Wednesday, August 3, 2011

துபாயில் இஃப்தார் -பேச்சுலர்கள் பாகம் - 3




துபாயில் பேச்சிலர்களின் வாழ்க்கை பாகம் - 1

துபாயில் பேச்சிலர்களின் வாழ்க்கை பாகம் - 2


நோன்பு காலம் வந்துவிட்டால் துபாயில் வேலை நேரம் அரை நாள் தான்.
வேலை முடிந்ததும் பேச்சுலர்கள் ரூமில் நன்கு ஓய்வெடுத்து கொண்டு பிறகு மாலை இஃப்தாருக்கு ரெடி பண்ணுவார்கள். ஆனால் காலை சஹருக்கு தான் சில பேச்சிலருக்கு
சிரமமாக இருக்கும். சமைக்கும் பேச்சுலர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கஞ்சி செய்வதும், பழவகைகளை கட்பண்ணுவதும், பகோடா வடை போன்றவைகளை செய்வதுமாய் எபப்டியும் 15 பேர் சேர்ந்து ஒன்றாக செய்து சாப்பிடுவாகள்.



சஹருக்கு தான் பெரும்பாலும் சமைக்க வேண்டிவரும், முன்பெல்லாம் சமைத்து சாப்பிடுவார்கள், இப்ப அங்கேங்கே மெஸ் வந்துவிட்டது. மெஸ்ஸில் ஆர்டை கொடுத்து விட்டால் இரவு 2 மணிக்கு சாப்பாட்டை கதவில் மாட்டிவைத்து விட்டு போய் விடுவார்களாம்/


மாலை நோன்பு திறக்கும் போது கவலையே இல்லை இங்குள்ள எல்லா பள்ளிகளிலும் ,பழங்கள், பேரிட்சை, மந்தி ரைஸ் என்னும் அரபி சாப்பாடு, அரபி பிரியாணி, ஜூஸ் வகைகள் , ஹரீஸ் (அரபிகளின் கஞ்சி) காரம் ஏதும் இருக்காது வெரும் கோதுமையும் சிக்கனும் மட்டுமே சேர்த்து செய்து இருப்பார்கள். இதே எல்லா பேச்சிலர்களுக்கும் போதுமானது.

வாரம் ஒரு நாள் வெள்ளி விடுமுறையில் எல்லாபேச்சிலர்களும் 35 பேர்.50 பேர் கூடி பெரிய இஃப்தார் பர்டியும் வைத்து கொள்வார்கள்.
என்ன தான் இருந்தாலும் ஊரில் அம்மா கையால் நோன்பு கஞ்சியும் , வடையும்  சாப்பிட்ட மாதிரி வராது என்று ஏங்கும் பேச்சிலர்கலும் உண்டு.

ஊரில் பள்ளிவாசலில் கிடைக்கும் நோன்பு கஞ்சியின் ருசியே தனிதான், ஊர் போல் இங்கும் பஜாரில் குவைத் பள்ளிகளில் நோன்பு கஞ்சி கொடுக்கிறார்கள் என்று கேள்விபட்டேன்.



 ஆபிஸில் உள்ளவர்களுக்கு ரொம்பவே சொகுசு நல்ல ஓய்வு கிடைக்கும். அதிலும் அரபிகள் கேட்கவே வேண்டாம்.ஆனால் சேல்ஸில் வேலை செய்பவர்கள் வெளியில் வெயிலில் அலைந்து தான் ஆகனும்.
வெளியில் கட்டட வேலை செய்பவர்கள்,சாக்கடை அள்ளுபவர்கள் ,குப்பை பொருக்குகிறவர்கள் , குராசரி ஷாப் வேலை ஆட்கள் இவர்கள் பாடுதான் திண்டாட்டம்.





இன்னும் பெரிய பெரிய அரபி வீடுகளில் தினமும் சாப்பாடு கப்சா, மந்தி ரைஸ் , பழவகைகள் , ஜூஸ் எல்லாம் மாலை நேரம் எல்லோருக்கும் கொடுப்பார்கள் அதை வாங்க ஒரு கியு நின்று வாங்கி செல்வார்கள்.







கடைகளிலும் வடை, பஜ்ஜி, சுழியம், சமோசா , இனிப்புவகைகள் என பல அங்காங்கே வெளியில் கடை போட்டு விடுவார்கள்,  இஃப்தார் பஃப்பட் களும் எல்லா ஹோட்டல்களிலும் போர்டு தொங்க விட பட்டிருக்கும்.தேவையானவர்கள் வாங்கிக்கொள்வார்கள். டேரா பஜார் ஜே ஜேன்னு இருக்கும்.







வெளியில் வாங்கி சாப்பிடுபவர்கள் பார்த்ததும் எத வாங்குவதுன்னு தெரியாம அதிகமாக வாங்கி எல்லாம் வீணாக்குவதும் தேவைக்கு தகுந்த மாதிரி வாங்கிக்கொள்ளுங்கள்.
இங்கு கடையில் விற்கும் பண்டங்கள் கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விடும் அதுவும் இல்லாமல் நோன்பு நேரம் அவ்வளவா ஏற்காது,

ஜூஸ் வகை நிறைய குடிங்க , தாகத்தை தணிக்கும் தர்பூசனி நிறைய வாங்கி சாப்பிடுங்கள்.

இங்குள்ள பேச்சிலர் என்றில்லை உலகத்தில் உள்ள எல்லா பேச்சிலர்களும் இப்படி தான் என்று நினைக்கிறேன்.
**************************************************************************
என் பையனும் இப்ப ஹாஸ்டலில் இருக்கிறான் , முதல் வருடம் ரொம்ப அழுது கொண்டு இருந்தேன். அவனுக்கு நோன்பு சஹருக்கு சாப்பாடு கிடைக்க வில்லை.வெரும் பன் நும், இங்கிருந்து நாங்க அனுப்பிய பேரிட்சை மட்டும் தான் சாப்பிட்டான், இஃப்தாருக்கு வெளியில் ஜூஸ் சமோசா என்று வாங்கி சாப்பிட்டு கொண்டான்.
நான் இங்கு அழுது கொண்டே இருந்தேன் அந்த ரமளான் முழுவதும் சரியா சமைக்க கூட இல்லை வாயில் சாப்பாடு வைக்கும் போதெல்லாம் அழுவேன்.
அப்ப தான் எங்க டாடிக்கிட்ட சொல்லி அழுதேன். அதுக்கு டாடி  “ நீ பேசாம இரு அவனுக்கு கிடைப்பது கிடைக்கும். அவனை நினைத்து அங்குள்ள சின்னவனுக்கும் மாப்பிள்ளைக்கும் ஒன்றும் செய்து கொடுக்காம இருந்த எப்படி ? ரிஸ்க் - உணவளிப்பவன் அளிப்பவன் அல்லா அவரவருக்கு உண்டான ரிஸ்கை அவன் நியமித்தபடி தான் கிடைக்கும். இப்படி அழுவதை விட்டு விட்டு நல்ல ரிஸ்க் கிடைக்கனும் என்று துஆ கேளு அது போதும் என்றார்கள்.
இப்ப எங்க டாடியும் இல்லை ஞாபகம் ஓவ்வொரு நினைவிலும் ஓவ்வொரு பேச்சிலும் எங்க டாடி தான் நிற்கிறார்கள், இன்னும் என்னால் மறக்க முடியல,
நோன்புகாலங்களில் தரவீஹ் தொழ போகுமுன் டாடிக்கிட்ட பேசிட்டு தான் போவேன்.இப்பவும் அவ்வளவா ஏதும் செய்ய முடியல முடிந்ததை செய்து கொள்கிறேன்.
பிறகு நானும் டாடி சொன்ன படி துஆ கேட்டேன், இப்ப பையன் இரவும் அங்கு பால் பழம் அரேஞ் பண்ணி கொடுக்கிறார்கள். இவனும் கொஞ்சம் வாங்கி வைத்து கொள்கிறானாம், மாலை இஃப்தாருக்கு  மஸ்ஜீதில் (பள்ளியில்) எல்லாரும் சேர்ந்து நோன்பு திறக்க தேவையானவைகளை அரேஞ் செய்து சாப்பிடுகிறார்களாம்.அப்படியே தராவீஹ் தொழுகையும் முடித்து வருகிறானாம். பக்கத்தில் உள்ள ஹோட்டலிலும் இப்ப தோசை, பிரட் ஆம்லேட் கிடைக்குதாம் .அல்ஹம்து லில்லாஹி சுக்குர்.ஆண்டவனுக்கு நன்றி சொல்லி கொண்டேன்.

டிஸ்கி : இங்குள்ள எல்லா பள்ளிகளிலும் தரவீஹ் தொழுகை நடக்கும். ஹோர்லன்ஸ் பள்ளியில் வேலை முடிந்து லேட்டா வருகிறவர்களுக்கும் தனியாக தொழ வைக்கிறார்கள் என போன வருடம் கேள்வி பட்டேன். இந்த பதிவு பாதி முன்பே எழுதிவைத்திருந்தது இப்ப முடிச்சாச்சு....


22 கருத்துகள்:

பாரணை முடிச்ச:) அதிரா said...

ஐஐஐஐஅ...... முதல்ல வடை அ.கோ முட்டை எல்லாம் எனக்கு... பின்பு வாறேன் ஜலீலாக்கா படிக்க.

Sketch Sahul said...

குவைத் பள்ளியில் கஞ்சி கொடுகிறார்கள்
இந்த சூட்டில் அங்கு உட்கார்ந்து நோன்பு திறப்பது கஷ்டமாக உள்ளது
--

Chitra said...

உங்கள் பதிவுகள் மூலமாக நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்கிறோம்.

ஹுஸைனம்மா said...

மகனுக்கு, இந்த நோன்பில் உணவு பிரச்னை குறைந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி அக்கா. பிரார்த்தனைகளைத் தொடருங்கள். வாப்பா சொன்னது பலன் தருது. பெரியவங்க ஆலோசனை எப்பவும் சரியா இருக்கும்.

அந்நியன் 2 said...

மாஷா அல்லாஹ்.

பேச்சுலர்களின் அன்றாட பணிகளை அருமையுடன் விளக்கியதுடன் அருமையான பகிர்வை பகிர்ந்தமைக்கு நன்றி அக்காள்.

இராஜராஜேஸ்வரி said...

ரிஸ்க் - உணவளிப்பவன் அளிப்பவன் அல்லா அவரவருக்கு உண்டான ரிஸ்கை அவன் நியமித்தபடி தான் கிடைக்கும். இப்படி அழுவதை விட்டு விட்டு நல்ல ரிஸ்க் கிடைக்கனும் என்று துஆ கேளு அது போதும் //

சத்தியமான அல்லாவின் வாக்கு. நான் உணர்ந்ததும் கூட, பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

பாரணை முடிச்ச:) அதிரா said...

//இப்ப எங்க டாடியும் இல்லை ஞாபகம் ஓவ்வொரு நினைவிலும் ஓவ்வொரு பேச்சிலும் எங்க டாடி தான் நிற்கிறார்கள், இன்னும் என்னால் மறக்க முடியல,
நோன்புகாலங்களில் தரவீஹ் தொழ போகுமுன் டாடிக்கிட்ட பேசிட்டு தான் போவேன்//

ஜலீலாக்கா அவர் உடலால்தான் மறைந்தானே தவிர இப்பவும் உங்கள் எல்லோரோடும்தான் வாழ்வார்...

Torviewtoronto said...

lovely pictures have a blessed ramadan

ஆமினா said...

அல்ஹம்துலில்லாஹ்....

தம்பிக்கு இப்ப பிரச்சனை இல்லை என்றதும் தான் நிம்மதியானது

அழகிய கட்டுரை

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும்

உங்கள் துஆவினால் மகனுக்கு, இந்த நோன்பில் உணவு பிரச்னை
தீர்ந்தது .அல்ஹம்துலில்லாஹ் .
வாப்பாவுக்காக நீங்கள் நிறைய துஆ
செய்யுங்கள்.

ஸாதிகா said...

மகன் சஹர் செய்வதற்கு உள்ள பிரச்சினையை விவரித்து இருப்பதில் புரிகின்றது தாயின் மனம்.கூடவே வாப்பா கூறிய அட்வைஸையும் பகிர்ந்து மனதை கனக்க வைத்துவிட்டீர்கள் ஜலீலா

ADAM said...

MASHA ALLAH

வசந்தவாசல் அ.சலீம்பாஷா said...

துபாயின் நடைமுறை நிகழ்வுகளை படம் பிடித்து காட்டியது போன்ற பதிவுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

ஜெய்லானி said...

அபப்டியே யூ ஏ இ வாழக்கையை படம் பிடிச்சி காட்டிடீங்க மாஷா அல்லாஹ் :-)

இறைவனிடம் நாம் கேட்கும் பிராத்தனை மட்டுமே நமக்கு வரும் கஷ்டங்களை போக்கும்.

பித்தனின் வாக்கு said...

good akka. nice information

RAZIN ABDUL RAHMAN said...

சலாம் ஜலீலக்கா..ரமலான்'ல,துபாய் பேச்சுலர்ஸ் பத்தி எழுதீர்கீங்க...அதாவது எங்கள பத்தி..சொன்ன எல்லா மேட்டரும் நிதர்சனம்..
அப்புறம் உங்க தயவுல..சூப்பரா நோன்பு காஞ்சி காச்சி நோன்பு திறக்குறோம்..
உங்கள காப்பி அடிச்சுதா ரூம்ல தேத்திட்டு இருக்கேன்...
இப்தார்'ல கஞ்சி தான் ஹைலைட்...
என்னவோ சொந்த தெறமைன்னு,ஒரே பாராட்டுக்கள் தா,,,ஆக்சுவல அது உங்களுக்கு சேரவேண்டியது..அடியேன் உண்மையை சொன்னால் அம்பேல்..பசங்களுக்கு இந்த ப்ளாக் அது இதெல்லா தெரியாது..அதுவரைக்கும் நல்லதுதான்...
இன்ஷா அல்லா முடிந்தால் அதை பத்தி ஒரு பதிவு எழுதலாம்னு இருக்கேன்...

மற்றபடி நோன்பு சூப்பர்;அ..போகுது..அல்லாஹ் என்னை நீங்க சொன்ன அந்த சுகவாசியா வச்சிருக்கான்.ஆபிஸ் வேலை..
வெயில்தா தாறுமாறா இருக்கு...கொஞ்சம் துஆ செயுங்களேன்..

தங்கள் மகன் குறித்து வருந்தி எழுதி இருந்தீர்கள்...இன்ஷா அல்லா,அல்லாஹ் எல்லாவற்றையும் லேசாகக துஆ செய்கிறேன்...

அன்புடன்
ரஜின்

RAZIN ABDUL RAHMAN said...

//சூப்பரா நோன்பு காஞ்சி காச்சி நோன்பு திறக்குறோம்..//

ஐயய்யோ அது நோன்பு கஞ்சி

கஞ்சி'நு எழுதவே தெரியல..நீ எங்க காச்ச...இப்டி யாரும் சொல்லலையே///

அன்புடன்
ரஜின்

சாந்தி மாரியப்பன் said...

பிள்ளையின் வயிறு நிறையலைன்னா பெத்த மனசுக்கு சங்கடமாத்தான் இருக்கும்.

நிறைய புதுத்தகவல்களை தெரிஞ்சுக்கிட்டேன்..

Vikis Kitchen said...

நோன்பு காலம் அனைவருக்கும் கடவுளின் ஆசிகளை பெற்று தரும் காலமாக அமைய வேண்டுகிறேன்.

R.Gopi said...

ஆஹா...

அருமை .,... அருமை...

அமீரக ரம்ஜான் நோன்பு பற்றி இவ்வளவு விரிவா, அழகா எழுதி இருக்கீங்க...

நான் நேரில் பார்த்த அனைத்து விஷயங்களும் இங்கே உங்கள் எழுத்துகளில் தெரிகிறது ஜலீலா...

உங்களின் கடுமையான உழைப்பில் வெளியான இந்த பதிவு மிக மிக நன்றாக உள்ளது...

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி ஜலீலா , ரமலான் முபாரக். எங்களை பற்றி எழுதியதற்கு நன்றி.ஒரே ஒரு குறை நீங்கள் துபாய்வாசி என்பதால் துபாய் பற்றி மட்டும் எழுதி இருகின்றீர்கள்,இங்கே அபுதாபி மற்றும் ஏனைய எமிரேட்ஸ் என்ன பாவம் செய்தது? மற்றபடி தங்கள் மகனை பற்றி எழுதி இருந்தீர்கள் இங்கே நாங்களும் அங்கே எங்களது குடும்பத்தாரும் படும் வேதனையை நீங்களும் அனுபவிகின்றீர்கள், படிக்கும் பொது மனது கஷ்டமாக இருந்தது.அல்லாஹ் நம் அனைவரின் கஷ்டத்தையும் போக்குவானாக (அமீன்)

s .கலீல்
அபுதாபி.

alkan said...

arumaiyana thahavalkal alahu thamilil pirinthu vaalum uravuhalin sumaihalin pahirvu. onru niranthara pirivil valartha paasam mattayathu thatkaliha pirivil thaan valartha paasam
nanri kankal kulamaaha
puthiyavan alkan

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா