீரைவகைகளில் அதிகம் இரும்பு {Iron) சத்து உள்ளது. இது  குழந்தைகள், கர்பிணி பென்கள்,வயதானவர்கள் அனைவருக்கும் மிகவும் நல்லது. பொதுவாக சூப் வகைகள் குடிப்பதால் உடம்பி சளி சேருவது கட்டு படும்.

தேவையானவை

வேகவைக்க

  1. பார்சிலி இலை ( சாலட் இலை) – ¼ கப்
  2. பாலக் கீரை – ½ கப்
  3. தில் கீரை – ½ கப்
  4. வெங்காய தாள் – 3 ஸ்டிக்ஸ்
  5. கொத்துமல்லி கீரை – 1 மேசைகரண்டி
  6. புதினா – 5 இலை
  7. கருவேப்பிலை – 5 இலை
  8. ஒரிகனோ – ½ தேக்கரண்டி
  9. பேசில் இலை – ½ தேக்கரண்டி
  10. வெள்ளை மிளகு தூள் -  ½ தேக்கரண்டி
  11.   மரவள்ளி கிழங்கு or pumpkin – 1 மீடியம்
  12. கருப்பு மிளகு தூள் – ½ + ½ தேக்கரண்டி
  13. சர்க்கரை – ½ தேக்கரண்டி
  14. நார் சூப் கியுப் (வெஜ் அல்லது சிக்கன் ப்ளேவர்) – 1  (10 கிராம்)


தாளிக்க
  1. பூண்டு (பொடியாக அரிந்த்து)
  2. வெங்காயம் – 1 சிறியது
  3. ஆலிவ் ஆயில்

 செய்முறை
  1. கீரைவகைகள் அனைத்தையும் மண்ணில்லாமல் கழுவி தண்ணீரை வடிக்கவும்.
  2. குக்கரில் கீரை வகைகளை சேர்த்து அதில் ஒரிகனோ, பேசில் இலைகள் , வெள்ளை மிளகு தூள், கருப்பு மிளகு தூள் , சர்க்கரை, உப்பு, சூப் கியுப், தண்ணீர் முன்பு டம்ளர் சேர்த்து 3 ,  4 விசில் விட்டு இரக்கவும்.
  3. வெந்த கீரை வகைகளை ஆறவைத்து மிக்சில் அல்லது ப்ளெண்டரில் முக்கால் பத்த்துக்கு அரைக்கவும்.வெந்த சூப்பை குளிர வைத்து முக்கால் பதமாக அடிக்கவும்.
  4. ஒரு கடாயில் ஆலிவ் ஆயில் வெங்காய தாள் மற்றும் பூண்டை சேர்த்து தாளித்து ப்ளென்ட் செய்த சூப்பில் சேர்த்து 5 நிமிடம் கொதித்த விட்டு இரக்கவும். கட்லெட் உடன் சாப்பிட பிரமாதமாக இருக்கும்.
  5. காரம் தேவைபடுபவர்கள் மிளகு தூளின் அளவை சிறிது கூட்டி கொள்ளவும்.



ஜலீலாவின் டிப்சோ டிப்ஸ்: பச்சை காய்கறிகள் கீரைவகைகளில் அதிகம் இரும்பு சத்து உள்ளது. இது  குழந்தைகள், கர்பிணி பென்கள்,வயதானவர்கள் அனைவருக்கும் மிகவும் நல்லது. பொதுவாக சூப் வகைகள் குடிப்பதால் உடம்பி சளி சேருவது கட்டு படும்.

பொதுவாக நோன்பு காலங்களில் மாலை நோன்பு திறக்கும்  போது தினம் அரிசி பருப்பு  நோன்பு கஞ்சி குடிப்போம் பச்சை கீரை வகைகள் யாரும் சாப்பிடுவதில்லை அதற்கு பதில் இப்படி வித்தியாசமான சூப்பாக செய்து சாப்பிடலாம்.

linking to  #livogenironchef the Iron Chef contest on IndiBlogger.http://www.livogen.in/iron-chef/
கவனிக்க :மரவள்ளி கிழங்குக்கு பதில் இதில் சர்க்கரை வள்ளி மற்றும் உருளை கிழங்கும் சேர்த்து செய்யலாம்.

இதில் மரவள்ளி கிழங்கு சேர்த்துள்ளேன் , பேலியோ டயட் செய்பவர்கள் மரவள்ளி கிழங்க்கு கு பதில் பூசனிக்காய் சேர்த்து கொள்ளுங்கள்


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா