Tuesday, February 23, 2010

அக்கார வடிசல் - sweet pongal

//இது நிறைய‌ பேருக்கு ம‌ற‌ந்து போன‌ ஐய‌ர் ஆத்து வ‌டிச‌ல், ச‌ர்க்க‌ரை பொங்க‌ல் போல் தான் கொஞ்ச‌ம் வித்தியாச‌ம்.


இந்த‌ குறிப்பு முன்பே பொங்க‌ல் அன்று போட்டேன், தெரியாம‌ல் டெலிட் ஆகிவிட்டது , ம‌ற்ற‌ குறிப்புக‌ளை விட‌ இத‌ற்கு தான் நிறைய‌ க‌ருத்துக‌க்ள் வ‌ந்திருந்த‌து, நிறைய ஓட்டுக்க‌ளும் கிடைத்திருந்த‌து, டெம்லேட் மாற்றும் போது டெலிட் ஆகிவிட்ட‌து, ஆகையால் ம‌றுப‌டி போட்டுள்ளேன்.தேவையான‌ பொருட்க‌ள்


பச்சரிசி = ஒரு கப்
வெல்லம் = அரை கப்
கடலை பருப்பு = ஒரு மேசை கரண்டி
பச்சபருப்பு = கால் கப்
ஏலக்காய் பொடி = அரை தேக்கரண்டி
பால் = அரை கப்
தண்ணீர் = இரண்டு கப்
தேன் = ஒரு குழி கரண்டி
முந்திரி, பாதம், பிஸ்தா = பொடியாக அரிந்தது முன்று மேசை கரண்டி
கிஸ்மிஸ் பழம் = 10
நெய் = முன்று மேசை கரண்டி
செய்முறை
1. அரிசி பருப்பு வகைகளை களைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும். வெல்லத்தை ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்து முக்கால் பதம் பாகு வரும் போது அதில் உள்ள மண்ணை வடிக்கவும். பாலை காய்ச்சி ஆறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து குக்கரில் ஒரு மேசை கரண்டி நெய் சேர்த்து வதக்கவும்.2.பால்+ வெல்லம் தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும்.
3.முக்கால் பாகம் வெல்லம் தண்ணீரை வற்ற விடவும்4.ஒரு பாத்திரத்தில் நட்ஸ் வகைகளை நெயில் வறுக்கவும்


5.வறுத்த நட்ஸ் வகைகளை குக்கரில் சேர்க்கவும்

6. குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் முன்றாவது விசிலில் அடுப்பை அனைக்கவும். தேன் கடைசியாக சேர்த்து கிளற வேண்டும்.


குறிப்பு


ஒரு கப் அரிசிக்கு முக்கால் கப் வெல்லம் தேவைப்படும், இதில் தேன் சேர்ப்ப‌தால் அரை கப் போட்டுள்ளேன். நட்ஸ் வகைகள் அவரவர் விருப்பம். வெரும் முந்திரி, கிஸ்மிஸ் பழம் கூட போடலாம்.வேர்கடலையும் வருத்து போடலாம்.நெய் = இதற்கு முன்று குழிகரண்டி தேவைப்படும் நான் முன்று மேசை கரண்டி தான் போட்டுள்ளேன்.
இதில் படம் 1 நல்ல குழைவாக இருக்கு,படம் 2 கொஞ்சம் நெத்துன்னு இருக்கு தண்ணீர் அளவு ஒன்றுக்கு இரண்டு இரண்டரை அளவு வைத்து நன்கு கொதிக்க விட்டு குக்கர் வெயிட் போட்டு ஆப் செய்ததும் சிறிது நேரம் கழித்து திறந்தால் சரியாக இருக்கும்.


இனிப்பு சுல்லுன்னு அதிகம் தேவைபடுபவர்கள், வெல்லத்தை கொஞ்சம்அதிகமாக போட்டுகொள்ளலாம். இதில் அரை கப் வெல்லமும், தேனும் போட்டுள்ளேன்
வெண் பொங்கலை இங்கு சென்று பார்த்து கொள்ளலாம்.17 கருத்துகள்:

Mrs.Menagasathia said...

super pongal!!

Chitra said...

அக்கா, இதை தேன் கலந்து செய்வதுதான் ஸ்பெஷல்.

நட்புடன் ஜமால் said...

அதானே ஏற்கனவே படிச்சனேன்னு நினைச்சேன்.

நான் அக்கிராஹாரத்து அப்துல்லாஹ்வாக்கும் ...

Virutcham said...

இது தான் அக்கார வடிசலா ? கிட்டத் தட்ட சர்க்கரைப் பொங்கல் மாதிரி தான் இருக்கு . என்ன நான் கடலைப் பருப்பு சேர்க்க மாட்டேன். பச்சை பருப்பை சிவக்க வறுத்துக் கொள்வேன். வெல்லப் பாகு கம்பிப் பதத்திற்கும் மேல் செய்து கொள்வேன்.

தேன் எப்ப தான் சேர்கிறதாம்?

இதையே, கோதுமை ரவா வைத்து செய்தால் இன்னும் healthy.
பருப்பு இல்லாமலும் செய்யலாம்

Thanks for akkara vadisal. செய்து பார்த்துர வேண்டியது தான்

http://www.virutcham.com

Jaleela said...

அக்கார வடிசல் பொங்கள் அன்று போட்டது அதில் உள்ள கமெண்டுகள்.


Mrs.Faizakader has left a new comment on your post "அக்கார வடிசல் - Sweet Pongal":

பொங்கல் உங்கள் வீட்டில் பொங்கியாச்சா அக்கா...?
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .

suvaiyaana suvai has left a new comment on your post "அக்கார வடிசல் - Sweet Pongal":

பொங்கல் வாழ்த்துக்கள்!!!


நட்புடன் ஜமால் has left a new comment on your post "அக்கார வடிசல் - Sweet Pongal":


பித்தனின் வாக்கு has left a new comment on your post "அக்கார வடிசல் - Sweet Pongal":

ஜலில்லா, மன்னிக்கவும் வருட இறுதிக் கணக்கு வேலைகளில் மிகவும் பிஸியாக இருப்பதால் என்னால் தொடர்ந்து பதிவுகளைப் படிக்க முடியவில்லை.
அக்கார வடிசல் நன்றாக உள்ளது. நாங்கள் பயத்தம் பருப்பு அல்லது பாசிப்பருப்புதான் சேர்ப்போம். நெய் குறைவாக விட்டு இருப்பதால் படத்தில் பார்க்க நெத்து நெத்து ஆக உள்ளது போல இருக்கின்றது. நிறைய விட்டால், கையில் விட்டால் ஓடவேண்டும். அப்போதுதான் திகட்டும் சுவை வரும். விரைவில் நான் அக்கார வடிசல் பதிவு இடுகின்றேன். நன்றி. நாங்கள் பால் சேர்க்க மாட்டேம். நன்றி ஜலில்லா.

பித்தனின் வாக்கு has left a new comment on your post "அக்கார வடிசல் - Sweet Pongal":


பொங்கலில் அப்பாவின் நினைவுகள் அருமை. கை பிடித்து நடக்கப் பழக்கிய தந்தையும், முகம் சேர்த்து அனைத்த தாயும் எப்போதும் மறக்க முடியாது அல்லவா. நன்றி ஜலில்லா.

பித்தனின் வாக்கு has left a new comment on your post "அக்கார வடிசல் - Sweet Pongal":


ஆகா ஜலில்லா மாமி ஆத்துப் பொங்கல் அருமை. பொங்கல் உடன் சுண்டலும், பிரமாதப் படுத்தி விட்டீர்கள். இந்த கொண்டைக் கடலை சுண்டல் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் ஒரு சின்ன திருத்தம், இந்த சுண்டல் சரஸ்வதி பூஜைக்கு பண்ணுவார்கள். பொங்கலுக்கு இந்த சீஸனில் கிடைக்கும் மொச்சைப் பருப்பு சுண்டல் தான் செய்வார்கள்.ஆதலால் நீங்க என்ன செய்வீர்கள் என்றால் படத்தில் உள்ள சுண்டல் மற்றும் பொங்கலை எனக்கு யாருக்கும் தெரியாமல் பார்சல் அனுபுங்கள். நன்றி. உஷ் இது இரகசியம். யாருக்கும் சொல்லாதீர்கள்

செம ரிச்சா இருக்கும் போல

பேரே இனிப்பா இருக்கே ...

Jaleela said...

suvaiyaana suvai has left a new comment on your post "அக்கார வடிசல் - Sweet Pongal":

அருமையான அக்கார வடிசல்!!!

asiya omar has left a new comment on your post "அக்கார வடிசல் - Sweet Pongal":

தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று சர்க்கரை பொங்கல் சாப்பிடத்தவறியதில்லை.இந்தவருடம் அக்கார வடிசல் தான்.ஊரில் இருந்தால் எங்கள் வீட்டு உழவன் உழவிக்கு பொங்கப்படி கொடுக்கும் பாக்கியம் கிட்டியிருக்கும்.பொங்கலோ பொங்கல்.

vijis kitchen has left a new comment on your post "அக்கார வடிசல் - Sweet Pongal":

பொங்கல் வாழ்த்துக்கள் ஜலீ.
நான் இதுவரை அக்கார வடிசல் செய்ததில்லை சாப்பிட்டு தான் இருக்கேன். இனிமேல் உங்க குறிப்பை பார்த்து தான் செய்ய போகிறேன். நல்ல அளவுகளோடு உள்ள உங்க குறிப்பு கண்டிப்பா செய்தால் நல்லா வரும், அதனால் இந்த தடவை செய்யலாம் என்றிருக்கேன். நன்றி ஜலீ.

சிங்கக்குட்டி has left a new comment on your post "அக்கார வடிசல் - Sweet Pongal":

என்ன ஜலீலா! பதிவு எழுத தனி உதவியாளர்கள் ஏதும் வைத்திருக்கிரீர்களா?

ஒரு பதிவை படித்து ஓட்டு கொடுத்து வீட்டிற்க்கு வந்து பின்னூட்டம் கொடுக்கும் முன் இன்னொரு பதிவு?

ஆனாலும் இடுகை அருமை,

பொங்கல் வாழ்த்துக்கள் :-)


Chitra has left a new comment on your post "அக்கார வடிசல் - Sweet Pongal":

அக்கா, இதுவரை நான் தேன் சேர்த்து இந்த இனிப்பை செய்ததில்லை. இந்த முறை செய்து பார்க்கிறேன்.
அக்கா, prawn fried rice recipe இல் ஒரு கமெண்ட் போட்டுருக்கேன்.

அப்பா......... அப்பா............ நம் வாழ்க்கையில் நம்மையும் அறியாமல் எப்படி ஒன்றி போய் விடுகிறார்............

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

வேலன். has left a new comment on your post "அக்கார வடிசல் - Sweet Pongal":

பொங்கல் நல் வாழ்த்துக்கள் சகோதரி...
வாழ்க வளமு்டன்,
வேலன்.
பாத்திமா ஜொஹ்ரா has left a new comment on your post "அக்கார வடிசல் - Sweet Pongal":

வழக்கம் போல அருமை

திகழ் has left a new comment on your post "அக்கார வடிசல் - Sweet Pongal":

பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

my kitchen has left a new comment on your post "அக்கார வடிசல் - Sweet Pongal":

பொங்கல் நல்வாழ்த்துக்கள்.அக்கார வடிசல் நல்லா இருக்கு.

maddy73 has left a new comment on your post "அக்கார வடிசல் - Sweet Pongal":

"அக்கார வடிசல்", Nice to know that you were aware of this name.. the name is very different & not many know.

We use this term in our house.

btw thanks for ur visit & comment on my blog.


ஸாதிகா has left a new comment on your post "அக்கார வடிசல் - Sweet Pongal":

அருமையான அக்கார வடிசல்.கூடவே சுண்டல்.ஆஹா..

Viki's Kitchen has left a new comment on your post "அக்கார வடிசல் - Sweet Pongal":

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
Akkaravadisal supera irukku pa.

Jaleela said...

சக்தியின் மனம் has left a new comment on your post "அக்கார வடிசல் - Sweet Pongal":

happy pongal
sabeeca to me
show details Jan 15


sabeeca has left a new comment on your post "அக்கார வடிசல் - Sweet Pongal":

salam romba nalla irukku sister

Jaleela said...

உங்கள் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி விருச்சம். தேன் சேர்ப்பதை சொல்ல மறந்தத்தை நினைவூட்டியதற்கு மிக்க நன்றி, கடைசியில் சேர்க்கனும்.

நான் தான் சர்க்கரை பொங்கல் மாதிரி என்று சொன்னேனே.

Jaleela said...

//அதானே ஏற்கனவே படிச்சனேன்னு நினைச்சேன்.

நான் அக்கிராஹாரத்து அப்துல்லாஹ்வாக்கும்//

சகோ ஜமால் சிரிப்பு வருது,

கருத்து தெரிவித்தமைக்கு நன்றீ

Jaleela said...

மேனகா, சித்ரா தவறாமல் வந்து கருத்து தெரிவிப்பமைக்கு மிக்க நன்றீ

Jaleela said...

ஹுஸைனம்மா has left a new comment on your post "அக்கார வடிசல் - Sweet Pongal":

ஜலீலா அக்கா அவ்வப்போது ஜலீலா மாமியாகவும் ஆகிடுறீங்க!

//கமெண்ட் கொடுத்தவர்கல் இந்த குறிப்பில் நான் முன்பு கமெண்ட் கொடுத்தது கானுமே என்பார்கள் என்று தான் எல்லா கமெண்டையும் எடுத்து இங்கு போட்டேன்.///

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இக்குறிப்பில் நீங்கள் பச்சபருப்பு எனக் குறிப்பிடுவது பச்சைப்பட்டாணியா?; கிஸ்மிஸ் பழம் என்றால் என்ன?
நான் ஈழத்தவன் எனக்கு இவை என்ன என்று புரியவில்லை.

Deivasuganthi said...

நல்லா இருக்குதுங்க. ஒரு தடவை செஞ்சு பார்க்கிறேன்.

Jaleela said...

வாங்க யோகன் பாரிஸ், இது என் பேச்சு பழக்கத்தில் எழுதியதால் உங்களுக்கு புரியல

பச்ச பருப்பு என்பது பொங்கலுக்கு போடும் சிறு பருப்பு, மூம் தால்.


கிஸ்மிஸ் பழம் என்பது ‍= காய்ந்த திராட்சை இது க‌ருப்பு ம‌ற்றும் ம‌ஞ்ச‌ள் க‌ல‌ரில் கிடைக்கும், எல்லா பாய‌ச‌ வ‌கைக‌ளுக்கும் போடுவ‌து

வ‌ருகைக்கு மிக்க‌ ந‌ன்றி.

Jaleela said...

திவ்ய சுகந்தி வருகைக்கு மிக்க நன்றி. இது குக்கரில் செய்வதால் ரொம்ப சுலபம், முடிந்த போது செய்து பாருங்கள்

Ammu Madhu said...

அக்கா இந்த மாறி எங்க கோவில்ல செய்ய மாட்டோம்.இது வித்யாசமா இருக்கே..கிட்டத்தட்ட சர்க்கரை பொங்கல் மாறி இருக்கு..கண்டிப்பா இந்த முறையில் செஞ்சு பாத்துடறேன்.

Jaleela said...

அம்மு கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

கண்டிப்பா செய்து பாருங்கள்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா