Tuesday, June 29, 2010

Best Ad for shampoo


Sunday, June 27, 2010

கொத்துமல்லி புதினா காம்பு,பேரித்த பழ சட்னி






தேவையானவை

பேரித்தம் பழம் - 8
ரெயிஸின்ஸ் - 4
கொத்து மல்லி காம்பு அரை கைபிடி, புதினா காம்பு கால் கைபிடி
வினிகர் - கால் ஸ்பூன்
வருத்து திரித்த சீரகம் - அரை தேக்கரண்டி
புதினா தழை - சிறிது
புளி - கொட்டை பாக்கு அளவு
மிளகாய் தூள் - கால் ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிக்கை




செய்முறை


1. பேரித்தம் பழத்தையும், ரெயிஸின்ஸையும் கால் டம்ளர் தண்ணீரில் ஊறவைக்கவும்
2.பேரித்தம் பழத்த்தின் கொட்டையை நீக்கி விட்டு மைக்ரோ வேவில் ஒரு நிமிடம் வேகவைக்கவும்.
3.ஆறியதும் அதனுடன் புளி,மிளகாய் தூள்,உப்பு,கொத்து மல்லி புதினா காம்பு, வினிகர் எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.




குறிப்பு
இதில் கொத்துமல்லி, புதினா தழை சேர்த்து அரைப்பார்கள் நான் காம்புகளை சேர்த்து அரைத்துள்ளேன்.

சாமோசா, சோமாஸ்,எல்லா வகையான வடை பஜ்ஜி, ஸ்பிர்ங் ரோலுக்கு பொர்ந்தும்.



இனிப்பு சட்னி அடுத்த பதிவில் போட்கிறேன்.





I am sending this recipe to "Best out of Waste" started by nithu

Saturday, June 26, 2010

புதினா காம்பு, இஞ்சி தோல் டீ






டீ யை பல விதமாக தயாரிக்கலாம்,என் ஹஸும், கணவருக்கும் டீ நல்ல இருக்கனும், தலைவலி, ஜலதோஷம்,இருமல், சளி எல்லாத்துக்குமே இவர்கள் இருவருக்கும் என் வித வித மான டீ தான்.

இது வரை நான் தயாரித்த டீ வகைகள்.

இஞ்சி டீ
ஏலக்காய் டீ
இஞ்சி ஏலக்காய் டீ
மிளகு கிராம்பு டீ
சாப்ரான் (குங்குமப் பூ டீ)
புதினா டீ
மசாலா டீ
கரம் மசாலா டீ
பட்டை டீ
நன்னாரி டீ
பிளாக் டீ வித் சாப்ரான்
சுக்கு டீ
துளசி டீ
புதினா, ஏலம் , மிளகு , கிராம்பு,சுக்கு,பன்ங்கற்கண்டி எல்லாம் பொடித்து வைத்து போடு டீ
இஞ்சி தோல் மற்றும் புதினா காம்பு டீ





புதினாவை ஆய்ந்து காம்பை அரிந்துமண் கழுவவும்.

இஞ்சி நன்கு மண்ணில்லாமல் கழுவி தோல் சீவி எடுக்கவும்



இஞ்சி தோல் மற்றும், புதினா காம்பை வெயிலில் நன்கு காய வைக்கவும்.




காய்ந்ததும் ஏலக்காய் சேர்த்து ஒன்றும பாதியுமாய் பொடிக்கவும்.
ஸ்டெப் - 1
தேவையானவை

தண்ணீர் - இரண்டு டம்ளர்
பால் பவுடர் - ஐந்து ஸ்பூன்
டீ பவுடர் - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை - முன்று ஸ்பூன் (தேவைக்கு)
பொடித்த புதினா,இஞ்சி பொடி,ஏலக்காய் - ஒரு ஸ்பூன்








செய்முறை


1. தண்ணீரில் பால் பவுடர், டீ தூள் கலக்கி கொதிக்க விடவும்


2. கொதிக்க ஆரம்பிக்கும்ோது ஒரு ஸ்பூன் பொடித்த (இஞ்சி தோல், புதினா,ஏலக்காய் ) பொடியை போட்டு கொதிக்க விட்டு ரங்கு (டீ காஷன் ) இரங்கியதும் சர்கக்ரை சேர்த்து வடிக்கவும்.









ஸ்டெப் - 2

பால் - ஒரு டம்ளர்
தண்ணீர் - ஒன்னே கால் டம்ளர்
இஞ்சி தோல் , புதினா பொடி - ஒரு ஸ்பூன்
டீ பவுடர் - ஒரு ஸ்பூன்
சர்க்கரை - 3 லிருந்து 4 ஸ்பூன் ( அவரவர் ருசிக்கு)

செய்முறை

தண்ணீரில் , பொடி, டீ பவுடர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
கொதிக்கும் போது சிறிது தண்ணீர் வற்றும் அதற்கு தான் கால் டம்ளர் தண்ணீர் அதிகமாக சொல்லி இருக்கேன்.
கொதித்ததும், டீகாஷன் நன்கு இரங்கியதும் வடித்து காய்ச்சிய சூடான பாலை சேர்த்து தேவைக்கும் சர்க்கரை போட்டு கலக்கி குடிக்கவும்.


ஸ்டெப் - 3

பிளாக் டீ போல் என்று குடிப்ப தாக இருந்தால் இரண்டு டம்ளருக்கு டீ பவுடர் அரை ஸ்பூன் போதும் . பால் தேவையில்லை.


/லோ பிரெஷர் மற்றும் மயக்கம் உள்ளவர்களுக்கு புத்துணர்வு தரும் டீ, சுவைத்து மகிழுங்கள். //


இதை அடிக்கடி பயன் படுத்தி பயனடைந்துள்ளோம்.

டீ பல விதமாக தயாரிப்பது என் பழக்கம் , அதில் இஞ்சி தோல் , புதினா காம்பு (சமையலில் 50 வருட அனுபவம் உள்ள என் மாமியார் செய்வது)

பால் பவுடவில் போட்டா திரிந்து போகாதா? இங்கு வந்ததிலிருந்து பால் பவுடரில் தான் இது வரை டீ போடுகிறேன், பிரஷ் மில்க் வாங்கினால் 5 நாளில் காலி பண்ணனும் ஆகையால் ஒரு பெரிய டின் வாங்கி வைத்து விடுவது.

திரிந்து போகாது/

ஏன் திரியும் என்றால் , குழம்பு கரண்டி அல்லது டீ கெட்ட்டிலில் காரம் பட்டிருந்தால் திரியும் , பாத்திரத்தை சரியா கழுவவில்லை என்றாலும் திரியும்.

ஒரு நாளை 6 முறை தயாரிக்கிறேன், ஆனால் ஒரே மாதிரி குடிக்க பிடிக்காத தால் இப்படி முயற்சித்தது.

இப்ப தான் 6 லிருந்து 4 ஆகாக குறைத்து இருக்கேன்.


//எங்க அம்மா வீட்டிலும் வரும் வேலைக்காரிக்கு கூட சுறு சுறுப்ப்பா வேலை செய்யனும், அவள் தண்ணீயில் நின்று சாமான் கழுவுறா,வீடு துடைக்கிறா அவளுக்கு சளீ பிடிக்க கூடாதுன்னு அவள் வந்ததும் முதல் வேலை என் அம்மா அவளை உட்கார வைத்து ஒரு பெரிய டம்ளர் நிறைய டீ யை ஊற்றி கொடுத்து அவளை குடிக்க சொல்லி பிறகு தான் வேலை ஆரம்பிக்க சொல்லுவாங்க. .//









I am sending this recipe to Best out of Waste started by nithu






Friday, June 25, 2010

முழுபாசி பயறு வெஜ் பிரெட் பிட்சா

தேவையானவை
பிரெட் ஸ்லைஸ் – 8

முழு பாசி பயிறு – அரை கப்

காய் கறிகள் – ( கேபேஜ், கேரட்,பொடேடோ,) அரை கப்
வெங்காயம் – ஒன்று
பச்சமிளகாய் – ஒன்று
சர்க்கரை – அரை சிட்டிக்கை
ஹாட் சாஸ் – ஒரு தேக்கரண்டி
பூண்டு – இரண்டு பல்
பட்டர் + எண்ணை ஒரு தேக்கரண்டி

பட்டர் – பிரெட் பொரிக்க தேவையான அளவு
பிட்சா சாஸ் (அ) கெட்சப் – தேவைக்கு
மொஜெரெல்லா சீஸ் - தேவைக்கு




செய்முறை

பிரெட்டை அங்காங்கே பட்டர் தடவி தவ்வாவில் சூடு படுத்தவும்.

முளை பயிறை எட்டு மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

வானலியில் எண்ணை + பட்டர் ஊற்றி (சர்க்கரை+பொடியாக அரிந்த பூண்டு+பச்சமிளகாய்) சேர்த்து வதக்கவும்..
அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் லேசாக வதங்கியதும் கேரட், உருளை,கேபேஜை பூந்துருவலாக செதுக்கி சேர்ந்த்து வதக்கவும்.உப்பு, ஹாட் சாஸ் போட்டு கிளறி இரக்கவும்







சூடாக்கிய பிரெட்டில் இருபுறமும், கெட்சப் (அ) பிட்சா சாஸ் தடவ்வும்.
நான்கு ஸலைஸில் ஒரு மேசை கரண்டி அளவு எடுத்து பிரெட்டில் பில் செய்து மேலே சீஸை தூவ்வும்.





மீதி உள்ள நான்கு பிரெட்டை எடுத்து பில்லிங் மேல் வைத்து மூடி அழுத்தி மைக்ரோ வேவில் இரண்டு நிமிடம் வைத்து எடுக்கவும்.

சுவையான ஹெல்தியான குழந்தைகளுக்கான லன்ச் ரெடி.

