Thursday, June 10, 2010

தமிழ் டைப்பிங் செய்வது,யுனிகோட் உமர்தம்பி அவர்கள்

தமிழ் இணையச் சூழலில் பரிச்சயமான பெயர், உமர் தம்பி. இணையத்தில் தமிழ் இதமாக வலம் வருவதற்கு உறுதுணையாக இருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்.இணையத்தில் 'தேனீ உமர்', 'யுனிகோட் உமர்' என்று அன்போடு அழைக்கப்பட்டு வரும் அவரது தமிழ்க் கணினித் தொண்டை கெளரவிக்கும் வகையில், எதிர்வரும் கோவை மாநாட்டில் அவருக்கு அங்கீகாரம் அளிக்கப்படுமா என்ற கேள்வியும், உயரிய கெளரவம் அளிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளும் தான் இன்றைய தீவிர தமிழ் இணையவாசிகளின் உள்ளங்களில் மிகுந்திருக்கிறது.தமிழ்க் கணினி பயன்பாட்டாளர்களுக்கு பயன் தரும் வகையில் அனைவரும் புரிந்துக் கொள்ளும் வகையில் தமிழில் நிறைய கட்டுரைகள் தந்துள்ளார். உதாரணமாக...

1. எழுத்த பழகுவோம் HTML, (இன்றும் கணினி அறிவு இல்லாதவர்களுக்கும் புரியும்படி மிக எளிய தமிழில் அருமையான கட்டுரை தந்துள்ளார்.

2. யுனிகோடின் பன்முகங்கள்

3. யுனிகோடு - என் பார்வையில்மற்றும் பல கட்டுரைகள் உமர்தம்பியின் வலைபூவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.//இணையக்கடலில் தமிழை மிகச் சுலபமாக பயணம் செய்ய உதவியவர்களில் முன்னணியில் இருந்த உமர் தம்பிக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழக அரசு அங்கீகாரம் தருமா?/தமிழ் தட்டச்சு எல்லோருக்கும் பயனளிக்கிறது.

நமக்கும் எவ்வளவு சுலபமாக இருக்கிறது. இதை மறக்க முடியுமா?

இல்லை என்றால் இத்தனை பதிவுகள் தான் போட்டு இருக்க முடியுமா?

’யுனிகோட் உமர் தம்பி அவர்கள்’ கண்டிப்பாக கவுரவிக்க பட வேண்டியவரே//

சகோ.தாஜுதீன் பதிவு - இந்த பதிவையும் பார்க்கவும்.
//பதிவில் ஆமினா தமிழில் டைப் செய்வது எப்படின்னு கேட்டு இருந்தார்கள்.
தமிழில் டைப் செய்ய கற்று கொள்ள நிறைய லிங்குகள் இருக்கு. அதில் எனக்கு தெரிந்த லிங்குகளை இங்கு கொடுக்கிறேன்.//

முதலில் fingering பிங்கரின் கீ போர்டில் நல்ல தெரிந்தால் தான் சரளமாக வேகமாக டைப் செய்ய முடியும்..///

தமிழ் குடும்பத்தில் தமிழ் தட்டச்சுக்கு வசதியாக ஸ்கிரீனில் பார்த்து டைப் செய்து பழகி கொள்ள கொடுத்து இருக்கிறார்கள். இதன் மூலம் எழுத்துக்களை டைப் செய்து பழகி கொள்ளுங்கள்
அறுசுவையில் இங்கும் இருக்கிறது வாசக்ர்களுக்காக ஈசியாக கொடுத்து இருக்கிறார்கள், இதன் மூலமாகவும் பழகிக்கொள்ளவும்.


நல்ல பழகிய பிறகு http://www.tamileditor.org/
இது ஹுஸைனாம்மா சொன்னது


இதை ஓப்பன் செய்து அப்படியே ஸ்கிரீனில் நேரடியாக டைப் செய்யவேண்டியது தான்.

பிறகு இந்த லிங்கில் போய் இதை டவுண்ட் லோட் செய்து கம்பியுட்டரில் வைத்து கொண்டால் இன்னும் சுலபம்.
உங்கள் கணனியிலேயே எல்லா பைல் களிலும் டைப் செய்ய ரொம்ப சுலபம்.

ஜீம்யில், யாஹூ, சாட்டிங், பிளாக் எல்லாத்துலையேயும் நேரடியாகவே டைப் செய்யலாம்

இந்த லிங்கில் படியுங்கள் சுவையுங்கள் மிக தெளிவாக கொடுத்து இருக்கிறார் பைஜல். இதன் படி டவுன் லோடு செய்து கொள்ளுங்கள்.

ஏதும் புரியவில்லை என்றால் கேட்கலாம்.

எனக்கு தெரிந்தது இந்த லிங்குகள் மட்டுமே

29 கருத்துகள்:

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

யுனிக்கோடு இல்லைன்னா எப்படி இருந்திருக்கும்?.. நல்ல பதிவு ஜலீலா.

மங்குனி அமைச்சர் said...

எச்சூச்மி , இந்த டமில் , டமில் அன்ட செப்புதாரே , அதண்ட ஏமி??????

Jaleela Kamal said...

எச்சூச்மி , இந்த டமில் , டமில் அன்ட செப்புதாரே , அதண்ட ஏமி??????


மறந்து வேர பதிவில் போட வேண்டியது அதண்ட ஏமி நுவ்வு இங்கு செப்புதாரே..

Jaleela Kamal said...

நன்றி ஸ்டார்ஜன்

அன்புடன் மலிக்கா said...

நல்லதொரு பதிவு. நல்லதொரு விசயத்துக்கு நல்ல செய்தி வரும் இறைவன் நாடினால்,நாடுவான் என்ற நம்பிக்கை...

ஜெய்லானி said...

@@@மங்குனி அமைச்சர்--//எச்சூச்மி , இந்த டமில் , டமில் அன்ட செப்புதாரே , அதண்ட ஏமி?????? //

மங்கு ஏமி காவால தொங்கா நீரு தெலுகு தெலிசா ??

விஜய் said...

தமிழர் என்றாலே நன்றி மறுப்பவர்கள் ஆகிவிட்டோம். உமர் தம்பி கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை, மரியாதையை கிடைக்க பதிவர்கள் சார்பில் அரசுக்கு வலியுறுத்துவோம்

பகிர்வுக்கு நன்றி அக்கா

விஜய்

பிரவின்குமார் said...

நிச்சயம் கவுரவிக்கப்பட வேண்டியவர்தான். தங்களது இன்றைய இந்த பதிவு யுனிகோட் பற்றிய சந்தேகம் உள்ளவர்களுக்கும் புதிதாக.. பதிவு எழுதும் அறிமுகப் பதிவர்களுக்கும் நிச்சயம் பயன்படும் வகையில் அருமையாக சொல்லியிருக்கீங்க..! அப்புறம் மற்ற நண்பர்களின் பதிவு முகவரியினையும் கொடுத்து யுனிகோட் சம்மந்தமான சந்தேகங்கள் அனைத்தையும் தீர்க்கும் வகையில் பதிவினை வடிவமைத்து இருக்கீங்க..! அதற்கே உங்களுக்கு பெரிய சபாஷ் சொல்லலாம். பகிர்வுக்கு நன்றி..!

Jaleela Kamal said...

//நல்லதொரு விசயத்துக்கு நல்ல செய்தி வரும் இறைவன் நாடினால்,நாடுவான் என்ற நம்பிக்கை...//

ஆம் மலிக்கா, இறைவன் நாடினால் , கண்டிப்பாக நடக்கும்.
நன்றி மலிக்கா

Jaleela Kamal said...

vவாங்க விஜய் ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க , வந்தமைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி

நட்புடன் ஜமால் said...

ஆஹா! உமர் தம்பிக்கு நல்லதொரு அங்கீகாரம் கிடைக்கனும்,

நல்லதொரு பகிர்வு!

தட்டச்சு பயிலவும் கொடுத்துள்ளது அருமை.

Jaleela Kamal said...

பிரவின் குமார் உஙக்ள் வருகைக்கும்,அழ்கிய முறையில் கமென்ட் இட்டமைக்கும், உங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி.+
சந்தோஷம்

Jaleela Kamal said...

சகோ.ஜமால், உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, எல்லோருடைய வாழ்த்தும் அவருக்கே.(உமர் தம்பி அவர்களுக்கே)

seemangani said...

உமர் தம்பி அவர்கள்’ கண்டிப்பாக கவுரவிக்க பட வேண்டியவரே...
பயனுள்ள பகிர்வு அக்கா...நன்றி...

UFO said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
நல்ல உபயோகமான பதிவு. நன்றி.

மேலும், இந்த சுட்டியில்
http://www.google.com/ime/transliteration/
சென்று, பக்கம் திறந்தவுடன், அதில் நீலவண்ண பெட்டியில் தெரியும்... 'Choose your IME language' என்ற இடத்தில் திறந்து, அதில் 'Tamil'-ஐ தேர்ந்தெடுத்து,(பெரும்பாலும்... '32 Bit' தேர்வு செய்து) பின்னர் 'Download Google IME'-ல் அழுத்தி டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால், டாஸ்க்பாரின் வலது ஓரத்தில் 'EN' என்ற பட்டனில் மவுசை வைத்தால் 'TA' என்று விரிவாகி தெரியும். அதை தேர்ந்தெடுத்து(அல்லது Alt + Shift அடிக்கவும்)எங்கும், எதிலும், எப்போதும் தமிழில் மிக இலகுவாய்,வேகமாய் 'தமிங்கிலீஷில்' தட்டச்சலாம். நான் அதைத்தான் உபயோகிக்கிறேன். திருப்தியாக இருக்கிறது.

இதைவிட நவீனமான எதுவும் இருந்தால் சகோதரர்கள் தெரிவிக்கவும்.

நாஞ்சில் பிரதாப் said...

ஜலீலாக்கா நல்லப்பதிவு

NHM தவிர்த்து நான் உபயோகிக்கும் மற்றொரு ஆன்லைன் தமிழ் எடிட்டர்
www.tamil.sg

athira said...

ஜலீலாக்கா அருமையான பதிவு.

//Jaleela Kamal said...
எச்சூச்மி , இந்த டமில் , டமில் அன்ட செப்புதாரே , அதண்ட ஏமி??????


மறந்து வேர பதிவில் போட வேண்டியது அதண்ட ஏமி நுவ்வு இங்கு செப்புதாரே..///


///ஜெய்லானி said...
@@@மங்குனி அமைச்சர்--//எச்சூச்மி , இந்த டமில் , டமில் அன்ட செப்புதாரே , அதண்ட ஏமி?????? //

மங்கு ஏமி காவால தொங்கா நீரு தெலுகு தெலிசா ?? /// நேங்கு சிங்கா தான்கு முடியல்லிதண்டாஈஈஈஈஈஈஈ(எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை:))...... கக்கக்காஆஆஆஆஅ கிக்..கிக்..கீஈஈஈஈஈஈஈஇ குக்..குக்...கூஊஊஊஊஊஉ

ஜெய்லானி said...

தமிழில் தட்டச்ச அரம்பம் ’தேனீ ‘உமர் முதல் சொல்லி இருப்பது பதிவுலகில் இதுவே முதல் முறை வாழ்த்துக்கள்.....!!

போகன் said...

நன்றி சகோதரி ufo உங்களுக்கும் நன்றி.google transliterator ஐ வைத்திருந்தாலும் முழுமையாக பயன் படுத்த உங்கள் பின்னூட்டம் தான் உதவியாக இருந்தது.

போகன் said...

நன்றி சகோதரி.ufo உங்கள் பின்னூட்டமும் உதவியாக இருந்தது.

asiya omar said...

ஜலீலா நிறைய உபயோகமான பதிவெல்லாம் போட்டு அசத்துறீங்க.பாராட்டுக்கள்.

Chitra said...

Useful post..... The template flowers are very pretty too. :-)

அபுஅஃப்ஸர் said...

நிச்சயம் அங்கீகாரம் அளீக்கப்பட வேண்டும்

Jaleela Kamal said...

மான் கனி ஆமாம் அல்லா நடினால் நிச்சயமாக நடக்கும். நன்றி

வா அலைக்கும் அஸ்ஸலாம் UFO வருகைக்கு மிக்க நன்றி.

கூகுள் அதில் டைப் செய்வது எனக்கு சரிப்ப்பட்டு வரல.

நாஞ்சிலார் நீங்கள் கொடுத்த லிங்குக்கு ரொம்ப நன்றி, முயற்சி செய்து பார்க்கிறேன்.


அதிரா நன்றி


//தமிழில் தட்டச்ச அரம்பம் ’தேனீ ‘உமர் முதல் சொல்லி இருப்பது பதிவுலகில் இதுவே முதல் முறை வாழ்த்துக்கள்//
சகோ .ஜெய்லானி உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

போகன் வருகைக்கும் கருத்து தெவிவித்தமைக்கும் மிக்க நன்றி

ஆசியா நன்றி

உங்க்ள் பாராட்டுக்கு நன்றி சித்ரா

அபு அஃப்ஸர் வாங்க ரொமப் நாள் கழித்து வந்து இருக்கீஙக்.

//நிச்சயம் அங்கீகாரம் அளீக்கப்பட வேண்டும் //

எல்லோருடைய வாழ்த்தும் பளிக்கட்டும்,

தாஜூதீன் said...

சகோதரி ஜலீலா முதலில் உங்களுக்கு மிக்க நன்றி.

யுனிகோட் உமர்தம்பி அவர்கள் பற்றிய புதிய செய்திகளை இணையத் தமிழர்களுக்கு தந்தது நிச்சயம் பயனுல்லதாக இருக்கும்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சிக்கு முதல் வெற்றி நேற்று உத்தமம் இணையத்தலத்தின் மூலம் அறிய முடிந்தது.

என் வலைப்பூவிலும் நன்றி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளேன்.

விடுமுறையில் இருப்பதால் அதிகம் இணையத்தில் கவணம் செலுத்த முடியவில்லை.

என்னுடைய புதிய அதிரை வலைப்பூக்கள் திரட்டி ஒன்றை அதிரைமணம் அறிமுக படுத்தியுள்ளேன் சென்று பாருங்கள் உங்கள் கருத்தை பதியுங்கள். நீங்கள் அனுமதி தந்தால் உங்கள் வலைப்பூவையும் அதிரைமணத்தில் இணைத்துவிடுகிறேன்.

அதிரை உமர்தம்பி அவர்கள் பற்றி செய்தி வெளியிட்டமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.

உங்கள் வலைப்பூ இன்னும் மிகச்சிறப்பாக வர வாழ்த்துக்கள்.

அன்புத்தோழன் said...

கொஞ்சம் லேட்டு ஆய்டுச்சு.... இதுபோன்ற வேண்டுகோள்கள் அரசுக்கு எட்டுமா...?? தமிழ் எழுதி பற்றிய தகவல்கள் அருமை.... நன்றி சகோ.... வீட்டில் அனைவரும் நலம் தானே....?

Jaleela Kamal said...

சகோ . தாஹுதீன் ரொம்ப சந்தோஷம்.

Jey said...

en pondra puthiyavarkalukku vupayookamaana pathivu. thanks

Jaleela Kamal said...

ஜெய் வருகைக்கு மிக்க நன்றி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா