Wednesday, March 31, 2010

காணாம‌ல் போன‌வ‌ர்க‌ள் ப‌ற்றிய‌ அறிவிப்பு, அவார்டு

காணாம‌ல் போன‌வ‌ர்க‌ள் ப‌ற்றிய‌ அறிவிப்பு என்ன‌ பார்க்குறீங்க‌ த‌லைப்பு வித்தியாச‌மா இருக்கா அப்ப‌டி போட்டாதானே எல்லா வ‌ருவீங்க‌ என்று ந‌ம்ம‌ அடுத்த‌ த‌லைவி சித்ரா நேர் கோண‌ல்ன்னு போட்ட‌தால் இந்த‌ முடிவு.

பிடித்த பத்து பின்னூட்டம் தொடர் பதிவுக்கு என்னையும் அழைத்து இருந்தார்கள் ,எதை சொல்வது என்று தெரியல.

இருந்தாலும் மங்குனி அமைச்சர் போட்டுதான் ஆகனும் ஒரே தலை கீழே தொங்கிட்டு இருக்கார்.

அதுக்கு பின்னாடி சுதாகர் சார் வும் அடம் பிடிக்கிறார்.

அதை தொடர்ந்து அன்பு அதிரா, இதற்கு பிறகும் லேட் பண்ண முடியாது.


எல்லா பின்னூட்டவும் ரொம்ப புச்சது தானுங்கோய், என்னை ஊக்கம் கொடுத்து போடும் அனைவரின் பின்னூட்டமும் எனக்கு பிடித்தது தான். ஆனா இப்ப வருது பாருங்க காமடி பின்னூட்டம் அது ம்ம் சூப்பர்.

அதாங்க பின்னூட்ட குல சாமின்னு எல்லோரும் போட்டதே போடமா. பின்னூட்டம் கொடுத்து காணமல் போனவ்ர்கள் கொடுத்த பின்னுட்டத்த போடலாமே என்று தான் போட்டேன்.
எதை விடுப்ப‌து எதை எடுப்ப‌து எல்லா ம‌க்களும் பின்னூட்ட‌ம் சூப்ப‌ர் த‌ம் பிரியாணி + பூஸ்ட்+டானிக்.

நானும் ஆறு மாத காலமாக பிரியாணி கடைய பல பிராஞ்ச் ஆரம்பிச்சு பார்த்து கொண்டு இருந்தால் கூட்டமே சேரல (பின்னூட்டமே) ரொம்ப கம்மி தான். மனவருத்தம்.
இப்படி தான் சொல்லனுமுன்னு நாஞ்சிலார் சொன்னார்,

அப்ப‌ தான் வ‌ந்தாங்க‌ ந‌ம்ம‌ ஆலின் ஆல் சுஹைனா, முத்தான‌ முத்துன்னு ஒரு பேர‌ போட்டு எல்லா க‌டையையும் ஒன்றாக‌ சேர்த்து ஆலின் ஆலுன்னு பேரையும் வைச்சாங்க‌, க‌ட‌ திற‌ந்து எப்போ நோன்பில், செம்ம‌ கூட்ட‌ம்.
ஒரே ச‌ந்தோஷ‌ம் தாங்க.(சுஹைனா விற்கு நன்றி ஆனால் அதற்கு பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை, தப்பா நினைக்க வேண்டாம் சுஹைனா)
அதுவும் முத்தான முத்தில் முத‌ல் ப‌திவான‌ நோன்பு கால‌ ச‌மைய‌ல் டிப்ஸ‌



SUMAZLA/சுமஜ்லா said...
குபூஸ் என்ற பேரை கேட்டாலே எனக்கு ஹஜ் ஞாபகம் தான் வருது!

அதே போல் இப்ப‌ ச‌மைய‌ல் அட்ட‌காச‌முன்னு பேர‌ வைக்க‌ சொன்ன‌ ம‌லிக்காவுக்கு ஒரு பெரிய‌ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ




1. என் பதிவுகளை தொடர்ந்து பார்த்து பின்னுட்டம் இடும் சகோ. நவாஸ் சொன்னார் (ம‌ன‌ விசால‌ம்) ப‌தில் போட்டாலும், ஒரு ப‌திவில் ஊருக்கு போறேன் ,
"நான் ஊருக்கு போன‌தும் பொட்டிய‌ திற‌க்கிறேனோ இல்லையோ முத‌லில் உங்க‌ சைட்ட‌ ஓப்ப‌ன் செய்து எங்க‌ த‌ங்க‌ம‌ணிக்கிட்ட‌ காட்ட‌னும்" என்றார். இவர் காணாம போகல ஊருக்கு போய் இருக்கார்
ச‌கோ. ந‌வாஸ் த‌மிலிழில் சம்மிட் செய்து ஓட்டு கிடைச்சுது பாருங்க‌, நெச‌மாவே ஒரு தொகுதியில‌ நின்னு ஜெயிச்ச‌ எஃப‌க்ட் வ‌ந்துடுச்சி


2. தாஜ் said... சலாம் ஜலீலாமுத்தான துவாக்கள் தருவீக
நீங்க நல்ல சமையல் குறிப்பு தருவீக
சூப்பர் டிப்ஸ் தருவிக
குழந்தை வளர்ப்பு பற்றி சொல்லுவீக
என்று மட்டும்தானே நினைத்தேன்
அடி ஆத்தி இம்புட்டு அழகா
எழுதுறீகளே[பேசுறீகளே]
தாங்கள் மென் மேலும் வாழ்க வளர்க
சூப்பர் டூப்பர் குறிப்புகளை தருக
நான் தாயாய் ஒரு நேரம் தவித்த பொழுது உங்கள் குறிப்பு எனக்கு மிகவும் உத்வியிருக்கு நன்றி


3. குறை ஒன்றும் இல்லை !!! said...
நல்லா இருக்கும் போல இருக்குங்க..
ஆமா இந்த வடை சாப்பிட்டா பாப்பாய்(popeye)மாதிறி பலம் வருமாங்க
குறை ஒன்றும் இல்லை said... ஏங்க அப்படியே வலையில மாட்டாம இருக்க மீனுக்கும் கொஞ்சம் டிப்ஸ் குடுத்தா நல்லா இருக்கும்
(ராஜ் குமார், அமைச்சரே நான் தான் காமடி ரொம்ப ஆடப்படாது, உங்களுக்கு முன் டைடல் பார்க்கில் உட்கார்ந்து யோசித்து யோசித்து கவுண்டர் காமடி போட்டது இவர்தான்)

4. சிங்கக்குட்டி said... இந்த அட்டகாசம் அருமையாக இருக்கிறது ஜலீலா :-

சிங்கக்குட்டி said... புதுவருட வாழ்த்துகளுடன் உங்களுக்கு என் சிறிய பரிசு :-)
http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_25.htmல்

பல பின்னூட்டம் கொடுத்துள்ளார் சரியாக என்னால் எடுக்க முடியல ஆனால் இவர் பதிவுகள் நம்ம அண்ணாமலையார் பதிவு போல் நல்ல விளக்கமா, பெரிய பதிவா இருக்கும்.


5. டவுசர் பாண்டி has left a new comment on your post "கரம் மசாலா சாக்லேட் ந‌ட்ஸ் கேக் - garam masala cho...": நம்ப நெலம தெரிமா ? அண்ணாத்தைக்கி இன்னா ஆச்சி இன்னு ஒரு வார்த்த கேட்டியா இன்னா தங்கச்சி !! நேத்து பதிவு பக்கமே காணோமே இன்னு பாத்தா !! இந்த கேக்கு சென்சி ஜெயிச்சிட்டீங்க போல கீது , அதான் நம்ப ஏரியாவுக்கு வரல !! டவுசர் பாண்டி said... இந்த குப்பத்துல கீர என்னையும் மச்சி , விருது குட்த சகோதரி ஜலீலா , உங்களுக்கு ரொம்பவே டான்க்சுங்கோ !! நம்ப கூட விருது வாங்கிக் கீன அல்லா தோஸ்துக்கும், வாழ்த்துக்கள்

(எல்லாரும் என்ன அக்கா அக்கான்னு கூப்பிடுறாங்க , நம்ம பாண்டி அண்ணாத்த தான் உரிமையோட தங்காச்சி தங்காச்சின்னு கூப்புடுவாரு, ஆனா என்ன சோகமோ பிரில அண்ணாத்தைய ரொம்ப நாளா காணல... )

8 . shirdi.saidasan@gmail.com said... உங்க விருது ஸ்பெஷல். ஏற்றுக்கொள்கிறேன்.நீங்க நல்லா சமைக்கிறீங்களே. ஒரு வேளை உங்கள் சமையலை சாப்பிட்டு பார்க்கனும். ஓட்டல் ஏதாவது நடத்துகிறீர்களா?
(முதலில் பாலோவர் ஆனவர், ரொம்ப நாளா அவர் குறிப்ப படிக்க முடியாம தேடிட்டு இருந்தேன். பிறகு ஒரு வழியா கண்டு பிடிச்சு நேரம் கிடைக்கும் போது போய் பின்னூட்டமிடுவது)

9. கமலா said... குறிப்பும், படமும் அருமையாக உள்ளது. இதுவரை கொண்டைக்கடலையில் வடை (பிலாபில்) செய்ததில்லை. இதை செய்துப் பார்க்க வேண்டும்.
அன்புடன் கமலா

10. கருவாச்சி said... ஜலி அக்கா மணப்பாறை முர்க்கு மேரி சும்மா மொரு மொருநு கீதுக்கா(இவருடையது நிறைய பின்னூட்டம் இருக்கு என்னால் தேட முடியல)

11. Dr.எம்.கே.முருகானந்தன் said...
குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட உங்கள் பதிவு மிகச் சிறப்பாக இருக்கிறது.
பல பெற்றோர்கள் இவற்றைப் புரிந்து கொள்ளாமல் குழந்தைகளைத் தவறாக வழிநடத்துவதை நான் பல முறை காண நேர்ந்திருக்கிறது
(ஹை டாக்டரே வந்து பின்னூட்டம் போட்டுட்டாரா , ஒரே சந்தோஷம். )


//பதிவு திருட்டின் போது ஆதரவாக எத்தனையோ நல்ல உள்ளங்கள் போட்ட பின்னூட்டத்தில் .//


(நட்புடன் ஜமால் said...
வருத்தமாகத்தான் இருக்கு.எங்கெல்லாம் காப்பி அடிச்சாங்கன்னு உங்ககிட்ட சுட்டிகள் இருந்தா குடுங்க - எதுனா செய்ய இயலுமா என்று பார்க்கலாம்.மனம் தளராமல் - உங்கள் குறிப்புகளை வெளியிடுங்கள்.
இப்ப உள்ள கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா போல் பதிவுலகை கலக்கியவர் நட்புடன் ஜமால், மீண்டும் அவருடைய பயனுள்ள பதிவுகளை எதிர் பார்க்கிறேன் முன்பு போல் அவர் கலக்கலான பதிவுகள் தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்


பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
ஜலீலா அவர்குளுக்கு,
உங்கள் பதிவை யார் திருடினார்களோ அவர்களின் முகவரியை இங்கே தெரிவியுங்கள்.. நாங்கள் அதைப் பார்ப்பதைத் தவிர்த்து விடுவோம்.. தக்க பாடத்தையும் பின்னூட்டங்கள் மூலம் தெரிவிப்போம். அவர்கள் தவறை நினைத்து வருந்த வேண்டும்.. உங்கள் பெயரை கடைசியில் போட்டு நன்றி தெரிவிக்கும் ஒரு நாகரிகமாவது வரட்டும் அவர்களுக்கு.
..என்ன நண்பர்களே..
நன்றி...

//மிக்க நன்றி சகோதரர்களே //

உங்கள் பதிவில் (சாமகொடங்கி பிரகாஷ்)என்னால் பின்னூட்டம் இட முடியவில்லை ஆகையால் இங்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்,
நட்புடன் ஜமால் நன்றி
இப்படி உற்சாகமாக எல்லோரும் பின்னூட்டம் கொடுத்ததில் , இந்த இரண்டு பின்னூட்டம் ரொம்ப தெளிச்சளாகவும், தைரியமாகவும் இருந்தது//


ஹைஷ்126 said... அன்பு சகோதரி ஜலீலா, எதிர்பார்ததைவிட நன்றாகவே வந்தது. வரும் 15 டிசம்பரில் சரியாக ஒரு வருடம் ஆகப் போகிறதே (சமையல் கற்று). அருமையான சுவை. மிகவும் நன்றி.
வாழ்க வளமுடன்
(என் சமையலை செய்து பார்த்து வந்து பின்னூட்டம் இட்ட சகோ.ஹைஷ், விமானம் ஓட்டுபவர்)





சிங்ககக்குட்டி கொடுத்த மைக்கேல் ஜாக்ஸனில் கூல் பிளாக் அவார்டை புத்தாண்டில் கொடுத்தது.





1. ஜெய்லானி
2.மங்குனி அமைச்சர்
3. ஸ்டார்ஜன்
4. பனித்துளி சங்கர்
5. அக்பர் சினேகிதன்
6. அன்புத்தோழன்
7. ரோஸ்விக்
ஆகியோருக்கு கொடுக்கிறேன், பெற்று கொள்ளுங்கள்



டிஸ்கி: அமைச்சர் கூப்பிட்ட தொடர் பதிவ போட்டாச்சு போதுமா .நாஸியா கூப்பிட்ட தொடர் பதிவு தான் இன்னும் போடல.

எனக்கு உற்சாகம் தரும் பழைய புதிய பதிவர்களுக்கும், இப்ப நகைச்சுவையா போட்டு சிரிக்கவைத்து கொண்டிருப்பவர்களுக்கும் மிக்க நன்றி.

51 கருத்துகள்:

மங்குனி அமைச்சர் said...

ஐ... நான்தான் பஸ்து , வடை எனக்குதான்

சைவகொத்துப்பரோட்டா said...

பீதியை கிளப்புற தலைப்பு!!!
விருதுகள் வாங்கியவர்களுக்கும்,
அளித்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

Priya said...

உங்களுக்கும் விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்...(அப்பாடி தப்பிச்சேன்)

Jaleela Kamal said...

அண்ணாமலையார் உங்கள் பேரும் லிஸ்டில் இருந்தது. ஆனால் அதற்குள் வந்து சேர்ந்து கொண்டீர்க்ள்.

அன்புத்தோழன் said...

ஆ!!!!!! விருதா!!!! எனக்கா!!!!! எவ்வளவு பெரிய மனசுங்க உங்களுக்கு... ஆல் இன் ஆல் டாக்டர் ஜலீலாக்கா வாழ்க.... ஹி ஹி.... :-))பதிவுலகத்தில் எனக்கான முதல் விருது உங்க கிட்ட வாங்குறது ரொம்ப சந்தோசமா இருக்கு.... ரொம்ப நன்றி.... இது வர உருப்படியா எதுவும் போட்டேனானு தெரில.... இனிமே போடனும்ன்கிற பொறுப்பு வருது இத தந்த பிறகு.... பூஸ்ட் பூஸ்ட்டுன்னு நீங்கல்லாம் விருதுகள சொல்வது எவ்வளவு உண்மைன்னு தெரியுது....

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஹைய்யா எனக்கும் விருதா.. ரொம்ப சந்தோசமா இருக்கு ஜலீலா..

வாழ்த்துக்கள் ஜலீலாவுக்கும், விருது பெற்றவர்களுக்கும்..

கட்டபொம்மன் said...

வாழ்த்துக்கள் ஜலீலா, விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

மின்மினி RS said...

விருது பெற்றதுக்கு வாழ்த்துக்கள் ஜலீலா அக்கா.., ஜலீலா அக்கா விருதுகொடுத்தவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

Chitra said...

அக்கா, உங்களுக்கு சமையல் குறிப்பு, குழந்தை வளர்ப்பு டிப்ஸ், சமூதாய அக்கறை கொண்ட பதிவு , பதிவர்களை ஊக்குவித்து அரவணைக்கும் விதம், மற்றும் பல நற்குணங்களுடன் நகைச்சுவை பதிவும் அட்டகாசமாய் வருகிறது. விருதுக்கு வாழ்த்துக்கள். அதை, உங்களிடம் இருந்து பெற்று கொண்டவருக்கும் வாழ்த்துக்கள்.. பெருமைக்குரிய விஷயம்.

எனக்கு வடை போச்சே!

சிநேகிதன் அக்பர் said...

விருதுக்கு நன்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

பின்னூட்டத்தேர்வு அருமை.

Prathap Kumar S. said...

அடேங்கப்பா....எங்க எல்லாரையும் ரொம்ப நல்லவங்கன்ன சொல்லிட்டீங்க... இனிமே வேற வழியே இல்ல... இங்க வந்தே ஆகனும்.....வாழ்த்துக்கள் ஜலீலாக்கா...

Thenammai Lakshmanan said...

விருது கொடுத்து அசத்திட்டீங்க ஜலீலா விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

சீமான்கனி said...

விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துகள்...இது தொடர் பதிவா உஷாராதே இருக்கணும் போல...விருது வழங்கிய அக்காக்கும் வாழ்த்துகள்...
ஹும்ம்ம்ம்...

athira said...

ஜலீலாக்கா கலக்கிட்டீங்க... எப்படி தேடிப்புடிச்சு எல்லாம் போட்டீங்களோ இவ்வளவு வேலைகளுக்கு மத்தியிலும்? அத்தோடு விருதுமோ? வாழ்த்துக்கள் விருது கிடைத்தவர்களுக்கு.

எனக்கு கிழமைக்கு ஒன்றுபோடுவதே பெரும்பாடாக இருக்கு நீங்க டக்கு டக்கெனப் போட்டு எல்லோரையும் அசத்துறீங்கள் வாழ்க.

மகனின் பிறந்தநாள் வருகிறதே? உங்களிடம் வருவாரோ?

Jaleela Kamal said...

அதிரா நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு, மகனுக்கு எக்சாம் நடக்கும், மிகுந்த கவலை , அதை மறக்கவே பதிவுகள். மே மாத கடைசியில் வருவார்

Asiya Omar said...

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு பார்த்தவுடன்,நாம தான் காணாமல் போகலையேன்னு தைரியமாக வந்தேன்,விருது பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

இந்த மாசத்தில இரண்டாவது விருதா!! வாங்குற அளவு தகுதி இருக்கா எனக்குன்னு தெரியல .....,அதுவும் ஆல் இன் ஆல் கையால கிடைகுதுன்னு நெனைக்கும் போது புல்லரிக்குது. மிக மிக சந்தோஷம்.(இதை குடுக்க கடை கடையாவேற ஏறி எறங்குனமே )

ஜெய்லானி said...

பழைய பிண்னூட்டத்தையும் ஆட்களையும் நினைவு வைத்து , போட்டதும் இல்லாமல் விருது கொடுத்தும் உள்ளது , ஆல் இன் ஆல் தான் நீங்க என்பதை மீண்டும் நிருபித்து விட்டீங்க !!! வாழ்த்துக்கள்..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

மிகவும் கஷ்டப்பட்டு தெர்ந்தெடுத்து,
இந்தப் பதிவைப் போட்டுள்ளீர்கள்.
கஷ்டப்பட்டு நாங்களும், இல்லை இல்லை,
கஷ்டப்படாமல் நாங்கள் படித்துவிட்டோம்.

தொகுப்பிற்காக வாழ்த்துக்கள்!

ஹுஸைனம்மா said...

ஹை, இது நல்லா இருக்கே!! காணாமப் போனவங்களைத் தேடினமாதிரியும் ஆச்சு, இப்ப வர்றவங்கள மிஸ் பண்ணாத மாதிரியும் ஆச்சு. 2 நாள் கண்ணில படலன்னா கண்டுக்காத உலகத்தில, மறக்காம இருக்கீங்களே அக்கா, கிரேட்!!

அன்புத்தோழன் said...

வாழ்த்துக்கள் சொன்ன அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்... இதோ வரேன் வரேன்... ஒரு நல்ல பதிவோட... விரைவில் :-)...

பித்தனின் வாக்கு said...

ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க ஜலில்லா, நல்ல விமர்சனங்கள்தான் நம்மை இன்னமும் எழுத தூண்டுகோலாக அமையும். மிக்க நன்றி.

ஸாதிகா said...

ஜலி,நன்கு ஞாபகம்வைத்து காணாமல் போனவர்களை குறிப்பிட்டு இருக்கின்றீர்கள்.ஆல் இன் ஆல் அழகு ராணிதான் நீங்கள்.

Ahamed irshad said...

வாழ்த்துக்கள்...

Jaleela Kamal said...

//ஐ... நான்தான் பஸ்து , வடை எனக்குதான்//

அமைச்சரே இதேன்னா ஆலாளுக்கு நான் தான் பஸ்ட் வடை எனக்கு, கொடுத்து இருக்கும் அவார்டை கவனிகலையா?

Jaleela Kamal said...

பீதியை கிளப்புற தலைப்பு!!!//




என்ன தலைப்பு வைக்கன்னு ரொம்ப யோசித்ததால் இந்த தலைப்பு,

பீதிய கிளப்புதா?அப்ப‌ ப‌ய‌ந்து ஓடி வ‌ந்தீங்க‌ளா? சைவ‌ கொத்து ப‌ரோட்டா/

ந‌ன்றி

Jaleela Kamal said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி பிரியா/

Jaleela Kamal said...

ஐ... நான்தான் பஸ்து , வடை எனக்குதான்//


இங்க என்ன கியுல நிட்க வச்சி வடையா விற்கிறாங்க.. ஹி ஹி

Jaleela Kamal said...

ஆமாம் அன்புத்தோழன். இனிமேல் கல்யாணம் வேற ஆகப்போவுது, இரண்டிலும் ரொம்ப பொருப்பா நடந்துக்கோனும்...

Jaleela Kamal said...

//ஹைய்யா எனக்கும் விருதா.. ரொம்ப சந்தோசமா இருக்கு ஜலீலா//

ஸ்டார்ஜன் இதா இதத்தான் எதிர் பார்க்கிறேன். அவார்டு என்றால் எல்லோருக்கும் சந்தோஷம் தான்

Jaleela Kamal said...

.. கட்ட பொம்மன் முதல் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி/

Jaleela Kamal said...

மின்மினி தொடர் வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி.

Jaleela Kamal said...

//பின்னூட்டத்தேர்வு அருமை.//

ந‌ன்றி அக்பர் வ‌லைச்ச‌ர‌த்தின் இந்த‌ வார ஆசிரிய‌ரே.

Jaleela Kamal said...

நாஞ்சிலாரே அட நான் என்ன்மோ இங்க வராட்டி மலையில இருந்து தள்ளி விட்டுடுவேன்னு பயமுருத்துனா மாதிரி ல இருக்கு இது

Jaleela Kamal said...

தேனக்கா வாங்க உங்கள் தொடர் வருகை மிக்க நன்றி.

Jaleela Kamal said...

//விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துகள்...இது தொடர் பதிவா உஷாராதே இருக்கணும் //

சீமான் கனி தொடர் பதிவு நான் யாரையும் அழைகக்ல. இனி உஷாரா இருக்கனும்.

உஙக்ள் சிந்து பாத் தொடர் கதை படிக்க மெதுவாதான் வருவேன்.

Jaleela Kamal said...

அதிரா ஓவ்வொருத்தாரா போடுவதை பார்த்து 1500 கமெண்டில் இருந்து எப்படி எடுப்பது ரொம்ப சிரமம்,

கடைசியில் இப்படி ஒரு ஐடியா> இதுவும் நல்ல இருக்க்கு..

ஜலீலா அக்கா வை ஊக்க படுத்த. தொடர்ந்து வாங்கோ இங்கு இஷ்டம் போல கதைகலாம்.

Jaleela Kamal said...

நன்றி ஜெய்லாணி ஓவ்வொரு முறையும் என்ன பாராட்ட வில்லைஎன்றால் உங்களுக்கு தூக்கம் வராது, ரொம்ப சந்தோஷ்ம்,
ஆமாம் ஓவ்வொரு கடையா ஏறி இரங்கனும், அப்பரம் போய் சாப்பாடும் சொல்லனும்.

Jaleela Kamal said...

ஆசியா தொடர்ந்து வந்து ஊக்கமளிப்பதற்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

//ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க ஜலில்லா, நல்ல விமர்சனங்கள்தான் நம்மை இன்னமும் எழுத தூண்டுகோலாக அமையும். //

என்னை தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி சுதாகர் சார் .

ஆமாம் கண்டிப்பாக நல்ல விமர்சணங்கள் தான் எழுதுவதற்கு தூண்டு கோலாக இருக்கு, நன்ற்.

Jaleela Kamal said...

நிஜாமுதீன் கழ்ட்மில்லாமல் படித்து பின்னூட்டமிட்டமைக்கும் தொடர் வருகைக்கும் மிகக் நன்றி

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா உங்கள் தொடர் வருகைக்கும் கொடுத்த பட்டத்திற்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

இர்ஷாத வாங்க , வருகைக்கு மிக்க நன்றி.

பனித்துளி சங்கர் said...

எனக்கும் விருது அளித்து சிறப்பித்தமைக்கு நன்றி! விருது பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் !! என்ன விருது மட்டும் தான விருந்து இல்லையா??

பனித்துளி சங்கர் said...

நீங்க வித விதமா சமைத்து கொடுத்து அசத்துவீங்கனு ஆவலோட வந்தா இப்படி வெறும் விருதை மட்டும் கொடுத்து அனுப்பப் பாக்கிறீங்களே உங்களுக்கே இது நல்லா இருக்கா?

பனித்துளி சங்கர் said...

ஆமா ரொம்ப நாளாவே கேக்கணும் என்று நினைத்தேன் ,,டாப் இமேஜ்ல ஒருத்தர் கரண்டியுடன் நிக்கிறாரே அவர் யாரு??

Menaga Sathia said...

விருது பெற்ற உங்களுக்கும்,மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா!!

Vijiskitchencreations said...

சூப்பரா எழுதி தள்ளிட்டிங்க. விருது வாங்கிய எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.

மங்குனி அமைச்சர் said...

// Jaleela said...

//ஐ... நான்தான் பஸ்து , வடை எனக்குதான்//

அமைச்சரே இதேன்னா ஆலாளுக்கு நான் தான் பஸ்ட் வடை எனக்கு, கொடுத்து இருக்கும் அவார்டை கவனிகலையா?///

மேடம் நாங்க எப்பவுமே நேர்மை தவற மாட்டோம் , கொஞ்சம் ஆபிசுல ஆணி புடுங்குற வேலையாகிபோச்சு
எப்படியும் இன்னைக்கு நைட் வந்து விருத திருடிகிறேன் ,(அது என்னவோ சுட்ட பழம் தான் டேஸ்டா இருக்கு )

சிங்கக்குட்டி said...

அட பாசக்கார தங்கச்சி ஜலீலா...! ஒரு மாசம் லீவு, அதுவும் என் பதிவில் லீவு லெட்டர் கொடுத்துட்டுதான போனேன்! அதுக்குள்ளே என்னை காண‌ம‌ல் போன‌வ‌ர்க‌ள் வரிசையில் சேர்த்தா எப்படி?

இருந்தாலும் உங்கள் அன்புக்கு எப்போதும் என் நன்றி :-)

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா