Monday, August 31, 2009

பிரியாணி கஞ்சி, நோன்பு கஞ்சி 3



வெளிநாடுக‌ளில் பேச்சுல‌ர்க‌ள் செய்யும் போது நிறைய‌ பேருக்கு செய்வார்க‌ள். அப்போது குக்க‌ரில் செய்ய‌ முடியாது.
சிறிய பேமிலி என்றால் குக்கரில் செய்யலாம் ஆனால் நிறைய பேருக்கு என்கிற போது கறி கீமாவை தனியாக தாளிக்கனும், அரிசியை தனியாக வேகவிடனும்.இது டபுள் மசாலா கொடுத்து பிரியாணி போல் தாளித்து செய்வது.

தேவையான பொருட்கள்

மட்டன் கீமா = 300 கிராம்
அரிசி நொய் = 3 டம்ளர்
பச்ச பருப்பு = அரை டம்ளர்
வெங்காயம் = நான்கு
தக்காளி = முன்று
பச்ச மிளகாய் = முன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் = முன்று மேசை கரண்டி
கேரட் = இரண்டு
கொத்து மல்லி = அரை கைபிடி
புதினா கால் கைபிடி
தயிர் = இரண்டு மேசை கரண்டி
மிளகாய் தூள் = இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் = அரை தேக்கரண்டி
எண்ணை முன்று மேசை க‌ர‌ண்டி
டால்டா = ஒரு தேக்க‌ர‌ன்டி
ப‌ட்டை = ஒரு அங்குல‌ம் அள‌வு
கிராம்பு = முன்று
ஏல‌ம் = ஒன்று
தேங்காய பால் = அரை மூடி


செய்முறை

1. அரிசி நொய் (நொய் மிக்சியில் பொடிக்க முடியவில்லை என்றால் அரிசியை ஊறவைத்து கையால் பினைந்து உடைத்து விடவும்) மற்றும் பாசி பருப்பு (வருத்தது) அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

2. ஒரு பெரிய வயகன்ற சட்டியில் ஒன்றுக்கு முன்று மடங்கு தண்ணீரை கொதிக்க விட்டு ஊறிய அரிசி மற்றும் பருப்பை சேர்த்து தேவைக்கு உப்பு போட்டு குழைய வேக விடவும்.

3. கீமாவை கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும், வெங்காயம், தக்காளி அரிந்து வைக்கவும். புதினா, கொத்து மல்லியை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி வடித்து வைக்கவும்.தேங்காயை பாலெடுத்து வைக்கவும்.

4. இப்போது கீமாவை தனியாக தாளிக்கனும்.சட்டியை காயவைத்து எண்ணை + டால்டாவை ஊற்றி பட்டை, ஏலம், கிராம்பு போட்டு தாளித்து வெங்காயத்தை அரிந்து சேர்த்து வதக்கி, வெங்காயம் மடங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு வாடை போனதும் கொத்து மல்லி புதினா, தக்காளி, பச்ச மிளகாயை போட்டு வதக்கி சிறிது நேரம் தீயை சிம்மில் வைத்து வேகவிடவும்.

5. கேரட்டை பொடியாக அரிந்து சேர்த்து, கீமா, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி வேகவிடவும்.பாதி வேகும் போடு தயிரை சேர்க்கவும்.கூட்டு ந‌ல்ல‌ வெந்து கிரிப்பாகி எண்ணை தெளிந்து வ‌ரும் போது இர‌க்கி விட‌வும்.
6. வெந்து கொண்டிருக்கும் அரிசியில் இந்த‌ க‌ல‌வையை சேர்த்து தேங்காய் பாலும் சேர்த்து அடி பிடிக்காம‌ல் ந‌ன்கு கிள‌றி கொதிக்க‌ விட்டு க‌டைசியாக‌ கொத்து ம‌ல்லி புதினா தூவி இர‌க்க‌வும்.

குறிப்பு:

இதே போல் சிக்க‌ன் கீமாவிலும் செய்ய‌லாம் இல்லை சிக்க‌ன் (அ) ம‌ட்ட‌னை பொடியாக‌ அரிந்து போட்டும் செய்ய‌லாம் அரிந்து போட்டு செய்யும் போது 400 கிராம் அள‌வு எடுத்து கொள்ள‌வும். க‌றி அதிக‌மா விரும்பாத‌வ‌ர்க‌ள் இதே அள‌வே போதும்.

பேச்சுல‌ர்க‌ள் பிரியாணி க‌ஞ்சி என்றில்லை சாதா க‌ஞ்சியையும் ம‌சாலா க‌ம்மியாக‌ போட்டு இதே போல் செய்ய‌லாம்.

வெஜிடேரியன்கள்வெஜ் க‌ஞ்சியும் இதே முறையில் க‌றி, சிக்க‌னுக்கு ப‌தில் (முட்டை கோஸ், கேர‌ட், பீன்ஸ், முழுபாசிப‌ருப்பு சிறிது சேர்த்து செய்ய‌லாம்)
ப‌ச்ச‌ ப‌ருப்புக்கு ப‌தில் க‌ட‌லை ப‌ருப்பும் போட‌லாம்.
இதே போல் லைட் ம‌சாலாவில் ப‌ச்ச‌மிளகாய் ம‌ட்டும் சேர்த்து ப‌ள்ளி வாச‌ல் க‌ஞ்சி போல் த‌யாரிக்க‌லாம்.

Sunday, August 30, 2009

ஸ்பினாச் வடை - Spinach Vadai

தேவையான‌ பொருட்க‌ள்

உளுந்து பருப்பு = ஒரு கப்
ஸ்பினாச் கீரை = அரை கப்
வெங்காயம் = அரை
கருவேப்பிலை = ஒரு மேசை கரண்டி
கொத்து மல்லி = ஒரு மேசை கரண்டி
பச்சமிளகாய் = ஒன்று
இஞ்சி = ஒரு தேக்கரண்டி (துருவியது)
மிளகு = அரை தேக்கரண்டி ( முக்கால் பாகம் திரித்தது)
உப்பு = முக்கால் தேக்கரண்டி (அ) அவரவர் ருசிக்கு

செய்முறை

1.உளுந்து ப‌ருப்பை ஒரு ம‌ணி நேர‌ம் ஊற‌வைத்து த‌ண்ணீரை வ‌டித்து மையாக‌ அரைக்க‌வும்.
2. ஸ்பினாச், கொத்து மல்லி, கருவேப்பிலையை மண்ணில்லாமல் கழுவி நல்ல பைனாக (பொடியாக) அரிந்து வைக்கவும்.
3. அரைத்த‌ மாவில் உப்பு, பொடியாக‌ அரிந்த‌ ஸ்பினாச் (பால‌க்) கீரை பொடியாக‌ அரிந்த‌ ப‌ச்ச‌மிளகாய் , துருவிய‌ இஞ்சி, கொத்து ம‌ல்லி , க‌ருவேப்பிலை மிள‌கு எல்லாம் சேர்த்து ந‌ன்கு கிள‌ற‌வும்.
4. எண்ணையை காய‌ வைத்து வ‌டைக‌ளாக‌ பொரித்து எடுக்க‌வும்.
சுவையான‌ ஸ்பினாச் வ‌டை ரெடி. தொட்டுக்கொள்ள‌ புதினா துவைய‌ல் (அ) பொட்டுக‌ட‌லை துவைய‌ல், நோன்பு க‌ஞ்சிக்கும் பொருந்தும்.

குறிப்பு:
எண்ணையை ரொம்ப சூடு படுத்தி விட்டு வடையை போட்டால் உள்ளே வேகாது, எண்ணை சூடானதும் தீயின் அளவை சிறிது மீடியமாக வைத்து வடையை போட்டு திருப்பியதும் ஒரு முறை கரண்டியால் அமுக்கி விடவும் பிறகு நல்ல வெந்து வரும்.
இஞ்சி மிளகு சேர்வதால் சுவை வித்தியாசமாக இருக்கும்.
ந‌ல்ல‌ ஷாஃப்டாகவும் , கிரிஸ்பியாகவும் இருக்கும், இத‌ற்கு சோடா மாவு கூட‌ தேவையில்லை

மோர் குழம்பு -Moor kuzampu





தேவையான பொருட்கள்.


ஊறவைத்து எண்ணையில் வருத்து அரைக்க‌


எண்ணை = ஒரு தேக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு மேசை கரண்டி
துவரம் பருப்பு - ஒரு மேசை கரண்டி
அரிசி - ஒரு மேசை கரண்டி
பச்ச மிளகாய் ‍ இரண்டு பெரியது
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் ‍ இரண்டு பத்தை பெரியது
வெந்தயம் - ஐந்து
உப்பு ‍ = ஒரு தேக்கரண்டி (அ)தேவைக்கு




மிக்சியில் அடித்து கொள்ள


மோர் - ஒரு டம்ளர்
தயிர் - ஒரு கப்
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
உப்பு = அரை தேக்கரண்டி


தாளிக்க‌


எண்ணை ‍ இரண்டு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
காஞ்ச மிளகாய் - முன்று
பூண்டு - இரண்டு பல்
பொருங்காய பொடி = ஒரு பின்ச்
கருவேப்பிலை - ஆறு இதழ்
மஞ்சள் தூள் ‍= அரை தேக்க‌ரண்டி
கொத்துமல்லி தழை சிறிது






செய்முறை


1. தாளிக்க கொடுத்துள்ளவைகளை தனியாக வைக்கவேண்டும்.(எண்ணை ,கடுகு, காஞ்ச மிளகாய்,பூண்டு,கருவேப்பிலை, கொத்து மல்லி)


2. மோர் + தயிரை ஒன்றாக சேர்த்து சிறிது உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து நுரை பொங்க அடித்து ரெடியாக வைக்கவும். (இதற்கு இரண்டு கப் மோரும் ஊற்றலாம் (அ) தயிறும் தண்ணீர் சேர்த்து மிக்சியில் அடித்தும் ஊற்றலாம்)






3. கடலை பருப்பு,துவரம் பருப்பு,அரிசி , தேங்காய்,பச்சமிளகாய்,சீரகம், வெந்தயம் அனைத்தையும் அரை மணிநேரம் ஊறவைக்க வேன்டும்.


4. ஊறவைத்ததை ஒரு தேக்கரண்டி எண்ணை ஊற்றி தண்ணீரை வடித்து வருத்தெடுத்து ஆறவைக்கவேண்டும் ஆறியதும் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்தெடுக்க வேண்டும்.


5. அரைத்த கலவை கட்டியாக இருந்தால் தேவைக்கு தண்ணீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி சிறிது உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.


6. நல்ல கொதித்து பச்ச வாடை அடங்கனும் கொதிக்கும் போது பொங்கும் அடி பிடிக்கும் இடை இடையே கிளறி விட வேண்டும்


7. மோர் தயிர் கலவையை கொதித்து கொண்டிருக்கும் கலவையில் ஊற்றி கொதிக்க விடாமல் கலக்கி உடனே இரக்கவும்.
8. தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து மோர் கலவையில் ஊற்ற வேன்டும்.
சுவையான மோர் குழம்பு ரெடி.


குறிப்பு


இதில் காய் தேவை படுபவர்கள் வெண்டைக்காயை அரிந்து தனியாக வதக்கி போட்டு கொள்ளலாம்.
இது வயிறு உபாதைகளுக்கு ஒரு அரு மருந்து தயிர் புளிப்பில்லாதது என்றால் குழந்தைகளுக்கும் நல்ல குழைவாக பிசைந்து ஊட்டி விடலாம்.
இதற்கு தொட்டு கொள்ள அப்பளம், மசால் வடை,பகோடா, பீட்ரூட் (அ) கேரட் பொரியல் செய்து கொள்ளலாம்.
இல்லை முட்டை அவித்து மசாலா போட்டு பொரித்து கொள்ளலாம், சிக்கன் மற்றும் மட்டன் பிரையும் நல்ல இருக்கும்.

நான்கு ந‌ப‌ர்க‌ள் சாப்பிட‌லாம்

மோர் குழம்பு,

இந்த மோர் குழம்பு நான் கற்று கொண்டது 1993 யில் ஆனால் கொஞ்சம் சிம்பிளாக தான் , நான் இதில் பலவகைகள் செய்து பார்த்து விட்டேன் , அதாவது தயிரை கடைந்து தான் மோர் குழம்பு செய்வார்கள், தயிர் + மோர் , அல்லது மோர் மட்டும் வாங்கி செய்தால் சுவை சூப்பர், இதில் வெண்ண்டைக்காயை எண்ணையில் வதக்கி சேர்த்தால் வெண்ண்டைக்காய் மோர் குழம்பு, அப்படி யே வெறும் சாதத்தில் ஊற்றி பிரட்டி சாப்பிட மிக அருமையாக இருக்கும்.
இதற்கு வெறும் பீட்ரூட் பொரியல் மட்டும் போதும், , இல்லை துருவிய மாங்காய் தொக்கு, அப்பளம் , வயிறுக்கு இதம் அல்சர், வயிறு உபாதை உள்ளவர்கள், மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலிக்கு ஏற்ற அருமையான உணவு

Saturday, August 29, 2009

பிளெயின் கடல்பாசி (ரூ ஆப் ஷா) - rooapsa agar agar




தேவையான‌ பொருட்க‌ள்



கடல் பாசி = 10 கிராம்
தண்ணீர் = முன்று டம்ளர்
ரூ ஆப் ஷா = ஒரு குழி கர‌ண்டி
சர்க்கரை = தேவையான அளவு
பாத‌ம் , பிஸ்தா = வேண்டிய நட்ஸ் வகைகள் = ஒரு மேசை கரண்டி




செய்முறை


1. ஒரு வாயகன்ற சட்டியில் முன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி கடல்பாசியும் சேர்த்து + சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.


2. நன்கு கிளறி விட்டு கொதிக்க விடவும்.


3. நன்கு கொதித்து கடல் பாசி கரைந்து தண்ணீர் தெளிய ஆரம்பிக்கும் போது சட்டியை அடுப்பில் இருந்து இரக்கவும்.வடிகட்டி கொள்ளவும்.மீதி அதில் தங்கும் கடல் பாசியை மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடலாம்.


4. இப்போது ரூ ஆப் ஷா சேர்த்து, ந‌ட்ஸ் வ‌கைக‌ளை பொடியாக‌ தூவி ஒரு த‌ட்டில் ஊற்றி ஆற‌வைத்து பிரிட்ஜில் வைத்து செட்டாக்க‌வும்.


5. வேண்டிய‌ வ‌டிவில் க‌ட் செய்து சாப்பிட‌வும்.






குறிப்பு

இந்த கடல்பாசியை தேங்காய் உடைத்த தன்ணீர், இளநீர், ஜவ்வரிசி,டேங்க்,மற்றும் ரஸ்னா ஜுஸ் பவுடர்கள், பால் சேர்த்து பல வகையாக தயாரிக்கலாம்.

அதில் பழங்கள் போட்டு செய்தால் இன்னும் சுவை கூடும்.கலர்புல்லாக இருப்பதால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

வயிற்று புண் மற்றும் வாய் புண்ணிற்கும் நல்லது.

நோன்புகாலத்தில் உடம்பு ரொம்ப டிரையாகி வாயில் வெடிப்புகள் வரும் அது சூட்டினால் வருவது அதற்கும் இது ரொம்ப நல்லது.


linking to Agar Agar Recipe contest sponsored by Marine Chemicals , Kochi. www.Indiaagar.com hosted at Food Corner
 

உளுந்து வடை டிப்ஸ், கிட்ஸ் கலர் புல் தயிர் வடை







உளுந்து வடை டிப்ஸ்


1. இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடுப்பெலும்பு பலம் பெறும்.
இடுப்பு வலி உள்ள பெண்களுக்கு உளுந்தில் பல பக்குவ சமையல்கள் செய்வார்கள், சிலருக்கு வடை , கருப்பு உளுந்து சுண்டல் தவிர வேறு எதுவும் பிடிக்காது.அதற்கு இப்படி வடையாக செய்து கொடுக்கலாம் (இடுப்பெலும்பு பலம் பெற என்பதைதான் விழுந்து போன இடுப்பையும் பலப்படுத்தும் என்றேன்)
காலை டிபனுக்கு அதில் மிளகு தட்டி போட்டு, இஞ்சி,பச்சமிளகாய் சேர்த்து வடை செய்து அதற்கு புதினா துவையலும்,குழந்தைகளுக்கு சர்க்கரையும் தொட்டு சாப்பிட்டால் ரொம்ப சூப்பர். வயிறும் திம்முன்னு ஆகிடும்.
விழுந்து போன இடுப்பையும் தூக்கி நிறுத்தும் உளுந்து.


2. உளுந்து வடைக்கு அரைக்கும் போது கலவை தண்ணியாக போய் விட்டால் பொரிக்கும் போது அதிக எண்ணை குடிக்கும்.


3. உளுந்து வடைக்கு அரைக்கும் போது கொஞ்சமா தண்ணீர் தெளித்து அரைக்கனும், மிக்சி பிளேட் நடுவில் சிறிது எண்ணை விட்டால் சிக்காமல் அரையும்.


4. அரைக்கும் போது அப்ப ஒரு கத்தி கொண்டு வழித்து விட்டு அரைக்கலாம்.
ஐஸ் வாட்டரில் ஊறவைத்தால் மாவு நல்ல காணும்.


5. குழந்தைகளுக்கு கொடுக்கும் போது பச்சமிளகாய், இஞ்சியை அரைத்து விட்டால் காரம் வாயில் உரைக்காது, அவர்களுக்கு சிறிது துருவிய கேரட் (அ) பீட்ரூட் கலந்து சுட்டு கொடுக்கலாம்.


6.பொடியாக‌ கீரையும் அரிந்து போட்டு கீரை வ‌டையாக‌ சுட‌லாம்.


7.ந‌ல்ல‌ பெரிய‌தாக ஹோட்ட‌ல் போல் வ‌ர‌வேண்டும் என்றால் சிறிது ஈஸ்ட் ஊறவைத்து சேர்த்து பொரிக்க‌லாம்.


8. வ‌டைக்கு அரைத்து விட்டு அந்த‌ மிக்சியை அப்ப‌டியே வைத்து விட்டால் காய்ந்து மிக்சியில் ஒட்டி கொள்ளும். ஆகையால் அரைத்த‌ உட‌னே சிறிது த‌ண்ணீர் ஊற்றி சுழ‌ற்றி அரைத்து விட்டால் சுத்த‌மாக‌ க‌ழுவி எடுத்த‌து போல் ஆகிவிடும்.


9.பூபெய்திய‌ பெண்க‌ளுக்கு உளுந்து வ‌டை, உளுந்து சுண்ட‌ல், உளுந்து க‌ளி, உளுந்து அடை, உளுந்து பால், உளுந்து வட்லாப்பம் என்று செய்து கொடுக்க‌லாம்.


10. உடல் சூட்டை தணிக்க தயிர் வடை செய்தும் சாப்பிடலாம்.



11.குழ‌ந்தைக‌ளுக்கு மினி த‌யிர் வ‌டை செய்தும் கொடுக்க‌லாம்.


கிட்ஸ் கலர் புல் தயிர் வடை










வடைக்கு



உளுந்து பருப்பு =‍ அரை டம்ளர்
உப்பு = கால் தேக்கரண்டி
இஞ்சி ஒரு சிறிய‌ துண்டு
ப‌ச்ச‌ மிளகாய் = ஒன்று
ஆலிவ் ஆயில் ‍ = அரை தேக்க‌ர‌ண்டி


த‌யிர் தாளிக்க‌



ஒரு க‌ப் = த‌யிர்
பால் ‍ = சிறிது
எண்ணை ‍ அரை தேக்க‌ர‌ண்டி
க‌டுகு = அரை தேக்க‌ர‌ண்டி
க‌ருவேப்பிலை = சிறிது
பெருங்காய‌ம் = ஒரு பின்ச்
மோர் = வ‌டை தோய்க்க‌


அல‌ங்க‌ரிக்க‌



க‌ல‌ர் புல் = காரா பூந்தி (தேவைக்கு)
வேர்க‌ட‌லை = சிறிது
வ‌ருத்த‌ முந்திரி = (தேவை ப‌ட்டால்)
கேர‌ட் ‍ ‍= அரை துண்டு

செய்முறை

1. உளுந்து பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

2. ஊறிய உளுந்தை தண்ணீரை வடித்து அதில் உப்பு, ஆலிவ் ஆயில்,இஞ்சி , பச்ச மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். ஆலிவ் ஆயில் சேர்ப்பதால் ஈசியாக அரையும்

3. அரைத்த மாவை எண்ணையை காயவைத்து சிறிய ஒரு ரூபாய் காயின் அள‌விற்கு குட்டி குட்டி மினி வடைகளாக தட்டி போடவும்.

4. வடைகளை திருப்பி போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.



5.சூடான வடைகளை எடுத்து மோரில் நனைக்கவும்.


6.தனியாக சட்டியில் எண்ணை ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து தயிர் நன்கு கலக்கி சிறிது பால் சேர்த்து கொள்ளவும்.தேவைக்கு உப்பு சேர்த்து கொள்ளவும்.மோரில் ந‌னைத்த‌ வ‌டைக‌ளை தாளித்த‌ த‌யிர் க‌ல‌வையில் சேர்க்கவும்.


7.சிறிய கிண்ணத்தில் இரண்டு இரண்டு வடைகளாக வைத்து அதில் வேர்கடலை, கேரட், கலர் ஃபுல் காரா பூந்தியை தூவி பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்கவும்.



குறிப்பு



இந்த கலருக்கே உங்கள் குழந்தைகள் நல்ல சாப்பிடுவார்கள்.நீங்களும் அடிக்கடி செய்ய வேண்டி வரும். பெரிய‌வ‌ர்களுக்காக‌ இருந்தால் ந‌ல‌ல் கார‌ம் தேவைக்கு சேர்த்து தாளிக்கும் போது சின்ன‌ வெங்காயம் சேர்த்து தாளித்து கொத்தும‌ல்லி தூவி சாப்பிட‌வும்.கோடைக்கு ஏற்ற‌ குளு குளு கிட்ஸ் க‌ல‌ர் ஃபுல் த‌யிர் வ‌டை ரெடி.இது நோன்பு கால‌த்திலும் செய்து சாப்பிட‌லாம்.

Friday, August 28, 2009

பாப் கார்ன் சிக்கன் பிரை


தேவையான பொருட்கள்

ஊற‌ வைக்க‌

போன்லெஸ் = 50 கிராம்
வெள்ளை மிளகு தூள் (அ) கருப்பு மிளகு தூள் ‍= கால் தேக்கரண்டி
உப்பு = சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் = கால் தேக்கரண்டி
ரெட் கலர் பொடி = சிறிது
எலுமிச்சை சாறு = கால் தேக்கரண்டி

தோய்க்க‌

முட்டை = சிக்கன் தோய்க்க தேவையான அளவு (கால் பாகம்)
கிரெம்ஸ் = இரண்டு மேசை கரண்டி
கார்ன் பிளார் மாவு = அரை தேக்கரண்டி

செய்முறை

போன் லெஸ் சிக்கனை பொடியாக அரிந்து அதை நன்கு கழுவி ஊறவைக்க வேன்டிய மசாலாக்கலை போட்டு ஊறவைக்கவும்.
முட்டையை நன்கு அடித்து அதில் சிக்கன் துண்டுகளை தோய்த்து கிரெம்ஸ் மற்றும் கார்ன் மாவை கலந்து அதில் பிரட்டி அப்படியே உருண்டையாக உருட்ட வரும்.
உருண்டைகளை பட்டர் + எண்ணை கலந்த கலவையில் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு:

குழந்தைகளுக்கு பிடித்த சுவையான பாப் கார்ன் சிக்கன் பிரை ரெடி, எடுத்து சாப்பிட இலகுவாக இருக்கும்.
சிக்கன் சீக்கிரம் வெந்து விடும் எளிதில் தயாரித்து விடலாம்.

Thursday, August 27, 2009

அகர் அகர் கடல்பாசி






ஹ‌ர்ஷினி அம்மா க‌ட‌ல்பாசி ப‌ட‌ம் போட‌ சொன்னார்க‌ள், அவ‌ர்க‌ளுக்காக‌ க‌ட‌ல் பாசி ப‌ட‌ம்.
இது ஒரு வெஜ்டேரிய‌ன் வ‌கை உண‌வு.

கடல்பாசி என்ப‌து சைனா கிராஸ், அக‌ர் அக‌ர்


இளநீர் கடல்பாசி




இது புட்டிங், ஐஸ் கிரீம், பாலுதா, ஸ்வீட்ஸ்க்கு பயன் படுத்துவது, ஜெல்லி ஆகியவற்றிற்கு ரெஸ்டாரண்ட்களில் அதிகமாக பயன் படுத்துவார்கள்
இது ஒரு வெஜ்டேரியன் உண‌வு தான். இது வெள்ளை கலர் நூல் போல் ஒரு முழம் அளவிற்கு இருக்கும். இதை பல வகைகளில் சமைக்கலாம்.

. உடல் சூட்டை தணிக்கும் இந்த கடல்பாசி.

நோன்பு காலங்களில் இஸ்லாமியர்கள் செய்வது.

பாக்கிஸ்தானியர்களும் இதை அதிகமாக செய்வார்கள்.


ரைஸ்கேக் செய்ய இதை பயன் படுத்துவார்கள்.


இது கிராம் க‌ண‌க்கில் தான் விற்க‌ப்ப‌டுகிற‌து.


செய்முறை

மொத்த‌மாக‌ செய்வ‌தாக‌ இருந்தால் 5 கிராம் எடுத்து ஒரு ப‌த்து நிமிட‌ம் ஊற‌வைத்து த‌ண்ணீரை வ‌டிக‌ட்டி இர‌ண்ட‌ரை ட‌ம்ள‌ர் பாலில் ந‌ன்கு வேக‌ வைத்து அதில் விருப்ப‌மான‌ கல‌ர் கொஞ்ச‌ம் சேர்த்து ந‌ட்ஸ் வ‌கைக‌ள், பேரிட்சை, இல்லை ப‌ழ‌ங்க‌ள் பொடியாக‌ ந‌ருக்கி சேர்த்து ஆறிய‌தும் பிரிட்ஜில் வைத்து குளிர‌வைத்து வேண்டிய‌ வ‌டிவில் க‌ட் செய்து சாப்பிட‌லாம்.






குறிப்பு



இந்த கடல்பாசியை தேங்காய் உடைத்த தன்ணீர், இளநீர், ஜவ்வரிசி,டேங்க்,மற்றும் ரஸ்னா ஜுஸ் பவுடர்கள், பால் சேர்த்து பல வகையாக தயாரிக்கலாம். அதில் பழங்கள் போட்டு செய்தால் இன்னும் சுவை கூடும்.கலர்புல்லாக இருப்பதால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். வயிற்று புண் மற்றும் வாய் புண்ணிற்கும் நல்லது. நோன்புகாலத்தில் உடம்பு ரொம்ப டிரையாகி வாயில் வெடிப்புகள் வரும் அது சூட்டினால் வருவது அதற்கும் இது ரொம்ப நல்லது


Wednesday, August 26, 2009

இந்தியன் பிலாபில் - pilafil



தேவையான‌ பொருட்கள்


கொண்டை கடலை = கால் கிலோ 8 ம‌ணி நேர‌ம் ஊற‌வைத்த‌து)
இஞ்சி - 25 கிராம்
ப‌ச்ச‌ மிள‌காய் - 3
காஞ்ச‌ மிள‌காய் - 1
சோம்பு - ஒன்ன‌றை தேக்கர‌ண்டி
க‌ர‌ம் ம‌சாலா - ஒரு தேக்க‌ர‌ண்டி
கொத்து ம‌ல்லி த‌ழை - ஒரு அரை க‌ட்டு
புதினா - கால் கை பிடி
க‌ருவேப்பிலை - சிறிது
கிரெம்ஸ் ப‌வுட‌ர் - ஒன்ன‌றை மேசை க‌ர‌ண்டி
பேக்கிங் ப‌வுட‌ர் - அரை தேக்க‌ர‌ண்டி
உப்பு = தேவைக்கு
வெங்காய‌ம் = ஒன்று பெரியது


செய்முறை

1. கொண்டை க‌ட‌லையை இர‌வு முழுவ‌தும் (அ) எட்டு ம‌ணி நேர‌ம் ஊற‌வைத்து த‌ண்ணீரை ந‌ன்கு வ‌டித்து கொள்ள‌வும்.


2. முத‌லில் இஞ்சி, ப‌ச்ச‌மிள‌காய், காஞ்ச‌ மிள‌காயை போட்டு அரைக‌க்வும்.

3. அடுத்து அதோடு கொண்டைக‌ட‌லை முன்றில் ஒரு ப‌ங்கு, கொத்தும‌ல்லி, புதினா, க‌ருவேப்பிலையை சேர்த்து கொர கொரப்பாக‌ அரைக்க‌வும்.


4. பிற‌கு இன்னொரு பாக‌ம் கொண்டைக‌ட‌லை, க‌ர‌ம் ம‌சாலா, சோம்பை சேர்த்து ந‌ன்கு அரைத்து த‌னியாக‌ எடுத்து வைக்க‌வும்.


5. இப்போது மூன்றாம் பாக‌த்தை எடுத்து கொர‌ கொர‌ப்பாக‌ அரைக்க‌வும்.


6. ஒரு ப‌வுளில் அரைத்த‌ க‌ல‌வைக‌ள், கிரெம்ஸ் ப‌வுட‌ர்,பேக்கிங் ப‌வுட‌ர்,க‌ர‌ம் ம‌சாலா,உப்பு சேர்த்து வெங்காய‌ம் பொடியாக‌ அரிந்து க‌ல‌க்க‌வும்.


7. க‌ல‌க்கிய‌தை ஐந்து நிமிட‌ம் ஊற‌வ‌க்கவும்.


8. சின்ன‌ சின்ன‌ உருண்டைக‌ளாக‌ உருட்டி வ‌டைய‌ போல் த‌ட்டி வைக்க‌வும்.
9. ஒரு இரும்பு வான‌லியில் போட்டு பொரிக‌வும்.


10. பிற‌ட்டி விட்டு ந‌ன்கு பொரிய‌ விட‌னும், இது வேக‌ மொருக‌ லேட்டாகும்.


11. பொரிந்து பொன் முருவ‌லான‌தும் எடுக்க‌னும்.


12. சுவையான‌ பிலாபில் ரெடி.

குறிப்பு


இது நோன்பு நேர‌த்தில் க‌ஞ்சிக்குவைத்து சாப்பிட‌லாம்.
ம‌சால் வ‌டையை விட‌ கூடுத‌ல் மொரு மொருப்பு த‌ரும். இஞ்சி சேருவ‌தால் உட‌லுக்கு மிக‌வும் ந‌ல்ல‌து.
கொண்டை க‌டலையில் சுண்ட‌ல், அடை, இப்போது பிலாபிலும். இது லெப‌னீஸ் க‌டைக‌ளில் இந்த‌ கொண்டைக‌ட‌லையில் கார‌ம் ஏதும் சேர்க்காம‌ல் வ‌டை போல் செய்து அதை பிலாபில் என்பார்க‌ள். அதில் சாண்ட் விச் போல‌வும் கொடுப்பார்க‌ள்.
இது பெரும்பாலும் எல்லா அர‌ப் நாடுக‌ளிலும் கிடைக்கும், முக்கிய‌மா ம‌க்காவில் ஹ‌ராம் ஷ‌ரிப் எதிரில் இந்த‌ சாண்ட்விச் தான் அதிக‌மாக‌ கிடைக்கிற‌து.
இந்த‌ பிலாபிலை குபூஸ் ஹமூஸ் சேர்த்து சாண்ட்விச்சாக கொடுப்பார்கள்.
நான் ந‌ம் இந்திய‌ன் ஸ்டைலில் செய்துள்ளேன்.நாமும் ரொட்டி , சப்பாத்தியினுள் வைத்து சாப்பிடலாம்.

ஜவ்வரிசி கடல் பாசி



தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி = ஒரு மேசை கரண்டி
கடல் பாசி = இரண்டு மேசை கரண்டி
பால் = அரை டம்ளர்
தண்ணீர் = ஒன்னறை டம்ளர்
சர்க்கரை = முன்று மேசை கரண்டி
தேவையான நட்ஸ் = சிறிது

செய்முறை

1. ஜவ்வரிசியையும், கடல் பாசியையும் அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
2. ஒன்னறை டம்ளர் தண்ணீரில் கொதிக்க விட்டு வேக விடவும்.
3. வெந்து தண்ணீர் பாதி வற்றும் போது சர்க்கரை நட்ஸ்,பால் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இரக்கவும்.
4. சிறிது ஆறியதும் ஒரு வாயகன்ற பாத்திரதில் ஊற்றி பிரிட்ஜில் வைத்து நன்கு செட் ஆனதும் வேண்டிய வடிவில் கட் செய்து நோன்பு திறக்கும் வேலையில் சாப்பிடவும்.

குறிப்பு:

நோன்பு காலத்தில் உடல் சூட்டை தணிக்கும் கடல் பாசி, நோன்பு நேரத்தில் வரும் வாய் புண் மற்றும் வயிற்று புண்ணை ஆற்றும் ஜவ்வரிசி இதை இரண்டும் சேர்த்து செய்து சாப்பிட்டால் வயிறு இதம் பெரும்.
கர்ப பை புண் மற்றும், அல்சருக்கும் இது அரு மருந்தாகும்.
இது நானே முயற்சி செய்தது. நீங்களும் சுவைத்து மகிழுங்கள்.கலர் தேவை பட்டால் வேண்டிய கலர் சேர்த்து கொள்ளலாம், இல்லை என்றால் ரூ ஆப் ஷா வே போதுமனது.

இது முன்று நபர் சாப்பிடலாம்
ஊறவைக்கும் நேரம் பிரிட்ஜில் வைக்கும் நேரம் தவிர செய்வது பத்து நிமிடம் தான்

Tuesday, August 25, 2009

மீண்டும் மீண்டும் அவார்டு = வாங்க‌ வாங்கிக்க‌ங்க‌



இந்த அவார்டை ஹர்ஷினி அம்மா அவர்கள் வித விதமான‌ தோடு, நெக்லஸ் எல்லாம் வித விதமா செய்வாங்க, கலக்கலான ரெசிபிகளும் கொடுத்து கொண்டு இருக்கிறாங்க. அவ‌ர்கள் இந்த‌ அவார்டை என‌க்கு கொடுத்து இருக்கிறார்க‌ள்
ந‌ன்றி ஹ‌ர்ஷினி.பல பிளாக்குகளை நான் பார்வையிட்டாலும் என்னை மிக கவர்ந்தது ஹர்ஷினி அம்மா பிளாக் டிசைன் தான் இதை நான் அங்கு நிறைய இடத்தில் சொல்லி இருக்கேன்.


நான் அவர்களுக்கு அவார்டு கொடுக்கலாம் பார்த்தா அவர்கள் எனக்கு எனக்கு கொடுத்து இருக்கிறார்கள்.


இதை நான் யாருக்கு கொடுக்கனும் என்று நினத்தேனோ அவர்கள் எல்லொரும் அவார்டு வாங்கி இருக்கிறார்கள், இருந்தாலும் நான் கொடுக்கிறேன் ப‌ர‌வாயில்லை இதையும் வாங்கி கொள்ளுங்க‌ள்.




1. தாஜ் நான் ப‌திவு போட‌ ஆர‌ம்பித்த‌தே அவ‌ருக்காக‌ தான்.(இஸ்லாம் மார்க்க‌ம் ப‌ற்றி பிளாக்கில் தொகுத்து வ‌ருகிறார்க‌ள்).

2. பாயிஜா அவர்கள் உடைய கிராப்ட் வொர்க் எனக்கு ரொம்ப பிடிக்கும்.


3. சுஹைனா எந்த விஷியமானாலும் தெளிவாக பிழையின்றி எழுதிவருகிறார்கள்.

4. நவாஸ் அவருடைய எல்லா பதிவுகளும் நல்ல இருக்கும். (சிறுகதை + கதை + கவிதை + மொக்கை)


5. ஷபிக்ஸ் எல்லா பதிவுகளும் சிரிக்க வைக்கும், இப்ப புதுசா கிரிஸ்பி கிராக்கர்ஸ் சொல்லி கொடுத்து இருக்கிறார், இன்னும் அசத்துவார்.


6. குறை ஒன்றும் இல்லை ராஜ் (அங்கு கவுண்டர் காமடி மற்றும் பல காமடிகள் அங்கு கொட்டி கிடக்கு யாரெல்லாம் சிரிக்கனுமோ அங்கு போனால் போதும்.

7. அதிரை அபூபக்கர்.

8. மாதேவி சுவையான இலங்கை சமையல் + நிறைய விளக்கத்துடன் இருக்கும்.

9. அவிங்க ‍ = ராஜா அங்கும் எல்லாம் க‌ல‌க்க‌லான‌ காம‌டி தான்
10. தற்சமயம் சமையலில் கலக்கி கொண்டு இருக்கும் மேனகா.
11. த‌ர்ஷினி அவங்க வரைந்துள்ள எல்லா ஆர்ட்டும் சூப்பர்.
இது என்னை கவர்ந்த பிளாக்குகளும், என்னை ஊக்கப்படுத்தியவர்களுக்கும் கொடுத்துள்ளேன் பெற்று கொள்ளுங்கள்.
ஏன் இதை பத்து பேருக்கு தான் கொடுக்கனுமா? நான் 11 பேருக்கு கொடுக்கிறேன்.

Sunday, August 23, 2009

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்


தேவையான பொருட்கள்



வேக வைக்க



காய்ந்த பட்டாணி - ஒரு டம்ளர்
உப்பு - ஒரு பின்ச்



தாளிக்க



எண்ணை - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
பச்சமிளகாய் - ஒன்று
காய்ந்த மிளகாய் - ஒன்று
கருவேப்பிலை - சிறிது
தேங்காய் - ஒரு பத்தை (பொடியாக நீளவாக்கில் அரிந்தது)
உப்பு = ருசிக்கு
கிளி மூக்கு மாங்காய் = கால் பாகம்

செய்முறை

1. பட்டாணியை எட்டு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் ஒரு பின்ச் உப்பு சேர்த்து இர‌ண்டாவ‌து விசில் வ‌ரும் போது அடுப்பை அனைக்க‌வும், இல்லை என்றால் குழைந்து விடும் வெந்ததும் தண்ணீரை வடித்து வைக்கவும்.

2. பிற‌கு ஒரு வயகன்ற வானலியில் எண்ணை விட்டு கடுகு,காய்ந்த மிள‌காய் , பச்சமிளகாயை பொடியாக அரிந்து போட்டு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

3. க‌டைசியாக‌ வேகவைத்த பட்டாணி, நீளவாக்கில் அரிந்த தேங்காய், மாங்காய் சேர்த்து கிளறி தேவைக்கு உப்பு சேர்த்து இரக்கவும்.
குறிப்பு

இது நோன்பு காலங்களில் மாலை நோன்பு திறக்கும் சமயம் சாப்பிடலாம், மற்ற நேரங்களிலும், மாலை சிற்றுண்டியாக சாப்பிடலாம்.
தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் என்றதும் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது பீச் தான்.
இதில் மாங்காய் சேர்ப்பதால் சுவை ரொம்ப சூப்பராக இருக்கும்.கர்பிணி பெண்கள் மசக்கை நேரத்தில் வாய்க்கு ருசி படும்.
இதில் மாங்காய் எனக்கு கிடைக்காததால் சேர்க்க‌ ப‌ட‌வில்லை, செய்யும் போது சேர்த்து கொள்ள‌வும்.
சூப்பரான தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் தயார்.

Saturday, August 22, 2009

வெள்ளை வாயு க‌ஞ்சி


வெள்ளை நோன்பு கஞ்சியும், பொட்டு கடலை துவையலும்..

இது இஸ்லாமிய இல்லங்களில் நோன்பு காலத்தில் செய்யும் பல வகை கஞ்சியில் இதுவும் ஒரு வகையாகும்.
இது வெள்ளை தேங்காய் பால் கஞ்சி, அல்சர் உள்ளவர்களுக்கு, ஜுரம் வந்தவர்களுக்கும் கொடுக்கலாம்.

தேவையான‌ பொருட்க‌ள்


வேக‌வைக்க‌

ர‌வை போல் பொடித்த‌ அரிசி (நொய்) = அரை ட‌ம்ளர்
வ‌ருத்த‌ பாசி ப‌ருப்பு = ஒரு மேசை க‌ர‌ண்டி
மிள‌கு = 7
சீர‌க‌ம் = ஒரு தேக்க‌ர‌ண்டி
பூண்டு = ஐந்து பல்
உப்பு = ருசிக்கு தேவையான‌ அளவு
வெந்தயம் = நான்கு

தாளிக்க‌

எண்ணை = ஒரு தேக்க‌ர‌ண்டி
நெய் = ஒரு தேக்க‌ர‌ண்டி
ப‌ட்டை = ஒரு சிறிய‌ துண்டு
சின்ன‌ வெங்காய‌ம் = நான்கு (பொடியாக அரிந்த‌து)
இஞ்சி பூண்டு பேஸ்ட் = அரை தேக்க‌ர‌ண்டி
கொத்து ம‌ல்லி த‌ழை = சிறிது
தேங்காய் பால் = அரை ட‌ம்ள‌ர்

செய்முறை

1. அரிசி நொயையும் ,வெந்தயம், பாசி ப‌ருப்பையும் க‌ளைந்து அரை ம‌ணி நேர‌ம் ஊற‌வைக்க‌வும்.

2. அதில் பூண்டு, மிள‌கு, சீர‌க‌ம்,உப்பு சேர்த்து முன்று ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் சேர்த்து ந‌ன்கு வேக‌ விட‌வும். குக்க‌ரில் வேக‌வைக்கும் போது தீயின் அன‌லை குறைத்து வைக்க‌வும்.இல்லை என்றால் விசில் வ‌ரும் போது தெரிக்கும்.இது இர‌ண்டு முன்று விசிலில் வெந்து விடும்.

3. சூடாக‌ இருக்கும் போதே ச‌ற்று கிள‌றி விட்டு, ரொம்ப‌ க‌ட்டியாக‌ இருந்தால் சிறிது த‌ண்ணீர் சேர்த்து கொதிக்க‌ விட‌வும்.

4. தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை முத‌லில் த‌னியாக‌ ஒரு சிறிய‌ தாளிக்கும் ச‌ட்டியில் எண்ணை + நெய் ஊற்றி ப‌ட்டையை போட்டு வெடிக்க‌ விட்டு சின்ன‌வெங்காய‌ம் சேர்த்து வ‌த‌க்க‌வும்.

5. அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி கொத்தும‌ல்லி த‌ழையும் தேங்காய் பாலும் சேர்த்து வெந்து வைத்துள்ள‌ க‌ஞ்சியில் சேர்த்து கொதிக்க‌ விட்டு இர‌க‌க்வும்.

இத‌ற்கு தொட்டு கொள்ள‌ பொட்டுக‌ட‌லை துவைய‌ல் ரொம்ப‌ ந‌ல்ல‌ இருக்கும். (அ) புதினா துவைய‌லும் தொட்டு சாப்பிட‌லாம்.


பொட்டு க‌ட‌லை துவைய‌ல்

தேவையான பொருட்கள்

பொட்டு க‌ட‌லை = கைக்கு ஒரு கை பிடி
தேங்காய் ப‌த்தை = இர‌ண்டு
ப‌ச்ச‌மிள‌காய் = ஒன்று
இஞ்சி சிறிய‌ துண்டு
வெங்காய‌ம் = கால் துண்டு
உப்பு = ருசிக்கு தேவையான‌ அள‌வு

செய்முறை

1.முத‌லில் தேங்காய் ப‌த்தை + ப‌ச்ச‌மிள‌காய் பொட்டு க‌ட‌லையை சேர்த்து அரைக்க‌வும்.
2. பாதி அரைந்த‌தும் இஞ்சி + வெங்காயம் + உப்பு சேர்த்து அரைத்து எடுக்க‌வும்.


குறிப்பு:

நோன்பு கால‌த்தில் வெள்ளை க‌ஞ்சி , ம‌சால் வ‌டை, பொட்டு க‌ட‌லை துவைய‌ல் தொட்டு சாப்பிட‌ இத‌மாக‌ இருக்கும்.
இது நோன்பு கால‌த்தில் இஸ்லாமிய‌ இல்ல‌ங்க‌ளில் செய்யும் ப‌ல‌ வ‌கை க‌ஞ்சியில் இதுவும் ஒரு வ‌கையாகும்.
இது வாயு தொல்லை, கேஸ் பிராப்ள‌ம் உள்ள‌வ‌ர்க‌ள்,வ‌ய‌தான‌வ‌ர்க‌ளுக்கு கார‌ம் இல்லாம‌ல் சாப்பிட‌ கொடுக்கும் ஒரு ச‌த்தான‌ ஆகார‌ம், இதை பிர‌வுன் கோதுமை ப‌ர்க‌லிலும் செய்ய‌லாம்.

Tuesday, August 18, 2009

நோன்பு கால ச‌மைய‌ல் டிப்ஸ்



1. நோன்பு என்றதும் முதலில் நினைவுக்கு வருவது நோன்பு கஞ்சி தான்.

இதற்கு தேவையான அரிசி, பாசி பருப்பு, வெந்தயம் போன்றவற்றை முதலே திரித்து கலந்து வைத்து கொள்ளுங்கள்.
மொத்தமாக சிக்கன் (அ) மட்டன் கீமாவை அரை கிலோ அளவிற்கு தாளித்து வைத்து கொள்ளுங்கள்.
தினம் தாளித்த கீமாவை தேவைக்கு போட்டு கொதிக்க விட்டு கலந்து வைத்துள்ள அரிசியை தேவைக்கு ஊறவைத்து செய்து கொள்ளலாம்.
இல்லை கஞ்சி மொத்தமாக முன்று நாளைக்கு ஒரு முறை தயாரித்து வைத்து கொள்ளலாம்.


2. எண்ணையில் பொரிக்கும் அயிட்டத்தை கடைசி நேரத்தில் பொரிக்காதீர்கள்.
அது அவசரத்தில் கடைசி நேரத்தில் பொரிக்காதீர்கள்.பொரித்த எண்ணையை மறுநாள் சுடும் போது அதில் தண்ணீர் படாமல் முடிவைகக்வும். மறு நாள் பொரிக்கும் போது அதை வடி கட்டி கொள்ளுங்கள்.லேசாக தண்ணீர் பட்டாலும் அது உங்கள் முகத்தில் தான் தெரிக்கும். இப்படி ஒருவருக்கு முன்பு ஆகி இருக்கு கடைசி நேரத்தில் அவசரமா பொரிக்கும் போது மேலே தெரித்து உடனே அந்த நேரத்தில் ஹாஸ்பிட்டல் போய் இருக்கிறார்கள். குழந்தையை வைத்து கொண்டு செய்பவர்கள் ரொம்ப உஷாராக இருக்கவும்.நோன்பு நேரத்தில் இந்த டென்ஷன் வேறு தேவையா?ஒரு நாள் பொரித்து விட்டுஅந்த எண்ணையை முன்று நாட்களுக்குள் முடித்து விடுங்கள்.

3. வடைக்கு மொத்தமாக முன்று நாளைக்கு சேர்த்து அரைத்து கை படாமல் எடுத்து முன்று பாகமாக பிரித்து வையுங்கள்.

4. சுண்டல் வகைகள் நிறைய செய்யலாம். அதையும் அரை கிலோ அளவில் ஊறவைத்து வேக வைத்து வைத்து கொண்டால் தேவைக்கு அன்றாடம் தாளித்து கொள்ளலாம்.

5. பாசி பருப்பு இனிப்பு சுண்டர். கொண்டைகடலை கருப்பு மற்றும் வெள்ளை சுண்டல், வேர்கடலை அவித்தும் சாப்பிடலாம்.


6. சோமாஸ், க‌ட்லெட் ச‌மோசா வ‌கைக‌ளை முன்பே த‌யாரித்து பிரீஜ் செய்து வைத்து கொள்ள‌லாம்.

7. ஜூஸையும் இர‌ண்டு நாட்க‌ளுக்கு சேர்த்து க‌ரைத்து வைத்து கொள்ள‌லாம்.
இத‌னால் நேர‌த்தை மிச்ச‌ ப‌டுத்தி கொள்ளலாம்.

8. கடல் பாசி ஒரே வகையில் செய்யாமல் நல்ல கலர் புல்லாக செய்து வைத்தால் பிள்ளைகளுக்கு நோன்பு நேரம் ரொம்ப பிடிக்கும், அதை செய்து அவர்களை கட் பண்ண்ண சொல்லுங்கள்.



9. வ‌யிறு கேஸ் பிராப்ள‌ம், அல்ச‌ர் உள்ள‌வ‌ர்க‌ள். வெள்ளை க‌ஞ்சி பூண்டு , தேங்காய் பால் சேர்த்து செய்து குடிக்க‌வும்.

10. தின‌ம் ஜ‌வ்வ‌ரிசி பாயாச‌ம், க‌ஞ்சி செய்து குடித்தால் அல்ச‌ர், வ‌யிறு பிராப்ள‌ம் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு ரொம்ப‌ இதமாக‌ இருக்கும், குளிர்ச்சியாகவும் இருக்கும்.
இல்லை ஜ‌வ்வ‌ரிசியை ஊற‌வைத்து வேக‌ வைத்து தின‌ம் பாலில் சேர்த்தும் குடிக்க‌லாம்.


11. பிரெஷ் பழ ஜூஸ்கள் தயாரித்து குடித்தால் உடல் தெம்பாக இருக்கும், புருட் சேல‌டும் கூட‌ அடிக்க‌டி செய்து சாப்பிட‌லாம்.

12. நோன்பு க‌ஞ்சியும் ஒரே மாதிரியாக‌ செய்யாம‌ல் சிக்க‌ன் க‌ஞ்சி, ம‌ட்ட‌ன் க‌ஞ்சி, வெள்ளை க‌ஞ்சி, ஸ்வீட் கார்ன் சிக்க‌ன் சூப், த‌க‌காளி சூப், பால‌க் சூப், ஓட்ஸ் சூப் என்று ப‌ல‌ வ‌கையாக‌ செய்து குடிக்க‌லாம்.

13. ப‌ஜ்ஜிக்கு காய் க‌ளை முத‌லே அரிந்து பிரிட்ஜில் வைத்து கொள்ள‌வும். இது சுடும் போது ரொம்ப‌ வ‌ச‌தியாக‌ இருக்கும். ப‌ஜ்ஜி யில் ப‌ல‌ வித‌மாய் சிக்க‌ன் ப‌ஜ்ஜி, வெங்காய‌ம், த‌க்காளி வெள்ள‌ரி, வாழக்காய், பேபி கார்ன் , க‌த்திரிக்காய் என்று ப‌ல‌ வித‌மாக‌ ப‌ஜ்ஜி செய்து சாப்பிட‌லாம்.


14. ப‌கோடா செய்யும் போது அதில் காய் க‌றிக‌ள் ம‌ற்றும் இஞ்சி சேர்த்து கொள்ளுங்க‌ள்.இது நெஞ்சி கரிக்காமல் இருக்கும், வழக்கம் போல் பூண்டும் தட்டி போட்டு கொள்ளுங்கள்


15.அப்பளம் , வத்தல் கூட கொஞ்சம் அதிகமா பொரித்து எண்ணை வடிந்ததும் அதை ஒரு கவரில் வைத்து பிரிட்ஜில் வைக்கலாம்.


16. லோ பிரெஷர் உள்ளவர்கள் பிரெஷ் ஆரஞ்ச் ஜூஸில், உபபு ஒரு சிட்டிக்கை, குளுக்கோஸ் சேர்த்து குடிக்கவும், அதே போல் லெமன் ஜூஸிலும். இது நல்ல எனர்ஜியை கொடுக்கும். அடிக்கடி மயக்கம் வருவதை த‌டுக்கும்.


17 .ஆள்வள்ளி கிழங்கு (மரவள்ளி) , சர்க்கரை வள்ளி கிழங்கு அவித்து சாப்பிடலாம் அதில் சர்க்கரை , நெய், தேங்காய் சேர்த்து உருண்டை பிடித்தும் சாப்பிடலாம்

18. வெங்காய பஜ்ஜி செய்யும் போது வெங்காயத்தை மாவு கலவையில் முக்கியதும் பிஞ்சி போகும் அதற்கு வெங்காயத்தை முதலே வட்ட வடிவமாக அரிந்து பிரிட்ஜில் வைத்து விடுங்கள். மாலை பொரிக்கும் போது நல்ல கிரிப்பாக இருக்கும், இதே போல் வாழக்காய், மற்றும் உருளையையும் செய்யலாம். பஜ்ஜியில் கண்டிப்பாக பூண்டு பொடி (அ) இஞ்சி பூண்டு பேஸ்ட் (அ) பெருங்காயப்பொடி சேர்த்து செய்யவும். வயிறு உப்புசம் ஆகாது

தொடரும்

பீட்ரூட் ஹல்வா





தேவையான பொருட்கள்


பீட்ரூட் = அரை கிலோ
பால் = 100 மில்லி
மில்க் மெயிட் = 100 மில்லி
பாதம் = 25 கிராம் (பொடிக்க)
சர்க்கரை = 200 கிராம்
முந்திரி, பிஸ்தா,கிஸ்மிஸ் = 25 கிராம்
நெய் = 25 கிராம்
பட்டர் = 25 கிராம்
உப்பு = ஒரு பின்ச்

செய்முறை


பீட்ரூட்டை தோலெடுத்து கழுவி பூந்துருவலாக துருவி கொள்ளவும்.
பாதத்தை பொடித்து கொள்ளவும்.
சிறிது நெய்யில் முந்திரி, பிஸ்தா வை பொடியாக அரிந்து கிஸ்மிஸ்பழம் சேர்த்து வருத்து வைத்து கொள்ளவும்.
பீட்ரூட்டை வாயகன்ற பாத்திரத்தில் போட்டு பட்டர் சேர்த்து பச்ச வாடை போக வதக்கி பால் சேர்த்து வேக விடவும்.
வெந்த‌தும் பொடித்த‌ பாத‌ம் + உப்பை சேர்த்து கிள‌ற‌வும்.
வெந்ததும் சேர்த்த்து மீதி உள்ள நெய் சேர்த்து தண்ணீர் வற்றி கிரிப் ஆகும் வரை வதக்க‌வும்.
கடைசியாக மில்க் மெயிட் சேர்த்து கிளறி, வருத்து வைத்துள்ள முந்திரி, பிஸ்தா, கிஸ்மிஸ்பழம் தூவி இரக்கவும்.

குறிப்பு:

இஸ்லாமிய இல்லங்களில் விஷேஷங்களுக்கு செய்யும் பலவகை இனிப்புகளில் இதுவும் ஒன்றாகும்.
குழந்தைகளுக்கு இட்லி, தோசை, பிரெட்டில் தடவி கொடுக்கலாம்.அந்த‌ க‌ல‌ருக்கே கூட‌ இர‌ண்டு இட்லி கேட்டு சாப்பிடுவார்க‌ள்.நல்ல சத்தான ஸ்வீட், மில்க் மெயிட் பதில் இனிப்பில்லாத பால் கோவாவும் சேர்க்கலாம்.
கர்பிணி பெண்களுக்கு ஹிமோகுளோபின் கம்மியாக இருந்தால் இதை சாப்பிடலாம். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பார்த்து சாப்பிடவும்.
நிறைய‌ செய்து வைத்து பிரிட்ஜில் ஒரு வார‌ம் வ‌ரை வைத்து சாப்பிட‌லாம்.

மட்டன் கீமா கஞ்சி - Mutton kheema kanji






இஸ்லாமிய‌ இல்ல‌ங்க‌ளில் நோன்பு கால‌ங்க‌ளில் செய்யும் க‌ஞ்சியின் சுவைக்கு ஈடு இனை எதுவுமே கிடையாது. நோன்பு திற‌ந்த‌வுட‌ன் ஒரு ப‌வுள் முழுவ‌தும் குடித்தால் ந‌ல்ல‌ என‌ர்ஜி கிடைக்கும்.இதை ப‌ல‌ வ‌கையாக‌ செய்யலாம் அதில் இது குக்க‌ர் முறை, இதில் தாளிப்பு, எண்ணை எல்லாம் குறைத்து செய்தால் நோன்பு நேர‌த்திற்கு ந‌ல்ல‌து.















தேவையான பொருட்கள்.

சிக்கன் (அ மட்டன் கீமா – 100 கிராம்
பாசுமதி அரிசி மிக்சியில் பொடித்த நொய் – முக்கால் டம்ளர்
பச்ச பருப்பு – இரண்டு மேசை கரண்டி (பொங்கலுக்கு போடுவது)
வெங்காயம் – ஒன்று பெரியது
தக்காளி – ஒன்று
தயிர் – ஒரு மேசை கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசை கரண்டி
கேரட் – அரை துண்டு
பச்ச மிளகாய் – ஒன்று
மிள்காய் தூள் – அரை தேக்காண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
எண்ணை – ஒரு தேக்கரண்டி
நெய் (அ) டால்டா – ஒரு தேக்கரண்டி
தேஙகாய் - இரண்டு பத்தை (அ) தேங்காய் பவுடர் இரண்டு தேக்கரண்டி
பட்டை கிராம்பு, ஏலம் - தலா ஒன்று ஒன்று
வெந்தயம் = கால் தேக்கரண்டி
கொத்து மல்லி தழை – சிறிது
புதினா – சிறிது







செய்முறை

1. வெங்காயம், தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவேன்டும்.புதினா, கொத்துமல்லி , பச்ச மிளகாயை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி வைக்கவேண்டும். கீமாவை சுத்தம் செய்து தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.கேரட்டை பூ போல் துருவி வைக்க வேண்டும்.அரிசி பருப்பை களைந்து ஊறவைக்க வேண்டும்.

குக்கரில் நெய்+டால்டாவை ஊற்றி காய்ந்ததும் பட்டை ,கிராம்பு,ஏலத்தை போட்டு பொடிய விட வேண்டும்.

அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை பொட்டு நன்கு வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.(பச்ச வாடை போகும் வரை)

இப்போது தக்காளி பச்சமிளகாய் போட்டு நன்கு வதக்கவேண்டும்.
தக்காளி சுருண்டதும் கீமா, கேரட், உப்பு,மிள்காய் தூள், கொத்து மல்லி, புதினா,மஞ்சள் தூள் அனைத்தையும் போட்டு நன்கு வதக்கவேண்டும்.








தயிர் சேர்த்து கிளறி தண்ணீர் அளந்து ஊற்ற் வேண்டும்.ஒன்றுக்கு நாலு டம்ளர் தண்ணீர் ஊற்றவேணும்.

தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் நொயையும் பருபையும் தண்ணீரை வடித்து போடவேண்டும்.
நல்ல கிளறி கிளறி விட்டு கொதிக்க விட வேண்டும்.

குக்கரை மூடி வெயிட் போட்டு தீயை குறைத்து வைத்து முன்று விசில் வந்ததும் ஆஃப் பண்ணி விடவேண்டும்.


ஆவி அடங்கிய‌தும் தேங்காய் பால் ஊற்றி நன்கு கொத்திக்க விட்டு கொத்து மல்லி தழை தூவை இரக்கி சாப்பிடவும்.

சுவையான நோன்பு கஞ்சி தயார்.

இதற்கு தொட்டு கொள்ள பகோடா, பஜ்ஜி,உளுந்து வடை, மற்றும் புதினா துவையல் நல்ல காம்பினேஷன்.

குறிப்பு.

குக்கரில் செய்வதால் கஞ்சியை சூட்டோரு வைக்க அப்படியே குக்கரில் வைக்க கூடாது செய்து முடித்ததும் கிளறி விட்டு வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி விட வேண்டும்.கஞ்சியை வெளியிலேயே வேக விட்டும் செய்யலாம். கையில் பச்ச குழந்தைவைத்திருப்பவரகள், வேலைக்கு போகிறவர்களுக்கு இந்த முறை ஈசியாக இருக்கும்.வெயிட் போட்டதும் தீயை குறைத்து வைக்கனும். இல்லை என்றால் தெரிக்கும்.கீமா அதிகமா தேவை படுகிறவர்கள் கூட கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள்.
இதை ம‌ட்ட‌ன் கீமா,வெஜ் டேபுள்ஸ் ம‌ட்டும் போட்டு கூட‌ செய்ய‌லாம்.




நொய் என்பது பாதியாக பொடித்த அரிசி.

இது நோன்பு காலத்திற்கு என்று ஒரு கிலோ முக்கால் பதத்திற்கு பொடித்து அதில் பாசி பருப்பு கால் கிலோ, வெந்தயம் சேர்த்து கலந்து வைத்து கொள்ளுங்கள், பர்கல் இருந்தால் அதுவும் கால் கப் கலந்து வைத்து கொள்ளலாம். தேவைக்கு தினம் ஒரு டம்ளர் அளவிற்கு செட்து குடிக்கலாம், ஒரு டம்ளர் போட்டு செய்தால் நான்கு பேர் தாரளமாக குடிக்கலாம்.

தக்காளி இஞ்சி சட்னி

தக்காளி இஞ்சி சட்னி


அரைக்க‌


நன்கு பழுத்த தக்காளி = நான்கு
இஞ்சி = ஒரு அங்குல துண்டு
காஞ்ச மிளகாய் = ஒன்று
தேங்காய் துருவல் = ஒரு மேசை கரண்டி
உப்பு = சிறிது

தாளிக்க‌

எண்ணை = அரை தேக்கரண்டி
கடுகு = கால் தேக்கரண்டி
பெருங்காயம் = ஒரு பின்ச்

செய்முறை

த‌க்காளியை பொடியாக‌ அரிந்து, இஞ்சியை தோல் நீக்கி பொடியாக‌ அரிந்து அத்துட‌ன் த‌க்காளி,உப்பு, காஞ்ச‌ மிள‌காய் சேர்த்து ந‌ன்கு அரைக்க‌வும்.

தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை தாளித்து சேர்த்து கொதிக்க விட்டு இரக்கவும்.

சுவையான‌ த‌க்காளி இஞ்சி ச‌ட்னி ரெடி
குறிப்பு


இது க‌ர்பிணி பெண்க‌ள் வாய்க்கு ருசி ப‌டும்.தோசைக்கு தொட்டு கொள்ள‌ சூப்ப‌ராக‌ இருக்கும், செய்வ‌தும் சுல‌ப‌ம்.

எல்லாவகையான தோசை அடைக்கும் தொட்டு சாப்பிட நல்ல இருக்கும்.

படம் பிறகு சேர்க்கப்படும்

Monday, August 17, 2009

ரம்லான் மாதத்தில் ஓத வேண்டிய முக்கியமான துஆக்கள்.




1.ரமலான் மாதத்தில் முந்திய பத்தில் ஓதும் துஆ


"அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹமர் ராஹிமீன்".


அல்லாவே! கிருபையாளர்களுக்கெல்லாம் மாபொரும் கிருபையாளனே!உன்னுடைய கிருபையில் நின்றும் எங்கள் மீது கிருபை செய்வாயாக.






2. இரண்டாம் பத்தில் ஓதும் தூஆ




"அல்லாஹு ம் மக்பிர்லி துனூபனா வக‌ஹ்(த்)தாயானா குல்ல ஹா யாரப்பல் ஆலமீன்".


அல்லாவே!ஆலத்தார்களின் இரட்சகனே!எங்களூடைய பாவங்களையும் எங்களுடைய தவறுகளையும் மன்னிப்பாயாக.




3. முன்றாம் பத்தில் ஓதும் தூஆ




"அல்லாஹு ம்மாதிக்னி மினன்னாரி வ அத்கில்னில் ஜன்னத யாரப்பல் ஆலமீன்".


அல்லாவே!ஆலத்தார்க்ளின் இரடகனே! எங்களை நரத்திலிருந்து விடுதலை செய்து இன்னும் எங்களை சொர்க்கத்தில் நுழையச் செய்வாயாக!


குறிப்பு

மேற்கண்ட முன்று தூஆக்களையும் எவ்வளவு அதிகமாக ஓத முடியுமோ அவ்வளவு அதிகமாக ஓதுவது சிறந்தது. மற்ற தூஆக்களுடனும் சேர்த்தும் ஓதலாம்.

Sunday, August 16, 2009

கேன்சர் அபாயம் ‍ 2

http://tips-jaleela.blogspot.com/2009/06/blog-post_21.html
கேன்சர் அபாயம் - 1
இதற்கு முன் கேன்சர் பற்றி பதிவு போட்டு இருந்தேன்.பெரிய பதிவா இருந்ததால் இங்கு மீதி போட்டுள்ளேன்
ஒரு 45 வய்து பெண்மணி  கேன்சர் ஆப்ரேஷன் செய்து சரியாக கவனிக்காததால் ஒரு பெண் அது லிவரில் பரவி ரொம்ப பாடுபட்டு போன வருடம் டிசம்பரில் உயிர் துறந்தார்.

அந்த பெண்மணிக்கு கல்யாணவயதில் பெண் , படித்து கொண்டிருக்கும்  ஒரு பையனும் இருந்தார்கள்.  பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி சீரும் சிறப்புமாக செய்து முடித்தார்கள்அந்த பெண்ணுக்கு கல்யாணம் ஆக 1 மாதம் முன்பு தான் கேன்சர் இருப்பது தெரியவந்து அவங்களுக்கு கர்ப்பப்பையில் கேன்சர் வந்துள்ளது .உடனே கீமோ தெரபி செய்து ஆப்ரேஷனும் நல்ல படியாக முடிந்தது. .
ஆனால் ரெஸ்டில் இருக்காம ஊரில் அவங்க சொந்த காரர்களுக்கு உடம்பு சரியில்லை என்று போனார்கள், அதில் ரயிலில் பயணம் செய்ததால்
 இன்பெக் ஷன் ஆகிவிட்டது. அதுவும் இல்லாமல் உடம்பு சரியில்லாதவரை கூப்பிட்டு வந்து சென்னை ஹாஸ்பிட்டலில் வைத்து வைத்திய‌ம் பார்த்தார்கள்.
இந்த‌ அம‌மா அவரை பார்த்து கொள்ள யாரும் இல்லாததால் அவர்களே அவர் கூடவே ஹாஸ்பிட்டலில் இருந்து கவனித்து கொண்டதால் ஹாஸ்பிட்ட‌லில் அதுவும் இன்பெக்ஷன் ஆகி இருக்கு.


மறுபடி கேன்சர் லிவரில் பரவி இருப்பது தெரிய வந்தது ஹோமியோ மருத்துவ சிகிச்சை எடுத்து போய் பயனளிக்காததால் அவர்கள் ஊருக்கே போய் அங்கு சிகிச்சை எடுத்து கொண்டார்கள். கீமோதெரபி மறுபடி செய்து கொண்டே இருந்தார்கள்.அவர் அந்த சிகிச்சை மூலம் படாத பாடு பட்டு இருக்கிறான்க , கல்யாண ஆன பொண்ணும் அம்மாவை பார்த்து மனநொந்து ஒன்றும் சரியா சாப்பிடமால் இந்த வயசிலேயே அல்சர் + லோ பீபி.
செலவுகள் ஆனதோ லட்சகணக்கில். என்ன‌ செய்தும் பிர‌யோஜ‌ன‌ம் இல்லை.


நோய் க‌ண்ட‌வ‌ர்க‌ள் எந்த‌ நோயாக‌ இருந்தாலும் நிறைய‌ கூட்ட‌மாக‌ இருக்கும் இட‌த்திற்கு செல்ல‌ வேண்டாம்.

ம‌ற்ற‌வ‌ர்க‌ள் என்ன‌ நினைத்து கொள்வார்க‌ளோ என்றும் நினைக்க‌வேண்டாம்.
தொலை தூர‌ ப‌ய‌ண‌மும் மேற்கொள்ளாதீர்க‌ள்.

சாப்பாடு விஷிய‌த்தில் ரொம்ப‌வும் க‌வ‌ன‌ம் வேண்டும். ஆப்ரேஷன் செய்து கொண்டவர்களுக்கு உணவு


ஒருவ‌ர் Brain cancer ஆப்ரேஷ‌ன் செய்து இப்ப‌ ந‌ல்ல‌ இருக்கிறார்.

அவ‌ர்க‌ள் சொன்னார்க‌ள் தின‌ம் முட்டையின் வெள்ளை க‌ரு ம‌ட்டும் காலை மாலை சாப்பிட்டால் ந‌ல்ல‌ ஆகும். இப்படி சாப்பிடுவதால் இழந்த தெம்பை மீட்கலாம்.

அடுத்து சின்ன‌ கோழிமுழு கோழி சூப் வைத்து குடிக்க‌னும்.

எல்லா காய் க‌றிக‌ளும் போட்டு சூப் வைத்து தின‌ம் குடிக்க‌னும்.

பழ‌த்தில் ஆப்பிள் ரொம்ப‌ ந‌ல்ல‌து மற்ற பழவகைகள் டாக்டரிடம் சாப்பிடலாமா என்று கேட்டு சாப்பிடுங்கள்.

கொத்து ம‌ல்லி சட்னி, புளிக்கு ப‌தில் லெமென் சேர்த்து சாப்பிட‌னும், இது அப்ப‌ இர‌த்த‌தை சுத்த‌ ப‌டுத்தி கொண்டே இருக்கும்.

இந்த‌ ம‌ருந்து சாப்பிட்டு சாப்பிட்டு வாய் க‌ச‌ப்பு,ம‌ர‌த்து போன‌து போல் இருக்கும். அத‌ற்கு இந்த‌ ச‌ட்னியும் வாய்க்கு ருசி ப‌டும், கிஸ்மிஸ் ப‌ழ‌ம் அதுவும் அப்ப‌ வாயில் போட்டு மென்றூ கொள்ள‌லாம்.

முட்டை கோஸும், புரோகோலியும் ரொம்ப‌ ந‌ல்ல‌து அடிக‌க்டி முட்டைகோஸ் பொரிய‌ல், கூட்டு, புரோகோலி சூப் அது போல் வைத்து சாப்பிட‌லாம்.
நிறைய சூப் வகைகள் எடுத்து கொள்வது மிகவும் நல்லது.

ம‌ற்ற‌ப‌டி இட்லி, இடியாப்ப‌ம்,ஆப்ப‌ம், ஓட்ஸ்,ராகி, கொழுக்கட்டை போன்ற ஆவியில் அவித்த உணவுகள் மிகவும் நல்லது. கார்ன்பிலேக்ஸ் உடன் நட்ஸ் சேர்த்தும் சாப்பிடலாம். போன்ற‌வையும் சாப்பிட‌லாம்.


கேன்சர் ஆப்ரேஷன் செய்துகொண்டவர்கள். தவறாமல் முன்று மாததிற்கு ஒரு முறை போய் செக்கப் செய்து கொள்வது நல்லது மாத்திரைகளை தொடர்ச்சியாக டாக்டரின் அட்வைஸ் படி நடப்பது நல்லது/  இதற்காக நீங்களே எந்த கை மருந்தும் எடுக்காதீர்கள்.
 சுட சுட டீ காபி போன்றவைகளை சுட சுடகுடிப்பதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
இது நாளடைவில் தொண்டை வெந்து போய் கேன்சர் கட்டியாக மாற வாய்ப்பிருக்கு.
கேன்சர் வந்தவர்களின் வலி மிகக்கொடுமையானது அவர்களை புரிந்து கொண்டு அவகளை சுற்றி இருப்பவர்கள் அன்பும் அரவனைப்பும் இருந்தால் மிகவும் நல்லது. .

Saturday, August 15, 2009

கங்கா காவேரி சங்கமம்






சூரிய கிரகணம் அன்று மக்கள் கூட்டம் கூட்டமாய் அங்கு நதியில் குளிக்க வருகின்றனர், சிலர் படகிலும் செல்கிறார்கள்.
வாழ்நாளில் ஒரு முறையாவதுஅந்த நதியில் முங்கி எழுந்தால் பாவம் எல்லாம் தீரும் என்று இந்து மதத்தினர் அங்கு சென்று வருகின்றனர்.வேறு ஏதும் சரியா எனக்கு தெரியல.வண்டிய விட்டு கீழே இறங்கவே இல்லை, அப்படியே ஒரு ரவுண்டு போய் விட்டு வந்தாச்சு.
























அங்கு தெருவிற்கு நான்கு கடை இந்த பான் கடை தான் அதான் அங்கு பிடிக்காத ஒன்று.







சூரிய கிரகணம் அன்று மக்கள் அங்கிருந்து இங்கு வர‌ இதற்கென ஒரு பெரிய பாலம் கல்கத்தாவிலிருந்து இந்த நதி வரை கட்டி இருக்கிறார்கள்.












அங்குள்ள ரிக் ஷாக்கள்ஜரிகை துணியால் தைத்து நல்ல ஜிகு ஜிகுன்னு இருக்கு. அந்த
ரிக்ஷாவின் பெயர் பட் பட்.





எதுவும் அங்கு முன்னேரவே இல்லை அங்கு பழையகாலம் மாதிரி தான் இருக்கு.

கடைகள் எல்லாம் காலை 11 மணிக்கு திறந்து இரவு 7.30 க்கு எல்லாம் மூடி விடுகிறார்கள்.

ஆனந்த் பவன்







உத்திர பிரதேசத்தில் உள்ள அலஹாபாத்தில் பையனை காலேஜ் சேர்க்க சென்றிருந்தோம்.

அங்கு பார்க்க வேண்டிய இடம் என்று கேட்டபோது எல்லோரும் முதலில் சொன்னது கங்கா காவேரி சங்கமம், ஆனந்த பவன் (மோதிலால் நேரு குடும்ப‌ம் வாழ்ந்த‌ இட‌ம்)

அங்கு ஆனந்த் பவன் உள்ளே அங்கு போட்டோ எடுக்க அனுமதியில்லை,
அங்கு எடுத்த சில போட்டோக்கள் மட்டும்.
அங்கு அந்த மாளிகையில் சுற்றிலும் தனித்தனி கதவுகள் கொண்ட வாயில்கள் ஒவ்வொரு வாயிலிலும், ஓவ்வொருடைய அறைகளையும் தனித்தனியாக அவரர் பயன் படுத்திய பொருட்கள் எல்லாம் வைக்கப்பட்டுள்ளது.
மோதிலால் நேரு அவர் மனைவி சொருப ராணி போட்டோக்கள்.
இந்திரா காந்தி அம்மா த‌ங்கியிருந்த‌ அறை, கல்யாண போட்டோ,நேருஜி சின்ன வயது போட்டோகள்,அந்த காலத்தில் அவர்களுடைய ராயல் கிச்சன்,டைனிங்,படுக்கை அறை எல்லாம் அப‌ப்டியே பாதுக்காக்க‌ ப‌ட்டு மியுசிய‌ம் போல் வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.
அவர் பயன்படுத்திய அனைத்தும் பொருட்களும் வைக்கப்பட்டுள்ளது.
காந்திஜி வந்திருந்த போது எல்லோரும் சந்தித்த இடம், அவர்கள் படிக்கும் அறை.
எல்லாம் அழ‌கிய‌ முறையில் பாதுகாத்து வைத்து இருக்கிறார்க‌ள்.

நேர‌மின்மையால் பத்து நிமிட‌ம் தான் இதேல்லாம் பார்க்க‌ முடிந்த‌து.
அந்த‌ பழமை வாய்ந்த அந்த பவனும் அங்கு வைத்துள்ள‌ அனைத்து பொருட்களும், அனைத்து போட்டோக்களும் ரொம்ப அருமை.
வெளியில் புஸ்த‌கால்யா என்று உள்ளது. அங்கு நாட்டுக்காக‌ தியாக‌ம் செய்த‌ அனைத்து தேசத்த‌லைவ‌ர்க‌ளின் வாழ்க்கை வ‌ர‌லாறு அட‌ங்கிய‌ புஸ்த‌க‌ங்க‌ள்,ப‌ட‌ங்க‌ள் அனைத்தும் வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.













அருமையான பூஙகா










Friday, August 14, 2009

சுறா மீன் மிளகு குழம்பு




வேக வைக்க
********************
சுறா மீன் - அரை கிலோ
உப்பு - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
தாளிக்க
***********
நல்லெண்ணை - முன்று மேசை கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரக - கால் தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
மிளகு - முன்று
சோம்பு - ஐந்து
வெங்காயம் - முன்று

இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி

கருவேப்பிலை - கால் கைபிடி
தக்காளி - இரண்டு

அரைக்க
************
தக்காளி - ஒன்று
முழு மிளகு - ஒரு மேசை கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
சீரகம் தூள் - ஒரு மேசை கரண்டி
சோம்பு தூள் - கால் தேக்கரண்டி
தனியா தூள் - ஒன்னறை மேசை கரண்டி
தேங்காய் பவுடர் - முன்று தேக்கரண்டி
பூண்டு - முன்று பற்கள்

கொத்து மல்லி தழை - சிறிது (கடசியில் தூவ)



1. முதலில் சுறா மீனை சுத்தம் செய்து அதில் உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

2. ஒரு தக்காளி, பூண்டு, தேங்காய்,சோம்பு, சீரகம்,தனியா,மிளகாய் தூள் , மிளகு வகைகளை சேர்த்து அரைக்கவும்.

3. சட்டியை காயவைத்து நல்லெண்னையை ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளிக்கவும்.
பிறகு அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைத்து சேர்க்கவும்.

4. மீனில் உள்ள தண்ணீரை வடித்து அந்த தண்ணீரையும் சேர்க்கவும்.

5. மீனை முள்ளுடன் கால் கிளோ அளவிற்கு எடுத்து கொண்டு மீதியை (புட்டு (அ) கட்லெட் ) செய்ய தனியாக எடுத்து வைக்கவும்.

6. தாளித்தவைகள் நன்கு நல்ல தண்ணீர் கூட கொஞ்சம் சேர்த்து 20 நிமிடத்திற்கு தீயை மிதமாக வைத்து கொதிக்க விட வேண்டும்.

7. கடைசியில் முள்ளுடன் உள்ள மீனை சேர்த்து நல்ல கொதிக்க விட்டு கிரேவி பதம் வந்து மசாலா வாடை அடங்கியதும் இரக்கி சாப்பிடவும்.

சும்மா கார சாரமாக கும்முன்னு இருக்கும்.



குறிப்பு:

குழந்தைகளுக்கு காரத்தை சிறிது குறைத்து செய்து கொடுக்கலாம். கடுஞ்சளிக்கும் இது ரொம்ப நல்லது.

மிதி முள்ளில்லாமல் எடுத்து வைத்த மீனில் புட்டு ( அல்லது) கட்லெட் (அ) வடை செய்யலாம்.

இதில் புளி சேர்க்க தேவையில்லை சுறா மீன் கட்லெட்டை அடுத்த குறிப்பில்.
இது பிள்ளை பெற்றவர்களுக்கு ரொம்ப நல்லது.

Thursday, August 13, 2009

குழ‌ந்தைகளை முத‌ல் முத‌ல் ப‌ள்ளிக்கு அனுப்பும் போது

குழ‌ந்தைகளை முத‌ல் முத‌ல் ப‌ள்ளிக்கு அனுப்பும் போது இக்ர‌ பிஸ்மி சூரா ஓத‌ வைத்து அனுப்புங்க‌ள்.

ஒவ்வொர் ஆண்டு ப‌ள்ளி துவ‌க்க‌த்திலும் இதை ஓத‌ சொல்லவும், எல்லா பிள்ளைக‌ளும் க‌ல்வியில் சிற‌ந்த‌வ‌ர்க‌ளாக‌ விள‌ங்க‌ ஆண்ட‌வ‌ன் கிருபை புரிய‌ட்டும்.




அத்துட‌ன் கீழே உள்ள‌ தூஆவையும் சொல்லி கொடுக்க‌வும்.

1. ரப்பி ஜித்னி இல்மா, ரப்பி ஜித்னி இல்மா,ரப்பி ஜித்னி இல்மா.

"ர‌ட்ச‌கா ர‌ப்பே என‌க்கு க‌ல்வி அறிவை அதிக‌ப்ப‌டுத்துவாயாக‌"!



2. ரப்பிஷ் ரஹ்லி சத்ரி வ யஸ்ஸிர்லி அம்ரி வஹ்லுல் உஹ்ததம் மில்-லிசானி யஃப்கஹூ கௌலி.

"இறைவா! எனக்காக என் என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கித் தருவாயாக!
என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!
என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!" (என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக)



3. அல்லாஹும்ம இன்னி அஸஅலுக்க இல்மன் நாஃபிஅன் வ ரிஜ்கன் வாஸிஅன் வஸிஃபாஅன் மின் குல்லி தாஇன்.

"யா அல்லாஹ் ப‌ய‌னுள்ள‌ அறிவு, தாரள‌மான‌ உண‌வு, எல்லா நோய்க‌ளிலிருந்தும் நிவார‌ன‌ம் இவ‌ற்றையே நிச்ச‌ய‌மாக‌ நான் உன்னிட‌ம் கேட்கிறேன்."

4.சுப்ஹான்க்க ல இல்மலனா இல்லா மா அல்லம்தனா இன்னக்க அன் தல் அலீமுல் ஹகீம்.

(யா அல்லாஹ்) நீ மகாத்தூயவன் நீ கற்றுகொடுத்ததை தவிர வேறு எந்த அறிவும் எங்களுக்கு இல்லை.நிச்சயமாக‌ நீ அனைத்தையும் அறிந்தவன் ஞானமுள்ளவன்.

வெஜ் சோமாஸ்




தே.பொருட்கள்



பில்லிங்


கலவை பொரியல்

உருளை - ஒன்று
கேரட் - பாதி
பீன்ஸ் - முன்று
பட்டாணி - ஒரு மேசை கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
சோளம் = ஒரு மேசை கரண்டி






தாளிக்க


எண்ணை - ஒரு தேக்கரண்டி

கடுகு - அரை தேக்கரன்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
பூண்டு - இரண்டு பல்
கருவேப்பிலை - சிறிது
வேர்கடலை - ஒரு மேசை கரண்டி




செய்முறை


1. காய்கறி களை பொடியாக அரிந்து கொள்ள வேண்டும்.

2.ஒரு பேனில் எண்ணை விட்டு கடுகு, உளுந்து, வேர்கடலை, , வெங்காயம்,கருவேப்பிலை,பூண்டு பொடியாக அரிந்து போட்டு தாளித்து காய்களை சேர்த்து உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு வாதக்கவும்.

3. தீயை சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் வேக விடவும்.

ஐந்து காய் பொரியல் ரெடி.



குறிப்பு

இது குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்பலாம், டூர் போகும் போது எடுத்து செல்லலாம். இந்த பில்லிங் வகைகள் நிறைய வெரைட்டியாக செய்யலாம். இது தேங்காய் இல்லாமல் பொரியல் கொண்டு செய்வது, இதில் உருளை கிழங்கு ஹல்வா வைத்து செய்தாலும், நட்ஸ் வகைகளை தேஙகாய் சேர்த்து நெயில் வருத்து செய்தாலும் நல்ல இருக்கும்

Wednesday, August 12, 2009

சிக்கன் ஹோல் லெக் டீப் ப்ரை - Chicken whole leg Fry






தேவையான‌ பொருட்க‌ள்

சிக்கன் ஹோல் லெக் = 4
மிளகாய் தூள் ‍= ஒரு தேக்கரண்டி
ஷான் தந்தூரி மசாலா = ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு தேக்க‌ரண்டி
தயிர் = இரண்டு மேசை கரண்டி
எலுமிச்சை பழம் = அரை பழம்
வினிகர் = ஒரு தேக்கரண்டி
உப்பு ‍= தேவையான அளவு
ஆலிவ் ஆயில் = ஒரு தேக்க‌ர‌ண்டி







செய்முறை


சிக்க‌னை வினிக‌ர் ஊற்றி ஏழு முறை ந‌ன்கு க‌ழுவி அனைத்து ம‌சால‌க்க‌ளையும் போட்டு விற‌வ‌வும்.







சிக்க‌ன் மசாலா போட்ட‌தை முன்று ம‌ணி நேர‌ம் ஊற‌வைக்க‌வும்.





வாய‌க‌ன்ற‌ வான‌லியில் சிக்க‌ன் பொரியும் அள‌விற்கு எண்ணை ஊற்றி முடி போட்டு பொரிய‌ விடவும்.
தீயை மித‌மாக‌ வைத்து திருப்பிபோட்டு ந‌ன்கு வெந்து மொருகிய‌தும் எடுக்க‌வும்.








சுவையான‌ ஹொல் லெக்ஸ் ரெடி

ரொட்டி, குபூஸ், நாண், ஹ‌மூஸுட‌ன் லெமென் பிழிந்து சாப்பிட‌வும்.

குறிப்பு
இதை எண்ணையில்லாம‌ல் பார்பிகியு அடுப்பிலும் சுட‌லாம், கிரில்லும் செய்ய‌லாம்.இத‌ற்கு கிரீன் ம‌சாலாவும் போட‌லாம்