மசாலா என்றதும் சமையலுக்கு மசாலா என்று நினைக்க வேண்டாம், எல்லோரும் அஞ்சறை பெட்டி, கொத்து பரோட்டா, டிரெங்கு பெட்டி என்று போடும் போது சரி நாமும் போடுவோமே. இது ஸாதிகா அக்கா ஜலீ நீங்களும் ஒரு கொத்து பரோட்டா போடுங்கள் என்று சொன்னதால் போட்டது. ஆனால் எப்படி தான் எல்லோரும் மொக்கை பதிவு, அஞ்சறை பெட்டி, கவுஜை எல்லாம் போடுகிறீர்களோ. சமையல் குறிப்பு, டிப்ஸ் என்றால் உடனே பத்து நிமிடத்தில் போட்டு விடலாம் போல ஆனால் இந்த பதிவு போடுவது எனக்கு ரொம்ப யோசிக்க வேண்டியதா போச்சு
அனுபவ மசாலா மிக்ஸ்.
எச்சரிக்கை
இப்ப துபாயிலும் அங்காங்கே முகமூடி கொள்ளை காரர்கள் ஆட்டம் தாங்க முடியல உஷாராக இருக்கனும்.
இத்தனை வருடமா சாமான் வாங்கி வரும் குராசரி ஷாப்பில், கிராசரியில் கெஷ் கவுட்ண்டரில் இருப்பவரை , இரண்டு வாரம் முன் இரண்டு பளுச்சி கார மூகமூடிகாரார்கள் , கத்தியால் அவரை கையில் கிழித்து விட்டு காசு 5,000 திர்ஹம்ஸ் எடுத்து கொண்டு போய் விட்டார்கள்.
வீட்டில் கூட கேஸ், பேப்பர், லான்ட்ரி,தண்ணீர் கொண்டு வருகிறவர்கள் வந்தால் ரொம்ப உஷாராக பார்த்து கதவை திறக்கனும்.
ஏமாற்றம்.
ஒரு பையன் பேனா விற்கிறென்னு வந்தான் ஒரு பேனா 10 திர்ஹம் என்றார், பேனாவ யார் காசு கொடுத்து வாங்குவார்கள். வேண்டாம் என்றேன். காலையில் இருந்து விற்கிறேன் ஒரு பேனாவும் விற்கல ஒன்று வாங்கி கொள்ளுங்கள். என்றான் பேனா வேண்டாம் என்றேன். உடனே ரொம்ப கெஞ்ச ஆரம்பித்து விட்டான், காலையில் இருந்து ஒன்றுமே சாப்பிடல அப்படின்னு சொன்னதும் 10 திர்ஹம் எடுத்து கொடுத்தேன். உடனே ஆள் எஸ்கேப், பேனா கொடுக்கல. எல்லாம் திட்டினாங்க லூஸா நீங்க பேனாவாவது வாங்கி கொள்ள வேண்டியது தானே என்று, என் நினைப்பெல்லாம் இவ்வளவு சின்ன பையன் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருக்கானே என்று ஒரு நிமிடம் யோசிப்பதற்குள். அவன் போய் விட்டான்.
கடுப்பு
அடுத்து இரண்டு வாரம் கழித்து அதே போல் வேறு ஒருவர் கோட் சூட் போட்டு கொண்டு ஒரு பெட்டியுடன் வந்தார், நேர பெட்டிய தூக்கி கொண்டு நுழைந்தார் நானும் சேல்ஸ் க்காக வந்து இருக்கிறார் என்று நினைத்தேன். ஒரு பேனாவை நீட்டி 10 திர்ஹம் என்றார், ஆஹா இப்ப ஏமாற கூடாது உஷாராகிடனும் என்று வேண்டாம் என்றேன்.
இப்ப துபாயில் கோட்டு சூட்டு போட்டு கொண்டு பிச்சை எடுக்கிறார்கள் அதை நினைத்தால் கடுப்பாக இருக்கிறது. விசாரித்தா ஓன்னு அழறார் காசு கேட்டு.
கண்டிப்பா வேண்டாம் என்று சொல்லி போக சொல்லிட்டேன்.
இப்படி பேனாவை தூக்கி கொண்டு குரூப்பா கிளம்பிட்டாங்க போல
ரொம்ப சந்தோஷம்
வருஷ வருஷம் ஷாப்பிங் பெஸ்டிவல் வந்த போக முடியாமல் போய் விடும், இருக்கிற டிராபிக்க நினைத்தாலே போகப்பிடிககது. போன வருடம் போய் விட்டு மாப்பிள்ளை ஊர்வலத்தைவிட மோசமா வண்டி நகர்ந்தது ஆகையால் உள்ளே போகாமல் வீடு திரும்பியாச்சு.
இந்த முறை மாமானார் மாமியார் வந்து இருந்ததால் அவர்களை கூப்பிட்டு போய் காண்பிக்கனும் என்று போனோம்.அவர்களுக்கு நடக்க கஷ்டமாக இருந்ததால், அங்கு உள்ள ரிக்ஷாவில் அவர்களை சாக்கிட்டு எல்லோரும். ஏறி ஒரு ரவுண்டு அடிச்சாச்சு, முன்பு சென்னையில் ரிக்ஷா தான், அதில் போகும் பொது ஊர்வலம் மாதிரி இருக்கும்.
அதுவும் ரொம்ப சுற்றி பார்க்க முடியல, சில நாடுகள் வரை சரி உள்ளேவாவது நுழைந்தோமே என்று ஒரு திருப்தி அங்கு என்ன சுற்றி பார்க்கவா வருகிறார்கள். எங்கு பார்த்தாலும் அவரவர் நாட்டு சாப்பாடு முக்கை துளைத்து கொண்டு இருக்கு.
இந்த அரபி பெண்கள் அபாயா போடுவது துபாய கூட்டி பெருக்க போல எவ எவன் துப்பிவைத்ததெல்லாம் அப்படியே பெருக்கி கொண்டு போகிறார்கள். பெரிய ஷாப்பிங் மாலில் துத்தமாக துடைத்து கொண்டே இருப்பார்கள் அங்க பெருக்குவது ஒகே, இங்க ஷாப்பிங் பெஸ்டிவலில் ஐய்யோ பார்க்க சகிக்கல, கொஞ்சம் சரியான அளவில் தைத்து போடலாம். அவர்கள் உயரத்தை விட 5" அதிகமாக பெருக்கி கொண்டு போகுது.
எரிச்சல்முதல் எரிச்சல் டெலிபோன் பேசிக்கொண்டு இருக்கும் போது எதிரில் உள்ளவரின் சைகை சரியான எரிச்சலை அடையவைக்கும்.
அதே போல் யார் மேல கோபம் இருந்தா என்ன எதிர் முனையில் பேசிக்கொண்டு இருப்பவர்கள். காது ஜவ்வு கிழியும் அளவிற்கு போன பட்டாருன்னு வைப்பது செம்ம எரிச்சல்.
ஆச்சரியம்என் பையன் உண்மை பேசுவதில் காந்திஜி வீட்டுக்கு பக்கத்து வீடுன்னு சொல்லலாம். என்னதான் காந்திய போல உண்மை பேசினாலும், சென்னையில் கம்பியுட்டரில் உட்காரும் போது ஒரு பிளெயின் கிளாஸ் போட்டு கொள்ள சொன்னார் டாக்டர் அங்கு போய் காந்திஜி போட்டரே அதே மாதிரி பிரேம் இருக்கான்னு கேட்கிறான். டேய் ஏன் அவர் போட்டமாதிரி கேட்கிற எல்லாம் கிண்டல் பண்ண போறாங்க என்றேன், யார் கிண்டல் பண்ணாலும் எனக்கு கவலை இல்லை என்றான். அதை கேட்டு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
பயம்
என் கணவரின் தங்கை விசிட்டில் வந்திருந்த போது, தினம் எங்க வீடுக்கு வந்து விட்டு இரவு அவங்க கணவர் கார்ஸில் வேலை பார்த்தார் வந்ததும் போவாங்க, வர 11 மனிக்கு மேல் ஆகும்,. அப்ப நாங்க வரை எல்லாம் ஒரே அறையில் படுத்து கொண்டு லைட்டும் ஆஃப் பண்ணியாச்சு, எனக்கு சின்ன சத்தம் வந்தாலும் பிடிகாது. காலண்டர் சரக் சரக் சத்தம் இருட்டில் கண்ணை மூடி கொண்டே எழுந்தேன், லைட்ட போட்டு , பெட்டுகு கீழ் இருக்கும் மாஸ்கிங் டேப், கத்திரி கோல் எடுத்து கொண்டு பெட்டு மேலே ஏறி நின்றேன், ஹஸ் உடைய தங்கை அண்ணனை தான் தூக்கத்தில் வெட்ட போறேன் என்று கதறி கொண்டு இருகிறார் நான் துக்க கலக்கத்தில் எதையும் கவனிக்கல. பெட்டு மேலே இருக்கும் காலண்டரில் கத்த்ரியால் மாஸ்கிங் டேப்பை வெட்டி ஒட்டிட்டு படுத்துட்டேன், காலையில் எழுந்து என் நாத்தானார் நான் கத்த கத்த நீங்க ஒன்றுமே சொல்லல , நடந்ததை சொனனர், நான் சொன்னேன், முழித்து விட்டால் மறுபடி தூக்கத்தை பிடிப்பது கஷ்டம் அதான் போய் படுத்து விட்டேன் என்றேன். அது இன்னும் சொல்லி சொல்லி சிரிப்பார்கள்.
மனவருத்தம் சமீப காலமாக பரவி வரும் கேன்சருக்கு ஒரு தீர்வு கிடைக்கனும்.என் குடும்பத்தில் ஒருவருக்கு கேன்சர் ஏற்பட்டதில் இருந்து நான் சந்திக்கும் நபர்கள், என் சுற்றி உள்ளவர்கள் எங்கு பார்த்தாலும் கேன்சர், இது எனக்கு மிகவும் மனவருத்ததை தருகிறது. அந்த கொடிய நோய் யாருக்கும் வரக்கூடாது என்று ஆண்டவனை பிராத்திக்கிறேன்.
சிரிப்பு நகைச்சுவைதம்பி கல்யாணத்துக்கு, என் தங்கைகள், மற்றும் தங்கை குழந்தைகளுடன் ஷாப்பிங் போன போது இரண்டு தங்கையின் குழந்தைகள் காக்ரா சோளி எடுத்து கொண்டு ட்ரையல் பார்க்க போனார்கள். ரொம்ப நேரம் ஆகியும் இருவரையும் காணும், வெளியில் கீவில் லைனா நிறைய பெண்களும் குழந்தைகளும் நின்று கொண்டிருந்தார்கள், நான் போய் கதவை தட்டினேன், இரண்டும் வெளியில் கெக்கே புக்கேன்னு சிரித்து கொண்டேவருகிறார்கள். என்ன ஏன் லேட்டு என்றேன். உள்ளே நாலா பக்கமும் கண்ணாடி அதான் இரண்டு பேரும் ஸ்கூல் டே பங்ஷனில் ஆட இருக்கும் டான்ஸை உள்ளே ஆடி பார்த்துட்டு வந்தோம் என்று சொன்னார்கள்,அடப்பாவிகளா வெளியில் இத்தனை பேர் வெயிட் பண்றாங்க, என்று எல்லாம் சிரித்தோம்.
அதே போல் நான்கு வருடம் முன் கொழுந்தன் கல்யாணம் முடிந்து ஹாலில் எல்லோரும் மாமியார்,மாமனார், நாத்தார்கள் அவர்கள் குழந்தைகள் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது என் பையன் இப்ப சாச்சாக்கு கல்யாணம் முடிந்து விட்டது அடுத்து யாருக்கு கல்யாணம் நடக்கும் என்றான், மொய்தீன்,அனஸ்,ஜாபில்,சித்திக்,ஹகீம்,... பத்து பேர சொல்லிட்டு அப்பரன் ஹனிப் என்றது வாயெல்லாம் பல்லு தான்,, அப்ப எனக்கு எந்த பொண்ணு என்று கேட்டான், இப்படி பார்த்து விட்டு இருக்கிறதிலேயே சின்னவள் குடுமியுடன் உட்கார்ந்து சாப்பிட்டு கொன்டு இருந்தாள், இதோ இவ இருக்காளே இவள வேண்டுமான பொண்ணா வைத்து கொள்ளலாம் என்று உடனே அவள் சிரிச்சிக்கிட்டே ஐய்யோ நான் மாட்டே பா இப்பதான் நான் ஸ்கூல் சேர்ந்தேன் எக்ஜாம் இருக்கு மிச்(ஸ்) திட்டுவாங்க என்றாள், அந்த பொண்ணு அன்று சொன்னதை நினைத்து அப்ப அப்ப சிரிப்பதுண்டு.
கோபம்
ரொம்ப இன்ரெஸ்டா சமைத்து தாளிக்கும் நேரம் பையன் மம்மி , மம்மி சீக்கிரம் வாங்க நானும் கீழே விழுந்துட்டான் போல அப்படியே அடுப்ப ஆஃப் பண்ணி விட்டு ஓடி போய் பார்த்தா, என்னுடைய இரண்டு டவலில் ஒரு டவலை காணும். எங்கே வச்சீங்க...இல்லை இந்த டீ ஷர்ட் போடவா, அந்த டீ ஷர்ட் போடவா என்று கேட்கும் போது வருமே கோபம்...