என்னுடைய வலைப்பூவில் முதல் போட்டியாக பேச்சுலர் சமையல் போட்டியினை ஆரம்பம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு. உங்கள் அனைவரையும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்.
போட்டி பற்றி சில அறிவிப்புகள்:
1.வெளிநாடுகளில் பேச்சுலர்கள் தனியாக சமைக்கிறார்கள் அவர்களுக்கு ஏற்றார் போல ரொம்ப ஈசியாக அளவும் சரியான அளவில் இரண்டு நபர் அல்லது முன்று நபர்களுக்கு தாயரிக்கும் அளவில் பேர் சாப்பிடலாம் என்ற அளவுடன் குறிப்பிட்டால் தனியாகவோ , குருப்பாகவோ சமைத்து சாப்பிடும் பேச்சுலர்களுக்கு இது உதவும்.
2.. ரொம்ப ஈசியான டிபன் அயிட்டம், சாதம் வகைகள், பக்க உணவு வறுவல் பொரியல், இரவு டிபன், சாலட் வகைகள்,
சைவம் மற்றும் அசைவம் இரண்டு வகையான உணவு வகைகளையும் அனுப்பலாம்.
(இதில் கூடுமானவரை சைவம், சிக்கன், முட்டை சமையல் வகைகள் அனுப்பினால் மிகவும் நல்லது.)
4. ஒருவர் எத்தனை குறிப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். பழைய குறிப்புகளை இனைப்பதாக இருந்தால் (2012) மட்டும் அந்த பழைய குறிப்புக்கு கீழே போட்டி லின்க்கை கொடுக்கவும் லோகோ இணைத்து கொள்ளுங்கள்.
5.நீங்கள் பிளாக் வைத்திருக்கவில்லை எனில் எனக்கு மெயில் மூலம் உங்கல் குறிப்புகளை அனுப்பவும்.
6.உங்கள் ப்ளாகில் குறிப்புகள் போட்டவுடன் கீழே உள்ள லின்கில் இணைத்து விடவும், லிங்க் செய்ய முடியவில்லை என்றால் cookbookjaleela@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவும்.
மேலே கொடுக்க பட்டுள்ள முகவரி சமையல் போட்டிக்கு மட்டும்.
உங்கள் பெயர்:
வலைப்பூ முகவரி:
வலைப்பூவின் பெயர்:
உணவின் பெயர்:
சப்ஜெக்ட் : பேச்சுலர் சமையல் போட்டி
உணவின் படம்: உணவின் தெளிவான அழகான கடைசி படமும் இணைத்து அனுப்பவும்.படிப்படியாக போட விருப்பம் உள்ளவர்கள் படிப்படியாக்வும் குறிப்பினை போட்டும் இனைக்கலாம்.
6. கீழ் இருக்கும் add your link என்ற பட்டனை அழுத்தி உங்களின் குறிப்புகளை இணைத்துக்கொள்ளவும்.
url : உங்கள் குறிப்பின் லின்கினை பேஸ்ட் பண்ணவும்
name: போட்டி குறிப்பின் பெயரினை கொடுக்கவும்
email: உங்களின் இமெயில் முகவரி கொடுக்கவும்
next step
குறிப்பின் புகைபடத்தினை இணைக்கவும்.
7.போட்டிக்குரிய காலம், நாளை முதல் நவம்பர் 20ம் தேதி முதல் டிசம்பர் 20 வரை குறிப்புகளை அனுப்பலாம்.
///இதில் கலந்து கொள்ள மேனகா, பாயிஜா, கீதா ஆச்சல், ஆசியா, ஹுஸைனம்மா, ஜே மாமி, ஸாதிகா அக்கா, மனோ அக்கா,அஸ்மா, என்றென்றும் பதினாறு, ஏஞ்சலின், அதிரா, புதுகை தென்றல், அமைதிச்சாரல், தேனக்கா, அன்னு,மாதேவி, அப்பாவி தங்கமணி, தளிகா, விஜி,இமா அக்கா, மகி, ஆமினா,மலிக்கா, கோவை2 தில்லி, ராமலஷ்மி, நாஸியா, காஞ்சனா,வானதி,கவிசிவா,விஜி பார்த்திபன்,ராதா ராணி , கலை, இளமதி,
துளசி கோபால், தெய்வ சுகந்தி, அமுதா, புவனேஸ்வரி, சாரு, கோமதி அரசு
இன்னும் இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனைவரையும் அழைக்கிறேன்.///
இங்கு என் பிளாக்கில் கீழே கமெண்ட் போட வருகிறவர்கள் மற்றும் வலைப்பூ வைத்திருப்பவரகளை இங்கு குறிப்பிட்டு இருக்கிறேன்.
இன்னும் விடுபட்டு போனவர்கள் வலைப்பூ வைத்திருந்தால் கோபித்து கொள்ளாமல் வந்து உங்கள் முகவரியை இங்கு தந்து நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.வலைப்பூ இல்லை எனில் மெயில் மூலம் அனுப்புங்கள்.
சமையல் குறிப்பு இதுவரை எழுதாத தோழிகளையும் அழைத்துள்ளேன் கண்டிப்பாக நீங்களும் கலந்து கொள்ளும் படி அன்புடன் அழைக்கிறேன்.
இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் கண்டிப்பாக அவர்டு.
பரிசு தேர்வு எப்படி என்பது பற்றி பின்னர் அறிவிக்கிறேன்.
பேச்சுலர்கள் விருப்பபட்டால் கலந்து கொள்ளலாம்.
ஆண்களும் கலந்து கொள்வதாக இருந்தால் கலந்து கொள்ளலாம்.
போட்டியில் பங்கு பெரும் அனைத்து தோழியர்களுக்கும் வாழ்த்துக்கள்..
ஆங்கில பிலாக்கில் உள்ள தோழிகளும் இதில் கலந்து கொள்ளலாம்.இங்கு லின்க் கொடுக்கவும்.பிரியா சுரேஷ், அருனாமாணிக்கம், அகிலா,நீத்துபாலா, ஷாமா,சித்ரா கணபதி,விமிதா ஆனந்த் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
டிஸ்கி: நிறைய பேச்சுலர்கள் இதை பார்த்து சமைத்தாலும் இப்ப என் தம்பி தங்க கம்பி இப்ப இதை பார்த்து தான் சமைக்க ஆரம்பித்து இருக்கிறார். இதை பார்த்து புரோகோலி பொரியல், சிக்கன் சால்னா, ஷீர் குருமா செய்தாராம் ரொம்ப நல்ல வந்ததாம்.மிக்க மகிழ்சி. இது போல் பலதம்பிகளுக்கு இது கண்டிப்பாக பயன் படும்.
நேரமின்மை காரணமாக உடனுக்குடன் கமெண்ட் போட முடியாது. முடிந்த போது பதில் அளிக்கிறேன். எனக்கு நெட் கனெக்ஷனும் ரொம்ப ஸ்லோவாக இருக்கு.நீங்கள் இனைப்பை முடிந்தவரை இணையுங்கள்.பிறகு வந்து பதில் அளிக்கிறேன்.