தேவைக்கேற்ப நான்காகவோ, இரண்டாகவோ கட் செய்து குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்தனுப்பலாம்.


சாசேஜ் பிரெட் டோஸ்ட்






ஸ்டஃப்டு பிரெட் பஜ்ஜி






I sending these recipes to globel kadai Indianized french toast by Priya started by cilantro

ஏற்கனவே அறுசுவையில் இரண்டு வருடம் முன் நான் கொடுத்த ஆலிவ்வெஜ் பிட்சா பிரெட் இங்கு இருக்கு இது பிள்ளைகளுக்கு அடிகக்டி செய்து கொடுப்பது. காய்கறி சாப்பிடாத பிள்ளைகளுக்கு இப்படி பிரெட் உள்ளே வைத்து பிட்சா அதுவும் கெட்சப்புடன் என்றால் , எத்தனை கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்.


இந்த ரெசிபி என் பிள்ளைகளின் கூட படிக்கும் பிரெண்ட்ஸ் அனைவரையும் ஒன்ஸ் மோர் கேட்க வைத்த ரெசிபி.




Thursday, June 24, 2010

கேரட் சாம்பார் - carrot sambar


கேரட் சாம்பார்






தேவையானவை


வேக வைக்க
துவரம் பருப்பு + சிறு பருப்பு - 50 கிராம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 8

தாளிக்க

எண்ணை + நெய் - முன்று தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
பூண்டு - இரண்டு பல்
கருவேப்பிலை - இரண்டு ஆர்க்
சின்ன வெங்காயம் - 6
தக்காளி - ஒன்று பெரியது
கேரட் - ஒன்று
உப்பு - தேவைக்கு
சாம்பார் பொடி - ஒன்னறை தேக்கரண்டி
புளி - கொட்டை பாக்கு அளவு
கொத்து மல்லி தழை சிறிது










செய்முறை

1 . இரு வகை பருப்புகளையும் வேகவைத்து மசிக்கவும்.

2. தாளிக்க கொடுத்துள்ளவைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து கேரட்டை வட்டவடிவமாக அரிந்து போடவும், தக்காளியை நான்கு துண்டுகளாக அரிந்து சேர்த்து , மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வேகவிடவும்.

3. ஐந்து நிமிடம் கழித்து சாம்பார் பொடி சேர்த்து , புளியையும் கரைத்து சேர்த்து கொதிக்கவிடவும்.

4. காய் வெந்து மசாலா வாடை அடங்கியதும் வேகவைத்த பருப்ப மசித்து சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு கொத்துமல்லி தழை தூவி இரக்கவும்.
சுவையான குழந்தைகளுக்கு பிடித்த கேரட் சாம்பார் ரெடி.


கேரட் ஜூஸ்

காஜர் கி ஹல்வா


I am sending these recipes toVegetable Marathon-Carrot,an event started by Silpa

டிஸ்கி: கேரட் சாம்பாரா இனிப்பா இருக்குமா?

இதில் குழந்தை உணவுகளும் தனி லேபிலில் கொடுத்துள்ளேன்.

இது குழந்தைகளுக்காக போட்டு உள்ளேன்
காரம் அதிகம் தேவை படுபவர்கள் பெரியவர்கள் ( நம்ம மங்குனி அமைச்சர் போல் ) சாம்பார் பொடியுடன் அரை தேக்கரண்டி மிளகாய் தூள் (அ) முன்று பச்ச மிளகாயை இரண்டாக ஒடித்து போட்டு கொள்ளவும்.

Wednesday, June 23, 2010

முக்கனி ஜூஸ் - 2 -cocktail juice - 2





தேவையானவை
வாழை - ஒன்று


மாம்பழம் - ஒன்று


கிவி பழம் - ஒன்று


பால் - ஒரு டம்ளர்


சர்க்கரை - தேவைக்கு


ஐஸ் கட்டிகள் - பத்து



செய்முறை
எல்லா பழங்களையும் தோலை நீக்கி விட்டு சிறுதுண்டுகளாக அரியவும்.
மிக்சியில் பழங்கள் ஐஸ் கட்டிகள்,பால் சர்க்கரை அனைத்தையும் சேர்த்து நுரை பொங்க அடிக்கவும்.
சுவையான முக்கனி ஜூஸ்


முக்கனி ஜூஸ் - 1 இங்கு சென்று பார்க்கலாம்.

பழங்களை இப்படி முன்று அல்லது அதற்கு மேற்பட்ட பழம் காக்டெயில் ஜூஸாக காம்பினேஷனில் செய்வது என் பழக்கம். சுவை அபாரமாக இருக்கும்.
தொடரும் என் காக்டெயில் ஜூஸ்கள்.
இது நான்கு டம்ளர் வரும்.
ஜூஸ் குடித்தாலே ஒரு புத்துணர்வு தான்.




ரிச் ஃபுரூட் பாலுதா


ட்ரூட்டி ஃபுரூட்டி வித் பனானா கஸ்டட்





I sending these recipes to Sizzling Summer Recipe Contest

Monday, June 21, 2010

டிரை நெத்திலி டீப் ஃபிரை



தேவையானவை

நெத்திலி கருவாடு - கால் கிலோ
காஷ்மீரி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி என்பது ஒரு டீஸ்பூன் (5 கிராம் அளவு )
உப்பு - கொஞ்சம் போதும் ஏற்கனவே கருவாடில் உப்பு இருக்கும்,
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
வினிகர் - இரண்டு ஸ்பூன்
என்னை - இரண்டு மேசைகரண்டி
கருவேப்பிலை - இரண்டு ஆர்க் (பதினைந்து இலைகள்)
செய்முறை

முதலில் நெத்திலி கருவாடை வெண்ணீரில் வினிகர் சேர்த்து இரண்டு நிமிடம் ஊறவைத்து மன்ணில்லாமல் கழுவி எடுக்கவும்.
எண்ணை தவிர அனைத்து மசாலாக்களையும் சேர்த்து 5 நிமிடம் ஊறவைக்கவும்.
பிறகு இரும்பு வானலியில் எண்ணையை காயவைத்து கருவேப்பிலை சேர்த்து ஊறிய கருவாடை போட்டு நன்கு பொரித்து எடுக்கவும்.

கருவாடு கழுவும் விதம்

நெத்திலியின் தலையை கிள்ளி எடுத்து விடவும்.
அதை வினிகரில் ஊறவைத்து கழுவும் போது சாதம் வடிக்கும் வடிகட்டியில் ஊற்றி சிங்கில் டேப்பில் காண்பித்து இரண்டு மூன்று தடவை கழுவினால் வடிகட்டி மூலம் மண் வெளியில் வந்து விடும் .இன்னும் மண் போக நாலைந்து முறை கழுவி கொள்ளலாம்.

குறிப்பு



கருவாடு நிறைய பேருக்கு பிடிக்கும். அதுவும் தண்ணி பருப்பு, கட்டி பருப்புடன், பிளெயின் ரைஸுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
இதை குழம்பு போல் வைப்பதாக இருந்தால் கருவாடுடன் கேரட் சேர்த்து புளி குழம்பு போல் வைக்கலாம்.



டிஸ்கி: அமைச்சருக்கு மிளகாய் தூள் உப்பு எல்லாம் அளவு புரியலையான் ( ஹும் இவர் தான் வீட்டில் சமைபப்து போல்) அதான் அளவை அமைச்சர் கண்ணுக்கு தெரிவது போல் கொடுத்துள்ளேன்.

Sunday, June 20, 2010

உலகில் உள்ள அனைத்து அப்பாக்களுக்கும் வாழ்த்துகக்ள்


அப்பா அப்பா அப்பா உலகில் விலைமதிக்க முடியாத பொக்கிஷம் அல்லவா/
உலகில் உள்ள அனைத்து அப்பாக்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.


///சின்ன வயதில் நாங்கள் எல்லோரும் அப்பாவோடு சேர்ந்து கேரம் ஆட்வோம்.
துணி கடை வைத்திருந்தார் போய் சேல்ஸ் பார்த்துக்கொள்வேன்.
எங்க அப்பா எல்லோருக்கும் வார ஒரு முறை நகம் வெட்டி விட்டுடுவாங்க.
பாகற்காய் வாழைத்தண்டு மாதம் ஒரு முறை சாப்பிட்டே ஆகனும்,அபப் தான் வயிற்றில் உள்ள பூச்சி போகும் என்று, அதை வைத்து வாயில் திணிக்கும் போது நாங்க எல்லோரும் அழுது அழுது சாப்பிடுவோம்

பொங்கல் என்றால் எங்க அப்பா கரும்பு வாங்கி வந்து அதை எல்லா அப்பா மார்கலும் இப்படி கொடுத்திருக்காங்களா இல்லையான்னு தெரியல, கரும்பு தோலெடுத்து நாலா வெட்டி குட்டி குட்டி பீஸா எங்களுக்கு எடுத்து வாயில் போட்டு சாப்பிட தோதுவா கொடுப்பாங்க ஆளுக்கு ஓவ்வொரு கிண்ணத்தில் இப்ப்டி கொடுத்த கரும்பு தின்ன கூலியா வேனும் ம்ம்ம்.
ஒரு வழியா பல்லு கிளீன் ஆகிடும்.

தீபாவளி வந்தால் ஒன்லி சுர் சுர்கம்பியும் மத்தாப்பும் மட்டும், அதுவும் மாலை எல்லா விளக்கையும் அனைத்து விட்டு சின்ன சிம்மிலி விளக்கும், அரிக்கன் லைட்டும் ஏற்றி வைத்து விட்டு அதை அவரே கொளுத்தி எங்கள் கையில் கொடுப்பார். //


இதுவரை அதிர்ந்து திட்டியதும் இல்லை . ஜலீ மா ஜலீ மா என்று கூப்பிடுவார்.
போன் செய்யும் போதெல்லாம் நலல் இருக்கீயாமா ஜலீ மா எதற்கும் கவலை படக்கூடாது, தைரியமாக இருக்கனும் என்று சொல்லும் போது ரொம்ப கவலையா இருந்தாலும் ஒரு உற்சாகம் வரும்.

எழுத நிறைய இருக்க்கு, ஆனால் இப்ப முடியல, இது முன்பு எழுதி வைத்தது.
அப்பாக்கள் பார்த்து பார்த்து நமக்காக செய்கீறார்கள், அவர்கள் மனம் குளிரவைப்பது நம் கடமையாகும்.

எல்லோரும் பதிவ போட்டு விட்டார்கள்.
அதிரா கொடுத்த தந்தையர் தின விருந்த சாப்பிட்டு விட்டு பெரிய தூக்கம் போட்டு விட்டேன், பார்த்தா பாதி நாள் கழிந்து விட்டது,


எல்லா அப்பாக்களும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.

Saturday, June 19, 2010

அமீரக்த்தில் சாலை பணியாளர்கள்

அப்பப்ப துபாயில் கொளுத்தும் வெயிலில் கொஞ்சம் நேரம் வெளியில் வண்டிய விட்டு போய் வருவதற்குள், சூடு காற்று அனல் அடித்து தொண்டை வரண்டு, மயக்கம் வரும் அளவிற்கு ஆகிவிடுகிறது.









இந்த சாலை பணியாளர்களை பாருங்கள் மனுசாட்கள் அவரவர் ஷேவிங் செய்கிறார்களோ இல்லையோ ரோட்டோரம் உள்ள செடிகளுக்கு இங்கு அடிக்கடி ஷேவிங் நடக்கும். அதுவும் விதவிதமா வடிவமைத்து வெட்டி விடுவார்கள்.




மற்ற பணியாளர், மரத்தில் காய்த்து கொண்டிருக்கும் டேட்ஸ் மரத்துக்கு காயை சுற்றி துணி சுற்றி கொண்டு இருக்கிறார். இல்லனா நம்மூர் மக்காஸ் மாங்காவ கல்லால அடிப்பது போல் அடித்தே அத்தனையும் ஒரு வழி பண்ணிடுவாங்களே...





சாலையை துப்புரவு செய்து கொண்டிருக்கிறார்.





வேகாத வெயிலில் ரோட்டில் காரெல்லாம் சர் சருன்னு பறந்து கொண்டிருக்க கருமமே கண்ணாயினார் என்பது போல் அவர் பணியை செய்து கொண்டு இருக்கிறார்கள்.


//இதே போல் பலசரக்கு சாமான் களை கொண்டு தருபவர்கள், ஒரு போனடித்தால் வீட்டுக்கு சாமானகள் வந்துவிடும், அவர்களும் நாள் முழுவதும் சைக்கிளில் சாமான்களை வீடு வீடாக சளைக்காமல் கொண்டு கொடுக்கிறார்க்ள், ஆனால் இந்த வெயிலில் ரொம்ப வே சிரமம்.//




கட்டுமான பணியாளர் இவர்கள் பாடு தான் படு மோசம்.நாள் முழுவதும் வெயிலில் வேலை பார்க்கிறார்கள். இதில் ரொம்ப சின்சியரா உழைப்பவர்களும் இருக்கிறார்கள். பிரெண்ஸ் படத்தில் விஜெய், சூரியா, வடிவேலு எல்லாம் சேர்ந்து நடிக்கும் படத்தில் சூரியா சுவருக்கு நோகாமா சுரண்டி கொண்டு இருப்பாரே அது போல் ஓபி அடிபப்வர்கலும் உண்டு.
கட்டுமான பணியில் இருக்கும் இவர்கள் மொத்தமாக அல்குஸ் , கிஸேஸ் போன்ற இடத்தில் லேபர் கேம்பில் இடத்தில் தங்குவார்கள், ஊரில் உள்ள லாரியில் வந்து இரங்குவது போல் மொத்தமாக பிக்கப்பில் சைட்டுக்குஅழைத்து வந்துடுவார்கள். தங்குமிடம் ஃபிரி ஆனால் சாப்பாடு எப்படின்னு தெரியல. குருப் குரூப்பா சேர்ந்து மெஸ்ஸில் சேர்ந்தும் சாப்பிட்டு கொள்வார்கள்.
சாப்பாடு ஊரில் விவசாயிகள் தூக்கு டிபன் தூக்கி வருவது போல் எல்லாம் கொண்டு வருவார்கள் .
அதான் மதியத்துக்கு அது சில நேரம் இந்த வெயிலில் ஊசியும் போய்விடுமாம்.

வேலை செய்து கொண்டு இருக்கும் போது அடி அப்பட்டு விட்டால் ரொம்ப கொடுமை. ஹாஸ் பிட்டலில் உட்கார்ந்து இருக்கும் போது பார்ப்பேன், கூட வேலை செய்யும் சக தொழிலாளி கூப்பிட்டு வந்து காண்பிக்க் வருவார்கள்.

பார்க்க பாவமாக இருக்கும்
தண்ணீர் தான் பாட்டில் பாட்டிலா பிடித்து கொண்டு போவார்கள், அதை குடித்து கொண்டு வெப்பம் தாங்க முடியாமல் அதை தலையிலும் ஊற்றி கொள்வார்கள்.







எல்லா சாலையிலும் கச்சாடா (குப்பை போட ) பெரிய வண்டி நிறுத்தி வைத்து இருப்பார்கள். அதை காலையில் அள்ளி கொண்டு போக வருவார்கள்.
முன்பெல்லாம் வந்த புதிதில் இரவில் வரும் அப்போது ஆம்புலன்ஸ் லைட் போல் மேலே சுற்றி கொண்டு இருக்கும்.
சத்தமும் பயங்கரமா இருக்கும். தூங்கிக்கொண்டு இருக்கும் போது இருட்டில் ஸ்கிரீன் மேலே அந்த வெளிச்சம் வரும் போது ரொம்ப பயமா இருக்கும், எனக்கு ஒரு குண்டூசிய யாராவது கீழே போட்டாலும் அந்த சத்ததில் எழுந்துடுவேன். மெதுவா எழுந்து ஸ்கிரீன் திறந்து பார்க்கவும் கொஞ்சம் பயம் தான் (பேயோன்னு), கடைசியில சே கச்சடா வண்டியா?அதிலிருந்து பயம் போயே போச்சு.

இவர்களுக்கெல்லாம் சம்பளம் மிகக்குறைவு. இன்னும் இது போல் ஏசியில் வேலை பார்க்காத பணியாளர்கள் நிறையவே உண்டு.

இது போல் அமீரகத்தில் மட்டும் இல்லை எல்லா நாட்டிலும் இப்படி தான்
இன்னும் நிறைய போட்டோக்கள் வைத்து இருந்தேன், இப்போதைக்கு எடிட் செய்ய நேரமில்லை. இது வரை போட்டுள்ளேன்.






ரியாஸின் நான் வாழும் உலகில் பாவம் அவர்கள் என்ற பதிவையும் ப்டித்துப்பாருங்கள்.

Wednesday, June 16, 2010

மசால் தோசை - masala dosai




தோசைக்கு

பச்சரிசி - 2 1/2 கப்
புழுங்கல் அரிசி - 1 1/2 கப்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
சோறு - ஒரு கை பிடி
உளுந்து - ஒரு கப்

செய்முறை

உளுந்தில் வெந்தயம் சேர்த்து ஊறவைக்கவும், இரண்டு வகை அரிசிகளையும் ஒன்றாக கலந்து 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
முதலில் அரிசியையும், அடுத்து உளுந்தில் சோறு சேர்த்து அரைத்து இரண்டையும் ஒன்றாக கலந்து புளிக்க விடவும்.

பில்லிங் மசாலாவிற்கு
உருளை கால் கிலோ ( வேகவைத்து உதிர்த்து கொள்ளவும்)
தாளிக்க
எண்ணை - ஒரு மேசைகரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரைதேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
முந்திரி - 4 ( பொடியாக அரிந்தது
கருவேப்பிலை - 15 இலைகள் இரண்டாக கிள்ளியது
பூண்டு - ஒரு பல் (பொடியாக அரிந்தது))
வெங்காயம் - முன்று
தக்காளி - ஒன்று
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி (5 கிராம்)
பச்ச மிளகாய் - ஒன்று
உப்பு -தேவைக்கு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கொத்துமல்லி தழை - சிறிது
நெய் + எண்ணை - தேவைக்கு
செய்முறை
தாளிக்க கொடுத்துள்ளவைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம் , தக்காளி, பச்சமிளகாய், சேர்த்து நன்கு கிளறி மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது ஒரு சேர கிளறி ஐந்து நிமிடம் மசிய விட்டு , வேகவைத்து உதிர்த்து வைத்துள்ள உருளையை சேர்த்து நன்கு கிளறி ஒரு கை பிடி அளவு தண்ணீர் தெளித்து, மீண்டும் சிம்மில் வைத்து , கடைசியாக கொத்து மல்லி தழை தூவி இரக்கவும்.





தோசை தவ்வாவை காய வைத்து அதில் சிறிது எண்ணை விட்டு வெங்காயத்தை பாதியாக அரிந்து தவ்வா முழுவதும் தேய்க்கவும். (அப்ப தோசை நீங்க நினைப்பது போல் உங்கள் சொல் பேச்சு கேட்கும்.)

மெல்லிய தோசைகளாக பரவலாக ஊற்றி தீயின் தனலை சிம்மில் வைத்து சுற்றிலும் நெய் கலந்த எண்ணையை ஊற்றவும்.
இரண்டு நிமிடத்தில் சிவந்து வருவது தெரியும், அப்போது மசாலா கலவையை இரண்டு மேசை கரண்டி அளவு எடுத்து தோசையின் அரைபாகம் மட்டும் பரவலாக தடவவும்.
இப்போது உங்களுக்கு வேண்டிய வடிவில் மடித்து எடுக்கவும்.
சுவையான சூப்பரான மசால் தோசை ரெடி






இதே போல் காளி பிளவர், கீமா,கீரை சிக்கன் வெஜ் டேபுள் தோசை என்றும் பல விதமாக சுடலாம்.
ஹோட்டலில் வைப்பது போல் மசாலா வை அள்ளி வைத்தால் சாப்பிட தோசையே கிடைக்காது வெரும் உருளையைதான் அள்ளி சாப்பிடனும், அங்கு நிறைய வேஸ்டும் ஆகும்,
இதில் சொல்லிய படி சிறிது கம்மியாக வைத்தால் , தோசையுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.கூட சாம்பார் , சட்னி, உளுந்துவடை இருந்தால் ஒரு பிடிதான்.



Monday, June 14, 2010

ஏழு கறி சாம்பார்




காய் வேகவைக்க
அவரைக்காய் - 4
கோவைகாய் - 3
பாகற்காய் - 1
முருங்கக்காய் - 1
பீன்ஸ் - 6
கேரட் - 1
தக்காளி - பெரியது ஒன்று
சின்னவெங்காயம் (சாம்பார் ஆனியன்) - பத்து
பச்ச மிளகாய் - ஒன்று
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சாம்பார் பொடி - முன்று டீஸ்பூன்
வெல்லம் - அரை தேக்கரண்டி
புளி சிறிய எலுமிச்சம் அளவு அரை டம்ளர் அளவு கரைத்து கொள்ளவும்.
வேகவைக்க
துவரம் பருப்பு - 100 கிராம்
சாம்பார் வெங்காயம் - 10
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிக்கை
வெந்தயம் - கால் தேக்கரண்டி
தாளிக்க எண்ணை - ஒரு மேசை கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
பூண்டு - முன்று பல்
கருவேப்பிலை - 20 இலைகள்

கொத்துமல்லி தழை சிறிது பொடியாக அரிந்தது ஒரு மேசைகரண்டி , கடைசியாக மேலே தூவ





பருப்பை வேகவைத்து மசித்து வைக்கவும்
காய்களை அரிந்து அதில் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
ஐந்து நிமிடம் கழித்து சாம்பார் பொடி சேர்க்கவும்.
தீயின் தனலை சிம்மில் வைக்க்வும் காய் வெந்ததும் , புளிசேர்த்து கொதிக்க்கவிடவும்.
அடுத்து வெல்லம், வெந்த பருப்பை மசித்து சேர்த்து கொதிக்கவிட்டு சிறிது கருவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து இரக்கவும்.
கடைசியாக தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.





குறிப்பு



இது போல் காய்களை சேர்த்து கொள்வதால் குழந்தைகள் காய் சாப்பிட வில்லை என்றாலும் காயின் ஜூஸ் சாம்பாரில் நல்ல இரங்கி இருக்கும்.



பாகற்காய் சாம்பாரில் சேர்ப்பதால் கசப்பு தன்மை சிறிதும் இருக்காது.

இது போல் சாம்பாரை எல்லா விதமாக காய்களிலும் செய்யலாம்.

சாம்பார் பொடி இல்லை என்றால் நாம் பிரெஷாக திரித்தும் செய்யலாம்.

அரைத்து விட்ட சாப்பாரும் செய்யலாம்.

வருத்து பொடித்திரித்து சேர்த்தும் செய்யலாம்.

சாம்பாரில் பல வகை உண்டு, கோவைக்காயும், பாகற்காயும் சேர்ப்பது. சர்க்கரை வியாதி காரர்களுக்கு மிகவும் நல்லது.


என் சின்ன பையனுக்கு பூரி ரொட்டி, வடை தோசை, இட்லி எல்லாத்துக்குமே சாம்பார் இருந்தால் போதும், ஹோட்டல் சாம்பாரும் பிடிக்காது, மற்றவர்கள் செய்ததும் பிடிக்காது, கரெக்டாக கண்டு பிடித்துவிடுவான். நீங்க செய்தது இல்லை என்று, எல்லோரும் செய்வது போல் தான் நானும் செய்கீறேன் அது எப்படி கண்டு பிடிக்கிறான் என்று எனக்கும் ஆச்சரியமாக இருக்கும்.



பருப்பு வகைகள் மசூர் தால், மும் தால் சேர்த்து செய்தால் ஹோட்டலில் செய்வது போல் இருக்கும். அதே போல் பூசனி, பப்பாளி காய் சேர்த்து செய்தாலும் அருமையாக இருக்கும். வாரத்தில் இரு முறை சாம்பார் தான்.




Saturday, June 12, 2010

பத்து பைசா வடையும் தீ எறிச்ச சாதமும்



அரைக்க
கடலை பருப்பு - 200 கிராம்
மிளகாய் வற்றல் - 4
சோம்பு - அரை தேக்கரண்டி
பூண்டு - மூன்றூ பல்
இஞ்சி - ஒரு அங்குல அளவு
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - ஒன்று

அரைத்த மாவில் சேர்க்க வேண்டியவை

வெங்காயம் - ஒன்று
பச்சமிளகாய் - ஒன்று
கருவேப்பிலை - இரண்டு ஆர்
கொத்துமல்லி புதினா - சிறிது
உப்பு - முக்கால் தேக்கரண்டி (தேவைக்கு)
எண்ணை - பொரிக்க தேவையான அளவு

செய்முறை

கடலை பருப்பை அரை மணி நேரம் ஊரவைத்து அரைக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.

வெங்காயம் , உப்பு,பச்சமிளகாய், கொத்துமல்லி கருவேப்பிலை, புதினாவை பைனாக சாப் செய்து அரைத்த மாவில் கலந்து 2 நிமிடம் ஊறவைக்கவும்.
குட்டி குட்டி வடைகளாக சுட்டெடுக்கவும்.







இதற்கு முன் கொடுத்த ( பகறா கானா, ஆலு கோஷ், தால்சா) நிறைய செய்து மீதியாகி விட்டால் அதை தீ எறித்த சாதமாக செய்து அதுக்கு தொட்டு கொள்ள இந்த ஒரு பைசா வடை (அ) அப்பளம்,உப்பில் ஊறிய நார்த்தங்காய் சேர்த்து சாப்பிட ரொம்ப சூப்பராக இருக்கும்.





இந்த தீ எறித்த சாதத்தை மட்டும் ருசி பார்த்து விட்டால் ஓவ்வொரு முறை பகறா , சால்னா செய்யும் போது இதற்க்காகவே கூட கொஞ்சம் சேர்த்து சமைப்பீர்கள்.மசால் வடையுடன் சாப்பிட ரொம்ப அருமையாக இருக்கும்.
அவ்வளவு ருசியாக இருக்கும்.






தீ எறித்த சாதம் செய்முறை



மீதியான சாதம் இரண்டு கப்
தால்சா - ஒரு பவுள் ( முன்று கப் அளவு)
சால்னா - அரை பவுள் ( ஒன்னறை கப்)





முதலில் தால்சா, சால்னா இரண்டையும் கொதிக்க விடவும்.


சாப்பாட்டை இட்லி சட்டியிலோ (அ) மைக்ரோவேவிலோ சூடு படுத்தி கொதிக்கும் குழம்பில் சேர்த்து சாம்பார் சாதம் கிளறு வது போல் கிளறவும்.


கிளறி ஐந்து நிமிடம் சாதம் குழம்பு எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொதித்ததும் இரக்கிவிடவும்.




இது விஷேஷங்களில் இது போல் நிறைய மீதியாகும். மீதியாவதை இரவே தயாரித்து ஆறவைத்து மறுநாள் வடையுடன் அல்லது ஊறுகாய் அப்பளத்துடன் சாப்பிட நல்ல இருக்கும்.






(ஏன் ஒரு பைசா வடை என்று சொன்னேன் என்றால் , இப்ப தான் இதை உள்ளங்கை அளவிற்கு பெருசாக போடுகிறார்கள்.சின்ன வயதில்வெளியூரில் இருந்தோம்.)

வார வாரம் ஞாயிற்று கிழமை காலை உணவு ரவை கிச்சிடி ஒரு பைசா வடை, (அ) பழையசாதம் இது ரொம்ப அருமையாக இருக்கும்.(இரவு சாதத்தில் தண்ணீர் ஊற்றீ வைத்து காலை அதில் மோர் (அ) தயிர் வெங்காயம், பச்ச்சமிளகாய், கொத்துமல்லி தழை உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வடையுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.), உளுந்து வடையும் புதினா துவையலும் இன்னும் மற்ற டிபன் அயிட்டமும் அம்மா செய்வார்கள்.


மசால் வடை மட்டும் வெளியில் போய் நான் தான் வாங்கி வருவேன் ஒரு வடை பத்து பைசா, 2 ரூபாயிக்கு வாங்கி வருவேன். எனக்கு அது ரொமப் பிடிக்கும். இன்னும் அதை மறக்கல எந்த இனிப்பு டிபன் போட்டாலும் கூட காரத்துக்கு ஒரு வடை அல்லது சுண்டல் செய்வது என் பழக்கம். அதில் இங்கு நிறைய குறிப்புகளில் பார்த்து இருப்பீர்கள்.








எப்ப வடை சுடும் போது பிள்ளைகளுக்காக இப்படி தான் செய்வேன். எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். நோன்பு காலங்களில் மாலை நோன்பு திறக்கும் போது வெள்ளை கஞ்சி கீமா கஞ்சிக்கு கூட இதை செய்து கொள்ளலாம்.
நான் சுவைத்ததை நீஙக்ளும் சுவைத்து மகிழுங்கள்.