Saturday, August 8, 2009

பாதம் ஹல்வா ரிச் ஸ்வீட்

தேவையான பொருட்கள்

பாதம் - 200 கிராம்
பட்டர் - 100 கிராம்
பால் - 100 மில்லி
சர்க்கரை - 200 கிராம்
கேசரி கலர் பொடி - இரண்டு சிட்டிக்கை
சாஃப்ரான்(குங்கும பூ) - அரை தேக்கரண்டி
உப்பு - அரை சிட்டிக்கை


செய்முறை

1. தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.2. பாதத்தை இரவே ஊறவைத்து காலையில் கலைந்து அதை கொதிக்கும் நீரில் போட்டு உடனே குளிர்ந்த தண்ணீரில் போட்டு தோலை உறித்து வைக்க வேண்டும். ( இரவே ஊற போட்டால் தான் நிறைய குவாண்டிடி கிடைக்கும்.

3.மிக்சியில் பாதம்,சாப்ரானை சேர்த்து அரைக்கவும்.

4. சிறிது பால் சேர்த்து ரொம்ப மையாக இல்லாமல் முக்கால் பதத்தில் அரைத்தெடுக்கவேண்டும்.

5.ஒரு பேனில் பட்டரை போட்டு உருக்க வேண்டும் ரொம்ப உருகினால் கரிந்து விடும்.

6.இப்போது அரைத்து வைத்துள்ள பாதம் விழுதை போட்டு கிளறவேன்டும்.

7.சிறிது பாலில் கேசரி கலர் பொடியை கரைத்து ஊற்ற வேண்டும்.

8.சிறிது நேரம் கிளறி கிளறி வேக விட வேண்டும்.

9.இப்போது சர்கக்ரையை சேர்த்து கிளற வேண்டும்.


10.சர்க்கரை சேர்த்ததும் இளகி சிறிது தண்ணீ போலாகும் நன்கு வற்ற விட வேண்டும்
.

11.கொதிக்கும் போது மேலே தெரிக்கும் கொஞ்சம் தள்ளி நின்று கொன்டு கிளறவும்.

12.இப்போது நன்குசேர்ந்து ஹல்வா பதம் வரும்.

13.பேனை விட்டு தனியே ஒட்டாமல் வரும் வரை கிளறி இருக்க வேண்டும்.

14.சுவையான ரிச் ஸ்வீட் பாதம் ஹல்வா ரெடி


குறிப்பு

பாதம் நரம்பு தளர்சி உள்ளவர்கள் தினம் ஐந்து பாதம் பருப்பு ஊறவைத்து சாப்பிடலாம், குழந்தைகளின் மூளை வளர்சிக்கு பாதாமை ஊறவைத்து தோலெடுத்து தினம் கொடுக்கலாம் அல்லது அரைத்து பாலாக காயச்சி கொடுக்கலாம். ஹல்வா வாகவும் கிண்டி கொடுக்கலாம்.

பாதம் வெளிநாடுகளில் அதிகமாக கிடைப்பதால் ஊருக்கு செல்லும் போது ஒரு கிலோ இரண்டு கிலோ ஹல்வா செய்து கொண்டு போகலாம்.
பிள்ளகளுக்கும் தினம் கொடுக்கலாம்.

10 கருத்துகள்:

ராமலக்ஷ்மி said...

செய்து பார்த்து விடுகிறேன். குறிப்புக்கு நன்றி.

Jaleela said...

அமுதமாய் கவிதை படைத்து கொண்டு இருக்கும் ராமலக்ஷ்மி வாங்க வாங்க.

செய்து பார்த்து உங்கள் கருத்தை சொல்லவும்.

R.Gopi said...

ஜலீலா

தங்கள் வலைப்பக்கம் வந்து வெகு நாட்களாகிறது.... என் கம்ப்யூட்டர் சிறிது மக்கர். அவ்வளவுதான்....இப்போது கம்ப்யூட்டரும் நானும் ரெடி....

உங்க பையனை தற்காலிகமாக பிரிந்ததற்காக எழுதிய‌ அந்த பதிவு வெகு நெகிழ்வு.....

இப்போ இங்க வந்து பார்த்தால், சூப்பராக பாதாம் ஹல்வா வரவேற்கிறது.ம்ம்ம்ம்.... பார்த்தாலே நாவில் நீர் ஊறுகிறது.....

ஜமாய்ங்க ஜலீலா......

நேரம் கிடைக்கும்போது நம்ம கடை பக்கமும் வந்துட்டு போங்க....

Jaleela said...

கோபி உங்க கடை என்றால் டி கடையா ஹ ஹா வந்துட்டா போச்சு

எனக்கும் பதிவுகள் சரியாக போடா
முடியல . அதான் மற்ற பிளாக் பதிவு இங்கு போட்டுளேன்.

R.Gopi said...

//Jaleela said...
கோபி உங்க கடை என்றால் டி கடையா ஹ ஹா வந்துட்டா போச்சு//

ஆ....ஹா... நானே வாய் கொடுத்து மாட்டிட்டேன் போல‌ இருக்கே....

//எனக்கும் பதிவுகள் சரியாக போடா
முடியல . அதான் மற்ற பிளாக் பதிவு இங்கு போட்டுளேன்.//

அத‌னாலென்ன‌.... நேர‌ம் கிடைக்கும் போது ம‌ட்டும் போட்டா போச்சு..... இதுவும் நல்லாதானே இருக்கு ஜ‌லீலா....

Jaleela said...

//அத‌னாலென்ன‌.... நேர‌ம் கிடைக்கும் போது ம‌ட்டும் போட்டா போச்சு..... இதுவும் நல்லாதானே இருக்கு ஜ‌லீலா....//

/ஆ....ஹா... நானே வாய் கொடுத்து மாட்டிட்டேன் போல‌ இருக்கே//

கோபி, சில நேரம் மற்றவர்கள் பிளாக்கில் பதில் போட முடியல, வேறு ஏதும் ஆப்ஷன் மாற்றனுமா?


நேரம் கிடைக்கும் போது ஓவ்வொரு பதிவா படித்து பதில் போடுகீறேன்.

R.Gopi said...

//கோபி, சில நேரம் மற்றவர்கள் பிளாக்கில் பதில் போட முடியல, வேறு ஏதும் ஆப்ஷன் மாற்றனுமா?//

வணக்கம் ஜலீலா... என்னோட பிளாக்கிலேயே அந்த பிரச்சனை இருந்தது.. அதனால
உங்க பிளாக்கிலேயே கூட என்னால் பதிலளிக்க இயலவில்லை... ஜிமெயில் சாட்ல வாங்க... பேசி சரி பண்ணுவோம். என்னோட ID இதோ : rgopi3000@gmail.com

//நேரம் கிடைக்கும் போது ஓவ்வொரு பதிவா படித்து பதில் போடுகீறேன்.//

இது ஒரு நல்ல பழக்கம் ஜலீலா.....நன்றி...

Ram said...

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

Anonymous said...

jalee,u r excellent in cooking as well as by ur heart iam great fan of u may god bless u .

Jaleela said...

அனானி உங்கள் வாழ்த்துக்கும், பாரட்டுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி பெயரை குறிப்பிட்டு இருக்கலாம், சரி பரவயில்லை.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா