Tuesday, February 2, 2010

ஜோவ‌ர் சப்பாத்தி வித் கேபேஜ் கூட்டு - Jowar Atta Chappathi with cabbage



ச‌ப்பாத்தி

ஜோவர் ஆட்டா = அரை கப்
கோதுமை மாவு, ஓட்ஸ் மாவு ‍= அரை கப்
மைதா மாவு = கால் கப்
சர்க்கரை = ஒரு தேக்கரண்டி
உப்பு = கால் தேக்கரண்டி
சூடான‌ வெண்ணீர் = மாவு குழைக்க‌ தேவையான‌ அள‌வு
ஒரு ஸ்பூன் ஆயில் (அ) நெய்





சூடான‌ வெண்ணீரில் உப்பு, ச‌ர்க்க‌ரை,எண்ணை சேர்த்து ச‌ப்பாத்தி மாவு குழைத்து 10 உருண்டைக‌ளாக‌ போட்டு எல்லா உருண்டையிலும் மாவு தட‌வி 20 நிமிட‌ம் ஊற‌வைக்க‌வும்.
பிறகு மேலும் மாவு தடவி தேய்த்து சப்பாத்திகளாக சுட்டெடுக்கவும்











கேபேஜ் கூட்டு



கேபேஜ் துருவிய‌து = ஒரு கப்
பாசிப்ப‌ருப்பு = கால் கப்


தாளிக்க‌



ஆலிவ் ஆயில் = ஒரு தேக்க‌ர‌ண்டி
க‌டுகு = அரைதேக்க‌ர‌ண்டி
உளுத்த‌ம் ப‌ருப்பு = அரைதேக்க‌ர‌ண்டி
பூண்டு = முன்று பல்

வெங்காயம் = ஒன்று
க‌ருவேப்பிலை = சிறிது
த‌க்காளி = அரை ப‌ழம்
தேங்காய் துருவ‌ல் = ஒரு மேசைக‌ர‌ண்டி
ப‌ச்ச‌ மிளகாய் = ஒன்று
ம‌ஞ்ச‌ள் தூள் = கால் தேர‌ண்டி
உப்பு = ருசிக்கு தேவையான‌ அளவு
மிளகாய் தூள் கால் தேக்க‌ர‌ண்டி


பாசிபருப்பை லேசாக வருத்து குக்கரில் முக்கால் கப் தண்ணீர் சேர்த்து தீயின் தனலை மீடியமாக வைத்து முன்று விசில் விட்டு இரக்கவும்.



தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை தாளித்து கேபேஜ் (முட்டை கோஸ்) சேர்த்து ந‌ன்கு கிள‌றி மிள‌காய் தூள்,ம‌ஞ்ச‌ள் தூள் , உப்பு தூள் சேர்த்து முடி போட்டு 7 நிமிட‌ம் வேக‌விட‌வும்.



வெந்ததும‌ வெந்த‌ ப‌ருப்பு, தேங்காய் துருவ‌ல் இர‌ண்டையும் சேர்த்து ந‌ன்கு கொதிக்க‌ விட்டு இர‌க்க‌வும்.






சுவையான‌ ட‌ய‌ட் ச‌மைய‌ல் ஜாவ‌ர் ஆட்டா ச‌ப்பாத்தி வித் கேபேஜ் கூட்டு ரெடி.





இதில் தேங்காய் துருவல் வேண்டாம் என்றால் தேவையில்லை.





ச‌ப்பாத்திக்கு எண்ணை தேவைப்ப‌ட்டால் ஆலிவ் ஆயில் சிறிது த‌ட‌வி கொள்ள‌லாம். சப்பாத்தி குழைக்கும் போதுஆயிலிக்கு ப‌தில் நெய் கூட‌ சேர்த்து கொள்ள‌லாம்


ட‌ய‌ட் செய்ப‌வ‌ர்க‌ள ஒரே மாதிரியான‌ ச‌ப்பாத்தி சாப்பிட்டு அலுத்து விடும் ஒரு மாறுத‌லுக்கு ஜோவ‌ர் ஆட்டா, ப‌ஞ்சாபி ஆட்டா, ஆட்டா மாவு, ஓட்ஸ் இது போல் மாற்றி மாற்றி செய்து இத‌ற்கு தொட்டுக்கொள்ள‌ கிரேவி போல் செய்து கொண்டால் டிரையா இருக்கும் ச‌ப்பாத்திக்கு தொட்டு சாப்பிட‌ ந‌ல்ல‌ இருக்கும்.


ஜோவர் ஆட்டா என்றால் தினை மாவு



(இந்த மாவு சரியாக தேய்க்க வராது கொஞ்சம் கழ்டம் தான்,சப்பாத்தி திரட்டுவதில் எக்ஸ்பேட்க்கு உடனே செய்யவரும், இல்லை என்றால் விட்டு போகும். மைதா கலந்து குழைத்தால் நல்ல திரட்டவரும், இல்லை என்றால் அரிசிமாவு ரொட்டி போல் தான் தட்டி சுடனும்.இதில் (ஜோவ‌ர் ஆட்டா ,கோதுமைமாவு, ஓட்ஸ் முன்றும் க‌ல‌ந்து சுட்டாலும் ந‌ல்ல‌ இருக்கும்).


சப்பாத்தி பிரியர்களுக்கு சொல்வது மிருதுவான சப்பாத்திக்கு உகந்த மாவு பஞ்சாப் கோதுமை. அதில் தயிர் சேர்த்து குழைத்தால் இன்னும் நல்ல இருக்கும்.

31 கருத்துகள்:

அண்ணாமலையான் said...

நல்ல சத்தானது தான்...

Menaga Sathia said...

எனக்கு இந்த பிளேட்டோட பார்சல் அனுப்புங்க.சூப்பராயிருக்கு.சுதாகர் அண்ணாவுக்கு முன்னால நான் ஆர்டர் பண்ணிட்டேன் ஜலிலாக்கா...

பாலா said...

நல்லா டயட்டான தகவல்

Unknown said...

அக்கா சூப்பராக இருக்கு... இப்பவே சாப்பிடனும் போல் இருக்கு

suvaiyaana suvai said...

looks yummy akka!!!

ஸாதிகா said...

முட்டைகோஸ் என்றால் காததூரம் ஓடுவேன்.பிள்ளைகளுக்காக ஒரு முறை டிரை பண்ணுகிறேன் ஜலி.படத்தில் கூட்டை பார்க்கும் பொழுது நன்றாகத்தான் உள்ளது

Sakthi said...

haaaaaaaaaaa, pasikkkuthu........

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

படத்தில் உங்கள் பெயர் நல்ல யோசணை.,,,வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா said...

காலையிலேயே இத காட்டினா நல்லபசிக்கிறதே யக்கோவ் ப்லீஸ் 2 பிளேட் பார்சல்

ஹைஷ்126 said...

இது கம்பு மாவு சப்பாத்திதானே... சூப்பரா இருக்கு. விடுமுறையில் போகும் போது ட்ரை பண்ணுகிறேன். நன்றி

வாழ்க வளமுடன்

Anonymous said...

ஆஹா.. மாஷா அல்லாஹ்! உங்க வீட்டுல உள்ளவங்களும் பிள்ளைகளும் குடுத்து வச்சவங்க..

பாத்திமா ஜொஹ்ரா said...

ஒவ்வொரு பதிவிலும் சிறப்பான ரெசிப்பி,அசத்துறீங்க அக்கா

S.A. நவாஸுதீன் said...

இங்கேயும் சப்பாத்தியா. நவாஸ் எஸ்கே.......ப்.

வருஷம் 365 நாளில் வெள்ளிக்ககிழமைகள் தவிற மீதி எல்லா நாளும் நான் மதியம் சாப்பிடுறது சப்பாத்திதானே. (பழகிப்போச்சு)

Chitra said...

சத்தான உணவும் எளிதான செய் முறையும். அக்கானா அக்காதான்.

R.Gopi said...

பேர படிச்சவுடனேயே அதை சாப்பிட்ட ஒரு எஃபெக்ட் குடுக்க ஜலீலாவால மட்டும் தான் முடியும்.... (இந்த மாதிரி சொல்றது எல்லாம் ஒரு பார்சல் கிடைக்கணும்ங்கறதுக்காகன்னு யாராவது சொன்னா... அதுக்கு நான் பொறுப்பில்லை....)

எனக்கு ரொம்ப பிடிச்ச காம்பினேஷன்... உங்க கைமணம் பார்த்தா, இப்போவே, ஒரு ப்ளேட் வெட்டணும் போல இருக்கு....

சுந்தரா said...

வித்தியாசமான மெனு...இன்று ராத்திரி சமையல் பிரச்சனை தீர்ந்தது. நன்றி ஜலீலா!

Jaleela Kamal said...
This comment has been removed by the author.
Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா கேபேஜ் உங்களுக்கு பிடிக்காதா ரொம்ப நல்லது, சாலட் கூட அருமையா இருக்கும். உங்களுக்காகவே இன்னொரு கேபேஜ் ரெசிபி போடுகிறேன் அதை செய்தால் கண்டிப்பா நீங்க சாப்பிடுவீர்கள்.

Jaleela Kamal said...

அண்ணா மலையான் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

மேனகா உங்களுக்கில்லாததா? பார்சல் அனுபுகிறேன்.

நிகமம் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.

பாயிஜா இப்பவே சாப்பிடனும் இருக்கா உடனே சாப்பிடுவிடுங்கள்/

நன்றி சுவையான சுவை

சக்தியின் மணம் இதுபோல் செட்டாக போட்டால் யாருக்குதான் பசிக்காது..வருகைக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

போனி பேஸ் ஆமாம் படத்தையும் சேர்த்து இல்லையா காப்பி செய்கிறார்கள். அதான் இப்படி போட்டேன், வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.

ஹுஸைனம்மா said...

பொதுவா இந்த ராகி, கம்பு மாவுகள்ல சப்பாத்தி செஞ்சா ஒருமாதிரி தட்டையா விரைச்சுக்கிட்டு இருக்கும். அதனாலேயே செய்யறதில்ல. ஆனா இதப் பாத்தா நல்ல ஸாஃப்டா இருக்க மாதிரி இருக்கு. ஆசையாத்தான் இருக்கு... எங்க.. நமக்கு சாதா சப்பாத்தியே அப்பப்ப கால வாரிவிடும்..

பொறாமையா இருக்கு...

Jaleela Kamal said...

மலிக்கா காலையிலேயே பசிக்கிறதா? ஒரு எட்டு வாங்க‌.

ஹைஷ் செய்யும் முன் நான் கொடுத்துள்ள‌ டிப்ஸை ப‌டித்து கொள்ளுங்க‌ள்.

நாஸியா துஆ செய்யுங்க‌ள் பா என் ச‌ப்பாத்தி என் பெரிய‌ பையனுக்கு ரொம்ப பிடிக்கும் அவன் இப்போது இங்கில்லை, ஊரில் இருக்கிறான்.

Jaleela Kamal said...

நன்றி பாத்திமா,

நவாஸ் சப்பாத்தியே சாப்பிட்டு வெருத்துட்டீஙக போல.ஆனால் பழகி போனது நல்லது இல்லையா?

நன்றி சித்ரா

Jaleela Kamal said...

கோபி உங்கள் பாராட்டுக்கும் தொடர்ந்து வந்து கருத்து தெரிவிப்பதற்கும் மிக்க நன்றி

ஆமாம் கேஜ் சேர்த்து செய்வது சப்பாத்திக்கு சூப்பரான காம்பினேஷன்.

Jaleela Kamal said...

சுந்தரா உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

சீமான்கனி said...

விதவிதமா அசத்துரீக அக்கா...இது வித்யாசமா இருக்கு சுபெர்ர்ர்ர்.....

SUFFIX said...

நல்ல காம்பினேஷன் தான்...சூப்பரு.

வேலன். said...

சூப்பராக இருக்கு சகோதரி....வாழ்க வளமுடன்,வேலன்.

Anonymous said...

அக்கா நானும் இதே மாறி தான் கூட்டு செய்வேன்.ஆனால் ஆலிவ் ஆயில் விட்டால் மணமே மாறிருமே.நல்லா இருக்குமா?நான் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணையில் தான் செய்திருக்கிறேன்.வித்யாசமான சப்பாத்தியாக இருக்குகண்டிப்பா செய்து பார்க்கறேன்.

Jaleela Kamal said...

அம்மு ஆலிவ் ஆயில் டேஸ்ட் மாறத்தான் செய்யும், டயட் செய்பவர்கள், டேஸ்ட் பார்க்க முடியாது,

டயட் இல்லாதவர்கள் சாதா எண்ணை பயன் படுத்தலாம்,

குழந்தைகளுக்கு நெய்யில் கூட தாளித்து கொடுக்கலாம்

Jaleela Kamal said...

சீமான் கனி, ஷபி, வேலன் சார் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா