Thursday, October 29, 2009

குஸ்கா


பாசுமதி அரிசி = ஒரு கப்
கடலை பருப்பு = கால் கப்

எண்ணை + பட்டர் = 5 தேக்கரண்டி

பட்டை = ஒன்று
ஏலம் = ஒன்று
கிராம்பு = ஒன்று

வெங்காயம் = ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு தேக்கரண்டி முழுவதும்
புதினா = எட்டு இதழ்
கொத்துமல்லி தழை = இரண்டு மேசை கரண்டி
தக்காளி = சிறியது ஒன்று
பச்ச மிளகாய் = ஒன்று
மஞ்சள் தூள் ‍= அரை தேக்கரண்டி
தயிர் = இரண்டு தேக்கரண்டி
லெமென் = சிறிய அரை பழம்







1. அரிசி + கடலை பருப்பை களைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.


2. ரைஸ் குக்கரில் எண்ணை + பட்டரை ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு வெடிய விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும், சிவற விட வேண்டாம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.


3. பச்ச வாடை அடங்கியதும் தக்காளியை நான்காக வெட்டி சேர்த்து மஞ்சள் தூள்+பச்ச மிளகாய்+கொத்துமல்லி+புதினா+தயிர் சேர்த்து வதக்கவும்.

4. தண்ணீர் அரிசி ஒரு கப்பிற்கு ஒன்னறை டம்ளரும் யும், பருப்பு கால் கப்பிற்கு அரை டம்ளர் தண்ணீரும் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து லெமென் சாறு சேர்த்து (ரைஸ் குக்கரில் ) குக் செய்யவும்.
5. ரைஸ்குக்கர் இல்லை என்றால் குக்கரிலும் வைக்கலாம்.

6. சுவையான குஸ்கா ரெடி. இதை கிச்சிடி என்றும் சொல்லலாம்.

குறிப்பு

சுவையான காலை நேர உணவு சூடாக கொத்து மல்லி துவையல் (அ) புதினா துவையலுடன் வெரும் சாதம் பிடித்து சாப்பிட அருமையாக இருக்கும்.
மதிய உணவிற்கு என்றால் மீன் குழம்பு, கார குழம்பு வகைகள் பொருந்தும்.
பட்டர் வேண்டாம் என்றால் வெரும் எண்ணையே போதுமானது. நெயில் தாளித்தாலும் சுவை நன்றாக இருக்கும்.

Wednesday, October 28, 2009

ஹோம்மேட் சைனீஸ் சிக்கன் & வெஜ் ரோல் - Chicken Spring roll




//ஹோட்டலில் வைக்கும் ஸ்டாட்டர்ஸ், சைனீஸ் சிக்கன் ரோல் இப்ப வீட்டிலும் சுலப‌மா செய்துவிடலாம்.
வெஜ்டேரிய‌ன்க‌ள்.சிக்க‌னை த‌விர்த்து விட்டு இதே முறையில் விருப்பமான காய் க‌றிக‌ளுட‌ன் செய்ய‌வும்.
இதே பில்லிங்கை, ரோல் செய்ய‌ நேர‌ம் இல்லாத‌வ‌ர்க‌ள். பிரெட், ப‌ண்ணில் வைத்தும் சாப்பிட‌லாம்.//




தேவையான பொருட்கள்

சிக்கன் போன்லெஸ் - 150 கிராம்
கேபேஜ் - கால் கப்
கேரட் - இரண்டு மேசை கரண்டி
கேப்ஸிகம் - ஒரு மேசை கரண்டி
பச்ச மிளகாய் - ஒன்று
வெயிட் பெப்பர் (அ) பிளாக் பெப்பர் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
வெங்காயம் - ஒன்று (அ) வெங்காய தாள் - இரண்டு ஸ்டிக்
பூண்டு - இரண்டு பல்
சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை - அரை தேக்கரண்டி
லெட்டியுஸ் இல்லை - முன்று மேசை கரண்டி



கேபேஜ், கேரட் நீளவாக்கில் அரிந்து வைக்கவும்.

லெட்டியுஸ்,கேப்ஸிகம்,பச்சமிளகாய், பூண்டு வெங்காயம் பொடியாக நருக்கி வைக்கவும்.

மாவை பூரி உருண்டைகலாக போட்டு மாவு தடவி வைகக்வும்.

மாவை குழைத்து பூரிக்கு உருண்டை போடுவது போல் போட்டு மேலே மாவை நன்கு தூவி வைக்கவும் (சப்பாத்திக்கு பிசையும்போதும் இதே போல் செய்து வைத்தால் நல்ல இட வரும்)

சிக்கனை சின்ன சின்ன துண்டுகளாக போட்டு அதில் பாதி மிளகு தூள், சோயா சாஸ் அரை தேக்கரண்டி, சிறிது உப்பு போட்டு குக்கரில் வேகவைத்து தண்ணீரை வடித்து உதிர்த்து கொள்ளவும்.

ஒரு நான் ஸ்டிக் பேனை காயவைத்து இரண்டு ஸ்பூன் எண்னை அல்லது பட்டர் ஊற்றி சர்ர்கரை,பூண்டு பச்ச மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் போட்டு வதக்கவும்.

அடுத்து கேரட் மற்றும் கேபேஜை போட்டு வதக்கவும்.எல்லாம் இரண்டு இரண்டு நிமிடம் வதக்கினால் போதும்.
ரொம்ப வேக தேவையில்லை. இப்போது உதிர்த்து வைத்துள்ள சிக்கன், கேப்ஸிகம்,லெட்டியுஸ் இலை மீதி உள்ல மிளகு தூள், உப்பு, சிறிது எல்லாம் போடு வதக்கவும்.
சிறிது நேரம் வதக்கி இரக்கி ஆற விடவும்.


மிகவும் மெல்லிய பூரிகளாக இட வேண்டும், மாவு தேய்ப்பதால் பிரியாமல் திரட்ட வரும்



இட்ட பூரியை நாலா பக்கமும் கட் பண்ணவும்.



ஒரு மேசை கரண்டி முழுவதும் பில்லிங்கை வைகவும்.

மேல் புறத்தில் முதலில் மடித்து இரண்டு சடிலும் மடித்து அபப்டியே ரோல் பண்ணி லேசாக அழுத்தி விடவும்.


ஒரு டம்ளர் மாவில் 10 ரோல்கள் ரெடி


எண்ணையை காயவைத்து பொரிக்கவும்.



மறுபக்கமும் திருப்பி போட்டு நன்கு முருகியதும் எடுத்து வடிகவும்.



சுவையான சிக்கன் ரோல் ரெடி


சைனீஸ் சிக்க‌ன் வெஜ் பிரெட் சாண்ட்விச்






இதே பில்லிங்கை பிரெட் ம‌ற்றும் ப‌ண்ணிலும் வைத்து ஈசியாக‌ சாண்ட்விச் த‌யாரித்து கொள்ள‌லாம்.







அப்ப‌டியே பிள்ளைக‌ளுக்கு பிரெட்டில் ஒரு சைட் கெட்ச‌ப்பும், ம‌றுப‌க்க‌ம் இந்த‌ பில்லிங்கையும் வைத்து மூடி அழுத்திவிட்டு, முக்கோண‌வ‌டிவில் க‌ட் ப‌ண்ண‌வும்.




பிள்ளைக்க‌ளுக்கு ப‌ள்ளிக்கு கொடுத்த‌னுப்ப‌லாம், நாமும் ஆபிஸ் கொண்டு செல்ல‌லாம்.




Monday, October 26, 2009

கால் பாயா மிளகு சால்னா Paya Salna





//இது அடிக்கடி முட்டு வலி உள்ளவர்கள் மாதம் இருமுறை செய்து சாப்பிடலாம். பலம் பெறும்.குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் போது கால்கள் பலம் பெற இதில் சூப் வைத்து கொடுக்கலாம், குழந்தைகளுக்கு தகுந்தமாதிரி காரம் குறைத்து நெய்யில் கூட தாளிகலாம்.செய்து முடிந்து வடிகட்டி கொடுக்கவும்//









வேக‌ வைக்க‌


ஆட்டு கால் = ஒரு செட் முழுவ‌தும்

த‌க்காளி = 3

வெங்காய‌ம் = 3

இஞ்சி பூண்டு பேஸ்ட் = 3 தேக்க‌ர‌ண்டி

ப‌ச்ச‌ மிளகாய் = 2

மிள‌கு தூள் = 2+1 தேக்க‌ர‌ண்டி

த‌னியா தூள் = ஒன்ன‌றை மேசை க‌ர‌ண்டி

ம‌ஞ்ச‌ள் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி

உப்பு தேவைக்கு

கொத்து ம‌ல்லி த‌ழை = சிறிது

அரைத்து கொள்ள‌


தேங்காய் ப‌வுட‌ர் = முன்று தேக்க‌ர‌ண்டி
முந்திரி = எட்டு
பாத‌ம் = முன்று
க‌ச‌க‌சா = ஒரு தேக்க‌ர‌ண்டி


தாளிக்க‌


எண்ணை = ஒரு தேக்க‌ர‌ண்டி
டால்டா (அ) ப‌ட்ட‌ர் = கால்
ப‌ட்டை = இர‌ண்டு அங்குல‌ துண்டு
ஏல‌ம் = 2
கிராம்பு = 2
சின்ன‌ வெங்காய‌ம் = 5
இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு தேக்க‌ர‌ண்டி
கொத்து ம‌ல்லி த‌ழை = சிறிது
புதினா = நான்கு இத‌ழ்


1.ஆட்டு காலை வினிகர் சேர்த்து நன்கு உறைத்து கழுவி வைக்கவும்.
2. அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைத்து வைக்கவும்




3. வேக வைக்க கொடுத்துள்ள பொருட்களை எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து நன்கு பிசைந்து பத்து நிமிடம் ஊறவைக்கவும்




4. அதில் கால் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக விடவும்.
கால் வேக ரொம்ப நேரம் எடுக்கும், குறைந்து அரைமணி நேரமாவது ஆகும்
5. வெந்ததும் அரைத்த கலவையை சேர்த்து கொதிக்க விடவும்





6. மற்றொரு அடுப்பில தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.




சுவையான ஆட்டுகால் மிளகு குழம்பு ரெடி.





குறிப்பு

1.காலில் கொழுப்பு சத்து அதிகம் இருக்கும் ஆகையால் எண்ணை கொஞ்சமாக போதும், இது அடிக்கடி முட்டு வலி உள்ளவரகள் மாதம் இருமுறை செய்து சாப்பிடலாம். பலம் பெறும்.


2.குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் போது கால்கள் பலம் பெற இதில் சூப் வைத்து கொடுக்கலாம், குழந்தைகளுக்கு தகுந்தமாதிரி காரம் குறைத்து நெய்யில் கூட தாளிகலாம்.செய்து முடிந்து வடிகட்டி கொடுக்கவும்.


3.குளிர் காலங்களில் இது போல் மிளகு சேர்த்து செய்து சாப்பிடலாம். காரம் தேவை படுபவர்கள் இன்னும் கூட்டி கொள்ளலாம். இந்த ஆட்டு காலை குருமா முறையிலும் , சூப் போலவும் செய்யலாம்.


தேங்காய் ப‌வுட‌ருக்கு ப‌தில் தேங்காயும் அரைத்து ஊற்றலாம்.

இதற்கு கோதுமை ரொட்டி, இடியாப்பம் சூப்பரா இருக்கும், மற்றபடி ஆப்பம், இட்லி, பரோட்டா , சபபத்தி வகைகளும் பொருந்தும்.

















Friday, October 23, 2009

மிளகு மட்டன் கிரேவி - Pepper mutton Gravy




தேவையான பொருட்கள்

மட்டன் = ஒரு கிலோ

வறுத்து பொடிக்க
----------------- -----
மிளகு ‍ நான்கு தேக்கரண்டி
சீரகம் ‍- இரண்டு தேக்கரண்டி
சோம்பு ‍ - ஒரு தேக்கரண்டி
பட்டை ‍ இரண்டு இன்ச் அளவு ஒன்று
கிராம்பு ‍ நான்கு
ஏலம் ‍ முன்று

தாளிக்க‌
-----------

வெங்காயம் ‍ நான்கு பெரியது
தக்காளி ‍ முன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் ‍ இர‌ண்டு மேசைக‌ர‌ண்டி
உப்பு - தே.அளவு
மிளகாய் தூள் ‍ அரை தேக்கரண்டி
தனியாத்தூள் ‍ இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணை ‍ ஆறு தேக்கரண்டி
பச்ச மிளகாய் ‍ முன்று




செய்முறை

1.மட்டனை நன்கு கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும்

2. குக்கரில் எண்ணை விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

3. பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்ச வாடை போனதும் தக்காளி ,பச்சமிளகாய்,உப்பு,கொத்து மல்லி கீரை போட்டு வத்க்கவும்.

4. மிளக்காய் தூள்,மஞ்சதூள், தனியாதூள் சேர்த்து வதக்கி மட்டனை சேர்த்து நல்ல கிளறி பொடித்து வைத்துள்ள் பொடியை சேர்த்து ந்ன்கு கிளறவும்.

5. கொஞ்சமா தண்ணீர் வீட்டு மூன்று விசில் விட்டு இரக்கவும்.

6. இரண்டு பத்தை தேங்காய் அரைத்து ஊற்றி கொத்திக்கவிட்டு இரக்கவும் தேவைப‌ட்டால் தேங்காயுட‌ன் சிறிது முந்திரியும் வைத்து அரைத்து ஊற்ற‌லாம்.


7. சூப்பர் பெப்பர் மட்டன் கிரேவி ரெடி. சும்மா சுள்ளுன்னு இருக்கும்.


குறிப்பு:

இது குழ‌ம்பு போல் இல்லாம‌ல் கிரேவியா வ‌ர‌னும்.கார‌ம் அதிக‌ம் தேவைப‌டுவ‌ர்க‌ள் தேங்காய் சேர்த்துகொள்ள‌ வேண்டாம்.
இதை பிரட் ரைஸ், பிளெயின் ரைஸ் , ரொட்டி போன்றவைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்
பனிகாலங்களில் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம், சளி ஜலதோஷம் பிடிக்காமல் இருக்க வாரம் இரு முறை செய்ய்யலாம், தொண்டைக்கு இதமாக இருக்கும்.

Thursday, October 22, 2009

லெமென் ரைஸ் - Lemon Rice

பாசுமதி அரிசி = ஒன்னறை டம்ளர்
லெமென் = இரண்டு

ஊறவைக்க ( அரை மணி நேரம் ஊறவைக்கவும்)

வேர்கடலை = இரண்டு மேசை கரண்டி
கடலை பருப்பு = ஒரு மேசை கரண்டி

தாளிக்க‌

எண்ணை = ஐந்து தேக்கரண்டி
கடுகு = ஒரு தேக்கரண்டி

உளுந்து பருப்பு = அரை தேக்கரண்டி
கருவேப்பிலை ‍ = இரண்டு ஆர்க்
பூண்டு = இரண்டு
பெருங்காயபொடி = ஒரு பின்ச்
மஞ்சள் தூள் = அரை தேக்கரண்டி
உப்பு = தேவைக்கு



1. சாதத்தை உதிரியாக வடித்து ஆறவைக்கவும், வடிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணை விடவும், அப்போது தான் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாது.

2 எலுமிச்சையை சாறு பிழிந்து கொட்டை இல்லாமல் வடிகட்டி அதில் மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி வைக்கவும்.

3. வாயகன்ற சட்டியை காய வைத்து தாளிக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் கருகாமல் தாளித்து ஊறவைத்த வேர்கடலை மற்றும் கடலை பருப்பை சேர்த்து தாளித்து அடுப்பை அனைத்து விட்டு எலுமிச்சை கலவையை ஊற்றவும்.

4. தாளித்த கலவையை சாதத்தில் கொட்டி உதிரியாக கிளறி விட்டு இரகக்வும்.





குறிப்பு


கடலை பருப்பு,வேர்கடலை ஊறவைத்து சேர்ப்பதால் வயதானவர்களும் எளிதாக கடித்து சாப்பிடலாம்.
இது பார்க்க கலர்புல்லாக இருக்கவேண்டும் என்றால் துருவிய கேரட்டை துவி அலங்கரிக்கலாம். இதே போல் வேக வைத்த கருப்பு கொண்டை கடலையையும் போட்டு லெமென் ரைஸ் செய்யலாம்
எங்கள் வீட்டில் வாரம் ஒரு முறை ஏதாவது கட்டு சோறு தான்.
இதுக்கு அவித்த முட்டை (அ) பீன்ஸ் பருப்பு உசிலி நல்ல காம்பினேஷமன்மற்றபடி சிக்கன்,மட்டன், மீன் பிரையும் மசால் வடையும் செய்தால் கூட நல்ல இருக்கும்


சிக்கன் சாண்ட்விச் - Chicken Sandwich










பன் ‍ = இரண்டு
வெந்த சிக்கன் = முன்று மேசை கரண்டி
கேரட் = ஒரு மேசை கரண்டி
காப்சிகம் = ஒரு மேசை கரண்டி
கேபேஜ் = முன்று மேசை கரண்டி
உப்பு = சிறிது வெள்ளை மிளகு தூள் சிறிது
மையானஸ் = சிறிது
கெட்ச‌ப் = சிறிது






சிக்கனில் ஒரு ஒரு சிட்டிக்கை அளவு (இஞ்சி பூண்டு பேஸ்ட்,மிளகு தூள், உப்பு ) போட்டு வேகவைத்து தண்ணீரை வடித்து உதிர்த்து கொள்ளவும்.

கேர‌ட், கேபேஜ், கேப்சிகம் மூன்றையும் பொடியாக‌ அரிந்து கொள்ளவும்





சிக்க‌னுட‌ன் எல்லாவ‌ற்றையும் ஒன்றாக‌ க‌ல‌ந்து கொள்ள‌வும்.




ப‌ன்னை இர‌ண்டாக‌ வெட்டி ஒரு புற‌ம் மையான‌ஸ், ஒரு புற‌ம் கெட்ச‌ப் த‌ட‌வ‌வும்.




க‌ல‌ந்த‌ க‌ல‌வையை ப‌ர‌வ‌லாக‌ வைத்து ப‌ன்னை மூட‌வும்.

நான்காக‌ க‌ட் ப‌ண்ணி கொள்ள‌வும்.குழ‌ந்தைக‌ளுக்கு ப‌ள்ளிக்கு கொண்டு செல்ல‌வும், ஆபபிஸ் எடுத்து செல்ல‌வும் ந‌ல்ல‌தொரு ஈசியான பிரேக்பாஸ்ட்




ரொம்ப‌ ஈசியான‌ ஹெல்தியான‌ காலை உண‌வு, வெந்த‌ சிக்க‌ன் இருந்தால் ப‌த்தே நிமிஷ‌த்தில் சிக்கன் சாண்ட்விச் ரெடி.







Wednesday, October 21, 2009

மொகலாய் சிக்கன் கிரேவி - Mughlai Chicken Gravy



//ஹோட்டலில் முந்திரியை நெயில் வறுத்து பொடித்தோ அரைத்தோ போடுவதால் தான் கிரேவி ரொம்ப ருசியாக இருக்கிறது.
இதில் தயிர் சேர்த்துள்ளது, சிக்கன் சூடு என்று சாப்பிடாமல் இருப்பவர்கள் இதுபோல் தயாரித்தால் தாராளமாக சாப்பிடலாம்//


சிக்கன் = ஒரு கிலோ


அரைத்து கொள்ள‌

வருத்த முந்திரி = 50 கிராம்
வதக்கிய வெங்காயம் = ஒன்று பெரியது
மிளகு = ஒரு மேசை கரண்டி
காஞ்ச மிளகாய் = ஐந்து
சோம்பு = ஒன்னறை தேக்கரண்டி
முழு தனியா = ஒரு மேசை கரண்டி
பட்டை = ஒரு அங்குலம் அளவு
கிராம்பு = முன்று
ஏலம் ‍= இரன்டு
தயிர் = 50 மில்லி + 350 மில்லி

தாளிக்க‌
********
எண்ணை = 50 மில்லி
க‌ர‌ம் ம‌சாலா = அரை தேக்க‌ர‌ண்டி





செய்முறை


1. அரைக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் அரைக்கவும். அரைத்து கடைசியாக தயிர் சேர்த்து அரைத்தால் மிக்சியில் ஏதும் ஒட்டாமல் வந்துவிடும்.

2. சிக்கனை நன்கு கழுவி அதில் உப்பு,மஞ்சள் தூள் தயிர் சேர்த்து பத்து நிமிடம் ஊறவைக்கவும். அடுத்து அரைத்த‌ பொருட்க‌ளையும் சேர்த்து அரை ம‌ணி நேர‌ம் ஊற‌வைக்க‌வும்.

3. பிற‌கு ஒரு வாய‌க‌ன்ற‌ வான‌லியில் எண்ணை + க‌ர‌ம் ம‌சாலா சேர்த்து ஊற‌வைத்த‌ சிக்க‌னை போட்டு அதிக‌ தீயில் ந‌ன்கு கிள‌றி , பிற‌கு தீயை மித‌மாக‌ வைத்து ந‌ன்கு வேக‌விட்டு கிரேவி ப‌தம் வ‌ந்து எண்ணை தெளிந்து வ‌ரும் போது இர‌க்க‌வும்.

4. குக்க‌ரில் செய்ப‌வ‌ர்க‌ள் குக்க‌ரிலும் செய்ய‌லாம். ந‌ன்கு கொதிக்க‌ விட்டு இர‌ண்டு மூன்று விசில் விட்டு இர‌க்க‌வும்.




5. சூப்பரனா சுவையான மொகலாய் சிக்கன் கிரேவி

Monday, October 19, 2009

கார சாரமான பாயில்ட் எக் பிரை -boiled egg fry




தேவையான பொருட்கள்

முட்டை - 6

உப்பு தூள் முக்கால் தேக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி

மிளகு தூள் -ஒரு தேக்கரண்டி

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

எண்ணை - பொரிக்க தேவையான அளவு

பட்டர் (அ) டால்டா - அரை தேக்கரண்டி






செய்முறை



1.முட்டையை கழுவி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அரை தேக்கரண்டி உப்பு போட்டு 10 நிமிடம் வேகவைத்து கொள்ளவும்.



2. மசாலாக்களை சிறிது தண்ணீர் தெளித்து கலக்கி கொள்ளவேன்டும். முட்டையை வெந்ததும் குளிர்ந்த தண்ணீர்க்கு மாற்றி மெதுவாக அவசர படாமல் பிரித்தெடுக்கவும்.



3. இரண்டாக கட் பண்ணி மசாலாக்களை இரு புறமும் தடவவும்.

4. ஐந்து நிமிடம் ஊறவைக்க வேண்டும்.



5. ஒரு நான் ஸ்டிக் தவ்வாவில் எண்ணை ஊற்றி தீயை குறைத்து விட்டு எல்லா முட்டைகளையும் போட்டு முன்று நிமிடம் மொருக விட வேண்டும்.



6.எல்லா முட்டைகளையும் திருப்பி பொட்டு மறுபடி வேக விட வேண்டும்.திருப்பியதும் வெடிக்க ஆரம்பிக்கும்.



7. தீயை குறைத்து முடி போட்டு முன்று நிமிடம் பொரிய விட வேண்டும்.



8.முடியை திரந்து மறுபடி ஒரு முரை திருப்பி போட்டு ஒரு நிமிடம் பொரிய விட்டு எடுத்து விட வேண்டும்.



சுவையான பாயில்ட் முட்டை பிரை தயார்.









குறிப்பு



இது ஒரு நல்ல கார சாரமான முட்டை பிரை.

சில பேருக்கு பாயில்ட் எக் பிடிக்காது அப்போது அதை இப்படி செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

குழந்தைகளுக்கு கொடுக்கும் போது வெரும் மிளகு மட்டும்சேர்த்து நல்ல நெய்யில் பொரித்து கொடுக்கவும்.பொரித்து முடித்ததும் அந்த மசாலா எண்ணை மிகவும் சுவையாக இருக்கும்.

அப்படியே சாதம் போட்டு பிறட்டி சாப்பிடலாம்.

எண்ணை ஆலிவ் ஆயில் (அ) நல்லெண்ணையும் பயன் படுத்தலாம்.



இது தயிர்சாதம், எல்லா வகையான் கட்டு சோறுகள், ரசம் சாதம், பருப்பு சாதம் அனைத்திற்கும் பொருந்தும்.



மாலை நேரம் பசி எடுத்தால் கூட குளிர் காலத்தில் சாப்பிட சுவையாக இருக்கும்.

Sunday, October 18, 2009

வீட்டில் கொசுதொல்லையா?



//இது தமிழ் குடும்பத்தில் உள்ள நகைச்சுவை என்னுடையது கிடையாது, இத படிக்கும் போதெல்லாம் சிரிப்பு, சிரிப்பு தாங்க முடியாது.
எனக்கு ரொம்ப பிடித்தது.
நீங்களும் படித்து கொஞ்சம் சிரியுங்கள்
.//



கொசுவைக் கொள்ள இதோ ஒரு எளிய வழி,





கொசு உங்கள் அருகில் பறக்கும் போது அதை பிடித்துதலைகீழாய் கட்டி தொங்க விடவும்





பிறகு அதுக்கு கிச்சி கிச்சி மூட்டிவிடுங்கள். அது வாய்விட்டு சிரிக்கும்,அப்போது கொசுவின் வாயில் கொஞ்சம் விஷத்தை ஊற்றிவிடுங்கள்கொசுவை சுலபமாக கொன்றுவிடலாம்

கொசு தொல்லை அப்ப‌ப்பா பெருந்தொல்லைய‌ப்பா அது இதோ என் டிப்ஸ்.

லைசால் ஊரில் கிடைக்கிற‌து இல்லையா அதை த‌ண்ணீரில் க‌ல‌ந்து mob ப‌ண்ணி விடுங்க‌ள். நிமிஷ‌த்தில் கொசு கூட்ட‌ம் இட‌த்த‌ காலிப‌ண்ணிடுவாங்க‌.

Saturday, October 17, 2009

ஆண்கள் பகுதி (லேப்டாப் டிப்ஸ்) - Laptop tips



லேல்டாப்பை அதிக நேரம் லேப்பில் வைக்க வேண்டாம்

இப்போதெல்லாம் லேப்டாப் இல்லாமல் லைபே இல்லை என்பது போல் இருக்கிறார்கள்.
இப்படி லேப்டாப்பை அதிக நேரம் மடியில் வைத்து சுவரஸ்யமாக நேரம் தெரியாமல் வேலை பார்ப்பதால் அதன் மின்னதிர்வு கதிர் தொடையில் பட்டு சூடாகுவதால் , ஆண்களுக்கு மலட்டு தன்மை (குழந்தையின்மை) ஏற்படுகிறது என்று முன்பு ஒரு புக்கில் படித்திருக்கிறேன்.

பிள்ளைகளுக்கு ஒன்றும் தெரியாது லேப்டாப்பை வைத்து கொண்டு அதிக நேரம் விளையாடுகிறார்கள்.





அப்படியே எவ்வளவு நேரம் விளையாடினோம் என்று தெரியாமல் காதில் பாட்டு கேட்ட படி சிலர் தூங்கவும் செய்கிறார்கள். இப்படி காதில் என்னேரம் வைத்து கொண்டு இருப்பதால், போன் அடித்தாலும், வீட்டில் யாராவது காலிங் பெல் அடித்தால் கூட பிள்ளைகளுக்கு தெரிவதில்லை.


இது போல் உள்ள பிள்ளைகளுக்கு இத்தனை மணியிலிருந்து இது வரை தான் விலையாடனும் என்று ஒரு டைம் கொடுங்கள், இந்த விஷியத்தில் மிகவும் கராராக இருங்கள், இப்படி பயன் படுத்துவதால் திடுக்கிடும் ஆபத்துகள் நிறைய இருக்கு





அதை சிறுவர்களும் சரி பெரியவர்களும் அதிக நேரம் மடியில் வைத்து கொண்டு வேலை பார்க்காமல் அருகில் ஒரு டேபிளில் வைத்து பயன் படுத்த சொல்லுங்கள்.
இது நாம் ஃபிளைட்டில் , ரயில் நிலையத்தில் எல்லாம் இது போல் இளைஞ‌ர்கள் பயன் படுத்துவதை காணலாம்.


இந்த‌ விஷிய‌த்தில் அதிக‌ செல்ல‌ம் கொடுக்க‌ வேண்டாம்.







டொமெட்டோ சூப் - tomato soup


குளிர் காலம் வந்துவிட்டது,
இது போல் சூப் செய்து குடிப்பது தொண்டை கர கரப்புக்கு , இதில் இஞ்சி சேர்ந்து இருபப்தால் சளிக்கு எல்லாம் மிகவும் நல்லது.

எளிய முறையில் தயாரித்து விடலாம்.இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

குளிர்காலத்தில் இந்த சூப்பை குடித்தால் உங்கள் தொண்டை சொல்லுமே ஆஹா...












தேவையானவை



தக்காளி = நான்கு
இஞ்சி = இரண்டு அங்குல துண்டு
சின்ன வெங்காயம் = 10

தாளிக்க

பட்டர் = ஒரு தேக்கரண்டி
மிளகு = தேவைக்கு
உப்பு = தேவைக்கு

கார்ன் பிளார் மாவு = இரண்டு தேக்கரண்டி



செய்முறை






தக்காளியில் பொடியாக அரிந்த இஞ்சி, வெங்காயம் சிறிது உப்பு சேர்த்து நன்கு குக்கரில் வேகவிட்டு. முக்கால் பாகம் அரையுமாறு மிக்சியில் அரைத்து பெரிய துளையுள்ள வடிகட்டியில் வடிக்கவும்.

கடைசியாக பட்டர் தாளித்து தக்காளி கலவையை ஊற்றி கொதிக்க விட்டு கார்ன் மாவை கரைத்து ஊற்றவும்.

கடைசியாக தேவைக்கு மிளகு தூள் , உப்பு தூள் தூவி குடிக்கவும்.




இது சிம்பிள் சூப் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கலாம்,
வருகிற குளிர் காலத்துக்கு தொண்டைக்கு மிக இதமாக இருக்கும்.




Wednesday, October 14, 2009

மட்டன் கோலா உருண்டை குழம்பு - Meat Ball kuzampu












கோலா உருண்டைக்கு

மட்டன் (துண்டுகறி) = 200 கிராம்

பச்ச மிளகாய் = ஒன்று
கரம் மசாலா தூள் = கால் தேக்கரண்டி
தேங்காய் = இரண்டு பத்தை
வெங்காயம் = ஒன்று
இஞ்சி = ஒரு அரை அங்குல துண்டு
பூண்டு = 4 பல்
சில்லி பிலேக்ஸ் = அரை தேக்க‌ர‌ண்டி (அ) காஞ்ச‌ மிள‌காய் 2
உப்பு = அரை தேக்கரண்டி (அ) தேவைக்கு
கொத்து ம‌ல்லி = பொடியாக‌ ந‌ருக்கிய‌து கால் க‌ப்
சீர‌க‌ தூள் = அரை தேக்க‌ர‌ண்டி


அரைத்ததில் கலக்கி கொள்ள‌

பொட்டு கடலை = ஒரு மேசை கரண்டி
கார்ன்பிளார் மாவு = ஒரு மேசைகரண்டி



குழ‌ம்பிற்கு
(க‌றி குழ‌ம்பு)

ம‌ட்ட‌ன் எலும்புட‌ன் = 100 கிராம்
த‌க்காளி = இர‌ண்டு
வெங்காய‌ம் = இர‌ண்டு
கொத்து ம‌ல்லி = சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் = இரண்டு தேக்கரண்டி
மிளகாய் தூள் = ஒரு தேக்கரண்டி
தனியாதூள் = ஒரு மேசை கரண்டி
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
உப்பு தூள் = குழம்பிற்கு தேவையான அளவு
எண்ணை = முன்று தேக்கரண்டி
ப‌ட்டை = ஒரு துண்டு
தேங்ககாய் = முன்று ப‌த்தை













கோலா செய்முறை



1. கார்ன் பிளார் மாவு, பொட்டுகடலை தவிர குட்டி குட்டியா அரிந்த‌ ம‌ட்ட‌னில் சில்லி பிலேக்ஸ்,ம‌ஞ்ச‌ள் தூள், உப்பு,சீர‌க‌ தூள் க‌ர‌ம் ம‌ச‌லா தூள் சேர்த்து ந‌ன்கு பிர‌ட்டி இஞ்சி,பூண்டு, ப‌ச்ச‌மிள‌காய், கொத்தும‌ல்லித‌ழை,தேங்காய்ம் வெங்காய‌ம் எல்லாவ‌ற்றையும் பொடியாக‌ அரிந்து சேர்க்க‌வும்.


2. முத‌லில் பொட்டுக‌ட‌லையை பொடித்து த‌னியாக‌ வைக்க‌வும். பிற‌கு பிச‌றி வைத்த‌தை த‌ண்ணீர் விடாம‌ல் மிக்சியில் அரைக்க‌வும். அரைத்த‌ க‌ல‌வையுட‌ன் பொட்டுக‌ட‌லைமாவு,கார்ன் பிளார் மாவு க‌ல‌க்கி த‌னியாக‌ வைக்க‌வும்.


குழ‌ம்பு செய்முறை

3. அடுத்து குழ‌ம்பிற்கு எண்ணையை காய‌வைத்து அதில் ப‌ட்டை,
வெங்காய‌ம், இஞ்சி பூண்டு, பாதி த‌க்காளி, கொத்தும‌ல்லி சேர்த்து தாளித்து ம‌ட்ட‌னையும் சேர்த்து தூள்வ‌கைக‌ள் அனைத்தையும் சேர்த்து ந‌ன்கு கிள‌றி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

4. மீதி உள்ள் தக்காளியுடன் தேங்காய் சேர்த்து நன்கு அரைத்து சேர்த்து குக்கரில் என்றால் முன்று நான்கு விசில் விட்டு இரக்கவும். வெளியில் என்றால் சிம்மில் வைத்து நன்கு வேகவிடவும்.









5. மட்டன் குழம்பு கொதிப்பதற்குள்,அரைத்து வைத்துள்ள உருண்டைகளை ஒரு சிறிய லெமென் சைஸில் பொரித்தெடுத்து கொதித்து கொண்டிருக்கும் கடைசியாக குழம்பில் போட்டு மீண்டும் சிறிது நேரம் கொதிக்க விட்டு இரக்கவும்.

சுவையான சத்தான கோலா உருண்டை குழம்பு ரெடி.

குறிப்பு:

வடையாக செய்வதாக இருந்தால் மட்டன் கிமா தயாரித்து சுருட்டி ஆற வைத்து அரைத்து சுடனும் அப்படி சுடும் போது பிஞ்சிபோகும், அதற்கு முட்டை சேர்த்து கொண்டால் பிஞ்சி போகாமல் இருக்கும்